Thottal Thodarum

May 26, 2010

கொலை கொலையாம் முந்திரிக்கா- திரை விமர்சனம்

Kola Kolaya Mundhirika 12 காமெடி படமெடுக்க வெறும் கிரேசி மோகன் மட்டுமிருந்தால் பத்தாது. நல்ல திரைக்கதையாசிரியரும், அதை வெளிப்படுத்தும் நடிகர்களும் முக்கியம் என்பதை இப்படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

கிரேஸி மோகனின் வசனங்கள் எல்லாமே கமல் நடித்த படங்களில் மட்டும் மிளிர்வதன் காரணம் என்ன என்பதை இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம். அரத பழசான ஆள் மாறாட்ட கதை. ஒரு சேரின் உள்ளே வைக்கப்பட்ட வைரத்துக்காக இருபது வருடங்களுக்கு பின் நாசூக்கு திருடனான கிருஷ்ஷும், இன்னொரு நாசூக்கு திருடியான வேணியும் அலைய, அந்த வைரத்துக்காகவே இருபது வருஷமாய் அலையும் ஆனந்தராஜ் குழு அலைய, சம்பந்தமேயில்லாமல் எல்லாரையும் விட்டு பிடிக்கும் குடாக்கு போலீஸு ஜெயராம் இவர்களை துரத்த, என்று ஒரு காமெடி படத்துக்குண்டான அத்துனை லாஜிக் மீறல்களுடன் இருக்கிறது கதை.
Kola Kolaya Mundhirika movie காமெடி செய்வதற்கான அத்துனை சந்தர்ப்பங்கள் இருந்து ஆங்காங்கே கிச்சு, கிச்சு மூட்டுமளவுக்கு இருக்கிறதே தவிர வாய்விட்டு சிரிக்க வைக்க வில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கிரேசி வந்தவுடன் தான் விழுந்து விழுந்து சிரிக்க முடிகிறது. அதிலும் ஆர்டர்…ஆர்டர் என்று டேபிளில் இருந்த காது மிஷினை அவர் உடைத்து விட, மையமாகவே வக்கீல்களின் வாதத்தை கேட்டு, பக்கத்திலிருந்த ஆர்டலியை வைத்தே சமாளிப்பதாகட்டும் அட்டகாசம்.

வழக்கமாய் அமெரிக்க மாப்பிள்ளையாய் வரும் கார்த்திக் குமாருக்கு இதில் முழு முதல் கதாநாயக வேஷம். மனுஷனுக்கு நடிக்க பெரிய வாய்பில்லாவிட்டாலும், வந்த வரை முயற்சித்திருக்கிறார். நிச்சயம் இவர் சரியான படங்களை தேர்வு செய்தால் நன்றாக பிரகாசிக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது.

கதாநாயகி சிக்‌ஷா தமிழ் தெரிந்த பெண் போலிருக்கிறது. இவரும் எம்.எஸ்.பாஸ்கரும் பேசும் டயலாக்குகள் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்ட வைக்கிறது.
Kola-Kolaya-Mundhirika-02 இவர்களை தவிர எம்.ஆர்.ஆர்.வாசு, ஆனந்தராஜ், டெல்லி கணேஷ், ஜெயராம், வையாபுரி என்று நிறைய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும் பெரியதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை என்றுதான் சொலல் வேண்டும். ஜெயராமுக்கு பக்கதில் கமல் இருந்தால்தான் சரியாய் காமெடி வரும் போலருக்கிறது.

செல்வகணேஷின் இசையில் பாடல்கள் பெரிதாய் நினைவில் நிற்கவில்லை. வேணுவின் ஒளிப்பதிவு ஓகே.

படத்தில் பெரிய லெட்டவுனே திரைக்கதைதான். பரபரப்பாக போக வேண்டிய காட்சிகளெல்லாம் இழுவையாய் இருக்கிறது. படம் முழுவதும் ஒரு நாடகம் பார்த்த உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை

கொலை கொலையாம் முந்திரிக்கா – ம்ம்ம்ம்ம்ம்…ஓகே.

கேபிள் சங்கர்
Post a Comment

32 comments:

ஜெய் said...

// கிரேஸி மோகனின் வசனங்கள் எல்லாமே கமல் நடித்த படங்களில் மட்டும் மிளிர்வதன் காரணம் என்ன என்பதை இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம் //

உண்மைதான் கேபிள் சங்கர்.. காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா மாதிரி படங்கள் அடுத்து எப்போ வரும்னு தெரியல..

எறும்பு said...

ம்...

Romeoboy said...

right sir

Chitra said...

////காமெடி படமெடுக்க வெறும் கிரேசி மோகன் மட்டுமிருந்தால் பத்தாது. நல்ல திரைக்கதையாசிரியரும், அதை வெளிப்படுத்தும் நடிகர்களும் முக்கியம் என்பதை இப்படத்தை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.////


...... பஞ்ச்!

Unknown said...

ஏண்ணே, இந்த கார்த்திக் ஏற்கனவே பொய் சொல்லப் போறோம்ல முழு ஹீரோவா நடிக்கலை?

IKrishs said...

தமிழில் பெண் இயக்குனர்கள் வருவது ரொம்பவே அபூர்வம் .அதிலும் இப்படி சொதப்புவது வருத்தம் அளிக்கிறது .
But உங்க கிட்ட "OK " வாங்கி இருக்குறது னாலேயே ஒரு தடவ பாக்கலாம் நு தான் தோணுது ..
அப்பறம் நான் கொத்து பரோட்டா வில் கேட்ட இந்த கேள்விக்கு விளக்கம் ப்ளீஸ் ..
தாமதமான shooting இற்கு "நீயா நானா " குழுவினர் வருத்தம் தெரிவித்தார்களா ? அப்படியாவது காத்திருந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது ஏனோ ? உங்கள் யாருக்குமே கோபமே வரவில்லையா ?

Unknown said...

ம்ம்ம்ம்ம்ம்…

அபி அப்பா said...

\\இவர்களை தவிர "எம்.ஆர்.ஆர்.வாசு", ஆனந்தராஜ், டெல்லி கணேஷ், ஜெயராம், வையாபுரி என்று\\

கேபிள்ஜி! அவுட்டோர் என்ன மேலோகத்திலயா?:-))

Prasanna Rajan said...

ஏற்கனவே கிரேஸி மோகனை மட்டும் நம்பி, அவரு ட்ராமா டைரக்டரான காந்தனை வைச்சு “ஜெர்ரி”னு ஒரு காவியம் எடுத்தாங்க. கிரேஸி மோகனை நம்பி படத்துக்கு போன என்னை நானே சோட்டால அடிச்சுக்க வேண்டிய நெலமை.

ஆனாலும் இந்த படம் அதை விட கொஞ்சம் சுமாராத் தான் இருக்கும்னு தோனுது...

விக்னேஷ்வரி said...

ரிலீஸ் ஆற எல்லாத் தமிழ்ப் படங்களையும் பார்த்துடுவீங்களா...

திருநெல்வேலி ஜங்ஷன் said...

அட மக்கா மனுஷன் எந்த படத்தையும் விட மாட்டார் போல .
வேற வேல வெட்டிய இல்லாத மனுஷன் போல ?????????
சும்மா சொல கூடாது . நீங்க இல்லடா நாங்க மொக்கை படம்
பார்த்து கஷ்டபடனும் . மக்கா நீ நலலா இருக்கணும் சாமீ .
அப்ப்பல அட்து என்ன படம் நைனா ?

Anonymous said...

இது ஒரு மன நோய் நல்ல மருத்துவரை பார்க்கவும்.அடுத்தவனுக்கு வாய்ப்பு கிடைக்குது நமக்கு கிடைக்கலைன்னு எல்லா படத்தையும் கிழிக்கிறீங்க, அட நம்ம எல்லா படத்தையும் இப்படி கிழிக்கிறோமே ஒரு வேலை நம்ம படம் எடுத்தா மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு கவலையே படாதீங்க, காலம் பூரா நீங்க அசிஸ்டண்ட் டைரக்டர் தான், அடுத்தவன் உழைப்பை குறை சொல்லுவதை நிறுத்தும் வரை.

தம்பி நாலு இட்லி, ஒரு வடை கொஞ்சம் கெட்டி சட்னி அந்த சில்லறையை கொடுத்துட்டு போ ராஜான்னு தான் சொல்லிட்டு திரிய வேண்டியது தான்

பெசொவி said...

//sathish said...
இது ஒரு மன நோய் நல்ல மருத்துவரை பார்க்கவும்.அடுத்தவனுக்கு வாய்ப்பு கிடைக்குது நமக்கு கிடைக்கலைன்னு எல்லா படத்தையும் கிழிக்கிறீங்க, அட நம்ம எல்லா படத்தையும் இப்படி கிழிக்கிறோமே ஒரு வேலை நம்ம படம் எடுத்தா மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு கவலையே படாதீங்க, காலம் பூரா நீங்க அசிஸ்டண்ட் டைரக்டர் தான், அடுத்தவன் உழைப்பை குறை சொல்லுவதை நிறுத்தும் வரை.

தம்பி நாலு இட்லி, ஒரு வடை கொஞ்சம் கெட்டி சட்னி அந்த சில்லறையை கொடுத்துட்டு போ ராஜான்னு தான் சொல்லிட்டு திரிய வேண்டியது தான்
//
அப்போ சமையலை விமரிசனம் செஞ்சா 'சமைச்சுப் பார்'ன்னு சொல்லுவீங்க போலிருக்கே!
விமரிசனத்தை ஒரு விமரிசகரோட கண்ணோட்டத்தில பாருங்க சார், ஒரு உதவி இயக்குனரோட விமரிசனம் என்று நினைக்காதீங்க!

கேபிளாரே, உங்கள் தயவில்தான் எங்கள் பர்ஸ் தப்பிக்குது, தொடரட்டும் உங்க சேவை!

Anonymous said...

//அப்போ சமையலை விமரிசனம் செஞ்சா 'சமைச்சுப் பார்'ன்னு சொல்லுவீங்க போலிருக்கே!//

அப்படியில்லை, உனக்கு அந்த கடையில சாப்பிட பிடிக்கலைன்ன அங்க போகாதே அது விட்டுட்டு ஊரெல்லாம் போய் அந்த கடை சாப்பாட்டு நல்லாயில்லைன்னு சொல்லி அவன் பொழப்பை கெடுக்க வேண்டான்னு தான் சொல்றேன். எனக்கு பிடிக்காத சாப்பாடு மத்தவங்களுக்கும் பிடிக்காதுன்னு நினைக்கிறது நீங்களா நினைச்சுட்டா அது பைத்தியகாரதனம்.

//கேபிளாரே, உங்கள் தயவில்தான் எங்கள் பர்ஸ் தப்பிக்குது, தொடரட்டும் உங்க சேவை//

இவர் ஒரு படம் நல்லாயிருக்குன்னு சொன்னா தான் அந்த படத்தை நீங்க பார்ப்பீங்கன்ன வருசத்துக்கு ஒரு படம் பாக்குறதே பெரிய விசியம்.

சிறு குறைகளை பெரிது பண்ணாமல், தட்டி கொடுத்து ஊக்குவிப்பது தான் அந்த தொழிலில் இருப்பவர்களுக்கு அழகு. எல்லாத்தையும் சொத்தை சொள்ளைன்னு சொன்னா அது வெறும் வயித்தெரிச்சல்

shortfilmindia.com said...

@சதீஷ்..

முதலில் உனக்கான ப்ரொபைலோடு வா.. அதற்கப்புறம் சதி சாவித்திரி சாபமெல்லாம் கொடுக்கலாம்.

கேபிள் சங்கர்

Cable சங்கர் said...

//இது ஒரு மன நோய் நல்ல மருத்துவரை பார்க்கவும்.அடுத்தவனுக்கு வாய்ப்பு கிடைக்குது நமக்கு கிடைக்கலைன்னு எல்லா படத்தையும் கிழிக்கிறீங்க, அட நம்ம எல்லா படத்தையும் இப்படி கிழிக்கிறோமே ஒரு வேலை நம்ம படம் எடுத்தா மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு கவலையே படாதீங்க, காலம் பூரா நீங்க அசிஸ்டண்ட் டைரக்டர் தான், அடுத்தவன் உழைப்பை குறை சொல்லுவதை நிறுத்தும் வரை//

நீ இந்த படத்து அஸிஸ்டெண்ட் டைரக்டரா..? :)

Cable சங்கர் said...
This comment has been removed by the author.
திருநெல்வேலி ஜங்ஷன் said...

அன்பு நண்பா சதிஸ் :
கேபிள் சங்கர் விமர்சனங்கள் அனைத்தும் உண்மை யான விமர்சனங்கள்.
தமிழ் சினிமாவின் மற்றொரு பலவீனம் : துறை சார்ந்த அறிவின்மை. திரைக்கதை, எடிட்டிங், இசை, ஒளிப்பதிவு என பெரும் துறைகளை உள்ளடக்கியது சினிமா. முக்கியமாக புகழுரைகள், ஜோடனைகள், பாடம் செய்யப்பட்ட பழைய விதிமுறைகள் தவிர்த்து, சினிமா என்பது தனித்த கலை வெளிப்பாடு என்ற பு‌ரிதலுடன் தீவிரமான விமர்சனங்களை உருவாக்க வேண்டும். நல்ல சினிமா உருவாக இதுவே ச‌ரியான ஒரே வழி.
ஆக எங்கள் மனம் போல இருக்கு எங்கள் கேபிள் சங்கர் விமர்சனங்கள்
உண்மையான விமர்சனங்கள்..

திருநெல்வேலி ஜங்ஷன் said...

அன்பு நண்பன்
சதிஸ்கு ,
ஒரு படைப்பாளிக்கும் விமர்சனம் என்பது,
தவறுகளைச் சுட்டிக் காட்டும் ஒரு நண்பனாக இருக்கிறது.
நல்ல படங்களிலும் படத்திற்கு ஒட்டாத வகையில் வரும்
சில காட்சிகள் அப்படத்தின் தரத்தையே அழித்து விடுகின்றன.
கேபிள் சங்கர் விமர்சனங்கள் அனைத்தும் நிச்சயம் படைப்பளியை காயப் படுத்தாது. கிரேஸி மோகனன்அடுத்த படத்தில் இது போன்ற தவறுகளைச் செய்யாமலிருக்கக் கூட இது உதவும்.
எதிர்பார்ப்பு பொருந்தாமல் போன இடங்களையும் பட்டியலிடவேண்டிய அவசியம் நல்லதொரு விமர்சகருக்கு இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அடுத்த படைப்புக்கு தன்னைச் செதுக்கிக் கொள்ளும் உன்னை போன்ற படைப்பாளிக்கு அது கண்டிப்பாக உதவும்.
அன்புடன் .
ஞானேந்திரன்

எம் அப்துல் காதர் said...

நீங்க சொன்ன சரியதானிருக்கும் தல! நான் பார்க்க மாட்டேன்

Paleo God said...

ரைட்டு!

Banureka said...

Expecting your review of
Troy,
Brave heart,
The Patroit

~Banu. (i hope u remember me, i am from erode and spoke to you through phone)

Anonymous said...

//முதலில் உனக்கான ப்ரொபைலோடு வா.. அதற்கப்புறம் சதி சாவித்திரி சாபமெல்லாம் கொடுக்கலாம்.
//
//நீ இந்த படத்து அஸிஸ்டெண்ட் டைரக்டரா..? :)//
//நிறுத்திட்டா மட்டும் படம் கிடைச்சிருமா.. பயங்கர.. காமெடி பீஸா இருக்கியே.. நீ.. //

கோவம் வருதுல்ல, நீங்க விமர்சணம் எப்படி வேணாலும் எழுதலாம் அதை எல்லாரும் பாஸிட்டிவாக எடுத்துக்கனும், யாரும் கோவபட கூடாது, ஆனா உங்களை யாராவது விமர்சணம் பண்ணினா ஒருமையில் பதில் சொல்லுவீங்க. நல்லாயிருக்குங்க உங்க நியாயம். உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா உங்களுக்கு இல்லையா?

//நிறுத்திட்டா மட்டும் படம் கிடைச்சிருமா.. பயங்கர.. காமெடி பீஸா இருக்கியே.. நீ.. //

உங்க மனசுல இருக்கிறதை நீங்களே சொல்லீட்ங்க, உறுத்துன உடனே அந்த கமெண்டை டெலிட்டும் செஞ்சு நீங்க ஒரு நடுநிலையான விமர்சகர்ன்னு நிருபிச்சிடீங்க. வெரி குட்.

Anonymous said...

//கேபிள் சங்கர் விமர்சனங்கள் அனைத்தும் நிச்சயம் படைப்பளியை காயப் படுத்தாது. கிரேஸி மோகனன்அடுத்த படத்தில் இது போன்ற தவறுகளைச் செய்யாமலிருக்கக் கூட இது உதவும்.//

சரி நண்பரே ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இதற்க்கு பல வழிகள் இருக்குத்தே. நிறைகளை தளத்தில் எழுதி குறைகளை சம்பந்தபட்டவர்களுக்கு தனியாக அனுப்பலாமே.

Anonymous said...

நேர்மையில்லா தெலுங்குபாப்பானின் தமிழ்பட விமர்சனம்,திருந்துங்கய்யா பொதுஜனங்களே,பார்ப்பனரை புறக்கணியுங்கள்.அப்புறம் உங்கள் வீடுகளில் அடுப்ப்றியாது,ஜாக்கிரதை

உங்களை எல்லாம் கேஸ் சேம்பருக்கு அனுப்புவோம்,குடுமிய அறுக்க புறப்பட்டுட்டோம்,உன்ன இனி அடிக்கடி கண்டுப்போம்,விஷக்கொட்டும் கொட்டுவோம்.பிளாக் உலகத்துல என்ன நடக்குன்னு தெரியுமா?

கால்கரி சிவா said...

//நேர்மையில்லா தெலுங்குபாப்பானின் //

ஆ வந்துவிட்டார் தமிழுணர்வு கொண்ட மறத்தமிழன்

அண்ணே வணக்கம்

Cable சங்கர் said...

//கோவம் வருதுல்ல, நீங்க விமர்சணம் எப்படி வேணாலும் எழுதலாம் அதை எல்லாரும் பாஸிட்டிவாக எடுத்துக்கனும், யாரும் கோவபட கூடாது, ஆனா உங்களை யாராவது விமர்சணம் பண்ணினா ஒருமையில் பதில் சொல்லுவீங்க. நல்லாயிருக்குங்க உங்க நியாயம். உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா உங்களுக்கு இல்லையா?
//

எனக்கு வந்தது கோவமில்லை நண்பரே.. நான் விமர்சனம் எழுதும் போது நான் யார், என்ன என்பதை சொல்லி தான் எழுதுகிறேன்.இல்லாவிட்டால் நான் செய்யும் தொழிலை வைத்து உங்களால் விமர்சிக்க முடியாது. நிச்சயம் சாபத்துக்கெல்லாம் பயப்படுகிறா ஆள் இல்லை நான். அதே போல நீ என்று எழுதியதற்கு காரணம் முகமில்லாமல் வருபவனுக்கு நான் கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான். அது மட்டுமில்லாமல். நீ என்னை பற்றி அறிந்தது கொஞ்சமே.. நான் ஒரு சாதாரண அஸிஸ்டெண்ட் டைரக்டர் மட்டும் கிடையாது..

Cable சங்கர் said...

//உங்க மனசுல இருக்கிறதை நீங்களே சொல்லீட்ங்க, உறுத்துன உடனே அந்த கமெண்டை டெலிட்டும் செஞ்சு நீங்க ஒரு நடுநிலையான விமர்சகர்ன்னு நிருபிச்சிடீங்க. வெரி குட்.
//

இதை வேண்டும் என்றே நான் டெலிட் செய்ததுதான். நீ ஒரு நிச்சய காமெடி பீஸ் தான் என்பதை நிருபிக்க. என்னை விமர்சனம் செய்ய கூடாது என்று நான் நினைத்திருந்தால் உன்னுடய பின்னூட்டஙக்ளை நான் வெளியிட்டிருக்க மாட்டேன். அதற்கு பதிலும் சொல்லியிருக்க மாட்டேன்.

என் புத்தகம் வெளியான பிறகு அப்புத்தகத்தை வாங்கி படித்தவர்களின் கருத்துக்களை விமர்சனமாய் எழுதச் சொல்லி அவர்களுடய பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதில் புத்தகத்தை பாராட்டி மட்டுமலல்.. மாற்று கருத்துக்கள் கூட இருக்கிறது.. அதனால் தான் அவர்கள் பதிவுகளையே இணைத்துள்ளேன். ஸோ.. மீண்டும் இதற்கான பதிலை எழுதி உன்னை காமெடி பீஸாக.. நிருபித்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறேன். இது கூட கோபத்தில் எழுதவில்லை.. உன்னை பார்த்தால் பாவமாய் இருக்கிறது அதனால்தான் எழுதுகிறேன். குட்பை..

Cable சங்கர் said...

//உங்களை எல்லாம் கேஸ் சேம்பருக்கு அனுப்புவோம்,குடுமிய அறுக்க புறப்பட்டுட்டோம்,உன்ன இனி அடிக்கடி கண்டுப்போம்,விஷக்கொட்டும் கொட்டுவோம்.பிளாக் உலகத்துல என்ன நடக்குன்னு தெரியுமா?

11:00 PM//

இதோ இன்னொரு காமெடி பீஸு.. உலகத்துல குடுமி போயே பல வருஷமாச்சு.. இதுல தெலுங்குபாப்பான் வேறயா.. சரியான காமெடி பீஸுயா.. நீ..

Cable சங்கர் said...

//தாமதமான shooting இற்கு "நீயா நானா " குழுவினர் வருத்தம் தெரிவித்தார்களா ? அப்படியாவது காத்திருந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றது ஏனோ ? உங்கள் யாருக்குமே கோபமே வரவில்லையா ?
//

கிருஷ்.. வழக்கமான வருத்தம் தெரிவித்தார்கள். இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று தெரிந்தே இருந்தததால் பங்கு பெறுகிறோம் என்று ஒப்புதல் தெரிவித்துவிட்டதால், திடீரென போய்விட்டால் என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்று ஒரு உ.இயக்குனராக எனக்கு தெரியும் என்பதால் காத்திருந்து கலந்து கொண்டோம். நிச்சயம் கோபம் வரவில்லை. ஏனென்றால் நண்பர்களுடன் இருந்ததால் ஜாலியாகவே இருந்தோம்..

மதன்செந்தில் said...

நன்றி கேபிளார் அவர்களே... தங்களால் தன் பணத்தை மீதி செய்பவர்கள் தங்களுக்கு தாக சாந்தி நடத்த வாழ்த்துக்கள்www.narumugai.com

அபி அப்பா said...

யாருய்யா அது சத்தீஷ்!

இன்னிக்கு நான் வயலுக்கு போனப்ப களை எடுக்கும் பெண்கள் கிட்ட கேட்டேன்"யம்மா ஆயிரத்தில் ஒருத்தன்" பார்த்தியான்னு சில பேர் "சூப்பர் ஒன்னுமே புரியலை அதனால நல்ல படம் போலருக்குங்க"ன்னு சொன்ன பதில் என்னை யோசிக்க வைத்தது. அதை ஏன் அப்படி சொன்னாங்க? விடை தெரியலை.

ஆனா திரும்பவும் கேபிள் விமர்சனம் படிச்ச போது தெரிந்தது.

சத்தீஷ்! நான் கூட இங்க கேபிள் சங்கரின் விமர்சனத்தை தான் அதாவது குறையை தான் விமர்சனம் செஞ்சேன். அதுக்காக அவர் என்னை "ங்கொய்யால ன்னு ஆரம்பிச்சு திட்டினா எப்படி இருக்குமோ அது போலத்தான் உங்க விமர்சன விமர்சனமும்.

இதுக்காக அவர் அந்த இயக்குனருக்கு தனி மெயில் அனுப்பி அவர் திருந்தி... வாட் ஈஸ் திஸ்.... இதல்லாம் நடக்குமா? அந்த இயக்குனர் தான் அந்த மெயில் மூலமாக திருந்துவாரா?

ஒரு வேளை நீங்க சொன்ன மாதிரி நீங்க அந்த படத்தின் உதவி இயக்குனராக இருக்கும் பட்சத்தில் சொல்லவே மனசு கஷ்ட்டப்படுகின்ரது... நீங்க கெட்டி சட்னிய தாண்டி வருவது கஷ்ட்டம்!

கேபிள் விமர்சன்ம் என்பது எங்கள் எல்லோராலும் பார்க்க படுகின்றது. படும்.

@கேபிள் அனேகமாக இது என் இரண்டாவது பின்னூட்டம் உங்களுக்குன்னு நினைக்கிறேன்.