Thottal Thodarum

Jan 7, 2012

விநாயகா

vinayakudu-landing


 ரொம்ப நாளாகிவிட்டது இவ்வளவு இயல்பான ஒரு காதல் கதை பார்த்து. ஒரு மகா குண்டு இளைஞனுக்கும், அழகிய இளம் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதலை பற்றி தான் படம்.கார்த்திக் ஹைதராபாத்துக்கு ஹைடெக் என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர வருகிறான். அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் கல்பனாவை பார்த்ததுமே விரும்ப ஆரம்பிக்கிறான். இயல்பாகவே ரொம்பவும் சாப்ட் ஸ்போகன் பேர்வழி கார்த்திக். கல்பனாவோ..மிகவும் கோபக்காரி, குண்டான கார்திக்கை பார்த்த முதலே அவளுக்கு பிடிக்கவில்லை. கல்பனாவின் குடும்பம் தங்களுடய தம்பியின் வீட்டு விஷேசத்துக்கு வெளிநாடு செல்ல, கல்பனா தன் தோழியுடன் அவளுடய வீட்டில் தங்குகிறாள்.. கல்பனா,கார்திக்கை முகத்திலடித்தார் போல் எவ்வளவுதான் பேசினாலும், அவன் அதை பற்றி கவலை படுவதில்லை. கல்பனாவின் பெற்றோர் ஊருக்கு போவதற்கு முன் அவளுக்காக ஓரு பையனை பார்த்து, அவ்னுடன் பேசி பார்த்து பிடித்திருந்தால் கல்யாணம் செய்வதாய் ஏற்பாடு செய்துவிட்டு போயிருக்க, கல்பனாவுக்கும், அவளுடய வருங்கால கணவன் ராஜிவுக்கு இடையே காமனான விஷயங்கள் நிறைய இருக்க, கார்த்திக் தன்னுடய காதலை சொல்ல நினைக்கிறான்.இதற்கிடையில் கார்திக்கின் நண்பன் அல்டாபுக்கும், கல்பனாவின் தோழி சாண்டிக்கு காதல். அதே சமயத்தில் கல்பனாவுக்கும், ராஜீவுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிகிறார்கள். ஒரு நாள் அல்டாப் சாண்டியை முத்தமிட்டுவிட அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சனையை சால்வ் செய்ய போகும் கார்த்திக்கும், கல்பனாவுக்கும் சண்டை வந்து, கார்த்திக் அவளை பிரிகிறான். அவர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள் என்பதை ஆழகாய் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சாய் கிரண் அடவி.
Vinayak230410_21
கார்திக்காக நடிக்கும் கிருஷ்ணாவும், கல்பனாவாக நடிக்கும் சோனியாவும் ஏற்கனவே ஹாப்பி டேஸ் படத்தில் ஓன்றாய் நடித்திருந்தார்கள். அவர்கள் இருவரும் மெயின் காரெக்டராய் நடித்திருக்கும் படம் இது.
Vinayak230410_32
 படம் முழுவதும் சோனியாவை பார்த்து கொண்டேயிருக்கலாம் போலிருக்கு. i’ve never come across a dusky beauty like her in recent time. சூஸி சூஸி சச்சு போத்துன்னானு பாபு...அவருடய பாடிலேங்குவேஜும், அந்த பார்வைகளும், சிம்பிளி சூப்பர்ப். அவருக்காகவே மீண்டும் ஓரு முறை பார்க்க வேண்டும்.
Vinayak230410_59
 கிருஷ்ணாவுக்கு லட்டு மாதிரி கேரக்டர்.. மிக அழகாய் உணர்ந்து நடித்திருக்கிறார். தன் காதலி தன்னையும், தன் தந்தையையும், குண்டர்கள் என்று கிண்டல் பண்ணியதை நினைத்து, தன் அக்காவிடம் சொல்லி அழும் காட்சியில் கொஞ்சம் டிராமா முயற்சி செய்திருக்கிறார். கல்பனாவை பார்த்தும் மொஹலே ஆசம் பாடல் ஞாபகம் வருவதும், மீண்டும் ஓரு முறை வீட்டில் தனியாய் இருவரும் டிவி பார்க்கும் காட்சியில் அந்த பாடல் டீவியில் வந்ததும், கார்திக் டென்ஷனாவதை பார்த்து கல்பனா உள்ளுக்குள் சிரிப்பதும் அருமை. (இந்த இடத்தில் விஜய்யின் பாடலான அழகூரில் பூத்தவளே” பாடலை எடுத்திருக்கிறார்கள்.)
Vinayak230410_6
 ஹாப்பிடேஸ் இயக்குனர் சேகர் கம்முலா வின் அஸிஸ்டெண்ட் இயக்கியிருக்கும் படம், கம்முலாவின் பாணியிலேயே கொஞ்சம் ஸ்லோவாக செல்கிறது படம். ஆனாலும் இயல்பான நடிப்பு, ஷார்பான டைலாக், லாஜிக்கோடு காமெடி, மிக இயல்பான திரைக்கதை என்று படம் முழுவதும் சந்தோசஷமும், துள்ளலுமாய் இயக்கி ஓரு ஃபீல் குட் படத்தை அளித்திருக்கிறார் இயக்குனர். எதையும் எதிர்பார்காமல் போய் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாய் பிடிக்கும். ம்.. அப்புறம்  சோனியா இருக்கா....ம்ஹூம் நமக்கில்ல...நமக்கில்ல..
Main
 தனியாய் சந்தானத்தை வைத்து காமெடி காட்சிகள் எடுத்திருக்கிறார்கள். முதல் நாள் தியேட்டரில் கூட்டம் வர உதவியதைத் தவிர பெரிதாய் ஏதுமில்லை. சந்தானம் ஹீரோ, ஹீரோயின், ஹீரோவின் அக்கா வரும் காட்சிகள், ஆங்காங்கே சென்னையை மாண்டேஜாய் காட்டியதைத் மட்டும் புதியதாய் ஷூட் செய்துவிட்டு, மற்ற காட்சிகள் அனைத்தையும் தெலுங்கு மூலத்தை எடுத்து டப்பிட்டிருக்கிறார்கள். இதற்கு முழு படத்தையும் ஒழுங்காய் டப் செய்திருந்தாலே போதும். இந்த பத்து காட்சிகளை திறமையாய் சேர்க்க தெரிந்ததால் மட்டும் எப்படி இயக்குனர் பாலசேகரன் என்று போட்டுக் கொள்ள் முடியும் என்று தெரியவில்லை.  மகா ஏமாற்று வேலை. இதே வேலையைத்தான் முன்பு ராஜ் டிவி “கம்யம்” என்ற தெலுங்கு படத்தின் ரைட்ஸை வாங்கி எங்கேயும் எப்போதும் சரவணன், கமலினி முகர்ஜி வரும் காட்சிகளை ஒரிஜினல் தெலுங்கு பட புட்டேஜை வைத்துக் கொண்டு,  அல்லரி நரேஷ் காட்சிகளை மட்டும் இங்கே ரவிகிருஷ்ணாவை வைத்து எடுத்து இயக்குனர் என்று வேறு ஒருவர் பெயரை போட்டு, நல்ல படத்தை அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் ஆக்கினார்கள். அப்போதும் இதே கேள்வி தான் எழுந்தது. பத்து சீனை மட்டுமே மாற்றி ஷூட் செய்தால் அது தமிழ் படமாகிவிடுமா? மக்கள் அவ்வளவு மோசமான அறியாமையிலா இருக்கிறார்கள்?. என்ன காமெடி என்றால் தெலுங்கு படம் சென்னையிலேயே நாற்பது நாளுக்கு மேல் ஓடிய படம். எனிவே.. நல்ல படத்தை தமிழில் டப் செய்து கொடுத்ததற்காகவாவது பார்க்கலாம்.


டிஸ்கி:

எங்கோ படித்த மாதிரி இருக்கிறதே என்று யோசிப்பவர்களுக்கு : போல்டில் இருப்பது மட்டுமே தமிழ் படத்துக்கான விமர்சனம். மேலுள்ளது தெலுங்கு டப்பிங் விமர்சனம்.

Post a Comment

7 comments:

ragu said...

mmmm enatha solla evika epavuma epatithan boss

Thava said...

சிறந்த விமர்சனம்..நன்றி.

விநாயக முருகன் said...

இந்த ஹீரோயின் ஏற்கனவே தமிழில் அறிமுகமானவர். பையா படத்தில் கார்த்திக் பிரென்ட்டாக நடித்திருப்பார்

Hari said...

தலைவரே, ஒரிஜினல் தெலுகு படம் பெயர் என்ன?

விச்சு said...

உங்கள் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது.

sada said...

dear friend,
Engeyum eppothum saravanan illai. SARVAA.
www.somecomptips.blopspot.com

Ramkumar said...

Dear Sir,
Naan ungal 'theevira vasagan'.

This dusky beauty, does she feature in 'thuli thuli mazhayai' song in Paiya?

I would be glad if you reply to this 'vasagan'.

Thanks,