Thottal Thodarum

May 18, 2010

தற்கொலை செய்து கொள்ளும் தமிழக காவல்துறை

ஆம் நண்பர்களே.. தமிழக காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வழக்கமாய் இவர்கள் இம்சை தாங்காமல் மக்கள் தானே செய்து கொள்வார்கள் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இந்த விஷயம் ஏதோ  காவல்துறையை கிண்டல் செய்ய சொல்லவில்லை. நிஜமாகவே தமிழக் காவல் துறையில் தற்கொலைகள் பெருக ஆரம்பித்துவிட்டன.

நேற்றைய பேப்பரில் மட்டும் சுமார் மூன்று தற்கொலைகள். ஒருவர் இளைஞர். இவர் இத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டதே இவரது குத்துசண்டை சான்றிதழ்களை வைத்துதான். இவர் இத்துறைக்கு தேர்வானதும், பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவதை கனவாக கொண்டிருந்த வேளையில் உயரதிகாரிகள் இவரை குத்து சண்டை போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடை விதித்ததால்,மனம் நொந்து, மன உளைச்சலால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இன்னொருவர் சுமார் 58 வயதான உதவி சூப்பிரண்ட். இவர் ஒரு ஹோட்டல் ரூமில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன்னை ஒரு பெண் தொந்தரவு செய்வதால் அந்த மன உளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளார். இவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து, அவளிடமிருந்து விலகியிருந்திருக்கிறார். தன்னோடு கணவன் மனைவி போல் வாழ்ந்துவிட்டு தன்னை நிர்கதியில் விட்டுவிட்டதாக புகார் கூட செய்திருக்கிறார் அப்பெண்மணி. விஷயம் இப்படியிருக்க எங்கே தான் மாட்டிக் கொண்டு பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து தற்கொலை செய்துள்ளார் இவர்.

இன்னொருவருக்கு வேறு பிரச்சனை. இவரது மகள் சென்ற மாதம் தீடீரென இறந்துவிட, அந்த துக்கம் தாங்காமல் மனைவி மக்கள் வெளியே சென்றிருக்கும் வேளையில் தூக்கு மாட்டி இறந்திருக்கிறார்.

என்ன தான் ஒரு பக்கம் காவல்துறையினரின் நடவடிக்கைகளால், மன கசந்திருந்தாலும், அவர்களின் பணிச்சுமையினால் வரும் மனச்சுமை அதிகமே.. என்பதை ஒத்துக் கொள்வேன். ஏனென்றால் என் குடும்பத்தில் என்னுடய தாத்தா ஒரு ரிட்டயர்ட் போலீஸ் ஆபீஸர். அவர் ரிட்டயர்ட் ஆகியும் போலீஸ்காரனாய் வலம் வந்தவர். அவர் சொல்லும் பல விஷயங்கள் அப்பணியில் உள்ள பல இடர்பாடுகளை தெரியபடுத்தியது. இப்போது அதை விட மோசமாய்தான் இருக்கிறது என்பது என் போலீஸ் நண்பர்கள் சொல்ல கேட்கும் போது தெரிகிறது.

ஒரு பக்கம் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும் என்ற உறுதியோடு பணியில் சேரும் இளைஞர்கள் வாடிக்கையான ப்ரஷெரால் வாங்கி பழக்கப்படும் அந்த முதல் நாட்களில் அவர்களது மன உளைச்சலை சொல்லி மாளாது.  எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் கை சுத்த பார்ட்டி, ஆனால் இவர் கேஸுக்காக கைதிகளை கோர்டுக்கு ஆஜர் செய்யும் போது அங்கிருக்கும் குமாஸ்தாவுக்கு குறைந்த பட்சம் 25-50 ரூபாய் லஞ்சமாய் கொடுத்தால் தான் அவர்களது கேஸ் கட்டு அன்றைய லிஸ்டில் வரும் இல்லையென்றால் அது வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். இவரும் வேறு வழியில்லாமல் தன் சொந்த காசிலிருந்து கொடுத்து வந்தவர். இப்போது கட்டுபடியாகவில்லை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். அநேகமாய் அடுத்த சில மாதங்களில் மனசாட்சி காணாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது.

இப்படி அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கும்  இவர்களது ப்ரச்சனைகள், இவர்களாகவே பழகிக் கொள்ளும், உணவு பழக்கங்கள், குடி பழக்கங்கள், மற்ற தொடர்புகள் என்று வளர்ந்து உடலும், மனமும் கெட்டு போய், பின்னாளில் ஒரு சிறிய ப்ரெஷர் என்றாலும் தாங்க முடியாமல் இம்மாதிரியான முடிவுகளுக்கு கொண்டு போய் விடுகிறது.

தமிழக அரசு முக்கியமாய் இவர்களுக்கான பணிச்சுமையை குறைத்து, மேலும் கூடுதல் நபர்களை காவல் துறைக்கு தேர்வு செய்து, அரசியல்வாதிகளின் ப்ரெஷர் இல்லாமல், நல்லதொரு  சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்குமானால் நிச்சயம் எதிர்காலத்தில் சிறப்பான காவல்துறையாய் நம் தமிழக காவல் துறை இருக்கும் என்று நம்புகிறேன்.

டிஸ்கி:
முத நாள் நடிகர் வடிவேலு மரியாதை நிமித்தமாய் தலைவரை பார்த்துவிட்டு வந்தார். அடுத்த நாள் சிங்க முத்து கைது செய்யப்பட்டு அர்ஜெண்ட் அர்ஜெண்டாக சிறையில் அடைக்கபட்டதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
கேபிள் சங்கர்
Post a Comment

38 comments:

Unknown said...

// அநேகமாய் அடுத்த சில மாதங்களில் மனசாட்சி காணாமல் போய் விட வாய்ப்பிருக்கிறது//

என் நண்பன் வேலையை விட்டுவிட்டான்

Chitra said...

தமிழக அரசு முக்கியமாய் இவர்களுக்கான பணிச்சுமையை குறைத்து, மேலும் கூடுதல் நபர்களை காவல் துறைக்கு தேர்வு செய்து, அரசியல்வாதிகளின் ப்ரெஷர் இல்லாமல், நல்லதொரு சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்குமானால் நிச்சயம் எதிர்காலத்தில் சிறப்பான காவல்துறையாய் நம் தமிழக காவல் துறை இருக்கும் என்று நம்புகிறேன்.

டிஸ்கி: முத நாள் நடிகர் வடிவேலு மரியாதை நிமித்தமாய் தலைவரை பார்த்துவிட்டு வந்தார். அடுத்த நாள் சிங்க முத்து கைது செய்யப்பட்டு அர்ஜெண்ட் அர்ஜெண்டாக சிறையில் அடைக்கபட்டதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?


..... ம்ம்ம்ம்ம்ம்....... இப்படியும் நடக்குதா?

Anusha raman said...

தங்கள் சொலுவது உண்மை .ஆனால் போலீஸ் ஸ்டேஷன் சென்று ஒரு பெண் காணவில்லை என ஒரு அந்தணருக்கு உதவி செய்ய மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு 1994 ஆண்டு சென்று இருந்தேன் .அங்கு வழக்கறிஞர் ஆகிய எனக்கு ஏற்பட்ட அனுபவம் போதுமட சாமி .வக்கில் அங்கு மரியாதையை கெடைக்காத பட்சத்தில் தனி மனிதன் காவல் நிலையம் செல்வது உகந்தது அல்ல .பெறகு அந்த இன்ஸ்பெக்டர் பல வித மன உளதலில் இருந்தார் என்று தெரிந்து கொண் டேன்.அவர் களும் சராசரி மனிதர் தான் .

பெசொவி said...

//முத நாள் நடிகர் வடிவேலு மரியாதை நிமித்தமாய் தலைவரை பார்த்துவிட்டு வந்தார். அடுத்த நாள் சிங்க முத்து கைது செய்யப்பட்டு அர்ஜெண்ட் அர்ஜெண்டாக சிறையில் அடைக்கபட்டதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
//

சம்பந்தம் இருக்குன்னே வச்சிக்குவோம். அப்போ, நம்ம புகாரை காவல்துறை விசாரிக்கனும்னா, நாமளும் முதல்வரை "மரியாதை" நிமித்தமா பாத்தோம்னா தான் நடக்குமா?
வாழ்க "மரியாதை"க்கு மரியாதை!

சைவகொத்துப்பரோட்டா said...

பாவம்தான்.

KANTHANAAR said...

athellam Mudiyaathu saami
eenna, idhu oru vicious Circle... Adhula maatina biragu enna panna mudiyum... What can not be cured must be endured kathai thaan
R Kanthasamy

Ravikumar Tirupur said...

சார் பதிவு மிக அருமை!
இன்னும் கொஞ்சம் புள்ளிவிபரங்கள் அடங்கியிருந்தால் மிகமுக்கியமான ஒரு கட்டுரை. இந்தமாதிரி பதிவுகள் அடிக்கடி போடுங்க சார்

vinthaimanithan said...

நேர்மையான பல அதிகாரிகள் படும் துயரங்களை நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்

குரங்குபெடல் said...

முக்கியமான பதிவு ... வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

நல்ல இடுகை கேபிள்ஜி.

க.பாலாசி said...

//அரசியல்வாதிகளின் ப்ரெஷர் இல்லாமல்//

இது இல்லாம இருந்தாலே போதும்.....

சிநேகிதன் அக்பர் said...

அவர்களும் மனிதர்கள்தானே.

நல்ல பகிர்வு கேபிள்ஜீ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்ல பகிர்வு அண்ணா

எல் கே said...

காவல்துறை மட்டும் அல்ல ரான்வதிலும் இதே நிலைமைதான்

Sundararajan P said...

மனித உரிமைகள் என்பதையே அனுபவித்திடாத ஒரு இனம் தமிழ்நாட்டில் காவல்துறைதான்.

உயர் அதிகாரிகள் பலர் அதிகார மையத்திற்கு ஏவல் செய்து சுகவாழ்வு வாழ கீழ்மட்ட காவலர்களோ மிருகங்களைவிட கீழான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் பணி குறித்த விதிமுறைகளும் அடிமைத்தனத்தை சட்டபூர்வமாக்குகிறது.

காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்குவதே மாற்றத்துக்கு வழி வகுக்கும்.

மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து அறியாத ஒரு இனம் அடுத்தவர்களின் உரிமைகளையோ, மாண்புகளையோ பாதுகாக்க முடியாது.

sriram said...

நேர்மைங்கறது கை, கால், கண் மாதிரி இயல்பிலேயே இருக்க வேண்டிய ஒன்று. ஆனா இன்னிக்கு நேர்மையா இருக்குறது ஒரு சூப்பர் ஸ்பெசல் தகுதியா சொல்லப் படும் அளவிற்கு சமுதாயம் கேடுகெட்டுப் போயிருக்கு.
நாமெல்லாம் பேசும் போதும் ப்ளாக்ல எழுதும் போதும் வாய் கிழிய பேசிட்டு RTO / பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குப் போயி லஞ்சம் கொடுத்து வேலய முடிச்சிக்கிட்டு வருவோம். லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு சொல்ற தைரியம் இன்னும் எனக்கு வரவில்லை...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

INDIA 2121 said...

Article nice.
visit my blog
http://vaalpaiyyan.blogspot.com/

ராஜ நடராஜன் said...

1.காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மட்டும்

2.ஐ.டிக்கு நிகரான சம்பளம்

3.பணி நேரத்தில் தனி வாகனம்,பைக்

4.யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்ககூடாது கட்டாய உத்தரவு

5. அரசியல் தலையீடு இன்மை

தீர்வுக்கான திட்டம் இப்போதைக்கு இது மட்டும்.

யாழ் Yazh said...

"மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து அறியாத ஒரு இனம் அடுத்தவர்களின் உரிமைகளையோ, மாண்புகளையோ பாதுகாக்க முடியாது."


சிந்திக்க வேண்டியவை...


ஓய்வுபெற்ற காவல் துறையினர் பனிக்காலத்தின் நடைபெற்ற வழக்குகள் விசாரணைக்கு வரும் போதூ நேரில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் . இல்லையென்றால் வாரன்ட் கொடுத்துவிடுவார்கள்.
பணி ஓய்வு பெற்ற பின்பும் முழுமையாக ஓய்வை அனுபவிக்க முடியாத சூழல் அவர்களுக்கு,
வேறு எந்த துறையிலும் இப்படிப்பட்ட கொடுமை இல்லை.

INDIA 2121 said...

RAJARAAJAN SIR
YOU ARE RIGHT

செல்ல நாய்க்குட்டி மனசு said...

காவல் துறை பற்றிய நல்ல பதிவு.
சட்டத்தை காக்க, சமுதாயத்தைக் காக்க ,
கயவர்களை கண்டிக்க, காவல் காத்திட
சுயமரியாதை அத்தியாவசியமான ஒன்று.
அது களங்கப் படாமல் இருக்க வேண்டும் அடி முதல் தலை வரை.

Romeoboy said...
This comment has been removed by the author.
Romeoboy said...

\\\டிஸ்கி: ///

இதையே தான் நானும் கேட்டு இருக்கேன் தல ..

HVL said...

//
இப்படி அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கும் இவர்களது ப்ரச்சனைகள், இவர்களாகவே பழகிக் கொள்ளும், உணவு பழக்கங்கள், குடி பழக்கங்கள், மற்ற தொடர்புகள் என்று வளர்ந்து உடலும், மனமும் கெட்டு போய், பின்னாளில் ஒரு சிறிய ப்ரெஷர் என்றாலும் தாங்க முடியாமல் இம்மாதிரியான முடிவுகளுக்கு கொண்டு போய் விடுகிறது.
//
கஷ்டம் தான்!

புலவன் புலிகேசி said...

என்னுடைய நண்பன் ஒருவன் போக்கு வரத்துப் பிரிவு எஸ்.ஐ. கை சுத்தப் பார்ட்டி. அதனால் அவனுடன் எந்த கான்ஸ்டபிளோ, ஏட்டோ வருவதில்லை. தனியாக சென்று களப் பணிப் புரிகிறான்.

Cable சங்கர் said...

@கே.ஆர்.பி. செந்தில்
தைரியசாலிதான்

@சித்ரா
ம்.. ஆமாம்

@அனுஷா ராமன்
நிச்சய்ம் கொஞ்சம் விசாரித்தால் அவர்கள் பக்கம் நியாயம் புரியும் என்று நினைக்கிறேன்.

Cable சங்கர் said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
மரியாதைக்கு நன்றி..:)

@சைவ்கொத்துபரோட்டா
:(

@காந்தா
ம்

@ரவிகுமார் திருப்பூர்
நன்றி முயற்சி செய்கிறேன்

@விந்தைமனிதன்
ஆமாம் தலைவரே

Cable சங்கர் said...

@உதவி இயக்கம்
நன்றி..

Cable சங்கர் said...

@செ.சரவணக்குமார்
நன்றி தலைவரே

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி

Cable சங்கர் said...

@பாலாசி
ஆமாம் தலைவரே


@அக்பர்
ஆமா நண்பரே..

Cable சங்கர் said...

@எல்.கே
ராணுவத்தில் எல்லா நேரத்திலும் அப்படி கிடையாது நண்பரே

Cable சங்கர் said...

/மனித உரிமைகள் என்பதையே அனுபவித்திடாத ஒரு இனம் தமிழ்நாட்டில் காவல்துறைதான்.

உயர் அதிகாரிகள் பலர் அதிகார மையத்திற்கு ஏவல் செய்து சுகவாழ்வு வாழ கீழ்மட்ட காவலர்களோ மிருகங்களைவிட கீழான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அவர்களின் பணி குறித்த விதிமுறைகளும் அடிமைத்தனத்தை சட்டபூர்வமாக்குகிறது.

காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை வழங்குவதே மாற்றத்துக்கு வழி வகுக்கும்.

மனித உரிமைகளையோ, மனித மாண்புகளையோ அனுபவித்து அறியாத ஒரு இனம் அடுத்தவர்களின் உரிமைகளையோ, //பாதுகாக்க முடியாது.

4:35 PM//

முழுக்க முழுக்க நீங்கள் சொன்னது உண்மை..

Cable சங்கர் said...

/நேர்மைங்கறது கை, கால், கண் மாதிரி இயல்பிலேயே இருக்க வேண்டிய ஒன்று. ஆனா இன்னிக்கு நேர்மையா இருக்குறது ஒரு சூப்பர் ஸ்பெசல் தகுதியா சொல்லப் படும் அளவிற்கு சமுதாயம் கேடுகெட்டுப் போயிருக்கு.
நாமெல்லாம் பேசும் போதும் ப்ளாக்ல எழுதும் போதும் வாய் கிழிய பேசிட்டு RTO / பத்திரப் பதிவு அலுவலகங்களுக்குப் போயி லஞ்சம் கொடுத்து வேலய முடிச்சிக்கிட்டு வருவோம். லஞ்சம் கொடுக்க மாட்டேன்னு சொல்ற தைரியம் இன்னும் எனக்கு வரவில்லை...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//

முயன்றால் எல்லாராலும் முடியும் ஸ்ரீராம்.. நான் முயன்று வெற்றி பெற்று வ்ருகிறேன்.

Cable சங்கர் said...

@நன்றி வால்பையன். ஒரு சின்ன விண்ணப்பம்.. நீங்கள் ஏன் உங்கள் பெயரை மாற்றிக் கொள்ளக்கூடாது. உங்கள் சிறந்த எழுத்துக்கள் தேவையில்லாத பெயர் குழப்பத்தினால் குழம்பாது இல்லையா நண்பரே..

Cable சங்கர் said...

/1.காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை மட்டும்

2.ஐ.டிக்கு நிகரான சம்பளம்

3.பணி நேரத்தில் தனி வாகனம்,பைக்

4.யாரிடமும் கையேந்தி பிச்சை எடுக்ககூடாது கட்டாய உத்தரவு

5. அரசியல் தலையீடு இன்மை

தீர்வுக்கான திட்டம் இப்போதைக்கு இது மட்டும்.

6:58 PM//

நல்ல தீர்வுதான்.. யார் மணி கட்டுகிறார்கள் என்று பார்ப்போம்

@இராமசாமி கண்ணன்
நன்றி

Cable சங்கர் said...

/ஓய்வுபெற்ற காவல் துறையினர் பனிக்காலத்தின் நடைபெற்ற வழக்குகள் விசாரணைக்கு வரும் போதூ நேரில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் . இல்லையென்றால் வாரன்ட் கொடுத்துவிடுவார்கள்.
பணி ஓய்வு பெற்ற பின்பும் முழுமையாக ஓய்வை அனுபவிக்க முடியாத சூழல் அவர்களுக்கு,
வேறு எந்த துறையிலும் இப்படிப்பட்ட கொடுமை இல்லை.
//

ஆமாம் யாழ்.. அது பெரும் கொடுமை.. இதனால் பிரச்சனைக்களுக்குள்ளாகி, பென்ஷனில் பிரச்சனை ஏற்பட்டவர்களை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன்..

Cable சங்கர் said...

/காவல் துறை பற்றிய நல்ல பதிவு.
சட்டத்தை காக்க, சமுதாயத்தைக் காக்க ,
கயவர்களை கண்டிக்க, காவல் காத்திட
சுயமரியாதை அத்தியாவசியமான ஒன்று.
அது களங்கப் படாமல் இருக்க வேண்டும் அடி முதல் தலை வரை.
//

நன்றி நாய்குட்டி மனசு.. காவல்துறை என்றாலே.. ஏதோ வில்லன்கள் கூட்டமென்று பார்ப்பதை விட்டு அவர்களையும் மனிதர்களாக பார்த்தால் நிச்சயம் அவர்களது வலி புரியும். என்பது என் எண்ணம்.

Cable சங்கர் said...

@ஹெ.சி.எல்.
நன்றி

@ரோமியோ

அப்படியா..? சேம் பிஞ்ச்

@புலவன் புலிகேசி
நிச்ச்யம் ஒரு நாள் அவரை புரிந்து கொள்வார்கள்..