ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ஆனா, பத்திரிகைல தங்கள் பெயரை லுக் விட்டதும், நாம்தான் ரொம்ப லக்கி என்ற நினைப்புடன், மற்றவர்களை இளக்காரமாக எழுத ஆரம்பித்து விடுவீர்களோ என்ற பயமும் ஏற்படுகிறது... தங்களை இதே இனிமையான, படைப்பாற்றல் மிக்க, ஆணவம் இல்லாத கேபிள் சங்கராகவே என்றும் பார்க்க ஆசை படுகிறோம்... இதே கல்கியில், உங்கள் திரைப்பட விமர்சனம் ( நீங்கள் எழுதும் விமர்சம் அல்ல... நீங்கள் இயக்கிய படத்தை பற்றிய கல்கியின் விமர்சனம் ) வரும் நாளை எதிர்பார்க்கிறோம்
//ரொம்ப சந்தோஷமா இருக்கு.... ஆனா, பத்திரிகைல தங்கள் பெயரை லுக் விட்டதும், நாம்தான் ரொம்ப லக்கி என்ற நினைப்புடன், மற்றவர்களை இளக்காரமாக எழுத ஆரம்பித்து விடுவீர்களோ என்ற பயமும் ஏற்படுகிறது... தங்களை இதே இனிமையான, படைப்பாற்றல் மிக்க, ஆணவம் இல்லாத கேபிள் சங்கராகவே என்றும் பார்க்க ஆசை படுகிறோம்...
//
அண்ணன் பார்வையாளன்,
கேபிளின் சிறுகதைகள் இதற்கு முன்பே அதாவது சுமார் ஒரு வருடம் முன்பே விகடனிலும்,பிற இதழ்களிலும் வந்திருக்கின்றது.கேபிள் இதுவரை மாறியதாகத் தெரியவில்லை.பார்ப்போம் :)
கேபிளின் சிறுகதைகள் இதற்கு முன்பே அதாவது சுமார் ஒரு வருடம் முன்பே விகடனிலும்,பிற இதழ்களிலும் வந்திருக்கின்றது.கேபிள் இதுவரை மாறியதாகத் தெரியவில்லை.பார்ப்போம் :) //
சுதந்திரதின வாழ்த்துக்கள் அன்பான சேரன் அவர்களுக்கு, உங்களது இயக்கத்தில் வந்த படங்களை ரசித்து பார்த்து வந்த ரசிகன் எழுதுவது. மனதை வருடும் காதலை சொல்லும் படத்தை இலக்கிய ரசனையோடு கொடுக்க நினைதது உருவாக்கிய ஒரு கதையில் எப்படி சார் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தீர்கள். மனசாட்சி என்பது உங்களுக்கு கிடையவே கிடையாதா..? கொஞ்சமாவது உங்கள் மனத்திரையில் உங்கள் கதாநாயகனை ஓட்டி பார்த்திருந்தால், உங்களுக்குள் இருக்கு இயக்குனர் கண்டிப்பாக இப்படி ஒரு அழுமூஞ்சி முத்திய முகத்தை தன் கதாநாயகனாய் ஏற்றிருக்கமாட்டார். நடிகர் சேரன் அவரை வென்று விட்டார் போலும். கொஞ்சம் யோசித்து பார்த்தால் படத்தில் உங்கள் மகனாய் வரும் ஆர்யன் ராஜேசை ப்ளாஷ் பேக் ஹீரோவாக்கி விட்டிருந்தால் அட்லீஸ்ட் தெலுங்கிலாவது டப்பிங் ரைட்ஸ் போயிருக்கும். அது சரி கதைக்கு வருவோம். பழைய ட்ரங்க் பெட்டியில் இறந்து போன அப்பாவின் பழைய பொக்கிஷமாய் கருதும் கடிதங்களை, மகன் படித்துபார்க்க, அவரின் காதல் கதை 1970களில் விரிகிறது. உங்களின் தந்தை உடல் நலமில்லாமல் இருக்கும் போது பக்கத்து கட்டிலில் வந்து சேரும் வயதான பெண்ணின் மகளான நதிரா என...
நான் முன்பே சொன்னபடி இந்தியாவில் நடக்கும் சைல்ட் செக்ஸ் டிராபிகிங் பற்றிய படம் குழந்தைகளை வாழவிடுங்கள்.. அட்லீஸ்ட் அவர்களது குழந்தைத்தனம் அவர்களிடமிருந்து இயல்பாக விலகும் வரையாவது.. ஏதாவது செய்யணும் சார்..
சிறு வயதில் தன்னை விட்டு பிரிந்து போன தாயை ஒரு முறை பார்த்து, கட்டி அணைத்து முத்தமிடவேண்டுமென்று ஸ்கூல் எஸ்கர்ஷனை கட் செய்துவிட்டு சிறுவன் அகி கிளம்புகிறான். இன்னொரு பக்கம் மனநல மருத்துவ மனையில் தன்னை இப்படி விட்டு விட்டு போன தாயை போய் பார்த்து அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட வேண்டும் மனநல மருத்துவமனையிலிருந்து தப்பிக்கிறான் ஒருவன். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து உள்ள ஊர்களுக்கே போக வேண்டியிருப்பதால் ஒன்றாக பயணப்படுகிறார்கள். அவரவர் அம்மாக்களை சந்தித்தார்களா? என்பதே கதை. ரோடு சைட் டிராவல் படங்கள் பல இருந்தாலும் இவ்வளவு நெகிழ்ச்சியூட்டும் படம் வந்திருக்கிறதா என்று யோசித்து பார்த்தால் சட்டென ஞாபகம் வரவில்லை. சல சலத்தோடும் நீரோடு இழுத்துக் கொண்டு அலையும் இலை தழையோடு நம் மனதையும் ஒளிப்பதிவாளர் இழுத்துக் கொள்கிறார் என்றால் அது மிகையல்ல.. குறிப்பாக பல வைட் ஷாட்டுகளிலும், லோ ஆங்கிள் ஷாட்களிலும், கால்களுக்கு மட்டுமே முக்யத்துவம் கொடுத்து அலையும் ஷாட்களிலும், கேமராவாய் தெரியாமல் கதையோடு நம்மை பயணிக்கிறது ஒளிப்பதிவு. அந்த பச்சை பசேல் சுற்றுப்புறமும், நேர் கோடு சாலைகளும் பல இடங்களில்...
35 கோடி பட்ஜெட் படம், நிறைய பஞ்சாயத்துகளை சந்தித்த படம், கிட்டத்தட்ட மூன்று வருடம் தயாரிப்பில் இருந்த படம். ஆண்ட்ரியாவின் மாலை நேரம் பாடல் முதல் கொண்டு ஹிட் பாடல்களை கொண்ட படம், செல்வராகவனின் ஃபாண்டஸி படம், கிட்டத்தட்ட மூன்று வருடஙக்ளுக்கு பிறகு கார்த்தி நடித்து வெளிவரும் படம் என்று பல சர்சைகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்த படம். படத்தின் ஆரம்ப காட்சியில் சோழ மன்னன் தன் மகனை வேறொருவனிடம் கொடுத்து பாதுகாக்க சொல்லி அனுப்பும் தெருக்கூத்தோடு ஆரம்பிக்கிறது.அதன் பிறகு அப்படியே ஒரு பாழடைந்த இடத்தில் பிரதாப்போத்தன் உள்ளே செல்ல பின்னால் தொடரும் நிழல் அவரை விழுங்க.. அவரை தேடி அவரது பெண்ணும், அவர் செய்த சோழர் கால ஆராய்ச்சியை தொடர அமர்த்தப்படும் பெண் ரீமா, அவர்களுக்கு அடி பொடி வேலை செய்ய அழைக்கப்படும் கார்த்தி. இவர்களுடன் நம்முடய சோழர்களை தேடும் படலமும் ஆரம்பிக்கிறது. கப்பலில் ஏறும் காட்சியிலிருந்து சல,சலவென ஓடும் ஆறு போல ஓடுகிறது படம். பெரியதாய் கதை ஏதும் நகராவிட்டாலும், ரீமாவின் அதிரடி கேரக்டரும், ஆண்ட்ரியாவின் அமைதியான கேரக்டரும், கார்த்தியின் அடாவடி, தடாலடி வெட்டி பேச்சு க...
காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகை...
தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கென்று ப்ரத்யோகமாய் படங்கள் வருவதில்லை. நாம் குழந்தைகளுக்கு வழக்கும் படஙக்ள் பெரியவர்களுக்கான படங்கள் தான் அந்த வகையில் குழந்தைகளை வைத்து நம்மை போன்ற பெரியவர்களுக்குமான படத்தை தந்திருக்கிற இயக்குனர் பாண்டிராஜையும், தயாரித்த இயக்குனர் சசிகுமாரையும் பாராட்ட வார்த்தைகளேயில்லை. ஒரு கிராமத்து போலீஸ் ஸ்டேஷனில் ஊரில் உள்ள சில பேர் மூன்று பேரை பற்றி புகார் சொல்ல ஆரம்பிக்கிறது கதை. ஆறாம் வகுப்பு போகும் ஜீவா, பகடா, குட்டைமணி ஆகியோரின் சேட்டைகளை தாங்க முடியாமல் புலம்பும் அளவிற்கு சேட்டை காரர்கள். ஒவ்வொருத்தனும் ஒரு டெரர் என்றால் அது மிகையாகாது. ஜீவாவின் அப்பா ஸ்கூல் டீச்சர். அவனுக்கு ஒரு அக்கா அவள் தான் கிண்டர்கார்டன் டீச்சர். எதிர்வீட்டுக்கு வரும் அன்புகரசன் என்னும் பையன், அதே பள்ளியில் சேருகிறான் தன்னுடய புத்திசாலிதனத்தால் எல்லாரையும் கவரும், அவனால் ஜீவாவுக்கு, அவனுக்கும் தகராறு. ஒரு கட்டத்தில் உன்னை பள்ளிகூடத்தை விட்டே போக வைக்கிறேன் என்று ஜீவா சபதம் போட, நீ என்னை ப்ரெண்டா ஏத்துக்கன்னு கெஞ்ச வைக்கிறேன் என்று அன்புகரசு சப...
என் முழு உடலையும் எதிரில் தெரியும் கண்ணாடியில் உற்று பார்த்தேன். புதிய சிகப்பு புடவையில் உடலின் வளைவுளும், செழுமைகள் எல்லாம் கச்சிதமாய் தெரிய, “முப்பத்தி அஞ்சிலேயும் நீ அழகுதாண்டி” என்று மனதுக்குள் ஒரு சந்தோஷ மின்னல் வெளிச்சமாய் தெரிய, உடன் இந்த புடவையில சந்தோஷ் பார்த்தான்னா என்ன சொல்வான்? என்று மனதுள் ஓடிய அடுத்த வினாடி, மின்னல் ஆஃப் ஆகி அமைதியானேன். ”எனக்கு கொஞ்சம் நெர்வசா இருக்கு.” “எனக்கும் தான் ” டபுள் பெட் ஏசி ரூம் அது. ஜன்னல் வழியே எட்டிபார்த்தால் கடல் தெரிந்தது. ’நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். பன்னிரெண்டு வயதில் ஒரு பையனை வைத்துக் கொண்டு… சே.. என்று தலையாட்டிக் கொண்டேன். ஏன் இப்படி நடந்து கொள்கிறேன். ஏன் இப்படி உடலெல்லாம் சுடுகிறது?. இந்த உணர்வை என்ன்வென்று சொல்வது? காதல் என்றா?. காதலிக்கும் வயசா இது..? ஏன் முப்பத்தைந்து வயதில் காதல் வரக்கூடாதா..? இன்னும் ஒரு அஞ்சு வருஷம் போனால் பையன் கேர்ள் ப்ரெண்டோடு வருவான். என்ன எதிர்பார்க்கிறேன்? எதை தேடுகிறேன்? இன்று நான் எடுத்த முடிவு சரியா? என்று பல குழப்பங்கள் ஓடினாலும், சிகப்பு நிற ஷிபான் உடலில்...
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகில் எந்த சினிமாவாக இருந்தாலும் புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் அதை சொல்லும் முறையிலான திரைக்கதையினால் பழைய கதையையே புதிதாய் காட்டமுடியும். திரைக்கதையினால்தான் நாம் திரைப்படங்களில் சொல்லும் பல நம்ப முடியாத விஷயங்களையும் நமக்கு தெரிந்தே திரையில் வரும் நாயகனால் முடியும் என்று நம்ப வைப்பது திரைக்கதையின் வெற்றி. உதாரணத்துக்கு பாஷா திரைப்படத்தில் படத்தின் ப்ளாஷ்பேக்கில் ரஜினியின் தற்போதைய கெட்டப்பை விட வயதான கெட்டப்பில் தான் காட்டப்படுவார். ஆனால் பளாஷ்பேக் முடிந்ததும் இளமையான ரஜினி படம் முழுவதும் வருவார். இந்த லாஜிக் மீறல்களை உணர முடியாத அளவிற்கு திரைக்கதை தீப்பிடித்தார் போல ஓடும் அதனால்தான் இன்றளவும் பாஷா மிகச் சிறந்த ஒரு படமாய் ரஜினிக்கு அமைந்தது. அதே போல் இந்தியன் தாத்தா கேரக்டர் சும்மா சர்வ சாதாரணமாய் ஆட்களை வர்மக் கலை மூலம் பிரட்டி போட்டுவிட்டு சண்டை போடுவார், ஓடுவார், கொலை செய்வார். ஆனால் ஒரு என்பது வயது பெரியவரால் அதை செய்ய முடியும் என்பதை கமலின் நடிப்பின் மூலமாகவும், அதற்கான திரைக்கதையின் மூலமாகவும் நம்மை நம்ப வைத்திருப்பார் இயக்குனர். சரி வே...
ஜக்குபாய் திரைப்படம் இண்டெர்நெட்ல் வெளியாகிவிட்டது. ஊரெல்லாம் டிவிடியாய் ப்ரிண்ட் போட்டு வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியும், வீடியோ பைரஸியை எதிர்த்து ஆளாளுக்கு மைக் போட்டு பிதற்றினதும், கண்ணீர் விட்டு அழுததும் நடந்தது. பைரஸி வீடியோ ஏதோ ஒரு ஸ்டியோவிலிருந்து அது எந்த ஸ்டூடியோவிலிருந்து என்று படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ஏனென்றால படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் செய்யும் இடத்தில் இருந்து தான் திருடப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாய் படத்தில் ஒடும் டைம் கோடை வைத்து பார்த்தால் தெரியும். ஆனால் படத்தை திருட்டு டிவிடி தயாரித்து விற்றதாக யாரோ ஒருவரை சென்னையில் இல்லாமல் வெளியூரிலிருந்து திருட்டு டிவிடி தயாரித்தார் என்று கைது செய்திருக்கிறார்கள். எய்தவனை விட்டு விட்டு அம்பை பிடித்திருக்கிறார்கள். இதற்காக இவர்கள் நடத்திய மீட்டிங்கில் டிவிடியை எதிர்த்து நம் பெரும்புகழ் பெற்ற நடிகர்கள் பேசியது செம காமெடி. சேரன் ஒவ்வொரு ஊரிலும் தங்களுடய ரசிகர் படையை ஏற்படுத்தி அவர்களுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் கொடுத்து பைரஸியை ஒழிப்போம். அதை மீறி விற்பவர்கள ஒடுக்...
இரண்டு நாள் முன்னதாக ஒரு ஆங்கில வலைப்பதிவு திரட்டி மற்றும் வலைப்பதிவாளர்களை இந்தியாவெங்கும் குழுமமாய் அமைக்க முயற்சிக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. இவர்கள் வருடா வருடம் நடத்துவதுதான். இம்முறை நிறைய தமிழ் வலைப்பூக்கள் நடத்துபவர்களும் கலந்து கொண்டோம்.
Comments
வாத்துகள்.!
--
ஆமா ஏன் சுறா விமர்சனம் போடல?
ரொம்ப சந்தோசம்.
கல்கில கால் வச்சதுக்கும்
கதை அச்சில் வந்ததற்கு வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
//
அண்ணன் பார்வையாளன்,
கேபிளின் சிறுகதைகள் இதற்கு முன்பே அதாவது சுமார் ஒரு வருடம் முன்பே விகடனிலும்,பிற இதழ்களிலும் வந்திருக்கின்றது.கேபிள் இதுவரை மாறியதாகத் தெரியவில்லை.பார்ப்போம் :)
கேபிள் சங்கர்
கேபிளின் சிறுகதைகள் இதற்கு முன்பே அதாவது சுமார் ஒரு வருடம் முன்பே விகடனிலும்,பிற இதழ்களிலும் வந்திருக்கின்றது.கேபிள் இதுவரை மாறியதாகத் தெரியவில்லை.பார்ப்போம் :)
//
நன்றிண்ணே..:)
-
DREAMER