Thottal Thodarum

May 23, 2015

சாப்பாட்டுக்கடை - EGGIES

90 லட்சம் ஹிட்ஸுகளை  அளித்து, தொடர்ந்து ஆதரவு கொடுத்து கொண்டிருக்கும் வாசகர்கள், நண்பர்களுக்கு என் நன்றிகள்- கேபிள் சங்கர்
பேலியோ ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் மதிய உணவு ஆம்லெட்டாகத்தான் இருக்கிறது. சமயங்களில் இரவு நேரத்தில் முட்டை பொடிமாஸ், அல்லது நான்கைந்து கலக்கி என டின்னர் முடிப்பது வழக்கம். அப்போதுதான் இந்த கடையை பார்த்தேன். வள்ளுவர் கோட்டத்திலிருந்து வடபழனி நோக்கி போகும் திசையில் கோடம்பாக்கம் பிரிட்ஜுக்கு முன் இடது புறம் இந்த கடை அமைந்திருக்கிறாது. எக்கீஸ் என்றதும் அட முட்டையை மட்டுமே வைத்து அயிட்டங்கள் செய்கிறார்கள் என்றதும் ஒரு நாள் போய் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.
ஒரு நாள் இரவு லேட்டாய் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கடை திறந்திருக்க, உள்ளே சென்றேன். குட்டியான கடை. ஏசி செய்யப்பட்டு, டீசெண்டான இண்டீரியரோடு,  பாஸ்ட்புட் ஜாயிண்ட் போல இருந்தது. எக் மசாலா, சிக்கன் ஆம்லெட், ஸ்பினாச் ஆம்லெட், ஆம்லெட், மட்டுமில்லாமல், சிக்கன் பர்கர், ஷவர்மா பர்கர், கிரில் சிக்கன் போன்ற அயிட்டங்களும் இருந்தது. முட்டையில் நான் கேட்ட மசாலா இல்லையென்றதால், சரி விதயாசமாய் சிக்கன் ஆம்லெட் சாப்பிடலாம் என்று ஆர்டர் செய்தேன். 

ஆம்லெட்டில் ஷவர்மா சிக்கன் துண்டுகளை லேசான சீஸோடு அதன் நடுவில் பரப்பி, சுருட்டி, அதன் மேல் லைட்டாய் மயோனீஸை வரைந்து கொடுக்கிறார்கள். இளம்சூடான ஆம்லெட்டோடு, லைட்டான ரோஸ்டான சிக்கனும், சீஸும் சேரும் போது மெல்டிங் சுவையை உணர்ந்ததோடு மட்டுமில்லாமல், வயிற்றுக்கு போதுமானதாகவே இருந்து. மற்ற அயிட்டங்களை வேறொரு நாள் சுவைக்கலாம் என்று கிளம்பினேன். நிச்சயம் பேலியோ பிரியர்கள் ஒரே விதமான பொடிமாஸ், ஒன் சைட், டபுள் சைட், புல்ஸ் ஐ, வேக வைத்து என்று போரடித்திருந்தால் நிச்சயம் ட்ரை பண்ணக்கூடிய ஒரு விஷயம் தான். விலையும் ரொம்ப அதிகமில்லை. 60 ரூபாய் தான்.

  கேபிள் சங்கர்

Post a Comment

No comments: