Thottal Thodarum

Jun 18, 2017

சாப்பாட்டுக்கடை- கறிசோறும் கல்தோசையும்

சினிமா பட டைட்டில் போன்ற பெயருடன் ஒர் உணவகம். ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு எதிரே ஒரு காபி ஷாப்பின் அமைப்பில் இருந்தது.  கறிசோறுக்கும் இந்த டெக்காருக்கும் சம்பந்தமேயில்லை என்று யோசனை வந்தாலும் கறிசோறு என்றதும் நாவில் எச்சிலூற ஆரம்பித்துவிட்டது.  





சிக்கன் சாதம் பெப்பருடன் வாசனை தூக்கியது. டிபிக்கல் ஹோம் மேட் டேஸ்ட்டுடன். மட்டன் சோறும் குட். மீன் சோறு, மாங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய் எல்லாம் போட்டு அரைத்த குழம்பை கலந்த சோறு. அட்டகாசம். ரசத்தில் கொஞ்சம் பெப்பர் தூக்கல். தயிர் சாதம் மட்டும் மோர் சாதம் போல இருந்தது.  ரொம்ப நாளாய் ஊரை விட்டு வந்து நாக்கு செத்துப் போன பயலுவளுக்கு எல்லாம் இனி வேட்டை தான். ஏனென்றால் விலை வெறும் 100 தான்.

சைட்டிஷ்ஷாய் மட்டன் சுக்கா, நல்லி, மீன், நாட்டுகோழி, போட்டி என வகை வகையாய் வைத்திருக்கிறார்கள். நாட்டுக்கோழி அளவான மசாலாவோடு, செக்கு எண்ணைய் மணத்துடன், கார சாரத்தோடு அட்டகாசம். மட்டன் சூப், மற்றும் நாட்டுக்கோழி சூப் செம்ம.. காரம் மணத்தோடு. 



மாலையில் கல் தோசை, கறி தோசை, இட்லி, மூளை பணியாரம் என சைட்டிஷ்சாய், மீன், சிக்கன், மட்டன்  பீஸோடு, கிரேவியும் தருகிறார்களாம். இன்னொரு டயட் லீவு நாளில் போக வேண்டும்.  மறக்காமல் இவர்களுடய குல்பியை சாப்பிடாமல் வர வேண்டாம். அட்டகாசம் ஆசம். அண்ட் கிரீமி.
     

Post a Comment

2 comments:

Senthil said...

பதிவை படித்து ரொம்ப பசி எடுக்கிறது, அருமையான பதிவு , நல்ல ஹோட்டல் அறிமுகபடுத்தியத்கு நன்றி வணக்கம்

Unknown said...

உங்களுக்கு எங்கயோ மச்சம் இருக்கு சார்.