Thottal Thodarum

Sep 17, 2014

Finding Fanny

  • 85 லட்சம் ஹிட்ஸுகளை தொடர்ந்து வாரி வழங்கி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்-கேபிள் சங்கர்
டிவியில் வந்த ப்ரோமோ பாடலும், மொழு மொழு தீபிகாவும் என்னை வா.. வா என அழைத்தார்கள். நானும் என் இனிய நண்பர்,நடிகர் பாலாஜியும் ஐ நாக்ஸில் ஞாயிறு இரவுக் காட்சி பார்த்தோம். தியேட்டரில் எல்லா ஸ்கீரினும் காத்தாடியது. சத்யமில் மட்டுமே எல்லா படங்களும் புல்லாய் போகிறது. சரி கதைக்கு வருவோம்.



தீபிகா ஒர் இளம் விதவை. அவரது மாமியாரான டிம்பிள் கபாடியாவுடன் கோவாவில் ஒர் சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த கிராமத்து போஸ்ட் ஆபீசர் பெருசு நஸ்ரூதீன் ஷா. திருமணமே ஆகாமல் தனிக்கட்டையாய் இருக்கும் அவருக்கு ஒரே தோழி தீபிகா. அவ்வூரில் இருக்கு அர்ஜுன் கபூர். அவருக்கும் தீபிகாவுக்கும் ஏற்கனவே காதலிருந்திருக்கிறது. இன்னொருவர் பங்கஜ் கபூர் ஓவியக்காரர். டிம்பிளின் மேல் ஆதீத ஆர்வம் கொண்டவர் டெரர் ஓவியர். ஒரு நாள் நஸ்ரூதீன் வீட்டிற்கு நடு ராத்திரியில் ஒர் கடிதம் வருகிறது. ஊருக்கே போஸ்ட் மாஸ்டரானாலும் அவருக்கு நடு ராத்திரியில் இப்படி லெட்டர் டெலிவரி செய்தவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அது பிரச்சனையில்லை. அந்த லெட்டர் 46 ஆண்டுகளுக்கு முன்னால் நஸ்ரூதீன் அவருடய காதலி பேனி பெர்னாண்டஸுக்கு எழுதியது. அது அங்கே போய் சேராமல் திரும்ப வந்திருப்பதுதான். எல்லோரும் சேர்ந்து அர்ஜுன் கபூரின் லொடக்கா பழைய காரை ரிப்பேர் செய்து கொண்டு நஸ்ரூதீனின் பழைய காதலியை தேடியலைவதுதான் படம்.

வழ வழவென சின்தால் அழகி போல க்யூட்டாக இருக்கிறார் தீபிகா. கண்களில் தெரியும் மென் சோகமும், சந்தோஷமும் பார்க்கும் நமக்கு அவ்வளவு பிடிக்கிறது. படம் நெடுக அவர் தன் க்ளீவேஜை காட்டிக் கொண்டு வந்தாலும், கொஞ்சம் கூட ஆபாசமாய் தெரியவில்லை. அவ்வளவு க்யூட்.

நஸ்ரூதீன் ஒர் சுவாரஸ்ய கேரக்டர். தன் காதலியின் லெட்டர் வந்து படித்துவிட்டு அவர் அழும் அழுகைக்கு ஊரே லைட் போட்டு எழும் காட்சியில் ஆரம்பித்து, தீபிகா “கடைசி வரை உன் காதலியை பார்க்காமலேயே சாகப் போறியா?’ என்று கேட்கும் போது வேகமாய் தலையாட்டி, “நான் சாக விரும்பல” என்று சொல்லும் இன்னொசென்ஸ் ஆகட்டும் வாவ்..

படத்தின் சுவாரஸ்யமான கேரக்டர் பங்கஜ் கபூர் தான். டிம்பிள் எங்கு போனாலும் அவரின் உடல் மீது காமத்துடனான ஒர் பார்வை வீசிக் கொண்டு, எப்படியாவது அவரை படமாய் வரைந்து உலகப் புகழ் பெற்று விட வேண்டுமென கன்வின்ஸ் பண்ண டரை பண்ணுவது, கம்பெல் செய்து அவரை வரைந்து விட்டு, பெரும் காமம் தீர்ந்த திருப்தியுடன் அவர் படத்தோடு நடக்கும் காட்சியில் வாவ்.. அந்த ஓவியத்தைப் பார்த்து டிம்பிள் காட்டும் ரியாக்‌ஷன் வயிற்று வலி.

உறுத்தாத ஒளிப்பதிவு, திறமையான கேஸ்டிங், ட்ராவலில் நடக்கும் வாழ்க்கை புரிதல்கள். சமயங்களில் சட்டென பாட்டிலில் நுரைத்து வழியும், சோடா போல.. சுவார்ஸ்ய தடாலடி வசனங்கள். என பல சுவாரஸ்ய தருணங்களை இயக்குனர் ஹோமி அடஞ்சானியா வைத்திருந்தாலும், ப்ரெடிக்டபிளாய் அமைந்திருப்பதும், படு ஸ்லோவாக செல்வது ஏமாற்றமே.
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

'பரிவை' சே.குமார் said...

விமர்சனம் நன்று அண்ணா...

Unknown said...

sir
I have read a forward message.
Its regards the wastage in gold ornaments. A foreign lady came here and bought a gold jewel in India. They billed the wastage charges also. She asked the wastage gold from the merchant. He got shocked. Actually we are paying the amount for wastage so they have to give the wastage gold to us right. Could you please answer for this question ? "ketaal wastage thangam kidaikuma?"