Thottal Thodarum

Oct 23, 2012

Taken 2

Taken லீயாம் நீசனின் நடிப்பில் வெளியான படம். முதலில் அமெரிக்காவில் டிவிடி வெளியீடாக வந்தது. பின்பு திரையரங்குகளில் வெளியாகி இதெல்லாம் ஒரு படமா? என்று மீடியாவால் கிண்டலடிக்கப்பட்டிருந்தாலும், கலெக்‌ஷனில் சூப்பர் ஹிட். அந்த முதல் பாகத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என்று ஆளாளுக்கு தம் தம் பங்குக்கு சுட்டு உபயோகப்படுத்திக் கொள்ள, தமிழில் ஆண்மைதவறேலில் க்ளைமாக்ஸிலும், தலைவர் கருப்பு எம்.ஜிஆர் விஜயகாந்த் தன் கடைசி படமான விருதகிரியில் முழுவதுமாய் எடுத்து தள்ளி வெற்றி வாகை சூடியதற்கான காரணப் படம் இந்த டேக்கன்.


இப்படி பல பேரின் வெற்றிக்கு வித்திட்ட படத்தை அதே குழுவினரை வைத்து இரண்டாம் பாகம் எடுத்திருக்கிறார். இம்முறை சென்ற பாகத்தில் தன் மகளை கடத்தி கில்மா ட்ரேடுக்கு விற்க இருந்த கும்பலை ஊர் பேர் தெரியமால் போன் மூலமே க்ளூ கண்டுபிடித்து, தூள் கிளப்பி எல்லோரையும் கொன்று விட, மெயின் வில்லனின் பெற்றோர் தன் பிள்ளையின் கொலைக்கு பழி வாங்க, லீம் நீசனையும், அவரின் முன்னாள் மனைவியையும், மகளையும் கடத்த முயல, தன் மகளை புத்திசாலித்தனமாய் காப்பாற்றிய லீம் தன் மனைவியுடன் வில்லனிடம் மாட்டிக் கொள்ள, தன் மகளின் உதவியுடன்,  மினியேச்சர் போன் மூலமாய் அவளை தொடர்பு கொண்டு எப்படி தன் மனைவி, மக்களை காப்பாற்றினார் என்பதே கதை.
முதல் பாகத்தைப் போலவே கதை ஆரம்பிக்கிறது. ஆரம்பித்த வேகத்தில் மகளுடனான பாசம், முன்னாள் மனைவியிடமான அன்பு, என்று இங்கிலீஷ்தனமான செண்டிமெண்ட் காட்சிகளைத் தாண்டி, முன்னாள் மனைவி, தன் மகளோடு லீமுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க, அவர் பாடிகார்டாய் வேலைப் பார்க்க போயிருக்கும் இஸ்தான்புல்லுக்கு வர,  பழிவாங்கத் துடிக்கும் குழு  மனைவியைக் கடத்தியதிலிருந்து வழக்கம் போல் படம் கன்னாபின்னாவென வேகமெடுக்கிறது. அதிலும் போனில் மேப்பை வைத்து தான் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் காட்சியில் கொஞ்சம் யோசித்தால் ஏதாவது லாஜிக் மிஸ்டேக் கிடைக்கும் என்று நினைத்தாலும் அதை செயல்படுத்த முடியாத அளவிற்கு பரபர திரைக்கதை. ஆங்காங்கே பளிச்சிடும் வசனங்கள்.
 லீயாம் நீசனின் நடிப்பு வழக்கம் போல் அருமை. போன பாகத்தை விட இந்த பாகத்தில் மகள் நல்ல வாளிப்பாக இருக்கிறார். ம்ஹும். வழக்கம் போல் எடிட்டிங், மற்றும் ஒளிப்பதிவு பற்றி ஸ்பெஷலாய், புதுசாய் பாராட்ட ஏதுமில்லை. முக்கியமாய் இஸ்தான்புல் மொட்டை மாடிகளில் ஓடும் காட்சிகளும், சண்டைக் காட்சிகளில் வரும் ஸ்லீக்கான எடிட்டிங்கும் வாவ்.  அளவிற்கு மீறிய லாஜிக் மீறல்களும், சினிமாட்டிக் லிபர்ட்டிகளும் எடுத்திருப்பதால் முதல் பாகத்தில் இருந்த இம்பாக்ட் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. முந்தைய பாகத்தில் தன் பெண்ணைக் கடத்திய கும்பலிடமிருந்து அவளின் இருப்பை வேறு ஒரு ஊரில் இருந்தபடி, குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்டுபிடிக்கும் கதையில் இருந்த நேர்மை, விறுவிறுப்பு, லாஜிக்குகள் எல்லாம் இந்த் பாகத்தில் மிக குறைவு. ஏனென்றால் தன் மகன் எப்பேர்பட்டவனாக இருந்தாலும் அவனின் இழப்புக்கு பழிவாங்க துணியும் அவனின் அப்பா எனும் போது கொஞ்சம் பஞ்ச் குறைவாகவே இருக்கிறது. முதல் பாகத்தை விட கரம் மசாலாவாக வெளிவந்திருக்கிறது இந்த ப்ரெஞ்சு மசாலா


Post a Comment

4 comments:

priyamudanprabu said...

Ok

rajamelaiyur said...

ok,பாத்துடுவோம்

குரங்குபெடல் said...



"விஜயகாந்த் தன் கடைசி படமான விருதகிரியில்"

கடைசி படமான



ஏன் இப்படி ?

Anonymous said...

http://hollywoodbala.com/taken-2-2012/