Thottal Thodarum

Apr 6, 2015

கொத்து பரோட்டா - 06/04/15

என் ட்வீட்டிலிருந்து
all the best. neat family film. @StudioGreen2 @prabhu_sr ‪#‎Komban‬

எதையும் பார்க்காமலேயே தடை பண்ணனும்னு சொல்றவங்களை தடை செய்தா எல்லாம் சரியாயிரும்.

பேசாம எல்லா ஜாதி, மத, கட்சிக்காரங்களையும் ஒட்டுக்கா வச்சி சென்சார் பண்ணுங்கப்பா.. அப்பவாச்சும். இவனுங்க சண்டைய தூண்டாம இருக்காங்களானு

@@@@@@@@@@@@@@@@@சனி இரவு மகன்களுக்கு சம்மர் ஹாலிடே விட்டாயிற்று. எங்கயாச்சும் கூட்டிட்டு போ என்று கேட்டதினால் அப்சல்யூட் பார்பிக்யூ கூட்டிச் சென்றேன். ஏற்கனவே உணவகத்தைப் பற்றி எழுதியாயிற்று பதிவு அதைப் பற்றியல்ல. இரவு திரும்ப வரும் போது தி.நகரில் டி.டி. செக்கிங். இம்முறை பெரிய ஸ்ட்ரா வைத்திருந்தார்கள். கிளம்புங்க என்று சொன்னவரைப் பார்த்து “அப்பா நானும் ஒரு வாட்டி ஊதிப் பாக்குறேன் கொஞ்சம் கேட்டு வாங்கித் தாயேன்” என சின்னவன் கேட்க, போலீஸ்காரை பார்த்தேன் ஸ்டாப் ப்ளாக்கில் அவுட் ஆனார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சகாப்தம்
தெலுங்கிலோ, அல்லது ஹிந்தியிலோ ஒரு பெரிய நடிகரின் வாரிசு என்றால் ஒர் பெரிய இயக்குனர் கையில் அவனை ஒப்படைத்து, சரியான முறையில் லாஞ்ச் செய்வதுதான் வழிமுறை. ஒர் பெரிய இயக்குனர், டீமின் கையில் பையன் சென்றடையும் போது, அதற்கான பில்டப்புகள், எல்லாம் சேர்ந்து படத்திற்கான தகுதியை மேலேற்றிவிடும். இப்படி ஏதுவும் செய்யாமல், கட்சியை லாஞ்ச் செய்தது போலவே பையனையும் லாஞ்ச் செய்திருக்க வேண்டாம். 
@@@@@@@@@@@@@@@@@@
PRIDE OF TAMIL CINEMA

தமிழ் சினிமாவைப் பற்றிய ஆங்கிலப் புத்தகம். கிட்டத்தட்ட ஒரு என்சைக்ளோபீடியா போல. அதில் பல சுவாரஸ்யங்கள் உண்டு. சினிமாவைப் பற்றிய பேஷன் இருப்பவர்களால் மட்டுமே இது சாத்தியமான விஷயம். எழுதிய தனஞ்செயன் அவர்களுக்கு நேற்று டிஸ்கவரி புக் பேலஸில் பாராட்டு விழா. மோகன்ராம், அம்ஷன்குமார், சி.ஜே.ராஜ்குமார், அறந்தை மணியன், ஆகியோருடன் நானும் பேசினேன். தமிழ் சினிமாவைப் பற்றிய புத்தகம் ஆங்கிலத்தில் வந்ததுதான் சரி. அப்போதுதான் தமிழ் சினிமாவைப் பற்றி மேலும் பல நிலைகளில் உள்ளவர்களுக்கு தெரியும் என்று அம்ஷன்குமாரும், புத்தகத்தைப் பற்றி சி.ஜே.ராஜ்குமாரும், இம்மாதிரியான புத்தகங்களில் ஏற்படும் தகவல் குறைபாடுகளைப் பற்றியும், பிரபல தொலைக்காட்சிகள் கூட வரலாற்று பிழற்வு தகவல்களை கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் மக்களிடம் தருவது பற்றியும், இப்புத்தகம் அம்மாதிரியான எந்தவிதமான தகவல் பிழைகளையும் கொள்ளாத புத்தகமென்று பாராட்டி பேசினார். மோகன்ராம் புத்தகத்தைப் பற்றி பலரும் பேசிவிட்டதால் எழுதிய தனஞ்செயனைப் பற்றி விரிவாக பேசினார். எல்லோர் பேசியதையும் பார்த்து கலந்து கட்டி, சில உண்மைகளையும் பேசுற ப்ளோவில்  உளறிவிட்டேன். உதை வாங்காமல் இருப்பதற்கு மேலே இருக்கிறவன் தான் காப்பாத்தணும். வேடியப்பன் தான் இப்புத்தகத்தின் தமிழ் வர்ஷனை கொண்டு வருகிறார். எல்லோருக்கும் நன்றி சொன்ன தனஞ்செயன் தமிழ் புத்தகம் அதிக லாபமில்லாமல் பலரை சென்றடையும் படியாய் விலை அமையும் என்ற வாசகர்களுக்கான இனிமையானதான பப்ளிஷருக்கு புளியை கரைக்ககூடிய செய்தியை சொன்னார். வேடியப்பன் சிரித்தபடி இருந்தார். இத்துடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவும் செய்தார். அசாத்திய தைரியம் உள்ள மனிதர். சினிமா பற்றிய ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் படித்து, நாஸ்டால்ஜியா உலகில் பயணிக்க வைக்கும் அற்புதமான புத்தகம். வாழ்த்துகள் தனஞ்செயன் சார்.
@@@@@@@@@@@@@@@@@@
நண்பேண்டா
செலவுகளைப் பற்றி கவலைப் படாமல் இழைத்து இழைத்து காமெடி படமெடுப்பவர்கள். டைட்டில் மீசீக்கிலேயே என்னதான் ஆச்சு நம்மூருக்கு ரேஞ்சில் ஒரு கம்போஸிங். அதற்கு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் நச்சுன்னு இருக்கிறார் என்று சொல்வதா? கொழுக்குன்னு இருக்கிறார் என்று சொல்வதா என்று கருத்து சொல்ல முடியாத நிலையில் “நயந்தாரா சார்” மனநிலையில் படம் பார்க்க வைக்கிறார். மற்றபடி க்ளைமேக்ஸில் பார்க் டைம் முடிந்துவிட்டது என்று சந்தானம் மிமிக்ரி செய்து தான் செம்ம காமெடி. இன்னும் கொஞ்சம் இழைத்திருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@
கொம்பன்
பருத்தி வீரன், நான் புடிச்ச மாப்பிள்ளை எல்லாத்தையும் கலந்து கட்டி ஒரு நெஞ்சை நக்கும் குடும்பப்படம். க்ளைமேக்ஸில் சின்னத்தாயி சாமியாட்ட வேட்டை ஓட்டம் வேறு. வேல்ராஜின் ஒளிப்பதிவு. ஜி.வியின் கருத்த நிறத்தழகி, பாந்தமான லஷ்மி மேனன் என ஏற்கனவே ஹிட்டடித்த காம்பினேஷன்களை ஜுகல்பந்தி செய்து,மினிமம் கேரண்டி ஹிட்டடித்திருக்கிறார்கள். ஹாப் வே எண்ட் கொம்பன் பார்ட் 2 வருமோ என்ற கேள்வியுடன் இருக்கிறது. நன்றி கிருஷ்ணசாமி டாக்டர்.
@@@@@@@@@@@@@@@@
தெலுங்கு சினிமா மட்டும் எப்போது ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டேயிருக்கும். பொப்பிலி புலி ஓடும் அதே நாளில் இன்னொரு பக்கம் சங்கராபரணமும், ஹிட்டாகியிருக்கும். ஒரு பக்கம் காமெடி, இன்னொரு பக்கம் கரம் மசாலா, லெப்டி ஒடிச்சி திரும்பினா பேமிலி ட்ராமா, ரைட்டுல சீரியஸ் நோட் கம்யம் போல எல்லாவிதமான படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள். நிஜமாகவே கலா ரசிகர்கள் என்றால் அவர்கள் தான். அதை மீண்டும் ஒரு முறை எவுடே சுப்ரமணியம் படத்தை ஹிட்டாக்கியதன் மூலம் நிருபித்திருக்கிறார்கள். சந்தோஷமாய் இருக்கிறது. இன்றைய தமிழ் சினிமா சமூகத்தில் கேளடி கண்மணியோ, முள்ளும் மலரும் படத்தையோ மீண்டும் எடுத்தால் ஓடுமா என்று கேட்டால் மலங்க மலங்க முழிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why are pubic hairs so curly? 
So they don't poke out your eyes. 

கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Raj said...

சகாப்தம்.. பார்க்கமுடியலைன்னே
நிக்கிறாரு நடக்குறாரு டைமிங் மிஸ்ஸாகுது ..இப்படி படம் பூரா - ரொம்ப பேசினா பிரச்சினை ஆகும்..