Thottal Thodarum

Dec 28, 2010

கொத்து பரோட்டா-28/12/10

சென்ற வாரம் பல பத்திரிக்கைகளில், இணைய பத்திரிக்கைகளிலும் ஒரு அதிர்ச்சி செய்தி என்று போட்டிருந்தார்கள். அந்த அதிர்ச்சி என்னவென்றால் இயக்குனர் சேரனிடம் உதவியாளராக சேர விருப்பமென்றால் ஐந்து லட்சம் ரூபாய் கட்டிவிட்டு  தன்னுடன் மூன்று படங்களுக்கு வேலை செய்தவுடன் அவர்களுக்கு காண்டேக்ட் சர்டிபிகேட்டோடு பணத்தையும் திரும்பித் தருவார் என்று. என்ன காரணம் என்று கேட்டால் ஒவ்வொரு படத்திற்கு அஸிஸ்டெண்ட் செட்டாகவே மாட்டேனென்கிறதால். நிலையான ஒரு அஸிஸ்டெண்டுக்காகவும், தன்னிடம் உதவியாளர்களாய் இருக்கும் போது அவர்களுக்கும் சினிமா பற்றிய அறிவை முழுக்க தெரிந்து கொள்ள பணம் கட்டி படிப்பது போல பணம் கட்டினால் தான் சரியாக படிக்க  உதவியாக இருக்குமென்று  சொல்லியிருப்பதாக தெரிகிறது. ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டரின் வாழ்க்கையில் எவ்வளவு அடிபட்டு வந்திருப்பான் என்று சேரனுக்கு தெரியாததில்லை.  அவன் வாழ்நாளில் முதல் ஒரு லட்ச் ரூபாயை முழுசாக பார்பதற்கே ஒரு படம் இயக்கினால் மட்டுமே. சேரன் ஒன்றும் 25 ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ரவிக்குமாரிடம் அஸிஸ்டெண்டாய் சேரவில்லை. அப்படியிருந்திருந்தால் சேரன் சினிமாவிற்கு வந்திருக்கவே முடியாது. எனவே இச்செய்தி புரளியாகத்தானிருக்கும் என்று தோன்றுகிறது.

ஒரு சில இயக்குனர்களிடம்  உதவியாளர்களாய் சேர காத்திருக்கும் ஆட்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.  அவர்கள் தொடர்ந்து படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் இருந்துக் கொண்டேயிருக்கும் அதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் உதவி இயக்குனர்களுக்கான சரியான அங்கீகாரமும், நல்ல மரியாதையும், ஓரளவுக்கு நல்ல சாப்பாடும், மாத சர்வைவலுக்கான பணமும் கிடைக்கும். வேலை செய்யும் படத்தில் பேசிய சம்பளத்தை வாங்கிக் கொடுக்கும் இயக்குனர்களை பார்பதே அரிது. கே.எஸ்.ஆரிடம் வேலை பார்க்கும் உதவியாளர்கள் சொல்லி கேள்வி. அவருடய அஸிஸ்டெண்டுக்கான சம்பளம் பேட்டா போன்றவை சரியாக வரவில்லை என்றால் தயாரிப்பாளரிடம் நேரடியாய் சண்டையிடுவாரம். அதான் அவர் பின்னால் எவ்வளவு உதவியாளர்கள் என்று. ஏன் கமலிடம் ஒரு படத்திற்கு மட்டுமே டிஸ்கஷனுக்காக போன என நண்பர் ஒருவர் இரண்டு  மாதத்திற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை கொடுத்துள்ளார். நண்பர் சொன்ன விஷயம் என்னவென்றால் நான் இதுவரைக்கும்  வெறும் டிஸ்கஷனுக்காக இரண்டு மாதத்திற்கு ஐம்பதாயிரம் வாங்கியதேயில்லை என்பதுதான். இத்தனைக்கும் பத்து வருட அனுபவம் உள்ளவர். பல இயக்குனர்கள் அவர்கள் உதவியாளர்களிடம் சொல்லும் விஷயம் என்னவென்றால் நீ யார் கிட்ட வேலை செய்யுற தெரியுமா? என்பது தான். யாரிடம் வேலை செய்தால் என்ன வாயும் வயிறும் வேறதானே..?  மனித நேயம், பெண்ணுரிமை, போன்ற சிறந்த கருத்துக்களை சொல்லும் பல இயக்குனர்கள் உதவி இயக்குனரின் சம்பளத்தை கூட மொத்தமாய் பேசி அள்ளி தருவதற்கு பதிலாய் கிள்ளிக்கூட தருவதில்லை என்பதும் கேள்விப்படத்தான் செய்கிறோம். வாய்ப்பு தேடியலையும் எனக்கே ஒரு உதவியாளர் இருக்கிறார்.:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார வீடியோ
ட்ரைலர்கள் பல சமயங்களில் சின்ன படங்களுக்கு ஒரு எதிர்பார்பை தரும். எஸ்.பி.பி.சரன் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த நாணயம் படத்தின் தோல்வி அவர்களின் அடுத்த படமான ஆரண்ய காண்டம் படத்தை தள்ளிப் போட்டாலும் அவர்களது முயற்சி South Asian International Film Festivalலில் செலக்ட் ஆகியிருக்கிற விஷயம் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதான் புது ட்ரைலர். இவர்களோட முதல் தியேட்டர் ட்ரைலரும் அட்டகாசமாய் இருக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார ப்ளாஷ்பேக்

தமிழ்நாட்டில் ஒரு வருஷத்துக்கு மேல் ஓடி களைத்த படம். ஆனந்த் மிலிந்தின் பாடலுக்காகவும், அமீர், ஜூஹியின் இளைமைக்காகவுமே ஓடிய படம். முக்கியமாய் இது இந்திப்படம் கூட கிடையாது. உருது படம். இப்படத்தின் பாடல்கள் அன்று மட்டுமல்ல இன்று கூட சூப்பர் ஹிட்தான். அதிலும் இந்த பாடல்.. பேர்வெல் பாடல்களில் பசுமையானது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார குறும்படம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
அட்டகாசமான விளம்பரம். விளம்பரத்தின் முடிவில் இருக்கும் பாஸிட்டிவ் செய்தியை நிச்சயம் விரும்புவீர்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கும்பகோணம் நிறைய மாறிவிட்டது. சிலபல சிக்னல்கள்  புதிதாய் முளைத்திருப்பதாய் தெரிகிறது. தெருவுக்கு தெரு இருக்கும் காபி க்ளப்புகளையும், அய்யர் ஓட்டல்களையும் காணோம். வெத்தலை சீவல் குதப்பி கொண்டு திரியும் ஆட்களையும் காணோம். கவுளி நாலணாவுக்கு வாங்கி அளவுக்கு இப்போது ஒரு அம்மணி பத்து ரூபாய் கொடுத்து வாங்கினார். வாங்கும் போது பாத்து தம்பி ஒத்தப்படையா கொடுக்காத இரட்டை படையா கொடு என்று கேட்டு வாங்கினார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார தத்துவம்
நாளை என்பது தினமும் வரும், ஆனால் இன்றைய நாள் இன்று மட்டுமே, அதனால் இன்றைய நாளை உபயோகி..

நம்பிக்கை வாழ்க்கையில் ஒரு குறிக்கோளை  கொள்வதற்கு உதவும். ஆனால் தன்நம்பிக்கை மட்டுமே அதை அடைய உதவும். எனவே தன்நம்பிக்கையோடு இருங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
டீ
ச்சர்: நம் உடலில் எந்த பாகம் முதலில் கடவுளிடம் போய் சேரும்? என்று கேட்க
ஜானி: நம்முடய பாதங்கள் தான் டீச்சர் என்றான். அதை கேட்ட டீச்சரும் அதெப்படி என்று கேட்க.
ஜானி: ஒவ்வொரு நாள் ராத்திரியும் என் அம்மா இரண்டு கால்களையும் மேலே தூக்கிய படி “O god.. iam coming..iam coming” என்று கத்துவதை பார்த்திருக்கிறேன் என்றான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அனைவருக்கும் உங்கள் கேபிள் சங்கரின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Post a Comment

34 comments:

Sridhar Narayanan said...

//முக்கியமாய் இது இந்திப்படம் கூட கிடையாது. உருது படம்.//

உருதுப்படம்லாம் இல்லண்ணா. இந்திக்கும் உருதுவிற்கும் நெருங்கிய உறவு உண்டு. பாடல் வரிகளில் உருது வார்த்தைகள் கலந்து இருக்கும். அவ்வளவுதான். பிராகிருதமும் உருதுவும் கலந்த மொழிதான் இந்தி.

முக்கியமாக இது ராஜபுதன குடும்பத்துக் கதை. அவர்கள் பேசும் மொழியும் உருது கிடையாது.

Ba La said...

சேரன் சம்பந்தப்பட்ட செய்தியைப் பார்க்கையில், நானும் மிகவும் அதிரிந்து தான் போனேன். இச்செய்தி புரளியாகத்தானிருக்கும்.

ஆரண்ய காண்டம் ட்ரைலர் visual sequenceஐ விட BGM தான் அசத்துது.

இம்முறை கொத்து பரோட்டா நன்று

வினோ said...

அண்ணா, ட்ரைலர் மற்றும் குறும்படம் அருமை.....

மாணவன் said...

வழக்கம்போலவே கொத்துபரோட்டா அருமை சார்,

செம்ம கலக்கல்.........

ரவி said...

சிறு தகவல் பிழை. அது உருது படம் தல.

pichaikaaran said...

தல, உங்க பாடலில் பிழை இருக்கு

pichaikaaran said...

மன்மதன் அம்பு பாக்ஸ் ஆபிஸ் ரிப்பார்ட் எங்கே ?

Indian said...

//பிராகிருதமும்//

சங்கதம்?

தாஸ். காங்கேயம் said...

Cable Sankar:இந்த வார தத்துவம்
நாளை என்பது தினமும் வரும், ஆனால் இன்றைய நாள் இன்று மட்டுமே, அதனால் இன்றைய நாலை உபயோகி..

Jackie Sekar:பிலாசபி பாண்டி
நாளை என்பது தினமும் வரும்.. ஆனால் இன்றைய தினம் இன்றைக்கு மட்டுமே... வாழ்ந்துவிடுங்கள்...

Doss:
இதன் மூலம் உங்கள் இருவரின் ஒற்றுமை உணர்வு தெரிகிறது...
ஹா ஹா எப்பூடி?

பிரபல பதிவர் said...

கேஎஸ்ஆர் விஷயத்தில் கமலை நுழைத்த விதம் நன்றாக இருந்தது.....
எல்லாம் அவன் செயல்.....

அப்புறம் ம.அ. மும்பையில் பல தியேட்டர்களில் சன்டேயோடு தூக்கிவிட்டார்கள்.... ஒரே ஒரு தியேட்டரில் இருகாட்சிகள் மட்டும் ஆப்பரேட்டருக்காக ஓடுகிறது....

நாகவள்ளியே ரெண்டு சன்டே தாக்குபிடித்தது.... எந்திரன பத்தி சொல்லனுமா????

பிரபல பதிவர் said...

//பார்வையாளன் said...
மன்மதன் அம்பு பாக்ஸ் ஆபிஸ் ரிப்பார்ட் எங்கே ?
///

எதயாவது கூட்டி கழிச்சி மெகாஹிட்டும்பாரு.... அத போயி.... போங்க பாஸ்....

shortfilmindia.com said...

@sridhar narayanan
தலைவரே.. இந்திக்கும் உருதுவுக்கும் நிறைய ஸ்நானப்ராப்தி இருக்கத்தான் செய்கிறது என்றாலும் படத்தின் சென்சார்போர்ட் சர்டிபிகேட்டே உருது என்று வாங்கி மெஹா ஹிட்டாக தமிழ் நாட்டில் ஓடியபடம் என்பதைச் சொல்லத்தான் அதை எழுதினேன். வேண்டுமானால் படத்தின் சர்டிபிகேட்டை பாருங்க.

shortfilmindia.com said...

@செந்தழல் ரவி.
அதைத்தானே நானும் சொன்னேன். அதுல எங்க தகவல் பிழை.??

shortfilmindia.com said...

@பார்வையாளன்.
நீங்கள் பார்க்கும் பல பார்வைகளில் பிழை இருக்கிறது பார்வையாளன்.:))))

அப்புறம் நான் என்னைக்கு எல்லா படத்துக்கும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் கொடுத்திருக்கேன்.

ஆனானப்பட்ட குசேலனுக்கே நான் கொடுக்கலை..:)))

ஜி.ராஜ்மோகன் said...

என்ன தலைவா ! இந்த வார கொத்து புரோட்டாவ சுருக்கமா முடிச்சிடீங்க!
"நாளை என்பது தினமும் வரும், ஆனால் இன்றைய நாள் இன்று மட்டுமே, அதனால் இன்றைய நாளை உபயோகி.. "
தன்னம்பிக்கை டானிக்.

பிரபல பதிவர் said...

//ஆனானப்பட்ட குசேலனுக்கே நான் கொடுக்கலை..:)))//

1991 க்கு அப்புறம்.. ரஜினியின் தோல்வி படங்கள்.. நாட்டுக்கு ஒரு நல்லவன், பாபா, குசேலன்....

கமலுக்கு.... குணா, கலைஞன், ஆளவந்தான், குருதிபுனல், ஹேராம், பஞ்சதந்திரம்,ராமா சாமா பாமா, மும்பை எகஸ்பிரஸ், அன்பேசிவம், மன்னாரு அம்பு, காதலா காதலா, நம்மவர், சிங்காரவேலன், மகராசன், பாசவலை (யாருக்காவது தெரியுமா?)......

அய்யோ அப்பா மூச்சு முட்டுதே

Test said...

கொத்து பரோட்டா - சூப்பர்

உதவி இயக்குனர்களுக்கான வேலையின் வலி புரிகிறது

'பரிவை' சே.குமார் said...

கொத்துபரோட்டா அருமை.

shortfilmindia.com said...

மாப்பிள.. லிஸ்டு தப்பாயில்ல இருக்கு..

1991க்கு பொறவு ரஜினி நடித்த படங்கள் எவ்வ்ளவு..? கமல் நடித்த படங்கள் எவ்வளவு..?

பஞ்ச தந்திரம்,குருதிபுனல் தோல்விப் படம் அல்ல..

ராமா சாமா பாமா, கன்னடத்தில் வெளியான சதி லீலாவதி.. ரமேஷ் அரவிந்த் இயக்கிய படம் அது கன்னடத்தில் பெரிய ஹிட்.. பாசவலை. தெலுங்கில் கே.விஸ்வநாத் இயக்கிய படம். அத்வும் மிகப்பெரிய ஹிட்.. சும்மா.. டைப் பண்ணத்தெரியும்ன்னு அடிச்சி விடக்கூடாது..:))

பிரபல பதிவர் said...

தல...

பெர்சன்டேஜ் பாத்தாலுமே ரஜினிய நெருங்க முடியாது....

பாசவலை தமிழ் வெர்ஷன் தல... இத கணக்குல எடுக்கலன்னா சலங்கை ஒலியும் எடுக்க கூடாது....

ராமா சாமா பாமா ஃப்ளாப்தான்.... நான் சதிலீலாவதிய சொல்லவே இல்லையே....

ப.தந்திரம்... சன்டிவில மெகாஹிட்டா ஒடுன படம்....
கு.புனல் ‍ ஹிட்டுன்னா சொன்னா கமலே புன்முறுவல் புரிவார்.....

Mohan said...

கமல்,ரஜினி இருவரில் யார் வெற்றி பெறுகிறாரென்று,அடுத்து வரும் ஐந்து வருடங்களில் தெரிந்துவிடும்

Unknown said...

குறும்படம் பிடித்திருக்கிறது/...

செ.சரவணக்குமார் said...

குறும்படம் நன்றாக இருந்தது தலைவரே. கும்பகோணம் பற்றிய பத்தியில் ஒத்தப்படை, ரெட்டப்படை எனும் பதத்தை ரசித்தேன். இன்னும் இதெல்லாம் புழக்கத்தில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என் பால்யத்தின் விடுமுறை நாட்களை இந்த மண்ணில் தான் கழித்திருக்கிறேன். கும்பகோணம், தஞ்சாவூர் நகரங்கள் மீது எனக்குத் தீராத காதல் உண்டு.

சேரன் பற்றிய செய்தியில் உண்மையிருக்க வாய்ப்பில்லை.

பகிர்வுக்கு நன்றி தலைவரே.

Unknown said...

நாளை என்பது தினமும் வரும், ஆனால் இன்றைய நாள் இன்று மட்டுமே//
வைர வரிகள்

அருண் said...

டிரைலர்,குறும்படம்,விளம்பரம் எல்லாமே அருமை,பாடலையும் ரசித்தேன்.தத்துவம் உற்சாக பானம்.

சக்தி கல்வி மையம் said...

அட்டகாசமான விளம்பரம் பகுதி..
எப்படி பாஸ் உங்களால மட்டும் முடியுது.
Night எல்லாம் கண்முழிச்சி தேடுவீங்களோ...

Very Nice blog.. Happy new Year..
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்க தலைவரே...
http://sakthistudycentre.blogspot.com/

Rishoban said...

ஏன் இந்த கமல் - ரஜினி சண்டை? இந்த ப்ளாக்கில் கமென்ட் செய்வதற்கு என்று ஒரு வேலைவெட்டி இல்லாத கூட்டம் ஒன்று உள்ளது மட்டும் தெளிவாகத் தெரிகிறது!!

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் நடிகர்களை தலையில் துாக்கிக் கொண்டு சுற்றப்போகிறார்களோ!!
திருந்தாத ஜன்மங்கள்

pichaikaaran said...

சிவகாசி மாப்பிள்ளை , நீங்க சொன்ன மாதிரியே , எதையோ கூட்டி கழிச்சு பார்த்துட்டு , குருதிபுனல் சூப்பர் ஹிட்னு டிக்ளேர் செஞ்சுட்டாரே . ஹா ஹா .

Sridhar Narayanan said...

//வேண்டுமானால் படத்தின் சர்டிபிகேட்டை பாருங்க// நீங்க எதுக்கும் இன்னொரு தடவ படத்தை பாத்திடுங்க :) படத்தின் வசனங்கள், கதை சூழல், கதாபாத்திரங்கள் எல்லாமே ஹிந்திதான். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி பாடல் வரிகள்ல உருது டச் இருக்கும். உருதுவின் கவித்துவமான நடையின் பாதிப்பு இந்திப் பாடல்கள்ல தவிர்க்க முடியாதது. நான் பார்த்தவரைக்கும் விக்கிபீடியா, IMDBல எல்லாம் ‘ஹிந்தி’ன்னுதான் போட்டிருக்கு.

உருதுப் படம்னு சென்சார் சர்டிபிகேட் வாங்கறதுல சில பிராக்டிகல் வசதிகள் இருந்திருப்பதால் அப்படி செய்திருக்கலாம். படத்தின் மொழியை சென்சார் போர்ட் தீர்மானிப்பது இல்லை. படத்தின் தயாரிப்பாளர்கள்தான் தீர்மானிக்கிறார்கள் :)

செங்கோவி said...

அப்போ நானும் டைரக்டர் ஆகி கல்லா கட்டலாம் போலிருக்கே.

----செங்கோவி
நானா யோசிச்சேன் (டிசம்பர்-2010)

a said...

குறும்படம் அருமை........ என்ன தல : கும்பகோணத்த விட்டு மனசு மீண்டு வரல போல.......

Sridhar Narayanan said...

’மன்மதன் அம்பு’ வசூல் ஹிட்டுன்னு விக்கிபீடியா சொல்லுதே. தப்புன்னு சொல்றவங்க விக்கிபீடியால மறுத்து எழுதுங்கப்பா :)

andygarcia said...

சிவகாசி மாப்பிள்ளை இங்கு எழுதிய அதே பின்னோட்டத்தை பத்து பதினைந்து வெப்சைட் போஸ்ட் செய்கிறார், mayyamdotcom கமல் ரசிகர்கள் லிங்க் கொடுத்து சிரிக்கிறார்கள், ,கமலை மட்டம் தட்டுவதற்கு வேலைமேனகேட்டு இவ்வளுவு கஷ்டபடுகிறார்

கடும் விமர்சகர் வெங்குடு said...

காதலா காதலா, சிங்கார வேலன் தோல்வி படங்கள் அல்ல (கமல் பிடிக்கவில்லை என்பதால் அப்படி எல்லாம் சொல்லிவிட கூடாது ! )... அதே போல் குருதிப்புனல், பஞ்ச தந்திரம், மன்மதன் அம்பு வெற்றி படங்களும் அல்ல. !!!! மன்மதன் அம்பு போல் ஒரு மட்டமான படத்தில் கமல் ஏன் நடித்தார் என்பது தான் என் வருத்தமான கேள்வி !!!!! 15 நிமிடம் படத்தை பார்ப்பதே சிரமம் என்றாகிவிட்டது... நான் எந்த படத்திற்கும் இதுவரை FIRST SHOW பார்த்ததே இல்லை ! மன்மதன் அம்பு தான் முதல் படம் என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம் !!!!