ஏற்கனவே முதல் பாகத்தை பார்த்துவிட்டதால் பெரிய எதிர்பார்ப்பு ஏதுவுமில்லாமல் ஒரு ரெண்டு நாள் கழித்துத்தான் பார்த்தேன்.அதுவும் சூரியாவுக்காக. ரத்த சரித்திரம் பழிவாங்கும் உணர்வை உன்னதமாக்கும் முயற்சி.
முதல் பாகத்தை ரத்ன சுருக்கமாய் முதல் இருபது நிமிடங்களில் காட்டுகிறார்கள். அதன் பிறகு சூரியா தன் பழிவாங்குதலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து ரத்தகளறி ஆரம்பிக்கிறது. இருவருக்குமான காய் நகர்தல்தான் அடுத்தடுத்து வரும் காட்சிகள் எல்லாம். பிரதாபை கொல்லும் முதல் முயற்சியில் சூர்யா தோற்கிறான். சூர்யாவை கொல்ல தேடி அலையும் பிரதாப்பிடமிருந்து தப்பிக்க, தான் வெளியே இருந்தால் பிரச்சனை என்று சூர்யா சரண்டர் ஆகி ஜெயிலுக்கு போகிறான். அவரது மனைவி ப்ரியா மணியை தேர்தலில் நிற்க எதிர்கட்சிகள் தூண்டிவிட, ஜெயிலில் இருந்த படியே சூர்யா காய் நகர்துதல்களை செய்கிறான். சூர்யா தன் பழிவாங்கலை முடித்தானா? இல்லையா? என்பதுதான் மீதி கதை.
எனக்கென்னவோ.. முதல் பாகத்தில் பார்த்ததைவிட இதில் வன்முறை குறைவு என்றேதான் சொல்வேன். ஏன் என்றால் இதில் நடக்கும் அத்துனை விஷயங்களிலும் துப்பாக்கி வந்துவிட்டதால் டப்..டுப் என சடுதியில் முடிவடைந்துவிடுகிறது.
சூர்யாவிற்கு பிரதாப்பின் மேல் பழி உணர்ச்சி மேலோங்க கொடுக்கப்படும் காரணங்கள் நச். பொறுமையாக இருந்ததவன் பிரதாப்பின் ஆட்கள் டிவி பாம் வைத்து குடும்பத்தையே நாசம் செய்ததும் வேறு வழியேயில்லாமல் பிரதாப்பை பழிவாங்கும் முடிவுக்கு வருவது, சூர்யாவின் நடிப்பில், பாடி லேங்குவெஜில் நிறைய முன்னேற்றங்கள் . முக்கியமாய் பிரதாப்பும், சூரியாவும் ஜெயிலில் பேசிக் கொள்ளும் காட்சி. நிறைய காட்சிகளில் சூர்யா தன் சிக்ஸ் பேக்குடன் அலைகிறார். அந்த சண்டைக்காட்சி அவருக்காகவே அமைக்கப்பட்டிருந்து போல இருக்கிறது. ப்ரியா மணி இவ்வளவு களேபரத்திலும் இறுக கட்டிக் கொண்டு முத்தமிடலாமா என்று தோன்றுமளவுக்கு இருப்பது கொஞ்சம் இடிக்கிறது.
ஒளிப்பதிவு, எடிட்டிங் ராம் கோபால் வர்மா போன்ற எல்லா விஷயங்களை பற்றியும் முன்னமே முதல்பாகத்தில் எழுதிவிட்டதால் புதிதாய் பாராட்டி எழுத பெரிதாக ஏதுமில்லை. ஆக்ஷன் காட்சிகளின் 96 ப்ரேம்களை தவிர. என்ன தான் சூர்யா, மற்றும் மற்ற நடிகர்களின் க்ளோசப்புகளில் மட்டும் தமிழ் பேசி எடுத்திருந்தாலும், இது ஒரு டப்பிங் படம் என்று காட்சிக்கு காட்சி வரும் கேரக்டர்களின் பின்னணி சொல்லிக் கொண்டேயிருக்கிறது. எனக்கென்னவோ.. ஒரு மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை இழுத்து சொன்னதாகவே பட்டது.
ரத்த சரித்திரம்-1 விமர்சனம் படிக்க..
ரத்த சரித்திரம்- வன்மத்தின் கொண்டாட்டம்
கேபிள் சங்கர்
Comments
நேர்ல தல கிட்ட எதுவும் விவாதிக்காதீங்க.... அப்படியே உங்கள மந்திரிச்சி விட்டுவாரு.... கடைசில நீங்களும் ஒரு வன்முறையாளர் ஆயிடுவீங்க... தலயோட கன்வின்சிங் பவர் அப்பிடி :))))
ரத்த சரித்திரம் -வன்முறையை ரசித்து மகிழும் ஒரு சமூகம்
எதுவா இருந்தாலும் சரி.. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...
வன்முறை இனிப்பானது என சப் டைட்டில் இவர்களும் ஒன்றா..
இந்த குப்பை படங்களை விட ஆயிரம் மடங்கு வன்முறையை அவர்கள் காட்டினாலும், நமக்கு ஏற்படும் உணர்வு வேறு..
ஒரு கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான போராளியை ஆராதித்தாலும் ஏற்கலாம்..
ஆனால் அப்பாவிகளை கொன்று குவித்த சமூக விரோதிகளை ஆராதிப்பது நம் ரசனை குறைபாடு..
ஒரு நாளைக்கி ஐந்து பேருக்கு கொல்ல மாட்டோமே... ஏன் இதை மீறினாய் என ஆத்திரப்படும் கதாபாத்திரத்தை காட்டி , அவர்களின் நியாய உணர்வை இயக்குனர் காட்டுவதாக சொல்லும் விமர்சகர்களை பார்த்தால் எங்கு போய் முட்டிக்கொள்வது என தெரியவில்லை ....
ithula eppo paarthalum camerava suthi suthi en thala suthuthu thalaiva..
Etho Parkkalam..
http://enathupayanangal.blogspot.com
//சூர்யா சரண்டர் ஆகி ஜெயிலுக்கு போகிறான்//
//சூர்யா காய் நகர்துதல்களை செய்கிறான்//
//சூர்யா தன் பழிவாங்கலை முடித்தானா?//
அவன் , இவன் என ஏகவசனத்தில் இருக்கிறதே, சரியா ?
சில சமயம் பல விஷயத்தையும் கொண்டாட தெரிய வேணும்..:))
@சிவகாசி மாப்பிள்ளை
:)))
@வெங்கட் சரண்
அஹா..
@ஆர்.கே.நண்பன்
ம்
@ஜெயராம் பிரகாஷ்
ம் வந்திட்டா போச்சு
@திருமலை கந்தசாமி
பச்..