Thottal Thodarum

Dec 23, 2010

சினிமா வியாபாரம்-2-4

பகுதி-4


ஆமாம் நண்பர் கொண்டு வந்த செய்தி கொஞ்சம் சந்தோஷம் கொடுக்கத்தான் செய்தது. ஒரு புதிய பட நிறுவனம் தயாரித்த படமொன்றை நண்பர் ஒருவர் வாங்கியிருப்பதாகவும், சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் அலைவதாகவும் சொன்னார். அது முரளி நடித்த மனுநீதி என்கிற படம். இன்றைய பிரபல நடிகராய் இருக்கும் தம்பி ராமையா இயக்கிய படம். மறைந்த நடிகை பிரதிக்யுஷா அறிமுக மான படம் என்றும் நினைக்கிறேன்.

உடனடியாய் அந்த விநியோக கம்பெனிக்கு போனவுடன், எங்களை வரவேற்றவர், நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று தெரிந்தவுடன் கொஞ்சம் சுரத்து குறைந்துவிட்டார். அவர் சொன்னதும் கடைசி காலங்களில் பிட்டு படங்கள் வெளியிட்டதால் முகம் சுளித்தார். அதனால் தான் யோசிக்கிறேன் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவர் கொஞ்சம் பிகு செய்வதாய் தான் தெரிந்தது. என் நண்பரிடமும், வாத்தியாரிடமும் லேசாக சைகை காட்டிவிட்டு.. சரி விடுங்க சார்... என்று கிளம்ப எத்தனித்த போது.. அவர் வாத்தியாரை பார்த்து.. என்ன சார் கோச்சிட்டு போறாரு.. இப்படி கோவப்பட்டா நம்ம தொழிலுக்கு ஆவுமா? உட்காருங்க.. என்றார்..

எனக்கு மனசுக்குள் ஒரு சந்தோஷம் கூத்தாடியது. நான் போட்ட கணக்கு ஒர்க்கவுட் ஆகியதே என்று.. அங்கே இங்கே பேசி.. ஒரு வழியாய் ஒரு ஐம்பதாயிரம் பிரிண்டுக்கு மட்டுமான அட்வான்ஸ் கொடுத்துவிட்டு எங்கள் தியேட்டருக்கு முதல் படமாக முரளி நடித்த மனுநீதி படத்தை ஒப்பந்தம் போட்டு வந்தோம்.

வெளியே வந்த போது என் நண்பர் கேட்டார் எப்படி திடீர்னு கோபப்பட்டு எழுந்தா மாதிரி சீன் போட்டே? என்று ஆச்சர்யமாய் கேட்க.. அது வேற ஒண்ணுமில்ல.. உதயத்தில பெரிய படம் வருது. மத்த காம்ப்ளெக்ஸுல ஏற்கனவே ரெண்டு படம் ஓடிட்டிருக்கு. பக்கத்தில இருக்கிற ஒரு தியேட்டர் காசி.. அதில வேற படம் ரிலீஸாகுது. அப்படியிருக்க, இவருக்கு இந்த தியேட்டரை விட்டா வேற தியேட்டர் சிட்டி பார்டர்ல இருக்கிற செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் வேறேதும் கிடையாது.. இதையெல்லாம் கால்குலேட் செஞ்சிதான் சுமமா சீன் போட்டேன். ஒரு வேளை சரி போங்கன்னு சொல்லிட்டான்னா.. என்ன பண்றதுன்னு யோசனை வந்தாலும் ஒரு நம்பிக்கைதான் எழுந்திட்டேன். ஒர்கவுட் ஆயிருச்சு. என்றேன்.

ஒரு வழியா படம் போட்டாச்சு ரிலீஸ் டேட்டுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம், சரியாக தியேட்டர் திறக்க பத்து நாட்களுக்கு முன் போட்டோ கார்டுகள், போஸ்டர்கள் எல்லாம் எக்ஸ்ட்ராவாக வாங்கி வந்து தியேட்டர் டிஸ்ப்ளேவில் வைத்துவிட்டு, கொஞ்சம், கொஞ்சமாக ஏரியாவுக்கு ஒன்றாய் போஸ்டர் ஒட்டி தியேட்டர் திறக்கப் போவதை அறிவித்தோம்.

ஒரு திரையரங்குக்கான போஸ்டர் ஒட்டுவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அதில் எத்தனை தில்லாலங்கடிகள் இருக்கிறது என்று அன்று எங்களுக்கு தெரியவில்லை.

தியேட்டர் திறக்கும் நாளும் வந்தது. காலையில் நல்ல நேரம் பார்த்து பூஜையெல்லாம் போட்டு ஆர்வமாய் காத்திருக்க ஆர்ம்பித்தோம். பெரிய படம் ஒன்றும் வெளிவந்திருந்த நேரத்தில் முரளி அவ்வளவு பெரிய ஹீரோவாக இல்லாததால் பெரிய கூட்டமில்லை என்று நாங்கள் நினைத்திருந்ததற்கு மாறாக பப்ளிசிட்டி இலலை என்று ஒரு பேச்சு எழும்பிய போதுதான் போஸ்டர் பப்ளிசிட்டி செய்தோமே என்ற யோசனை எழும்பியது.

தியேட்டரை பற்றி முன்பே தெரிந்த ஆடியன்ஸ்தான் தியேட்டருக்கு வ்ந்து புதிப்பிக்கப்பட்டிருக்கும் அரங்கை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்கள். பெயிண்ட் அடித்து பளபளக்கு ஸ்க்ரீன் கூட அவர்களுக்கு ஆச்சர்யத்தை தரவில்லை.. அவர்கள் ஆச்சர்யப்பட்டது நேராக்கப்பட்ட சீட்டுகளூம், அதற்கான நம்பர்களும் தான்.

சீட்டு நம்பர்படிதான் உட்கார வேண்டும் என்று சொன்னவுடன் பலருக்கு கோபம் வந்தது. காலியாத்தானே இருக்கு நான் என் இஷ்டத்துக்குதான் உட்காருவேன் என்று அடம்பிடித்தார்கள். ஏதோ அவர்கள் வீட்டில் கிடைத்த சுதந்திரம் கெட்டுவிட்டதாகவே நினைத்து புலம்பினார்கள்.

வரிசை என் சீட்டுகளில் உட்கார மாட்டேன் என்று அடம்பிடித்தவர்களில் இன்னொரு வகையினரும் உண்டு, ஃபேன் காற்று சரியாக வராத இடங்களில் அவர்கள் உட்காருவதில்லை என்றும் அதனால் காலியாய் இருக்கிற ஃபேனுக்கு அடியிலான சீட்டுகளில் தான் உட்காருவோம் என்றார்கள். அவர்களுக்கு தெரியாது எல்லா பேன்களும் பழுது பார்க்கப்பட்டு, எங்கு உட்கார்ந்தாலும் காற்று வருகிறார் போல திரையரங்கு பூராவும் இண்டஸ்ட்ரியல் பேன்கள் ஆறு போட்டிருந்ததை கவனிக்கவில்லை. உட்கார வைத்து அவர்கள் வரிசைக்கான ஃபேனை போட்டதும் தான் முகத்தில் சந்தோஷம் தெரிந்தது.

இதெல்லாம் இருந்தும் உட்கார மாட்டேன் என்று சொன்னவர்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கவே முடியாது. அவர்கள் தியேட்டரின் உள்ளேயே தம் அடிப்பவர்கள். இவர்கள் எல்லாம் முடிந்த வரை தண்ணி அடித்துவிட்டு, போதையோடு பிட்டுபடங்களுக்கு வந்து முன் சீட்டில் கால் போட்டபடி அவரவர் வசதிக்கேற்ப பீடியோ, சிகரெட்டையோ வலித்தபடி, அவ்வப்போது போதையில் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள், தியேட்டரை ஏதோ தன் வீட்டு பாத்ரூம் என்று நினைத்துக் கொண்டு எச்சில் துப்பிக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் அலைபவர்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்களை தியேட்டர் ஊழியர்கள்தான் எழுப்பி விடுவார்கள். இவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டமான விஷயம்.

முதல் நாள் ஆகையால் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை தியேட்டருக்குள் ஒரு நடை நடந்து சிகரெட், பீடி வாசனை வந்தால் அந்த வரிசையை கண்டு பிடித்து, திட்டி வெளியேற்றுவது தான் எங்கள் முக்கிய வேளையாக இருந்தது. அடுத்த நாளிலிருந்து முடிவெடுத்தோம். தண்ணியடித்துவிட்டு வருபவர்களுக்கு டிக்கெட் கொடுக்கக்கூடாது என்று அது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று அடுத்த நாள் தான் தெரிந்தது.. அத்தோடு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் ஒட்டியும் படம் பற்றிய விளம்பரமேயில்லையே என்று கேள்விப்பட்டு அதன் பின்னணியை விசாரித்த போது கிடைத்த செய்தி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
கேபிள் சங்கர்
Post a Comment

20 comments:

ம.தி.சுதா said...

/////ஒரு திரையரங்குக்கான போஸ்டர் ஒட்டுவது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? அதில் எத்தனை தில்லாலங்கடிகள் இருக்கிறது என்று அன்று எங்களுக்கு தெரியவில்லை.////

ஹ..ஹ..ஹ... நீங்கள் சொல்லித் தானே பல விசயம் எங்களுக்கே தெரிகிறது...

செ.சரவணக்குமார் said...

நன்று. தொடருங்கள் ஜி.

a said...

suvarasyamay pogirathu........

மாணவன் said...

//அத்தோடு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போஸ்டர்கள் ஒட்டியும் படம் பற்றிய விளம்பரமேயில்லையே என்று கேள்விப்பட்டு அதன் பின்னணியை விசாரித்த போது கிடைத்த செய்தி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது//

waiting.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema speed

Unknown said...

அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.
செம சுவாரசியம்.

Madurai pandi said...

Thriller movie madhiri pogudhu... waiting for nexe episode!!

ஜி.ராஜ்மோகன் said...

"அவரவர் வசதிக்கேற்ப பீடியோ, சிகரெட்டையோ வலித்தபடி, அவ்வப்போது போதையில் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பவர்கள், தியேட்டரை ஏதோ தன் வீட்டு பாத்ரூம் என்று நினைத்துக் கொண்டு எச்சில் துப்பிக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் அலைபவர்கள்"
. இவங்கள எல்லாம் திருத்தவே முடியாது தலைவா! சினிமா சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சு .

'பரிவை' சே.குமார் said...

நன்று. தொடருங்கள் அண்ணா.

ponsiva said...

cable sir i think prakthiysa was introduced by bharath raja .. flim name i forgot.. hero with murali & manoj

ஆதவா said...

தொடர்ந்து வருகிறேன்... உங்கள் அனுபவம் சுவாரசியமாகவும் சிலசமயம் உங்கள் கஷ்டம் உணர்த்துவதாகவும் உள்ளது!

kavi said...

நீங்க லீசுக்கு எடுத்த தியேட்டர் எது , பரங்கிமலை ஜோதியா ?

kavi said...

@PON SIVA - THE FILM NAME, KADAL POOKKAL

Mohan said...

Very Interesting. Waiting for next part.

அருண் said...

நிறைய அனுபவங்களை உள்ளுக்கு வைச்சிருக்கிங்க போல,எல்லா இடத்திலையும் சீன் போட்டே காரியத்த சாதிச்சிடுவிங்களோ?
தொடர் அருமை,அடுத்த பாகத்துக்காக வெய்டிங்.

செங்கோவி said...

மனுநீதி ஃப்ளாப்பாச்சே...அங்கயும் விதி கும்மி அடிச்சிருச்சா...

-----செங்கோவி
மன்மதன் அம்பு-விமர்சனம்

Unknown said...

இப்பதான் சரியான நேரேசன்...

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

ஒவ்வொரு பாகம் முடியும் போதும் நீங்கள் வைக்கும் சஸ்பென்ஸ் அருமை !

வினோ said...

அண்ணா என்னெல்லாம் நடக்குது :(

பிரதீபா said...

நல்ல விறுவிறுப்பு. எப்போ அடுத்தது, எப்போ அடுத்தது?