Thottal Thodarum

Oct 15, 2012

கொத்து பரோட்டா 15/10/12

நான் தான் மலாலா என்று  மொத்த பாகிஸ்தானில் உள்ள பெண்கள் தலிபானுக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கிறார்கள். யார் இந்த மலாலா? பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் என்ற மாநிலத்தில் உள்ள மிங்கோரா எனும் இடத்த்தில் ஒன்பதாவது படிக்கும் மாணவி. 2009ல் தலிபானால் பெண்கள் படிக்கக் கூடாது என்று தடை விதித்த காலத்தில் தடை விதித்த தலிபான்களை ஆட்சியை எதிர்த்து பிபிசிக்காக உருது மொழியில் ப்ளாகில் பெண்களின் கல்விக்காக எழுதியிருக்கிறாள்.அந்த கட்டுரைக்காக பாகிஸ்தான் அரசு, முதல் National Youth Peace Prize கொடுத்து கவுரவித்து இருக்கிறது.  அவளை எழுதக்கூடாது என்று அவளுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் தலிபான்கள் மிரட்டல் விடுத்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்த்தில் பாகிஸ்தான் அரசாங்கம் அந்த மாநிலத்தில் தலிபான்கள் மீது அட்டாக் செய்து அவர்களை ஒழித்துவிட்டதாக பிரகடனப்படுத்த, மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த மலாலாவின் பள்ளி வேனை ஒருவன் வழிமறித்து, ‘யார் இங்கே மலாலா? சொல்லாவிட்டால் எல்லாரையும் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டி, மலாலாவை கண்டுபிடித்து அவளது தலையிலும், கழுத்திலும் சுடப்பட்டாள். அவளுடன் மேலும் இரண்டு பெண்கள் குண்டடிப்பட்டு காயத்துடன் தப்பியிருக்கிறார்கள். இது நடந்தது கடந்த அக்டோபர் மாதம் 12ஆம் தேதி. மலாலாவின் சிகிச்சைக்காக ஆகும் செலவை அரசாங்கமே ஏற்று அவளை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மலாலாவுக்கும், அவளது தந்தைக்கும் ஃபத்வா விதித்திருகிறது தலிபான். அவள் உயிர் பெற்று வந்தால் மீண்டும் அவளை கொல்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள் தலிபான்கள். இந்த வெறி பிடித்த மதவாதிகளை தனியொரு பெண்ணாய் எதிர்த்தது இப்போது ஒரு பெரிய வேள்வியாய் மாறி நாட்டின் உள்ள அத்துனை பெண்களும் நான் தான் மலாலா வா.. வீரத்தோடு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். யாரையும், எப்போதும், எந்நேரமும் மதத்தின் பெயரால் அடக்கி வைக்க முடியாது என்பது மீண்டும் நிருபணமாக்கியிருக்கிறாள் இந்த பதினைந்து வயது மலாலா. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


என் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகரை கதை மற்றும் பட்ஜெட் விவாதத்தை முன்னிட்டு  சந்திப்பதற்காக இரண்டாவது முறையாக சிங்கப்பூர் சென்றிருந்தேன். ஒரு வாரம் போனதே தெரியாத அளவிற்கு அவருடன் பிசியாக இருந்தேன். மிகச் சாதாரண நிலையிலிருந்து இந்த உயர் நிலைக்கு வந்திருப்பதால்  தயாரிப்பாளர் என்கிற பந்தா இல்லாத டவுன் டூ எர்த் மனிதர். 
@@@@@@@@@@@@@@@@@@@@
இரண்டு வருட இடைவெளியில் சென்ற முறைக்கு இந்த முறை விலைவாசியெல்லாம் பயங்கரமாய் ஏறிவிட்டிருந்தது. பஸ், மின்சாரம், தண்ணீர் வீட்டு வாடகை என்று எல்லாம் ஏறிவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். கார்களுக்கான வரிவிகிதங்கள் அதிகமாக்கியிருந்தாலும் பெருகித்தானிருக்கிறது. இம்முறை நிறைய பைக்குகளைப் பார்த்தேன். எல்லோரும் அசுரவேகத்தில் பறக்கிறார்கள்.போக்குவரத்து விதிகளை மதித்து ஓட்டுகிறார்கள். அதனால் தான் இந்த வேகம் சாத்தியமாகிறது. லிட்டில் இண்டியாவில் மட்டும் சென்னையை விட படு மோசமாய் ஓடுகிற பஸ்சுக்கிடையே க்ராஸ் செய்கிறார்கள். மொத்த சிங்கப்பூரில் ஹாரன் சத்தம் கேட்குமிடம் லிட்டில் இண்டியா மட்டுமே. மொத்த ஏரியாவிலும், நடு ரோட்டில் ரோட் ரிப்பேர் செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட தும்பு தூசியில்லாமல், ட்ராபிக் ப்ரச்சனையில்லாமல். பெரும்பாலான ரோடுகள் ஒன்வே ஆகிவிட்டது. ரோட்டில் பார்க்கிங், எச்சை துப்புகிறவர்கள், குப்பை போடுகிறவர்களை எல்லாம் பிடித்து ஃபைன் போடுவதற்கென்று ஆன்சலரி போலீஸ் என்று போலீஸுக்கு சப்லீஸ் விட்டிருக்கிறார்கள். ஆகக்குறைய போலீஸாய் வலம் வருகிறார்கள். சிகரெட் பாக்கெட்டை லூஸில் விற்பது சட்டப்படி குற்றம். மீறி விற்றால் ஆயிரம் டாலர் ஃபைன் என்ற சட்டமிருந்தாலும், போலீஸ் ஸ்டேஷனில் வேலை செய்யும் தமிழ் போலீஸ்காரர்கள் லூஸில் வாங்கிக் கொண்டு போவதால் நிறைய இடங்களில் சட்டம் மீறப்படுகிறது. நடு ராத்திரியில் லோரியில் முன் கேபினில் உட்கார்ந்து கோனியாக் அடித்துக் கொண்டு,  மிதமான வேகத்தில் மொத்த சிங்கப்பூரை சேவியர், ஜோசப்புடன் சுற்றியது புது அனுபவம். “அண்ணே தண்ணியடிச்சுட்டு வண்டி ஓட்டினா ப்ரச்சனையில்லை” “மாட்டினா ஃபைன் போட்டுருவான் தான். நானும் பதினைஞ்சு வருஷமா மாட்டலை. இந்த த்ரில் கூட இல்லைன்னா வாழறதுல சுவாரஸ்யமிருக்காது நண்பா” என்றார். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
கோவி.கண்ணன், குழலி, பிரியமுடன் பிரபு, இவர்களுடன் இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் பார்த்தேன். எல்லோருக்கும் படம் பிடித்திருந்தது எனக்கு சந்தோஷமாயிருந்தது. நம்மூரைப் போலவே டெம்பனீசில் உள்ள ஜி.வி மல்ட்டிப்ளெக்ஸில், ஒன்பது டாலருக்கு படம் காட்டினார்கள் சப்டைட்டிலுடன். டிஜிட்டல் ப்ரொஜக்‌ஷனில் ட்ரைலருக்கு கூட சப்டைட்டிலுடன் படம் போடுகிறார்கள். ஒரெ ஒரு சந்தோஷம், பாப்கார்ன் விற்று கொள்ளையடிக்க இடைவேளை படத்திலிருந்தாலும், இவர்கள் விடாதது. 2கே ப்ரொஜக்‌ஷந்தான் என்றாலும் நன்றாகவே இருந்தது. முதல் ரோவில் உட்கார்ந்து ஸ்ரீதேவியை அம்பூட்டு கிட்ட பார்க்க நன்றாக இருந்தாலும் ப்ரியாஆனந்தை பார்ககையில் முகம் குப்பென வேர்க்கத்தான் செய்கிறது. ரெக்ஸில் தாண்டவம் தனியாய் ஒன்பது பேருடன் ஆடிக் கொண்டிருந்தது. பத்து டாலருக்கு மூன்று படங்கள் டிவிடியில் கிடைக்கிறது. சில படங்கள் தமிழ் நாட்டில் கூட பார்த்திருக்க முடியாது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
நேற்று மாலை அட்டைக்கத்தி, பிட்ஸா தயாரிப்பாளர் விஜயோடு “மன்னிப்பாயா” என்ற குறும்பட திரையிடலுக்கு போயிருந்தேன். அரை மணி நேர குறும்படம். கணவன் மனைவிக்கிடையே விழுந்த விரிசலைப் பற்றிய படம். நல்ல மேக்கிங், எடிட்டிங், பின்னணி இசை என்று அசத்தியிருந்தார்கள். நாயகியாக நடித்த மேகியின் பர்பாமென்ஸ் நச். இசையமைத்த நந்தாவிற்கும், ஒளிப்பதிவு செய்த பாண்டியனுக்கும் வாழ்த்துக்கள். இயக்குனருக்கு இது முதல் குறும்படம்.  குறையாய் சொன்னால் இன்னும் அழுத்தமான காட்சிகள் அமைத்திருக்கலாம்.அருமையான டீம் வாழ்த்துக்கள்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
சென்ற முறை சண்டெக் சிட்டியில் நான் சாப்பிட்ட பரோட்டா கடை போல இம்முறை பல சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிட்டேன். இந்த சீனர்கள் 24 மணி நேரத்தில் 25 மணி நேரம் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார்கள் போல் எப்போது பார்த்தாலும் ரோட்டோர கடைகளில் நிறைய சைட் டிஷ்ஷுடன் கொஞ்சமே கொஞ்சம் அரிசி சாதத்தை வைத்துக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் யாருக்கு தொப்பையைக் காணோம். ரெண்டு வருடத்திற்கு முன் பார்த்த அத்துனை சாப்பாட்டுக்கடைகளும் இன்னமும் அப்படியே இருந்தது. அவர்களின் வியாபாரத்தை சொல்லியது. லிட்டில் இண்டியா முழுக்க குட்டிக் குட்டி சாப்பாட்டுக்கடைகள் தடுக்கி விழுந்தால் இருக்கிறது. உட்கார்ந்தவுடன் பொரித்த அப்பளம் கொடுத்து, பீருடன் சாப்பாடு பரிமாறும் அஞ்சப்பர், தரமான சுவையோடு, நல்ல பேக்கேஜ் என்று விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை அழைக்கும் சரவணபவன், ஏரியாவிற்கு ரெண்டு என கடை விரித்திருக்கும் கோமளாஸ், இவர்களும் நிறைய கிளைகள் வைத்திருக்கும் சகுந்தலாஸ், வட இந்தியர் ஒருவரால் நடத்தப்படும் சவுத் இண்டியன் பொன்னுசாமி, போலி தலப்பாக்கட்டி, முருகன் இட்லிக்கடை, டிப்பிக்கல் ஊர் சாப்பாடு போடும் காந்தி,  கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் உணவளிக்கும் முத்தையா, மற்றும் சிக்கன் மசாலாவுக்கு பெயர் பெற்ற ஆச்சி, பெரும்பாலான மக்களுக்கு மீட்டிங் பாயிண்டான  கொடைக்கடை, சந்தர் ரோடில் புதியதாய் ஆரம்பித்திருக்கும் ஆற்காடு நவாப்,  குட்டிக் குட்டி டீக்கடைகள், எ.கே.எஸ் ரெஸ்டாரென்ட் சப்பாத்தி கைமா,  சைனீஸ் கடைகளில் கூட கிடைக்கும் தோசை, மசாலா தோசைகள்,  ராத்திரி முழுக்க தேடியும் கிடைக்காத சிசர்கட் சிக்கன் கடை என்று சிங்கப்பூர் சாப்பாட்டுக்கடைகள் கோலாகலாமாய் நடந்து கொண்டிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
டிவியில் பாதி சேனல்கள் கட்டண சேனல்களாய்த்தான் இருக்கிறது. என் ரூமில் இருந்த டிவியில் மொத்த வந்த பதினைந்து சேனல்களில் ஏதோ ஒருதமிழ் சேனல் ஒழுங்கில்லாமல் வந்தது. மற்றதெல்லாம் மொக்கை சைனீஷ் சேனல்கள். குறிப்பாய் ஹிந்தி அல்லது உருதுவில் வரும் Ary  சேனல் மட்டுமே கொஞ்சம் புரிந்தது. சிங்கப்பூர் தமிழ் முரசை படிப்பதற்கு தினமும் நெட்டில் படித்தாலே பாதி விஷயங்கள் உருப்படியாய் இருக்கும் போல, சமீபத்தில் படித்த படு மொக்கையான தினசரி தமிழ் முரசு தான். நாள், கிழமை , நேரம் ஏதுமில்லாமல் அரசு வயதானவர்களுக்கு சிகிச்சை அளித்ததைப் பற்றியும், எங்கோ தமிழ் நாட்டில் நடந்த சம்பவங்களை டிட்பிட் போல மொட்டையாய் போட்டிருந்தார்கள். விளம்பரங்கள் முழுக்க ஓட்டல்கள் தான். பழைய பத்திரிக்கைகளின் வந்த செய்திகளின் கட் அண்ட் பேஸ்டாகவே ஒரு தினசரியை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. இது அங்கு பிரபல பத்திரிககையாம். 50 பைசை தண்டம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பார்த்ததில் பிடித்தது
இந்தப் பாடலை பார்த்ததிலிருந்து ஏதோ ஒன்று பிடித்துப் போய் இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டேன். ஸ்லீக்கான எடிட்டிங்கா? அல்லது திரையில் தெரியும் பர்னிதாவின் க்யூட்டான முகமா? என்று தெரியவில்லை. பட் இண்ட்ரஸ்டிங்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இருந்த ஒரு வாரமும் பதிவர்கள், நண்பர்கள் வாசகர்கள் என்று பல பேரை சந்தித்து கொண்டிருந்தேன். கோவியார், குழலி இருவரும் வாரத்தில் இரண்டு முறை சந்தித்தோம். வழக்கப்படி நண்பர் வெங்கட் ராஜ் வண்டியை எடுத்துக் கொண்டு ஏன் மலேசியா விசா வாங்காம வந்தீங்கன்னு கேட்டார். உடன் மலேசியாவில் உள்ள தமிழ் எழுதப்படிக்க தெரிந்த நண்பருடன் வந்திருந்தார். படு சுவாரஸ்யமான நண்பர். சென்ற முறை போலவே இம்முறை மலேசியா சென்று பெட்ரோ, சிகரெட் வாங்கி வந்திருந்தார். துபாய் ராஜா, வெற்றிக்கதிரவன், வெங்கட் ராஜ், அகியோருடன் கின்னஸவுட் சிக்கன் பாப்கார்னோடு நன்றாக ஒர் இரவு போனது. டிவிட்டரிலிருந்து மாலா வந்திருந்தார். அவருடய வீட்டிற்கு டின்னருக்கு அழைத்திருந்தார், காலை முழுவதும் தயாரிப்பாளர், மாலையிலிருந்து நண்பர்கள் சந்திப்பு என்று பிஸியானதால் போக முடியவில்லை. மெக்கானிக்கலான பிஸியிலும் நேரில் வந்து சந்தித்த வாசகர்கள் முரளி, ஆ.ராஜா,  ரூமிற்கு வந்து சந்தித்த வாசகர் சிவா. எந்த உதவி வேண்டுமானாலும், கேளுங்கள் என்று எஸ்.எம்.எஸ் செய்த லோகன். ஜலான் புக்கிட்டில் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் நண்பர், ட்ரக் ஓட்டிய நண்பர் ஜோசப். சிங்கப்பூரின் ஒர் நாள் இரவு வாழ்க்கையை சுற்றிக் காட்டிய சேவியர், ஆற்காடு நவாப் ஓனர்கள் பாலா, ராம். அண்ணே ரூம் சரியில்லைன்னா சொல்லுங்க நம்ம வீட்டுக்கு வந்திருங்க என்று பாசத்துடன் அழைத்த வாசிம், டன்லப் ரோடில்  உட்கார்ந்து மணிக்கணக்கில் பேசிய நண்பர் ஜெய்கிருஷ்ணா, ரெண்டு மூன்று நாள் போன் செய்து எப்படியாவது பார்த்துவிட்டே போவேன் என்று அன்போடு வந்து பார்த்துவிட்டு போன  அண்ணன் அத்திவெட்டி ஜோதிபாரதி, போனில் நான் சிங்கப்பூர் போலீஸ் பேசுறேன் என்று தமிழில் பேசி கலாய்ப்பதாய் நினைத்துக் கொண்டு தன்னையே கலாய்த்துக் கொண்ட மகேந்திரன், ஏர்போர்டுக்கு அந்தக் காலையில் வந்து  ரிசீவ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்று  என்னை அசுவாசப்படுத்தி, அருமையான தோசை, பஜ்ஜியுடன், உணவளித்து வரவேற்ற ஜோஸ் பெனடிக்டிக்கின் குடும்பத்திற்கும் என் நன்றிகள் பல.  
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
அலெக்ஸ் பாண்டியன் ட்ரைலரைப் பார்த்தால் ஒரு குட்டி தெலுங்கு படம் பார்த்த ஃபீலிங்
காலை வாக்கிங்கை டீக்கடை மெது, மசால் வடைகள் கெடுத்திவிடுமோ என்ற அச்சம் ஓவ்வொரு நாளும் கடைகளை தாண்டும் போது வரத்தான் செய்கிறது

 மதிய சாப்பாடு சிங்கை முத்தையாவில். பெருசா ஒண்ணுமில்லை.

இந்த சீனச்சிகளுக்கு வயதே தெரிவதில்லை. உத்துப் பார்த்தால் பத்து சுருக்கங்கள் தெரிகிறது.

டிபனுக்கு ஒரு முழு நண்டை சாப்பிடுகிறவனை இப்போதுதான் பார்க்கிறேன். சிஙக்ப்பூர் அவதானிப்பூ

கோமள விலாஸில் 2 இட்லி, ஒரு வடை, பில்டர் காப்பி 5.20 ஆகிறது. கணக்கு போடாமல் சாப்பிடணும்.:)

சீனன்களுக்கு மட்டும் ஏன் தொப்பையே இருக்கவில்லை என்று எனக்கு புரியவேயில்லை.

நம்மூர் ஆட்கள் மட்டும் எப்போது சத்தமாகவே பேசுகிறார்கள்.அதிலும் கெட்ட வார்த்தைகளை உச்சஸ்தாயில்... சிங்கப்பூர் அவதானிப்பூ

வரிசையாய் சைனீஸ் மாணவ மாணவிகளை சிராங்கூன் ரோட்டில் அழைத்து வந்து இந்திய உணவகங்களைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர்.local டூர்

எனக்கென்னவோ போன முறைக்கு இம்முறை சிங்கப்பூர் சுத்தம் குறைந்திருப்பது போல தெரிகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆடல்ட் கார்னர்
two men go to a brothel to get blow jobs guy #1 goes in first wen he comes out his friend asks him how it went he replies she put chocolate and sprincles on my dick n then she sucked it it was gr8 second man goes in but comes out cryin wen asked y he replies she put ice cream chocolate and sprinkles on my dick so his partner confused asked y he was cryin he then says it looked so good i sucked myself.

Post a Comment

13 comments:

ஹாலிவுட்ரசிகன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

/அலெக்ஸ் பாண்டியன் ட்ரைலரைப் பார்த்தால் ஒரு குட்டி தெலுங்கு படம் பார்த்த ஃபீலிங்//

திரும்பவும் அதி உச்சபட்ச ஹீரோயிசம்!!!. நம்ம ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரன் ட்ரெய்லர்ல கூட இதே மாதிரி ஆரம்பிச்சி, "ஷப்பப்பப்பா, நாங்களும் இந்த மாதிரி எல்லாம் உங்கள டயர்ட் ஆக்க விரும்பல"ன்னு டர்ன் பண்ணுவாரு. அந்த ஸ்டைல் ட்ரெய்லர் கட்டிங்கே இப்போ பழசாயிருச்சு. இங்க என்னடான்னா இன்னும் அந்த கல் தோன்றா மண் தோன்றா காலத்து அடிதடி, பாயுறது, கைய முறுக்குறதுன்னு இருக்கு. நாங்க ரொம்ப டயர்ட் ஆகிட்டோம் பாஸ்.

கோவி.கண்ணன் said...

தமிழ் முரசு குறித்த உங்களின் கருத்துக்கு கடும் கண்டனம். இங்கு மேல்தட்டும், நடுத்தட்டும் தமிழோ, தமிழ் முரசோ விரும்பிப்படிப்பதில்லை, தமிழ்முரசின் 80 விழுக்காட்டு வாசகர்கள் தமிழகத்தில் இருந்து பிழைக்க வந்து வேலை செய்பவர்கள் தான், அவர்களுக்கு இணைய இணைப்போ செய்தி சானல்களோ எதுவும் பார்க்க வாய்ப்பில்லாத போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்பு தமிழ் முரசு தான், எனவே அவர்கள் விரும்பிப்படிக்கும் தமிழகத்து செய்திகளை பிற இணையத் தளங்களில் இருந்து எடுத்து போட்டு ஒப்பேற்றுகிறார்கள், தமிழ்முரசின் ஒரு நாள் விற்பனை வெறும் 15000 படிகள் மட்டுமே, இதற்காக தனி நிருபர் போட்டு சுடச் சுட செய்திகளை திரட்டுவது அவர்களுக்கு கட்டிபடியாகத நிலையில் இணையத்தில் வருவதைத்தான் அவர்களால் எடுத்துப் போட முடியும், ஆன்லைனின் செய்து வாசிக்கும் உங்களுக்கு தமிழகத்து நாளிதழ்கள் அதே தகவலை மறுநாள் செய்தியாகத்தான் போடும் என்பது தாங்கள் அறிந்ததே.

எங்களைப் பொருத்த அளவில் தமிழ்முரசின் தரம் என்னவாக இருந்தாலும் தமிழர்கள் சார்பில் வெளியாகும் ஒரே தமிழ் செய்தித்தாள் என்கிற பெருமையுடன் அதை அப்படியே நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

லிட்டில் இந்தியாவில் ஞாயிற்றுக் கிழமைக் கூட்டத்தைப் பார்த்து முகம் சுளிபவர்கள் போன்று நீங்கள் தமிழ்முரசு பற்றி புரிந்து கொள்ளாமல் எழுதியுள்ளீர்கள்.

துபாய் ராஜா said...

அவதானிப்புகள் அனைத்தும் அருமை. இங்கு இருந்த நான்கு நாட்களும் போனில் பேசக்கூட நேரமில்லாத அளவுக்கு பரபரப்பாக இருந்தாலும் இவ்வளவு நுணுக்கமாக பல விஷயங்களை கவனித்து எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.


சிங்கப்பூரும்,நண்பர்களும் உங்களை எப்போதும் அன்போடு வரவேற்கிறோம்.

'பரிவை' சே.குமார் said...

சிக்கை பயணம் நிறையப் பேரை சந்திக்க வைத்திருக்கிறது...
கொத்து பரோட்டா அருமை.

தணல் said...

// i sucked myself.//

இந்த வித்தை எப்படிஜி சாத்தியம்?

Butter_cutter said...

நல்ல வேளை டின்னருக்கு போகாம தப்புச்சீங்க !

Xavier said...

நன்றி! மீண்டும் வருக!!

Xavier said...

நன்றி! மீண்டும் வருக!!

வெங்கி said...

சிங்கப்பூர் ல பண்ணகூடாத தப்ப பண்ணிட்டு வந்திருக்கீங்க. உங்க பக்கத்தை விரும்பி படிக்கும வாசகர்களில் நானும் ஒருவன்.. ஆனால் ஒரு நாட்டை பற்றியும், அதன் மக்கள் கலாசாரத்தை பற்றியும் இப்படி எழுத வேண்டாம்...
சங்கர் பண்ணிய தவறுகள்:
# லோரியில தண்ணி அடிச்சது.
# மலேசிய சிகரெட், சிங்கப்பூரில் கூடாது..(Illegal ) மாட்டினால், ஒரு குச்சிக்கு 200 டாலர் அபராதம், பிரம்படி, ஜெயில்..
# சைனீஸ் படங்கள், மிக காமெடியாய் இருக்கும், அவற்றின் தன்மை அந்த பாஷையை அறிந்திருந்தால் தான் புரியும்.. சும்மா மொக்கையாய் கமென்ட் எழுத கூடாது.
# லிட்டில் இந்தியாவில் வண்டிகள் ஒழுங்காக தான் ஓடுகின்றன.. நம் இந்திய மக்கள் சாலை விதிகளை மதிப்பதில்லை..அதற்க்கு சிங்கப்பூரின் ஒழுங்கை குறை சொல்ல வேண்டாம்
# லூசில் சிகரெட் விற்பது நம்ம ஊர் இந்தியர்கள் தான்.. (PR களாய் இருப்பார்கள், அல்லது வேலை செய்பவர்களை இருப்பார்கள்) உள்ளூர் மக்கள் இந்த சட்ட புறம்பான வேலை செய்வது இல்லை.
---------

Unknown said...

hats off to Malala

Unknown said...

hats off toMalala

Shajan said...

http://www.xshajan.blogspot.in/2012/10/blog-post_16.html