வவ்வால் பசங்க
அரசு, கம்பீரம் போன்ற படங்களை இயக்கிய சுரேஷின் இயக்கத்தில் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். பாவம் மனிதர் அந்த காலத்திலேர்ந்து வெளியே வரவேயில்லை போலிருக்கிறது.
வீட்டிற்கு ஒரு பிள்ளை அராத்தாக இருக்கும் என்று சொல்வார்கள் அல்லவா அது போல படத்தின் ஹீரொ. தறுதலை என்று அப்பாவால் கரித்துக் கொட்டப்படுபவர் எப்படி குடும்பத்து ஹீரோவாகிறார் என்பதை பல நூறு படங்களில் பார்த்து சலித்த திரைகக்தையில் சொல்லியிருக்கிறார்கள்.
நடன இயக்குனர் லலிதாமணியின் மகன் தான் ஹீரோ. வாத்தியார் பிள்ளை மக்கு என்பதைப் போல டான்ஸ் மாஸ்டர் பையனுக்கு டான்ஸ் வராது போல. டைட் ஜீன்ஸைப் போட்டு குந்த முடியாமல் குத்தாட்டம் ஆட முயற்சி செய்திருக்கிறார். சப்பையாய் ஒரு ஹீரோயின். அவருக்கு பதிலாய் போலீஸ் கான்ஸ்டபிளாய் வரும் பிகர் எவ்வளவோ தேவலாம். எப்பப்பார் அரைப் பக்கத்திற்கு வசனம் பேசியே கொல்கிறார் இயக்குனர் ராஜா. வழக்கம் போல் காதல், சரக்கடித்து ரோட்டில் கிடப்பது, குத்து பாட்டென்று ஒரு தமிழ் சினிமா ஹீரோ எதெல்லாம் செய்வாரோ அதையெல்லாம் செய்கிறார் ஹீரோ.
ஜெரோம்புஷ்பராஜின் இசையில் பழைய ஹீரோ பாட்டும், ராத்திரியில் பூத்திருக்கும் பாடலின் பிஜிஎம்மும் உபயோகப்பட்டிருக்கிறது. Y.N. முரளி ஒளிப்பதிவாளர். பழைய ஒளிப்பதிவாளர் கலியுகம், உத்தம புருஷன், சத்ரியன் படங்களில் எல்லாம் கலக்கியவர். ஒன்றும் பெரிதாய் சொல்வதற்கில்லை.
எழுதி இயக்கியுள்ளவர் சுரேஷ். இன்னும் பழைய சரத்குமார் காலத்திலிருந்து வெளிவரவேயில்லை என்பது இவரது திரைக்கதையில் நன்றாக தெரிகிறது. அடுத்தடுத்த காட்சிகளை சுலபமாய் சொல்லிவிட முடிகிறது. வவ்வால் பசங்க... முடியலை.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
Do you want to convey something?