கொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரகாவியம் - அடல்ட் கார்னர் - பட்டைய கிளப்பணும் பாண்டியா- Mary Kom
கல்யாண மாலை நிகழ்ச்சியை என் அம்மா வாரா வாரம் விடாமல் பார்ப்பார்கள். ஞாயிறு காலை என்பதால் பல சமயங்களில் பட்டிமன்றங்களுக்கு நடுவே கல்யாணத்திற்காக காட்டப்படும் வரன்களின் போட்டோக்களைப் பற்றிய கமெண்டுகளை உதிர்த்துக் கொண்டும் பேப்பர் படித்துக் கொண்டும் அசுவாரஸ்யமாய் பார்ப்பேன். இந்நிகழ்ச்சியை பார்த்தன் விளைவாய் எனக்கு புரிந்த ஒன்று நல்ல வேலையில், உயர்ந்த பதவியில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு கிட்டத்தட்ட முதிர் கன்னி வயது வந்தும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சொச்ச முடிகளை முன் பக்கம் வழித்தெடுத்த முதிர்கண்ணன்கள் நிலையில்தான் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் அல்ல. சாதாரன பி.பி.ஓ, அக்கவுண்ட்ஸ், மார்கெட்டிங் என இருப்பவர்கள் தான் அதிகம். இன்னமும் திருமணமாகாமல் இருக்கும் என்னுடய நண்பர்கள் சிலரிடம் கேட்ட போது, இப்பல்லாம் ஒண்ணு பொண்ணு நம்மளை விட அதிகமா சம்பாதிக்குது. இல்லை நிறைய சம்பாதிக்கிறவனா இருக்கிறவன் புருஷனா வரணும்னு ஆசை படுறாங்க. அதான் ப்ரச்சனை என்கிறார்கள். நீயேன் உன் மனசுக்கு புடிச்ச பொண்ணா பார்த்து லவ் பண்ணக்கூடாது? என்றேன். சினிமா, பிஸினெஸுன்னு சுத்துற உனக்கு பொண்ணு கொடுத்திட்டாங்கிற மமதையில பேசுற என்கிறார்கள். ஒரு விஷயத்தோட தாத்பர்யத்தை புரிஞ்சிக்கலாம்னா விடமாட்டேன்குறாங்களே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா நண்பர் ஒருவர் போன் செய்திருந்தார். அதெப்படி நீங்க சொல்லுறது எல்லாம் நடக்குது? என்று ஆஃப் வேயில் கேட்க, புரியாமல் எதைப் பத்தி என்று கேட்டேன். நீங்க கருப்பு குதிரைன்னு என்னமோ நடக்குது, சலீம் படங்களைப் பற்றி சொன்னீங்க அத வச்சி சொல்லுறேன் என்றார். அது என் அனுபவத்தினால் வந்தது என்றேன். ஆம் அனுபவத்தால் தான். சினிமா எனது பேஷன் என்றாலும், அதை வியாபாரமாய் பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதற்கு காரணம் நண்பர் சுரேஷ். அவரும் நானும் கேபிள் டிவி எனும் ஒரே தொழிலில் இருந்ததால் நண்பர்கள் ஆனோம். இருவருக்குமான நெருக்கம் அதிகமாக ஒரே காரணம் சினிமா மீதிருந்த காதல் என்றே சொல்ல வேண்டும். அது தான் விநியோகம், தியேட்டர் என வியாபாரமாய் பார்க்க ஆரம்பிக்க வைத்தது. விநியோகத்திற்காகவோ, அல்லது தியேட்டருக்காகவோ படம் பார்க்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் படங்களைப் பற்றிய அனாலைசிஸ் எங்களுக்குள் வர ஆரம்பித்து, இது ஓடும், இது ஓடாது என்று ஸ்பெகுலேஷன் செய்யும் அளவிற்கு நாங்கள் படம் பார்த்த அனுபவமிருக்கிறது. சொல்லப் போனால் நாங்கள் பார்த்து இன்று வரை வெளிவராத திரைப்படங்கள் அதிகம். இத்தனை படங்கள் பார்த்து, வியாபாரத்தில் உழன்றதால் கிடைத்த அனுபவத்தினால் தான் சினிமா வியாபாரம் எனும் புத்தகம் எழுதி தொட்டால் தொடரும் என்ற படம் இயக்கும் அளவிற்கு வந்திருக்கிறேன். காலம் எங்களை அவரவர் வேலைகளில் பிஸியாக்கியதால் நெருக்கம் குறைந்தாலும், அவரைப் பற்றி நானும் என்னைப் பற்றி அவரும் யாரிடமாவது விசாரித்துக் கொண்டிருப்போம். சமீபத்தில் வெளியான என் தொட்டால் தொடரும் பாடல்களைப் பற்றி என் இன்னொரு நண்பரிடம் அவனுக்கு மிசியுக் ஞானம் அதிகம் எப்படியாவது பாட்டை வாங்கிருவான். அதே போல ட்ரைலர். எக்ஸ்பட்டேஷனை கிளப்பிருச்சு” என்றிருக்கிறார். அவர் சொன்னது எனக்கு தெரிய வேண்டு என்பதற்காகவே இருவருக்கும் பொதுவான நண்பரிடம் இக்கருத்தை தெரிவித்தார் என்பது எனக்கு தெரியும். அதே போல சமீபத்தில் அவர் ஒர் படத்தை வாங்கி வெளியிட ப்ளான் செய்தார். அப்படம் பற்றிய பாஸிட்டிவான ஒப்பீனியன் இண்டஸ்ட்ரியில் இருந்தது. நான் பொது நண்பரிடம் இந்த படம் அவருக்கு சரியா வரும் பாருங்க என்றேன். கடைசி நேர குழப்பத்தில் அப்படம் அவரிடமிருந்து கை மாறியது. விஷயம் தெரிந்ததும், போன் அடித்தேன் எடுக்கவில்லை. சரி ஆனது ஆச்சு எதுக்கு அதைப் பத்தி கேட்டு மனச குழப்பணும்னு மறுபடியும் கூப்பிடவில்லை. கடந்த நான்காம் தேதியன்று வழக்கம் போல ஒர் படத்தின் ப்ரிவியு பார்த்துக் கொண்டிருந்தேன். நாலரை மணியிருக்கும். ஒரு போன். நண்பர் சுரேஷ் மாரடைப்பால் இறந்து விட்டதாய். சட்டென ஒன்றும் புரியவில்லை. 42 வயசெல்லாம் சாவுற வயசா? என்ற கேள்வி மனதில் ஓடியது. நேரில் போய் பார்த்தும் என்னால் நம்ப முடியவில்லை. என் படம் விரைவில் வெளிவரப் போகிறது. எத்தனையோ படங்களை பார்த்து, விவாத்து வளர்ந்த நண்பர் இன்று இல்லை. ஆனால் எங்கள் நட்பின் மூலம் வளர்ந்த அனுபவம் மட்டும் இன்றும் என்னிடம்...
@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும் படத்தின் சென்சார் முடிந்துவிட்டது. யு வித்தவுட் கட்ஸ். படமாக்கப்படும் போதே படத்தின் தண்ணியடிக்கும் காட்சிகள், மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் அனைத்தையும் கருத்தாய் வைக்காமல் இருந்தோம். உறுப்பினர்கள் படத்தை பாராட்டினார்கள். சந்தோஷம். அடுத்த வேளையிருக்கிறது வரிவிலக்கு. முடிந்தவுடன் வெளியீட்டு வேலைகள் ஆரம்பிக்க வேண்டும். வெயிட்டிங்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பட்டைய கிளப்பணும் பாண்டியா
நண்பர், தயாரிப்பாளர் ஆணிமுத்துவின் முதல் படம். மலேசிய தொழிலதிபர். சுறாவிற்கு பிறகு இயக்குனர் ராஜ்குமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். அவருடய ஹோம் பிட்சான காமெடியில் மீண்டும் களமிறங்கியிருக்கிறார். வழக்கமாய் வடிவேலுவுடன் ஆடும் ஆட்டத்தை இம்முறை சூரியுடன். ஒன்சைட் கேமாய் அவர் மட்டுமே படம் நெடுக ஆட்டம் ஆடுகிறார். ஒளிப்பதிவு மூவேந்தர். ஸ்டில் கேமராமேனாக இருந்து ஒளிப்பதிவாளராகியிருக்கிறவர். கிடைத்த வாய்ப்பை சரியே பயன்படுத்தியிருக்கிறார். அருள் தேவின் இசையில் ரெண்டு பாடல்கள் சுவாரஸ்யம். அதீத நீளம் படத்தின் சுவாரஸ்யதிற்கு தடையாய் போய்விட்டது என்றே சொல்ல வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரெண்டு நாள் முன்னாடி ஒரு பெண் போலீஸ் வேறொரு ஆண் போலீஸின் மீது புகார் கொடுத்திருந்தார். ஆபாசப் படங்களை வெளியிட்டு விடுவதாய் மிரட்டி உல்லாசத்திற்கு அழைத்தார் என்று. ஆண் போலீஸை பிடித்து விசாரித்து, அவரது போனில் இருந்த ஆபாச படங்களை எல்லாம் அழித்துவிட்டு, எச்சரிக்கை விடுவித்துவிட்டார்களாம். பெண் போலீஸும் கேஸை வாபஸ் வாங்கி விட்டாராம். ட்ரைனிங்கின் போது தினமும் மாலையில் சந்தித்து வெறும் பேச்சோடு மட்டுமே இருந்திருக்கிறதாம இவர்களின் உறவு. பின்பு எப்படி ஆபாச படம். உல்லாசம் எல்லாம். க்டவுளுக்கே வெளிச்சம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒர் தனி அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸை நொய்டாவில் ஒர் நிறுவனம் கட்டவிருக்கிறது. முழுக்க முழுக்க, முஸ்லிம்களுக்கு மட்டுமே என்கிற வியாபார அடிப்படையில். அதே போல சமீபத்தில் புரசைவாக்கத்தில் பழைய ஹோட்டல் ஒன்றை இடித்துவிட்டு கட்டிக் கொண்டிருக்கும் ஒர் அபார்ட்மெண்ட்டின் வாசலில் ஜெயின்களுக்கு மட்டும் என்று போடப்பட்டிருந்தது. அக்ரஹாரம் இருந்த காலத்தில் அதை எதிர்த்துவிட்டு, மீண்டும் இப்போது ஜாதி வர்ணம் பூசிக் கொண்டு தனிதனி காலனிகள் உருவாகுவது சரியானதாய் தெரியவில்லை. என்னதான் நாமெல்லாம் பெரியாருக்கு பிறகு ஜாதி எல்லாம் பார்ப்பதில்லை என்று சிட்டியில் வசிக்கிறவர்கள் சொன்னாலும், இன்னமும் கிராமங்களுக்கு போனால் ஜாதியை வைத்துத்தான் ஆளை கூப்பிடுகிறார்கள். போற போக்கில் தேவர், ஐயர், அய்யங்கார், எஸ்.சி. எஸ்.டி. முதலியார், என ஆரம்பித்து போகிற போக்கில் சப்செக்ட்டாக சுன்னி முஸ்லிம்களுக்கு , ஷியா முஸ்ஸிம்களுக்கு என்று பில்டிங் கட்டிக் கொடுக்கும் காலமும் வருமென்று தெரிகிறது. வாழ்க.. ஜாதி.. வளர்க.. மதம்
@@@@@@@@@@@@@@@@@@@
எல்லா தியேட்டர்களிலும் பை அல்லது லேப்டாப் பேக் எடுத்துப் போனால் ஏதோ பாம் ஸ்குவாட் செக்கப் செய்வது போல பையைப் பிடுங்கி செக் செய்யாமல் விட மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் செக் செய்வது பாமுக்காக இல்லை உள்ளே ஏதாவது சாப்பாடு அயிட்டம் எடுத்துக் கொண்டு போய் விட்டால், அவர்கள் கடையில் வியாபாரம் ஆகாது என்கிற பயத்தில் தான் இத்தனை செக்கப். இத்தனைக்கும் மெட்டல் டிடெக்டர் செக்கப் வழியில் எல்லாம் தான் அனுப்புகிறார்கள். நான் எந்த தியேட்டரிலும் என் பேகை அவிழ்த்து காட்டுவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறேன். வேணும்னா அவங்களே பின் பக்கமா திறந்து செக் பண்ணிக்கட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
போகுற போக்குல ஷியாவுக்கு தனியா சன்னிக்கு தனியாவெல்லாம் கட்டுவாங்க போல.. ம்ஹும்.
எங்க பொண்ணை தூய்மையா வளர்த்திருக்கோம்னு கல்யாண மாலையில ஒரு தகப்பன் சொல்லுறாரு மத்தவங்க எல்லாம் அழுக்கு பண்ணியா வளர்க்குறாங்க டவுட்டு

Comments
வாழ்த்துக்கள் உங்கள் படம் வெற்றியடைய ..
I also wonder if you are not happy with your film's heroine by your comment on Srushti D!
Wonder - Why didn't think of calling your good friend (now deceased) to the audio release of your film? May his soul RIP.
- R. J.
no there is no hush..hush..
2. regarding the heroine My Arundhadhi is a good actress.. once u come across my film u will know.. iam very much happy.. but i also liked srishthidangi
அவன நிறுத்த சொல். நான் நிறுத்தறேன் - வேலுநாயக்கர்
அவர மீறிலாம் வரல.எல்லாம் PLAN பண்ணி தான் வருது
I posed the queries in lighter vein - just to tease you! Thanks for sincere response. I will be going to the theatre after a long time when your film releases! - R. J.
தொட்டால் தொடரும் படத்தின் சென்சார் முடிந்துவிட்டது. யு வித்தவுட் கட்ஸ். படமாக்கப்படும் போதே படத்தின் தண்ணியடிக்கும் காட்சிகள், மற்றும் புகை பிடிக்கும் காட்சிகள் அனைத்தையும் கருத்தாய் வைக்காமல் இருந்தோம். உறுப்பினர்கள் படத்தை பாராட்டினார்கள். சந்தோஷம். அடுத்த வேளையிருக்கிறது வரிவிலக்கு. முடிந்தவுடன் வெளியீட்டு வேலைகள் ஆரம்பிக்க வேண்டும். வெயிட்டிங்..
//
வாழ்த்துகள் சங்கர்.
அப்புறம் படத்துக்கு வரிவிலக்கு கிடைச்சதினால அரங்குக் கட்டணத்த குறைப்பீங்களா இல்ல வழக்கம்போலதானா?