Thottal Thodarum

Oct 18, 2012

Bhoot Returns

A Ramgopal Varma Film னு ஒரு விளம்பரம் வந்தா ஒரு காலத்தில எப்படா படம் வரும்னு ஒரு பரபரப்பு நமக்குள்ள தொத்திக்கும். ஆனா இப்பல்லாம் அட அதுக்குள்ள இன்னொரு படம் எடுத்துட்டாரான்னு ஒரு அங்கலாய்ப்பு தான் தோணுது. அதிலேயும் மனுஷன் கேனான் 5டி கேமராவில படம் எடுக்க ஆரம்பிச்சவுடனே இண்டு இடுக்கில எல்லாம் ஷாட் வச்சி பார்த்து நம்மளை சையிண்டிஸ்ட் எலியாக்கி விட்டுறாரு..


ஏற்கனவே ஒரு வீட்டை வச்சி இந்தி சினிமாவையே கலக்கி எடுத்த பூத் படத்தோட அடுத்த பாகம்னு ஆரம்பிச்சாங்க. வழக்கம் போல ஒரு பூத் வீடு, அதில குடிவர ஒரு குடும்பம், கூடவே ஒரு வேலைக்காரன். நடுவில வர ஹீரோவோட தங்கச்சி.டெம்ப்ளேட்டா எல்லாரும் வந்தாச்சா? அடுத்து என்ன அந்தக் குடும்பத்தில இருக்கிற குட்டி தேவதை பொண்ணுக்கு பேய் தெரிய ஆரம்பிக்குது. பின்னாடி அந்த வீட்டையே கலக்கி எடுக்குது. என்ன ஆச்சுங்கிறத வேணுமின்னா போய் பாத்துக்கங்க.
படத்தில 3டி எஃபெக்ட் நல்லாயிருந்தாலும் பெரும்பாலும் ஃபோர்க்ரவுண்டில் ஏதையாவது வைத்து அது கண் முன்னே துருத்திக் கொண்டிருக்க, பின்னணியில் நடக்கும் காட்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் போகப் போக பழகிவிடுகிறது. எப்படி என்றால் ஃபோர் க்ரவுண்ட் அயிட்டத்தை பார்க்காமல் படம் பார்க்க பழகி விடுகிறோம்.  அப்ப 3டி எதுக்குன்னு கேட்டீங்கன்னா? நாம் அம்பேல். பாராட்டப்பட வேண்டிய விஷயங்கள் என்று சொன்னால் டெக்னிக்கலாய் ஒரு சில வித்யாசமான ஆங்கிள்களில் படமாக்கப்பட்ட விதம். அவ்வப்போது திகிலூட்டும் பின்னணியிசை ஆகியவை ஓகே.
 முதல் பாதி முழுவதும் ராத்திரியில் ஏதாவது ஒரு கேரக்டர் இருட்டில் ஒரே ஷாட்டில் ரூமிலிருந்து வெளியே வந்து ஹால், வராண்டா, மாடி, மாடி ரூம் என்று பாதம் பதியாமல் நடந்து பேயைத் தேடுவதை எத்தனை நேரம்தான் பார்ப்பது. ஒரு காட்சியில் மனிஷா தன் உருவத்தையே பார்த்து பயப்படுவார். அது அவருக்கும் மட்டுமல்ல படம் பார்க்கும் நமக்கும் பார்த்த மாத்திரத்திலேயே பயம் வரத்தான் செய்கிறது மனிஷாவை பார்கையில். க்ளைமாக்ஸின் போதாவது ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் உப்பு சப்பில்லாமல் முடித்தார்கள். அதிலும் பல பேய் படங்களில் பார்த்த காட்சிகளே க்ளிஷேவாக தொகுத்திருப்பதும் அயர்ச்சிக்கு ஒரு காரணம். என்ன தான் இருந்தாலும் ராம் கோபால் வர்மா என்றால் ஒருக்கா போய்ட்டுத்தான் வரலாமே என்ற நப்பாசையில் வரும் என்னைப் போன்ற ஆட்களையும் ஓட விடாமல் தடுக்கவாவது அடுத்த படத்தையாவது ஒழுங்காக கொடுக்கட்டும்.
கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

Seetha said...

Sir

Pls post Sharmi and diamond story. Its toooooooooooo late

ஜெட்லி... said...

இன்னும் வர்மா திருந்தலையா???

Anonymous said...

இங்கிலீஷ் விங்கிளிஷ் பற்றி ஒரு சந்தேகம்.
திருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி?
அதுக்கும் முன்னாடி காஃபி ஹாப்பில் திக்காமல் திணறாமல், லென்தியா ஆர்டர் பண்ணுவது எப்படி?

தமிழன்கள் ஏதாவது செய்தாலும் அதில் சின்ன குறை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டும் நீங்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?

தமிழன்களில் குறை கண்டு பிடிப்பு ஏதாவது பொறாமையா? அல்லது ஹிந்தி காரனை குறை கண்டு பிடிக்கமைக்கு காரணம் அடிமை புத்தியா?

இதெல்லாம் லாஜிக் மிஸ்டேக் இல்லையா? பெரிய ஓட்டையே தெரியுது? போங்க உருப்படியா ஏதாவது செய்யுங்க

Anonymous said...

எனது பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட மாட்டீர்கள் என்று தெரியும்

Cable சங்கர் said...

nabi
திக்கி திணறி வசனம் அவ்வளவு வசனம் பேசியவர் அடுத்த நாள் ஆங்கில பேப்பர் கேட்பதில் என்ன தவறு. அது மட்டுமில்லாமல் நம்மை அறியாமலேயே சில சமயம் சப்கான்ஷியஸில் சில விஷயங்களை ப்ளோவில் பேசிவிடுவோம். அதை அவர்கள் உணரவே மாட்டார்கள். அவர் அப்படி பேசியதை ப்ரெஞ்சு காரன் சுட்டிக் காட்டுவான். அதையும் பெரிதாய் கண்டு கொள்ளாது அந்த கேரக்டர்.

லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் படம் இருக்கவே இருக்காது. எப்போதுலாஜிக் மிஸ்டேக் கண்டுபிடிக்கப்படுகிறது என்றால்.. படம் மொக்கையாய் இருக்கும் பட்சத்தில்

Cable சங்கர் said...

நான் உருப்படியா ஏதாவது செய்வது இருக்கட்டும் உருப்படியில்லாத இந்த பதிவுக்கு வந்து படித்துவிட்டு பதில் போடுவதில் உங்கள் உருப்படியான நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?

SathyaPriyan said...

//
திருமண விழாவில் தப்பி தப்பி விழுங்கி விழுங்கி ஆங்கிலம் பேசும் ஸ்ரீதேவி , அடுத்த நாள் விமான பயணத்தில் நல்ல ஆங்கிலத்தில் தெளிவாக பேப்பர் கேட்பது எப்படி?
//
அடுத்த நாள் அவர் பேசுவது ஒரு வரி. முதல் நாள் பேசியது பல நிமிடங்கள் (குறைந்த பட்சம் 5 நிமிடங்கள்).

அடுத்த நாள் அவர் பேசுவது ஒருவரிடம். முதல் நாள் அவர் பேசியது பலர் முந்நிலையில்.

20 பேர் இருக்கும் பொது மேடையில் தமிழில் பேசவே நமக்கு உதடு ஒட்டிக் கொள்ளும் என்பது தான் உண்மை.

//
அதுக்கும் முன்னாடி காஃபி ஹாப்பில் திக்காமல் திணறாமல், லென்தியா ஆர்டர் பண்ணுவது எப்படி?
//

அது தான் காட்சியின் அழகே. கேபிள் சொல்லியது போல சப் கான்ஷியஸ் மைன்டில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் அவை. பொண்டாட்டியை திட்டிக் கொண்டே அல்லது த்ரிஷாவை ஜொள்ளிக் கொண்டே கார் ஓட்டும் பொழுது இடையில் யாரேனும் திடீரென்று வந்தால் கால்கள் தனிச்சையாக ப்ரேக் போடுவதில்லையா. அது போலத்தான் இதுவும்.

//
தமிழன்கள் ஏதாவது செய்தாலும் அதில் சின்ன குறை கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டும் நீங்கள் இதை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்?

தமிழன்களில் குறை கண்டு பிடிப்பு ஏதாவது பொறாமையா? அல்லது ஹிந்தி காரனை குறை கண்டு பிடிக்கமைக்கு காரணம் அடிமை புத்தியா?
//
ராம் கோபால் வர்மா என்றைக்கு தமிழன் ஆனார்? அவர் தமிழில் எவ்வளவு நேரடி படங்கள் எடுத்துள்ளார். சொன்னால் உங்களுக்கு புண்ணியமாய் போகும்.