Thottal Thodarum

Sep 9, 2010

முரளி

Murali_335198248 காலையில் ஷூட்டிங்கில் இருந்த போதுதான் மெசேஜ் வந்தது. சட்டென.. ஒரு மாதிரியானது.. ஆளாளுக்கு .. செய்தி பரவி.. ஷூட்டிங்கில் ஒரு சில நிமிடங்கள் எல்லோர் வேலையையும், ஸ்தம்பிக்க வைத்து, முரளி பற்றிய பேச்சும், எண்ணமுமாய் போய்க் கொண்டிருந்தது.

இன்னொரு ரஜினியாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று விகடன் இவரது முதல் படமான பூவிலங்குக்கு விமர்சனம எழுதி வரவேற்றது. தொடர்ந்து பல ஹிட் படங்கள். என்பதுகளில் மீடியம் பட்ஜெட் படநாயகன் என்றாலே முரளிதான் என்று ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது. காலேஜ் ஹீரோ கேரக்டர் என்றால் அதுக்கு கேள்வி கேட்காமல் முரளியை தான் ஆப்ஷனாக வைக்குமளவுக்கு தமிழ் திரையுலகில் நிரந்தர யூத்தாக வலம் வந்தவர். சமீபத்தில் அவரது மகன் நடித்து வெளியான பாணா காத்தாடி படத்தில் கூட மருத்துவ கல்லூரி மாணவராக வந்து கலகலப்பு ஏற்படுத்தியவர்.

இப்படி ஒவ்வொரு டெக்னீஷியன்களுக்கும் ஒவ்வொரு நினைவுகள் முரளியை பற்றி. எங்கள் படப்பிடிப்பு நடக்குமிடத்தின் ஒரு சில கிலோ மீட்டர்கள் அருகிலேயே தான் அவரது வீடு இருந்ததால் பல பேர் மாற்று ஆட்களை வைத்துவிட்டு அவருக்கு அஞ்சலி செய்துவிட்டு வந்தார்கள்.

ஒரு வெளிப்புற படப்பிடிப்பு முடிந்து எல்லாரும் பேக்கப் ஆகிவிட்ட்ட பிறகு இயக்குனரும், முரளியும் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து அடுத்த கட்ட காட்சிகளை பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பேச்சு சுவரஸ்யமாய் போக சரி ஊருக்கு கிளம்பலாம் என்று வெளியே வந்து பார்த்தால் எல்லாரும் கிளம்பி போய்விட்டிருக்க, மேனேஜருக்கு போன் செய்தால்.. ஹீரோவும் நீங்களும் ஷூட்டிங் முடிந்த பின் காரில் கிளம்பி போய்விட்டதாக சொன்னார்கள்.. நாங்களும் பேக்கப் செய்து கொண்டு வந்துவிட்டோம் சுமார்.. 200 கிலோ மீட்டர் வந்தாகிவிட்டது. வேண்டுமானல் உடனே ஒரு வண்டியை மாற்றி அனுப்புகிறோம் என்று சொல்ல.. விஷயம் தெரிந்த முரளி.. டைரக்டரிடம் எதுக்கு வேஸ்டா அவங்க வண்டிய அனுப்பி, அது இங்க வர்ற வரைக்கும் நாம வெயிட் செய்யறது.. பேசாம பஸ்சுல போயிறலாம் என்று சொல்லி, கிளம்பிவிட்டாராம் சென்னைக்கு. பஸ்சில் அப்போதைய பிரபல ஹிரோவுடம் பயணம் செய்வதில் மக்கள் ரொம்பவே சந்தோஷமடைந்தார்களாம். அப்படிப் பட்ட அருமையான மனிதர்.. என்று முரளியின் மரணம் குறித்து கண்களில் தளும்பிய நீருடன்  நினைவோடிக் கொண்டிருந்தார் எங்களுடன் இணைந்து பணியாற்றும் மஞ்சுவிரட்டு என்கிற அப்படத்தின் இயக்குனர்.

சமீபத்தில் கூட ஒரு டிஸ்கஷனில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.. “இன்னைக்கும்  காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல முரளின்னு சொன்னா நம்புறா மாதிரி இருக்கிற ஒரே ஆள் என்றார் நண்பர் ஒருவர்.  மக்கள் மனதில் மிகவும் யூத்தான் ஒரு கெட்டப்பிலேயே இருந்ததினால் என்னவோ.. மிகவும் யூத்தான வயதில் இறந்துவிட்டார் என்ற எண்ணமும் ஓடிக் கொண்டிருந்துதான் இருந்தது.
கேபிள் சங்கர்
Post a Comment

31 comments:

CS. Mohan Kumar said...

46 years too early to die!! Feel sad for him & his family. Did he have regular drinking/ smoking habits?

Ŝ₤Ω..™ said...

:(
நேற்று இந்த விஷயம் கேள்விபட்டவுடன் எனக்கு நினைவில் வந்தது “பானா காத்தாடி”யில் வந்த அவரது சிரித்த முகம். வெளியுலகத்திலும், ரசிகர் மத்தியிலும் அவர் இன்றும் காலேஜ் ஸ்டூடண்டாக நடிப்பதைக் கிண்டலும் கேலியுமாக பேசுவதை அந்த படத்தில் அப்படியே பயன்படுத்தி இருப்பார்கள்.. அதில் அவரும் துணைபோவார்..

சென்ற வாரம், விஜய் டிவியில் “கதையல்ல நிஜம்” நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.. அதில் அவர் தன் அம்மா பற்றி நெகிழ்ச்சியாக சொன்னார்.. அப்போது லெஷ்மி அவர்கள் அவரது அம்மா இப்போது எப்படி இருக்கிறார் என கேட்டபோது முரளி மனம் கலங்கி அதே நேரம் கேமராமுன் கண்ணீர் சிந்தி சீண் போடாமல் அடக்கமாக “அம்மா இப்போ இல்லங்க அம்மா(லஷ்மி)” என்று சொன்னார்.. இது ஒன்றே அவரது தண்மைக்கு சான்றாக இருந்தது..

நல்லவங்கள ஆண்டவன் தன்கிட்ட சீக்கிறம் கூட்டிக்குவான்ன்னு யாரு சொன்ன நியாபகம்..

கோவி.கண்ணன் said...

:(

ஆழ்ந்த வருத்தங்கள்

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்த வருத்தங்கள் .

vanila said...

I dont like "self booster books", the "art of saying" coloumns.. But whenever I feel im down, I just watch his interview "Coffee with Anu" in YouTube.. I really get some moral booster.. What ever people say about him.. but he'z is a very rooted person.. My sincere condolences to his family.. God is there, he might have gone happy, that atharva has come up and he is there for the family..

vanila said...

I dont like "self booster books", the "art of saying" coloumns.. But whenever I feel im down, I just watch his interview "Coffee with Anu" in YouTube.. I really get some moral booster.. What ever people say about him.. but he'z is a very rooted person.. My sincere condolences to his family.. God is there, he might have gone happy, that atharva has come up and he is there for the family..

பித்தன் said...

my sincere and deepest condolences to his family..... romba arumaiyaana nadigan.

Unknown said...

என் ஆழ்ந்த அஞ்சலிகள் .. பகல் நிலவு நாயகனுக்கு .....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

:(

துளசி கோபால் said...

ஆழ்ந்த இரங்கல்கள்:(

மங்குனி அமைச்சர் said...

என் ஆழ்ந்த இரங்கல்கள்

saro said...

my deepest condolence to his family

movithan said...

காதல் வலியை முரளி வெளிப்படுத்தும் பாங்கே தனிதான்.
திரையில் மட்டும்மல்ல நிஜத்திலும் இதயதைப் பாரமாக்கி விட்டுச் சென்றுவிட்டார்.
அந்த காதல் மாணவனுக்கு என் அஞ்சலிகள்.

suneel krishnan said...

முரளி ஒரு இயல்பான நடிகர் , நல்ல மனிதர் , இருந்தாலும் இந்த வயதிலே அவரின் இழப்பு ஜீரணிக்க கடினமாகவே உள்ளது ..முரளியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

பிரபல பதிவர் said...

முரளியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்

soma said...

I think, in his career , he acted as Hero only till his death. He hasn't stepped down to do any charactor roles like karthick, prabhu do today. It is Something Special in his cinema career.

R.Gopi said...

முரளி.....

46 வயதிலேயே மறைந்தது அதிர்ச்சி அளித்த விஷயம் தான்....

அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்.....

Thenammai Lakshmanan said...

கீதாஞ்சலியில் நல்ல நடிப்பு.. முரளி என்றும் இளமைதான்.. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆழ்ந்த வருத்தங்கள் .

என்னது நானு யாரா? said...

முரளியை பற்றிய நினைவை அருமையாக பகிர்ந்து கொண்டீர்கள் அண்ணா!

அவருடைய ஆன்மா சாந்தி அடைய அந்த பரம்பொருளை வேண்டுகின்றேன்!!

அப்துல்மாலிக் said...

in last I have seen vijay tv's athu ithu ethu...

My deep condolence to his family

Download Gprs said...

நல்ல நடிகர் நம்ப முடியாத செய்தி...!!!!!!
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....

ஜெய்லானி said...

:-(

vinu said...

சிலர் அப்படிதான் பாரதி கூட மிக இள வயதிலேயே இறந்து போனதால் தானோ என்னவோ இன்று வரை எல்லோர் மனதில்லும் இளமையாகவே இருக்கிறார் அதேபோல் முரளியும் என்றும் எல்லோர் மனதிலும் இளமையாகவே இருப்பர்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எளிமையான அம்மனிதர் பற்றிய அருமையான் ஒரு நிகழ்வைபகிர்ந்து கொண்டதற்கு நன்றி
கேபிள்.

அறிவிலி said...

கடைசி வரைக்கும் வயசான முரளி எப்படி இருப்பருன்னு பாக்கவே முடியாம போயிருச்சே... ஹ்ம்ம்ம்...

செ.சரவணக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள். செய்தி கேள்விப்பட்டதும் அதிர்ச்சியடைந்தேன். வேதனையாக இருக்கிறது.

DREAMER said...

எனக்கும் கேள்விப்பட்டதும் மிகவும் வேதனையாக இருந்ததுஜி. நல்லவொரு Decent Good Actor!

ஆன்மசாந்திக்கு பிரார்த்திப்போம்..!

-
DREAMER

"உழவன்" "Uzhavan" said...

இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் உதயம் தியேட்டர் வளாகத்தில் முரளியையும் அவரது மகனையும் பார்த்தேன்.
அவரது மரணச் செய்தி மனதை ரொம்பவே வருத்தியது.

Ganesan said...

உன் பாதங்கள் மண்மீது படவேண்டியது அல்ல.. மலர்கள் மீது..

இதயம் படத்தில் முரளி சொல்லும் கவிதை.
முரளி என்றுமே என் மனதில் பூத்த மலர்.

அன்பரசன் said...

என் ஆழ்ந்த இரங்கல்கள்