கொத்து பரோட்டா -01/09/14 -சலீம், அடல்ட் கார்னர், Peruchazhi, Munariyappu,கேட்டால் கிடைக்கும்
கேட்டால் கிடைக்கும்
ஃபேம் தியேட்டர் புட் கோர்ட்டில் குடிக்க ஓரமாய் வைத்திருந்த தண்ணீர் கேனை இப்போது கண்ணுக்கு தெரிவது போல வைத்திருந்தார்கள். புட் கோர்ட்டில் கார்டு வாங்கினால் தான் சாப்பிட முடியும் என்று சட்டம் வைத்திருந்தாலும், ஈ அடிக்கும் கூட்டமிருப்பதால் ஒவ்வொரு கடைக் காரரும், ஆளுக்கு ஒர் ஸ்வைப்பிங் கார்டு வைத்து அதைக் கொடுத்து உணவுகளுக்கு காசை கொடுக்க சொல்லி விடுகிறார்கள். கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. இப்போது இவர்களுக்கு ஒர் ஆப்பு வருகிறது அந்த மாலில் ஜூனியர் குப்பண்ணா ஒரு புதிய கிளையை திறக்கிறது. அங்கே இருந்த சிக் கிங் கவுண்டரில் டயட் கோக் வாங்க விலை என்ன என்று கேட்ட போது 35 ரூபாய் என்றார். “அது முப்பது ரூபாதானே?” என்று கேட்ட போது ஆமா.. மால்ங்கிறதுனால 5 ரூபா எக்ஸ்ட்ரா என்றார். அதெப்படி வாங்குவீங்க..? என்று கேட்டதற்கு மாலுக்கு வர்றீங்க இல்லை காஸ்ட்லியாத்தான் இருக்கும் என்றார். அது எப்படிங்க வாங்குவீங்க? என்று கேட்டதற்கு புத்திசாலித்தனமாய் பேசுவதாய் நினைத்து, “சினிமா டிக்கெட் 120 கொடுத்து வாங்குறீங்க.. அங்கேயே 10 ரூபா டிக்கெட்டும் இருக்கு அதை வாங்க வேண்டியதுதானே?” என்றார். “சார்.. தேவைனா 10 ரூபா டிக்கெட் கூட வாங்கிப் பார்ப்பேன். ஆனா அவங்க கவுண்டர்ல 10 ரூபா டிக்கெட்டை 11ரூபாய்க்கு விக்குறது இல்லை என்றேன். பதில் பேசவில்லை. நாட்டுல அவனவன் கொள்ளையடிக்கிறான் அதை விட்டுட்டு இதை கேக்குறீங்க? என்றார். நான் இங்க 5 ரூபாய்க்கு இவ்வளவு கேள்வி கேக்குறேன் இல்லை அதே போல கேளூங்க நிச்சயம் கிடைக்கும் என்றேன்.
எல்லா தியேட்டர்களிலும் பை அல்லது லேப்டாப் பேக் எடுத்துப் போனால் ஏதோ பாம் ஸ்குவாட் செக்கப் செய்வது போல பையைப் பிடுங்கி செக் செய்யாமல் விட மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் செக் செய்வது பாமுக்காக இல்லை உள்ளே ஏதாவது சாப்பாடு அயிட்டம் எடுத்துக் கொண்டு போய் விட்டால், அவர்கள் கடையில் வியாபாரம் ஆகாது என்கிற பயத்தில் தான் இத்தனை செக்கப். இத்தனைக்கும் மெட்டல் டிடெக்டர் செக்கப் வழியில் எல்லாம் தான் அனுப்புகிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Munnariyappu
மலையாள படங்களில் சமீபகாலமாய் மம்மூட்டியின் படங்களை பார்ப்பதில்லை என்ற கொள்கையை ரெண்டு மூன்று இணைய தளங்களில் பாராட்டியிருந்தார்களே என்ற கருத்தில் இப்படத்தை பார்க்கப் போனேன். மனைவி, தான் வேலை பார்த்த இடத்தில் சேட்டுப் பெண் இரண்டு பேரைக் கொன்று விட்டு இருபது வருடங்களாய் தண்டனைக் காலம் முடிந்தும் கூட ஜெயிலருக்கு எடுபடியாய் இருந்து வருகிறவர் மம்மூட்டி. ஜெயிலரின் வாழ்க்கை வரலாறை எழுத வரும் பத்திரிக்கைகாரி மம்மூட்டியின் வாழ்க்கையின் மேல் ஈடுபாடு ஏற்பட்டு, அவரை பற்றி கட்டுரை எழுதுகிறார். அவரின் வாழ்க்கை அனுபவத்தை புத்தகமாக்கித்தர ஜெயிலிருந்து கூட்டி வந்து தனியே வைத்து எழுதச் சொல்கிறார் பத்திரிக்கைகாரி. அவன் அப்பெண்களை கொன்றானா? இல்லையா? இந்த பத்திரிக்கைக்காரிக்கு என்ன பதில் கிடைத்தது என்பதுதான் படம். ஆனால் க்ளைமேக்ஸ் காட்சியில் வைக்கப்பட்டிருக்கும் ட்விஸ்ட் ஒலக கலை படங்களின் தாக்கத்தோடு இருந்தது பெரும்பாலான பேர்களுக்கு ஏமாற்றமாகவும்,மிகவும் சில பேர்கள் ரசித்தாகவும் தெரிகிறது. மம்மூட்டி ரொம்ப நாளுக்கு பிறகு அழுத்தமான அலட்டல் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேணுதான் இயக்குனர். இதற்கு முன் மலையாளத்தில் ஒர் படம் எடுத்திருக்கிறார். டைட்டில் காட்சியில் நிறைய கட்டெரும்புகள் கூட்டமாய் இறந்த பல்லி ஒன்றை தூக்கி செல்லும் காட்சி அது. செம்ம.. க்ளைமேக்ஸ் தான் எனக்கு புரியலை பார்த்தவங்க புரிஞ்சா சொல்லுங்க. இது வரைக்கும் ஐந்து பேர் அவங்கவங்களுகு புரிந்த க்ளைமேக்ஸ சொன்னார்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
- பணம் கையாளுபவர்கள் நல்ல கிரியேட்டர்களாக இருக்க முடியாது என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.
- ஜாதகம் சரியா இல்லையான்னு தெரிஞ்சிக்கனூம்னா நல்ல விஷயம் சரியான கிரக நிலையில நடக்காம கெட்ட விஷயம் மட்டும் சரியா நடக்கும் அப்ப தெரிஞ்சிக்கலாம்
Comments
Wonderful
Sema Punch ..