பெரிய படத்திற்கு நடிகர்கள், தயாரிப்பு நிறுவனங்களினால் பெரிய ஓப்பனிங் கிடைத்துவிடும். அட்லீஸ்ட் இரண்டு வாரம் கேரண்டி. அதே சிறிய படங்களை பற்றிய செய்தி மக்களிடம் போய் சேருவதற்கே ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆனால் அப்படி நல்லாருக்கு என்று சொல்லி மக்கள் போய் பார்ப்பதற்குள் திரையரங்கிலிருந்து படம் எடுக்கப்பட்டுவிடுகிறது என்பது மிகப் பெரிய சோகமே. அப்படி ஓரளவுக்கு சுமாரான படங்கள் கூட வந்த சுவடு தெரியாம போன வருடமும் இந்த 2010 தான்.
ஜனவரி
புகைப்படம், ஆயிரத்தில் ஒருவன், நாணயம், குட்டி, போர்களம், தமிழ்படம், கோவா ஆகிய படங்களுடன் இன்னும் சில சின்ன படங்கள் வந்தது. அதில் புகைப்படம் மேக்கிங்கிலும் ஒளிப்பதிவிலும் பேசப்பட்டாலும் பெரிதாக போகவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் கிரிட்டிக்கலாக நிறைய விவாதிக்கப்பட்டாலும், பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த மாதத்திய சிறந்த ஓப்பனிங் என்று தான் சொல்ல வேண்டும், நாணயம், குட்டி, போன்ற படங்கள் எல்லாம் பெரிதாக பேசப்படவேயில்லை. போர்களம் அதன் மேக்கிங்குக்காக பேசப்பட்டது. கோவா பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி புஸ்ஸானது. இந்த மாதத்திய ஆச்சர்யப்படுத்தும் ஹிட்.. தமிழ் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தமிழ் படம் தான். சுமார் இரண்டரை கோடியில் தயாரிக்கப்பட்டு ஏழு எட்டு கோடிகள் வசூலித்தது என்கிறது வியாபார வட்டாரம்.
ஹிட் – தமிழ் படம்
ஆவரேஜ்- ஆயிரத்தில் ஒருவன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிப்ரவரி
டிவி நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, அஜீத்தின் அசல், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா? ஆகியவை வெளியாகியது. கதை வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அஜீத், சரண், பரத்வாஜ் என்று வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் என்று நினைத்த கருப்பு குதிரை.. கழுதையாய் போனது மிகப் பெரிய சோகமே. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை சன் டிவிக்கு தத்துக் கொடுத்துக் கூட வெளங்காத சவலை பிள்ளையானது. அம்மாதத்தின் கடைசியில் வெளிவந்த ரெட் ஜெயண்டின் விண்ணைத்தாண்டி வருவாயா?வுக்கு கிடைத்த ஓப்பனிங், கவுதமுக்காகவா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கா என்று யோசிக்க வைத்தது. அம்மாதிரியான மிகப் பெரிய ஹிட் என்று தான் அப்படத்தை சொல்ல வேண்டும். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. வி.தா.வ.
ஹிட்: விண்ணைத்தாண்டி வருவாயா?
ஆவரேஜ்: ஏதுவுமில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்ச்
சென்ற மாத முடிவில் வந்த விண்ணைத்தாண்டி வருவாயா?வின் தாக்கம் இந்த மாதமும் தொடர்ந்தது. அவள் பெயர் தமிழரசி, தம்பிக்கு இந்த ஊரு, முன் தினம் பார்த்தேனே, அங்காடித்தெரு ஆகியவை வெளியாகின.. மோசர்பியர் தயாரிப்பில் வெளியான அவள் பெயர் தமிழரசி, இந்த டைட்டிலே படம் பார்ப்பவர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது, ஆனால் அது நிலைக்கவில்லை. தம்பிக்கு எந்த ஊரு இயக்குனர் பத்ரியின் மூன்றாவது படம், தமிழ் படம் படத்தில் கிண்டல் பண்ணியதை எல்லாம் ஒரெ படத்தில் வைத்து வந்த சுவடு தெரியாமல் போன படம். முன் தினம் பார்த்தேனே.. கொஞ்சம் ஸ்டைலிஷாக எடுக்கப்பட்டிருந்த படம். கவுதம் மேனனின் உதவியாளர் இயக்கியிருந்தார். படம் முழுவதும் கவுதமின் தாக்கம். காமெடி ஆங்காங்கே கொஞ்சம் ஒர்க்கவுட் ஆனாலும் பேசக்கூட படவில்லை. இம்மாதத்திய சிறந்த படமென்றால் அய்ங்கரனால் வெளியிட முடியாமல் வெகு நாட்களுக்கு கழித்து வெளியான அங்காடித்தெருதான். ஐய்ங்கரனுக்கும் வசந்தபாலனுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தப் படம்.
ஹிட்: விண்ணைத்தாண்டி வருவாயா?, அங்காடித்தெரு
ஆவரேஜ்: ஏதுவுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏப்ரல்
பையா, கின்னஸ் ரெக்கார்ட் படமான சிவப்பு மழை, ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைச்சுழி ஆகியவை வெளியான மாதம். தயாநிதி அழகிரியின் வெளியீடு, கார்த்தியின் மூன்றாவது படம், யுவனின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்று சகல அம்சங்களும் சேர்ந்து கொள்ள, சுமார் 25 கோடிக்கும் மேலே வசூலான படம். இன்னொரு கின்னஸ் சாதனை படம் தியேட்டரில் ஓடிய நாட்கள் கின்னஸ் சாதனையே. இயக்குனர் இமயமும், சிகரமும் இணைந்து நடித்த படம் வந்த சுவடே தெரியாத அளவிற்கு தோல்வி அடைந்தது.
ஹிட்: பையா
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மே
சன்னின் அடாவடி மார்க்கெட்டிங்கில் விஜய் நடித்து வெளிவந்த சுறா, இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம், கோரிப்பாளையம், கனகவேல் காக்க, கொலை கொலையாம் முந்திரிக்கா, மீண்டும் சன்னின் சிங்கம். என்று சம்மர் வெக்கேஷனை வைத்து நிறைய படங்கள் வெளியானது. சூப்பர் ஓப்பனிங்கில் ஆர்ம்பித்த சுறா பாதி கடலிலேயே மூழ்கிவிட்டது படு சோகமே. அறை என் 305ல் கட்வுளுக்கு பிறகு சிம்பு தேவனின் அடுத்த ஸ்பூக் வகை படம். பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், வசூல் ரீதியாக வெற்றி இல்லை என்றே சொல்லப்படுகிறது. மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இயக்குனர் இயக்கி வெளிவந்த கோரிப்பாளையம் இன்னொரு சுப்ரமணியபுரமாய் படு செண்டிமெண்டுடன் வந்து எந்த விதமான இம்பாக்டும் இல்லாமல் போய்விட்டது. கரண் மிகவும் எதிர்பார்த்த கனகவேல் காக்க, கொலை கொலையாம் முந்திரிக்கா படத்தை பற்றியெல்லாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. இம்மாத வெற்றிப் படமே சன், சூரியா காம்பினேஷனான சிங்கம் தான். மாதக் கடைசியி வந்தாலும் சும்மா பின்னி பெடலெடுத்தது.
ஹிட்: சிங்கம்
ஆவரேஜ்: இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜூன்
குற்றப்பிரிவு, காதலாகி, ஓர் இரவு,கற்றது களவு, ராவணன், திட்டக்குடி, களவாணி, மிளகா ஆகிய சிறிய பெரிய படங்கள் வெளிவந்த மாதம். இதில் குற்ற்ப்பிரிவு, காதலாகி, போன்றவை லிஸ்டில் கூட சேர்க்க முடியவில்லை. ஓர் இரவு ஒரு புதிய முயற்சியாய் இருந்தாலும் அதை பற்றி செய்தி வெளிவருவதற்குள் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டார்கள். மணிரத்னத்தின் ராவணன் தமிழ், தெலுங்கு, இந்தி என்று பெரிய அளவில் வெளியாகி எல்லா மொழிகளிலும் படு தோல்வி அடைந்த படம். திட்டக்குடி, மிளகா போன்ற படங்கள் பற்றியும் பெரிதாய் சொல்ல முடியவில்லை. ஆனால் அம்மாதத்திய கருப்பு ஆடு களவாணி. மிக குறைந்த தியேட்டர்களில் வெளியாகி மவுத் டாக்கில் சூடு பிடித்து நல்ல வசூல் செய்த சினன பட்ஜெட் படம்.}
ஹிட்: களவாணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொடரும்…ஜனவரி
புகைப்படம், ஆயிரத்தில் ஒருவன், நாணயம், குட்டி, போர்களம், தமிழ்படம், கோவா ஆகிய படங்களுடன் இன்னும் சில சின்ன படங்கள் வந்தது. அதில் புகைப்படம் மேக்கிங்கிலும் ஒளிப்பதிவிலும் பேசப்பட்டாலும் பெரிதாக போகவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் கிரிட்டிக்கலாக நிறைய விவாதிக்கப்பட்டாலும், பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இந்த மாதத்திய சிறந்த ஓப்பனிங் என்று தான் சொல்ல வேண்டும், நாணயம், குட்டி, போன்ற படங்கள் எல்லாம் பெரிதாக பேசப்படவேயில்லை. போர்களம் அதன் மேக்கிங்குக்காக பேசப்பட்டது. கோவா பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தி புஸ்ஸானது. இந்த மாதத்திய ஆச்சர்யப்படுத்தும் ஹிட்.. தமிழ் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட தமிழ் படம் தான். சுமார் இரண்டரை கோடியில் தயாரிக்கப்பட்டு ஏழு எட்டு கோடிகள் வசூலித்தது என்கிறது வியாபார வட்டாரம்.
ஹிட் – தமிழ் படம்
ஆவரேஜ்- ஆயிரத்தில் ஒருவன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிப்ரவரி
டிவி நடிகர் அபிஷேக் இயக்கிய கதை, அஜீத்தின் அசல், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை, கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா? ஆகியவை வெளியாகியது. கதை வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அஜீத், சரண், பரத்வாஜ் என்று வெற்றிக்கூட்டணியாக வலம் வரும் என்று நினைத்த கருப்பு குதிரை.. கழுதையாய் போனது மிகப் பெரிய சோகமே. விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை சன் டிவிக்கு தத்துக் கொடுத்துக் கூட வெளங்காத சவலை பிள்ளையானது. அம்மாதத்தின் கடைசியில் வெளிவந்த ரெட் ஜெயண்டின் விண்ணைத்தாண்டி வருவாயா?வுக்கு கிடைத்த ஓப்பனிங், கவுதமுக்காகவா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கா என்று யோசிக்க வைத்தது. அம்மாதிரியான மிகப் பெரிய ஹிட் என்று தான் அப்படத்தை சொல்ல வேண்டும். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.. வி.தா.வ.
ஆவரேஜ்: ஏதுவுமில்லை
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்ச்
ஹிட்: விண்ணைத்தாண்டி வருவாயா?, அங்காடித்தெரு
ஆவரேஜ்: ஏதுவுமில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஏப்ரல்
பையா, கின்னஸ் ரெக்கார்ட் படமான சிவப்பு மழை, ஷங்கரின் தயாரிப்பில் வெளிவந்த ரெட்டைச்சுழி ஆகியவை வெளியான மாதம். தயாநிதி அழகிரியின் வெளியீடு, கார்த்தியின் மூன்றாவது படம், யுவனின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்று சகல அம்சங்களும் சேர்ந்து கொள்ள, சுமார் 25 கோடிக்கும் மேலே வசூலான படம். இன்னொரு கின்னஸ் சாதனை படம் தியேட்டரில் ஓடிய நாட்கள் கின்னஸ் சாதனையே. இயக்குனர் இமயமும், சிகரமும் இணைந்து நடித்த படம் வந்த சுவடே தெரியாத அளவிற்கு தோல்வி அடைந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மே
ஹிட்: சிங்கம்
ஆவரேஜ்: இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜூன்
ஹிட்: களவாணி
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நில்.. கவனி.. செல்லாதே.. திரை விமர்சனம் படிக்க.. கேபிள் சங்கர்
Comments
அது மட்டுமில்லாமல்.. உங்களிடம் ஏற்கனவேசொல்லியிருக்கிறேன். எத்தனை ரூபாயில் படம் செய்ய முடியும் என்று.. அது பற்றி நீங்கள் கூட தயாரிப்பாளர் இருக்கிறார் என்று சொல்லியிருந்தீர்கள்... அவருடன் சேர்ந்து பேசுவோம்
தியேட்டர் பற்றிய விஷயங்களுக்கு தொடர்ந்து சினிமா வியாபாரம் -2 படியுங்கள்.
தொடருங்கள்....
அடுத்த பாகத்துக்காக வெய்டடிங்..
செந்தழல் ரவி கேள்விக்கு நேரடியா பதில் சொன்னா, நாங்களும் தெரிஞ்சுப்போமே ஷங்கர் ஜி?
பதிவை பற்றிய ஒரு விஷயம் :
ஃபிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரு மாதங்களிலும் விண்ணை தாண்டி வருவாயா படம் போட்டு இருக்கீங்க... ஏதாவது ஒரு மாசத்துல டெலீட் பண்ணுங்க....
//விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் அய்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வரிசைக் கட்டி வெளிவந்த வருடமிது. சில பல பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் வெளியான வருடமும் இது தான். பல படு தோல்விகளையும் சந்தித்த படங்கள் வெளியான வருடமும் இது தான். அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வாரத்திற்கு நான்கு படங்கள் ஏன் சில சமயங்களில் ஆறு படங்கள் கூட வெளிவந்ததும் ஒரு முக்கிய காரணம். ஒரு ங்கரனுக்கும் வசந்தபாலனுக்கும் பெயர் வாங்கிக் கொடுத்தப் படம். //
//நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வரிசைக் கட்டி வெளிவந்த வருடமிது. சில பல பெரிய பட்ஜெட் படங்கள் பெரிய அளவில் வெளியான வருடமும் இது தான். பல படு தோல்விகளையும் சந்தித்த படங்கள் வெளியான வருடமும் இது தான். அதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வாரத்திற்கு நான்கு படங்கள் ஏன் சில சமயங்களில் ஆறு படங்கள் கூட வெளிவந்ததும் ஒரு முக்கிய காரணம். ஒரு //
-----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்
-அருண்-
Monopoly can be said, if they block cinema theaters unethically (Not booking theaters for their films) and not allowing any other producers film to be released. But even Vijaykanth's Viruthagiri was released all across Tamil Nadu.
Whoever produces and market, if the film is good, people will come to theaters, if not they won't. Should not unnecessarily blame Sun & others, if any film is a flop.
Also, as TV is powerful media, any film promoted thru leading channels shall have a wider reach and have a edge over others, if not , some times even most people may not know whether a particular film is released or not.
July : Madharasapattinam
Augest : Naan Mahaan Alla
Septemper : Boss Enkira Baskaran
October : Endiran
November : Mynaa
December : Viruthagiri (chuma chumma ..)