ஆறு வயதில்
உடை மாற்ற வேண்டுமென்றால்
தனியறைக்கு போ என்றடித்தவள்
பதினாறு வயதிலும்
பதினாறு வயதிலும்
அதையே சொன்னாள்
நானும் கதவடைத்து
உடை மாற்றினேன்
இன்று நூறு பேர்
முன்னிலையில் குதித்தாட
உள்கச்சை வேண்டாமென்றாள்
காரவன் வாசலில் காவல் காக்கும்
என் அம்மா அந்த
என் அம்மா அந்த
உதவி இயக்குனனிடம் சொன்னாள்
“பேபி.. டிரஸ் மாத்துதென்று
அவளுக்கு நான் இன்னமும்
பேபி தான்.
Comments
வெயிட்.. படிச்சிட்டு வாரேன்
ப்ச்..
கவிதையின் கரு அருமை.
பல பேர் முன்னிலையில் ஆடும் அந்தப் பெண்ணின் சோகம் இழையோடுகிறது.
கூடவே கவிதையும்.
இலக்கியவாதி நண்பர் பாணியில் படங்களுடன் கவிதைனு வெளியிட்டு இருந்தால் , இலக்கிய உலகில் பரபரப்பு ஏற்பட்டு இருந்திருக்கும்..
""வரும் சட்டசபை கூட்டத்தொடரில், வன்கொடுமை சட்டம் தொடர்பாக வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கேபிள் எங்க மேல எண்டர் கவுஜங்கற பேரில ஏவும் வன்கொடுமைக்காக குரல் கொடுக்கும் டாக்டர். குடிதாங்கி வாழ்க வாழ்க..
நீங்கள் சினி துறையை சார்ந்தவர் ஆதலால் கேட்கிறேன்.. பெண்கள் மீது திணிக்கப்படுகிறதா நடிக்கும் வேலை??
www.narumugai.com
கவிதையின் பாடுபொருள்... கேபிள்டச் ;)
http://ramasamydemo.blogspot.com/2010/09/how-to-customize-add-this-share-button.html
http://govindha420.blogspot.com/2010/09/iso.html
அது என்ன கிட்ட???!!!
கவிதைன்னா இப்டித்தான் இருக்கணும்னு இலக்கணம் இருக்கா என்ன? மரபுக்கவிதை எழுதிட்டு இருந்தப்போ புதுக்கவிதைகூட ஏளனமாத் தான் பார்க்கப்பட்டிச்சி.
நெறைய்ய்ய பேரு ஊரு பூரா ஹைக்கூன்ற பேர்ல உசிர வாங்குறப்போ அண்ணன் எழுதுற எண்டர் கவிதை சத்தியமா சூப்பர்!
நீங்க கலக்குங்கண்ணா! இந்த கவிதை நெசமாவே க்ளாஸ்!
உங்களுக்கு நான் சொல்லவேண்டியது... கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்மா....