Thottal Thodarum

Sep 13, 2010

கொத்து பரோட்டா- 13/09/10

நண்பர் பரிசல்காரன் தன் வலைப்பூவில் சிறுகதைச் சவால் ஒன்றை விடுத்திருக்கிறார்.
கீழே உள்ள மூன்று வாக்கியங்களைப் படியுங்கள்:
1) டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
2) “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
3) “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்
.
இந்த மூன்று வாக்கியங்களும் மேலே கொடுத்திருக்கும் வரிசைப்படியேவருகிற மாதிரி ஒரு சிறுகதை எழுதுங்கள். விதிகள் இரண்டு:
கதையில் கனவோ, ப்ளாஷ்பேக்கோ வரக்கூடாது.
காமினியைக் கெட்டவராக சித்தரிக்கக் கூடாது.
இறுதித் தேதி: அக்டோபர் 15.
கதைகளை உங்கள் வலைப்பூவில் போட்டுக் கொள்ளலாம். தலைப்பில் நீங்கள் கதைக்குக் கொடுக்கும் தலைப்புக்கு அருகிலேயே “சவால் சிறுகதை” என்று குறிப்பிட வேண்டியது அவசியம். ஆனால் பதிவில் போட்டாலும் அவரது (kbkk007@gmail.com) மின்னஞ்சலுக்கு முழுக்கதையையும் அனுப்ப வேண்டும்.பரிசு? உண்டு! போட்டி பற்றிய மேலதிக விபரங்களை நாளை அவரது பதிவில் காணலாம். நானெல்லாம் கலந்துக்கலாம்னு நினைச்சிருக்கேன். பார்ப்போம். சொக்கா.. அது எனக்கில்லை.. எனக்கில்லை..
##################################################################
பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் நிஜம் என்று நம்பும் மக்களின் சதவிகிதம் நிறைய.. அதான் பேப்பர்லயே போட்டுட்டானே என்று அழிச்சாட்டியமாய் நம்புபவர்கள் இருக்கும் நாட்டில். தினத்தந்தி வெள்ளிமலரில் ஒரு செய்தி. நடிகர் முரளி நடிக்கும்  என்று ஒரு படத்தின் செய்தியை போட்டிருந்தார்கள். ஒரு வேளை முரளி வியாழன் இரவு இறந்து போய், தவிர்க்க முடியாத காரணத்தினால் அடுத்த நாள் அந்த செய்தியை வெளியிடப்படுவதை தடுக்க முடியாமல் போனால் பரவாயில்லை. அவர் இறந்து இரண்டு நாள் கழித்து இவர்கள் முரளி நடிக்கும் என்று செய்தி போடுவது என்ன கொடுமைங்க.. எடிட்டோரியல்னு ஒரு டிபார்ட்மெண்ட் அங்க வச்சிருக்காங்களா இல்லையா?
###################################################################
சமீப காலமாய் பெண் பதிவர்களில் சிலர்  டீச்சர் என்னை அடிச்சிட்டான்., அவன் என்னை பேசிட்டான்னு ஆவூன்னா “பைத்தியக்காரத்தனமா” அவங்களே எதை எதையோ தப்பு தப்பா யோச்சிட்டு,  தேவையான நேரத்தில ஆளாளுக்கு ஒரு பதிவு போடறதும், உடனே ஊருல இருக்கிற ஆண் பதிவர்கள் எல்லாம் இதுக்கு சப்போர்ட் பண்ணலைன்னா.. நம்மை ஆட்டத்தில சேத்துக்க மாட்டாங்களோன்னு நாமளும் சீ…ச்தூ… நாய்களே.. பேய்களேன்னு, தலை குனிகிறேன்னு பதிவு எழுதி போடுறதும். வழக்கமா போச்சு.. இதுல் இருக்கிற பிரச்சனையே ஒன்னுத்தையும் கிழிக்கக் காணோம்.. இதுல இந்த மாதிரி பஞ்சாயத்துக்களையெல்லாம் வேற செஞ்சி.. ஏதோ இணைய போலீஸ் மாதிரி சீன்.. இதெல்லாம் போர் அடிச்சி போன பழைய சீன்.. வேற எதாச்சும் புதுசா பண்ணுங்கப்பா..
###################################################################
இந்த வார விளம்பரம்
இசையோடு பாருங்கள்..  இண்ட்ரஸ்டிங்
###################################################################
இந்த வார தத்துவம்
வெற்றிக்கான வழி..
உனக்கு நீ வேலை செய்யுமிடத்தின் சட்ட திட்டங்கள் பிடிக்கவில்லையென்றால், அதனை தொடரு, முதல் நிலைக்கு வா, பின்பு மாற்று.
###################################################################
சோகம்
போன வாரம் தான் முரளி சட்டென மறைந்தார் என்றால். நேற்று மதியம் பாடகி சுவர்ணலதா மறைந்தது அதை விட அதிர்ச்சி. என்னா..குரல்?. மத்தவங்களை சந்தோஷப்படுத்துறவங்க கலைஞர்கள். அவர்கள் வாழ்வு இப்படி சீக்கிரமே முடிவது.. வருத்தமாகத்தான் இருக்கிறது. ”மாலையில் யாரோ மனதோடு பேச” பாட்டு மனதில் ரீங்காரமிடுகிறது. அவர் மறைந்தாலும்.. அந்த ஸ்டிரிங் குரல் எக்காலத்திலும் நம் மனதை விட்டு மறையாது.. அவர் ஆன்மா சாந்தியடையட்டும்.
####################################################################
இந்த வார குறும்படம்.
நிறைய பேருக்கு பிடித்த படம். ஆனால் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் முதல் நிலைக்கு வராத படம். ஆனால் வெகு ஜன ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த படம். எதிர்காலத்தில் நிச்சயம் ஒரு நல்ல இயக்குனர் வர இருக்கிறார் என்பதை கட்டியம் கூற அவார்ட் வாங்கத் தேவையில்லை என்பதை கூறும் படம். இந்த மிட்டாய் வீடு.
###################################################################

ஏ ஜோக் 
பெண்: ஆ.. ஸ்… ரொம்ப டைட்டா இருக்கு..
ஆண்:  ஓகே..ஓகே.. நா ஸ்லோ பண்ணிக்கிறேன்.
பெண்: நல்லா உள்ள தள்ளு..
ஆண்:  முடியலையே…
பெண்:  ஆ.. வலிக்குது..
ஆண்:  சரி..விடு.. கரெக்டு சைஸுல வேற ஒரு வெட்டிங் ரிங் வாங்கிக்கலாம்..


பையனும், பெண்ணும் டீச்சரிடம்

பையன்: டீச்சர் எங்க வயசு பசங்க குழந்தை பெத்துக்க முடியுமா?
டீச்சர் : நோ.. நெவர் முடியவே முடியாது

பையன்: பெண்ணை பார்த்து.. நான் அப்பவே சொன்னேனில்லை.. என்றான்

###################################################################கேபிள் சங்கர்

Post a Comment

39 comments:

Guru said...

மீ த பர்ஸ்ட்டு?
இந்த வார கொத்து புரோட்டா அருமை.

Jegan said...

nice one

எஸ்.கே said...

இன்றைய தொகுப்பு மிக நன்றாக இருந்தது!

ஆ.ஞானசேகரன் said...

அண்ணே! தொகுப்பு நல்லாயிருக்கு.... ஏ ஜோக் ம்ம்ம்ம்ம் உங்களை போலவே அருமை..

இன்றுதான் vijai tv ல் நீயா? நானா? பார்த்தேன்.. கலக்கிபுட்டேளே! அப்துல்லா அண்ணாச்சிக்கும் வாழ்த்துகளை சொல்லிருங்கோ...

மங்களூர் சிவா said...

:))

Ahamed irshad said...

இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற டீச்சரெல்லாம் அமையறதுக்கு கொடுத்து வைத்திருக்கனும்..

மோனி said...

//வேற எதாச்சும் புதுசா பண்ணுங்கப்பா..//

செஞ்சிடுவாங்க.. வெயிட் ப்ளீஸ்..

மேவி... said...

தல நான் இந்த குறும்படத்தை பத்தி ஏற்கனவே எழுதிட்டேன் ... படிச்சு பார்த்து எப்புடிருக்குன்னு சொல்லுங்க

http://mayvee.blogspot.com/2010/09/blog-post.html

மேவி... said...

இதுல தினத்தந்தி மட்டும் இல்லை .... தினமலரும் இப்படி தான்

பிறகு இந்த மாதிரியான A ஜோக்கை எல்லாம் நான் சின்ன வயசிலையே கேட்டாச்சு . புதுசா எழுதுங்க தல

pichaikaaran said...

"எல்லாம் நான் சின்ன வயசிலையே கேட்டாச்சு . புதுசா எழுதுங்க தல"

no time to think new. busy in film work...

a said...

கொத்து அருமை....

Unknown said...

மிட்டாய் வீடு ஜனனி=அழகி

திருவாரூர் சரவணா said...

வார இதழ்களின் இணைப்புகளை எல்லாம் பெரும்பாலும் இரண்டு நாட்கள் முன்னதாகவே பிரிண்ட் செய்து விடுவார்கள்.வெள்ளிக்கிழமை தினந்த்தந்தியில் முரளி இறுதி சடங்கு படங்களுடன் கனவாய்ப் போன முரளியின் நூறாவது படம் என்று செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஏற்கனவே தயாரான வெள்ளிமலரில் முரளியின் நூறாவது படம்பற்றிய செய்தி பிரசுரம் ஆகியிருக்கிறது என்ற குறிப்பும் இருந்தது. ஏற்கனவே அச்சான வெள்ளி மலர் பக்கங்களை அப்படியே குப்பையில் போட்டுவிட்டு புதிதாக அச்சடிக்கும் வகையில் இது கலவரம் உருவாக்கும் செய்தி இல்லை என்று நினைத்து விட்டார்களோ என்னவோ.

ஆனால் வெள்ளிமலர் மட்டும் படிக்கும் சிலர் முரளி இன்னும் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினாலும் நம்புவார்கள்.

பைரவன் said...

ஷங்கர்,

சப்ளிமெண்டரி பேப்பர் எல்லாம் இரண்டு நாட்களுக்க்கு முன்பே அச்சாகி ஏஜெண்டுகளுக்கு வந்துவிடும்.

பரிசல்காரன் said...

விளம்பரத்துக்கு நன்றி...

(நண்பேண்டா..!)

அப்புறம் உங்களாண்டதான் கேட்கணும்னு நெனைச்சேன்.. முரளி பட போஸ்டர்லயெல்லாம் கடவுள் முரளின்னு எழுதுவாரே அவரோட தீவிர ரசிகர் ஒருத்தர், அவர் இப்ப எங்க இருக்காருன்னு தெரியுமா?

ஏதாவது பத்திரிகை அவரை இந்த நேரத்துல போய்ப் பார்த்து எழுதலாம்.

பரிசல்காரன் said...

அவர் பேருகூட பெருமாள்ன்னு நெனைக்கறேன்..

R. Gopi said...

சூப்பர்

Ŝ₤Ω..™ said...

“மிட்டாய் வீடு” முன்பே பார்த்தது ரசித்து நெகிழ்ந்த ஒரு படம்.. மீண்டும் பார்க்கச் செய்ததுக்கு நன்றி அண்ணா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

kothuportta no taste

என்னது நானு யாரா? said...

மிட்டாய் வீட்டை காண்பித்த அண்ணனுக்கு ஜெ...

பிரபல பதிவர் said...

//நானெல்லாம் கலந்துக்கலாம்னு நினைச்சிருக்கேன்//

கட்டாயம் கலந்துக்கலாம் தல... 'யூத்' கள் கலந்துகொள்ள கூடாதுன்னல்லாம் விதி இல்லையே

மணிஜி said...

தான் ஒரு எழுத்தாளராக மாறியதும், மற்றவர்களையும் எழுத வைக்கும் எண்ணம் பரிசலுக்கு..கிரேட்....கீப் இட் அப்..உங்க அடுத்த தொகுப்பு எப்ப வருதுன்னு சொல்லுங்க பாஸ்.. அட்வான்ஸ் புக் பண்ணிக்கிறேன்..அப்புறம் கிடைக்காம போயிடப்போகுது

மணிஜி said...

நண்பர்களுக்கு

சத்தியமாக நாம் இலக்கியம் எழுதி கிழிக்கப்போவதில்லை. இந்த ஃபோரம் கருத்து பகிர்தல் மற்றும் கும்மிகளுக்காகவே. விருப்பம் இருப்பவர்கள் இணைந்திருக்கலாம். குழுமத்தை குறை சொல்பவர்கள் ,வெளியேறி விட்டு சொல்லுங்கள்.சும்மா அவன் கையை பிடிச்சு
இழுத்தான். இவன் என்னை பார்த்து கண் அடிச்சான்னு புலம்பல்கள் வேண்டாம்..விருப்பமிலாதவர்கள் ப்ளீஸ்..........

Gopi said...

hai very nice.

சிவராம்குமார் said...

செம கொத்து! குறும்படம் அருமை!

DR said...

"என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம், எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்..."

இந்த பாடலை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் என்னை மறந்து கேட்பது உண்டு. அப்படிபட்ட குரலுக்கு சொந்தக்காரர் மறைந்து விட்டார் என்பது என்னை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டது. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்...

vasu balaji said...

Kalaks:)

சசிகுமார் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார் .

Madurai pandi said...

ellame nandru!!!

Thamira said...

சுவர்ணலதா மறைவு தவிர்த்து பதிவு வழக்கம்போல சுவை.

Unknown said...

திரைப்பட போஸ்டர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. படம் ரிலீஸ் ஆகி ஓடிகொண்டிருக்கும் போது கூட "xyz நடிக்கும்" படம் என்று தான் போடுகிறார்கள். "xyz நடித்த" என்று யாரும் போடுவதில்லை!! அவங்க கிட்டயும் கொஞ்சம் சொல்லிவைங்க அண்ணே......

NARI said...

//ஏம்பா கேபிள் இவ்ளா பேசிருந்தா புரிஞ்சுக்க முடிது. உனக்கு அவரு கார் டிரைவரா இல்ல அவருக்கு நீயா..//

புரிஞ்சிடிச்சு இல்ல. அப்போ ஜிப்ப மூடிட்டு கெளம்பு.
இதே ஒரு பொண்ணோட பதிவுல இப்படி அனானி கமென்ட் போட்டிருந்தா அவனவன் ஜொள்ள வேட்டியில தொடச்சிட்டு வரிஞ்சு கட்டிட்டு வந்திருப்பானுங்க. போய் பொம்புளைங்க பொடவய தொவச்சு போடு அனானி குட்டி. அதுக்கு தான் நீ லாயக்கு.

குறை ஒன்றும் இல்லை !!! said...

அது என்ன கண்டனங்களை பதிவு செய்வது? வீட்டு பத்திர பதிவு மாதிறி இதுவும் ஒரு முறையோ? தெறிந்தவர், அறிந்தவர் தயவு செய்து விளக்கவும் !!!

Unknown said...

விளம்பரப் படத்தில் எலி .......சூப்பர். உங்க ரசனையோ ரசனை. மிட்டாய் வீடும் ஏற்க்கனவே எங்களுக்கு புடிச்சதுதான்....
ஏ ஜோக் ....அருமை.

பரிசல்காரன் said...

//தான் ஒரு எழுத்தாளராக மாறியதும்//

மணீஜீ.... ஏ இ கொ வெ???

:-))))

உண்மைத்தமிழன் said...

[[[சமீப காலமாய் பெண் பதிவர்களில் சிலர் டீச்சர் என்னை அடிச்சிட்டான்., அவன் என்னை பேசிட்டான்னு ஆவூன்னா “பைத்தியக்காரத்தனமா” அவங்களே எதை எதையோ தப்பு தப்பா யோச்சிட்டு, தேவையான நேரத்தில ஆளாளுக்கு ஒரு பதிவு போடறதும், உடனே ஊருல இருக்கிற ஆண் பதிவர்கள் எல்லாம் இதுக்கு சப்போர்ட் பண்ணலைன்னா.. நம்மை ஆட்டத்தில சேத்துக்க மாட்டாங்களோன்னு நாமளும் சீ…ச்தூ… நாய்களே.. பேய்களேன்னு, தலை குனிகிறேன்னு பதிவு எழுதி போடுறதும். வழக்கமா போச்சு.. இதுல் இருக்கிற பிரச்சனையே ஒன்னுத்தையும் கிழிக்கக் காணோம்.. இதுல இந்த மாதிரி பஞ்சாயத்துக்களையெல்லாம் வேற செஞ்சி.. ஏதோ இணைய போலீஸ் மாதிரி சீன்.. இதெல்லாம் போர் அடிச்சி போன பழைய சீன்.. வேற எதாச்சும் புதுசா பண்ணுங்கப்பா.. ]]]

மொதல்ல உன்னைத்தான் தூக்கிப் போட்டு மிதிக்கோணும்..!

குழுமம்ன்னு ஒண்ணு நடத்தினா அதைப் பொறுப்பா பார்த்துக்க வேணாம்..!? பிரச்சினை ஓடிக்கிட்டிருக்கும்போது "என்னமோ அடிச்சுக்குங்க.. பங்ஷனுக்கு வந்திருங்க"ன்னு சொன்னா என்ன அர்த்தம்..?

மத்த குழுமத்துல தனிப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்தால் உடனே நீக்கிரணும்னு ஒரு கொள்கை முடிவோட இருந்து செயல்படுத்துறாங்க. நான் மூணு குழுமத்துல இருக்கேன். அங்கேயெல்லாம் இதுதான்..

கும்மி என்றாலும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் உண்டு. முன்னாடியே பொறுப்பா மாடரேட்டரா நீ ரெண்டு பேரையும் கண்டிச்சிருந்தீன்னா ஒருவேளை இந்த விவகாரமே வந்திருக்காது..!

இப்ப வந்து "எனக்கு எதுவுமே தெரியாது. எனக்குப் பொறுப்பில்லை"ன்னு கையைக் கழுவிட்டு எஸ்கேப்பாகுறதுக்கு உன்னையெல்லாம்..........?

Jackiesekar said...

தான் ஒரு எழுத்தாளராக மாறியதும், மற்றவர்களையும் எழுத வைக்கும் எண்ணம் பரிசலுக்கு..கிரேட்....கீப் இட் அப்..உங்க அடுத்த தொகுப்பு எப்ப வருதுன்னு சொல்லுங்க பாஸ்.. அட்வான்ஸ் புக் பண்ணிக்கிறேன்..அப்புறம் கிடைக்காம போயிடப்போகுது //

மணிஜி அந்த வரியை நானும் சல்லடை போட்டு தேடிப்பார்க்கின்றேன்.. கானோமே????

கேபிள் எடுத்துட்டாரு போல???? கூச்சமோ????

கேபிள் நீங்க எப்ப சிறுகதை போட்டி வைக்க போறிங்க???

Thiru said...

தலைவா ..தினத்தந்தி பத்திரிகையில் முரளியின் இறுதி சடங்கு பற்றிய செய்தியில் ஒரு குறிப்பில் , வெள்ளி மலர் செய்தியை பற்றி எழுதியிருந்தார்கள்.வெள்ளி மலரில் அவரின் 100 வது படம் பற்றிய செய்தி அவர் இறபதர்க்கு முன்பே பிரிண்ட் செய்யப் பட்டு விட்டதென்று

deen_uk said...

unmayil mittai veedu arumayana kurum padam..rasitthen...thnx 4 da update sankar sir... naan kurai solvathaaga ninaikka vendam nanbare...mittaai veedu kurum padatthil 3.10 to 3.20 kavanittheerkal endraal,3.18-l oru editing kurai ullathu..ithai eppadi kavanikkaamal vittaargal? pinbu ithu eppadi muthal nilaikku varum? ithai intha kurum pada director kavanitthu,aduttha padathil kavanamaaga seithu vetri pera vaaltthugiren..