Thottal Thodarum

Oct 1, 2012

கொத்து பரோட்டா -1/10/12

சமீபத்தில் இரண்டு விதமான கொள்ளைகள். ஒன்று வொயிட் காலர் கிரிமினல்கள். இரண்டு லைவான கிரிமினல்கள். ஒயிட்காலர் டி.சி.எஸ் கம்பெனியில் வேலை செய்யும் பெண் ஒருவர் சிட்டி பேங்கில் நெடுநாளாக ஆப்பரேட் செய்யப்படாத அக்கவுண்டுகளை கண்டுபிடித்து அந்த அக்கவுண்டுகளின் அட்ரஸ், புதிய டெபிட்கார்ட் ரிக்வெஸ்ட் எல்லாம் போட்டு, மொத்த பணத்தையும் அபேஸ் செய்து நண்பர்கள் மூலமாய் ரியல் எஸ்டேட் பிஸினெஸில் இன்வெஸ்ட் செய்திருக்கிறார். அவர் மாட்டியது எப்படி என்றால் புதிய அட்ரஸ் மாற்றத்தை செய்துவிட்டோம் என்று பழைய அட்ரஸுக்கு வந்த லெட்டரினால். விதி வலியது. அந்தப் பெண் கைதாகி பெயிலில் வந்தாகிவிட்டதாம். இப்போதுதான் கூட்டாளிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இரண்டாவது ஒரு ஏடிஎம் பண பட்டுவாடா செய்யும் வேனை துப்பாக்கி முனையில் பட்டப்பகலில் மடக்கி, பின்னாடி நீண்ட கழி போன்ற துப்பாக்கி வைத்திருப்பவரை சுட்டு, வண்டியோடு கொள்ளையடித்திருக்கிறார்கள். கொள்ளையானது சுமார் 51/2 கோடியாம். நண்பர் ஒருவரிடம் இதைச் சொன்ன போது “நல்லா போகட்டுங்க..நம்ம கிட்ட கிரெடிட் கார்டுல அநியாய வட்டிப் போட்டு ஆள் அனுப்பி மிரட்டி கொள்ளையடிச்சாங்க இல்ல. அவங்க பணம் இப்படித்தான் போகும். கடவுள் இருக்காரு?” என்றார் சீரியஸாக.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


என் ட்வீட்டிலிருந்து
எனக்கென்னவோ காதலி பெயர்களை பாஸ்வேர்டாக வைத்தவர்களின் அக்கவுண்டை ஈஸியாக உடைக்க முடியும் என்று தோன்றுகிறது.

எப்போதும் நினைவில் உள்ளது போன்ற செயல்களை செய்தவர்களை மறக்க முயற்சிப்பது வேஸ்ட்.

பக்கத்தில் காது வைத்து கேட்டாலும் புரியாதபடி பேசும் / கேட்கும் கலையை எப்படித்தான் இந்த காதலிப்பவர்கள் கற்றுக் கொள்கிறார்களோ?

என்னை பிரிந்ததற்கான காரணம் ஏதுமில்லை என்றால் சேர்வதற்கு ஏதாவது சொல்லிக் கொண்டு வராதே 

சென்னைக்காரர்கள் ஏசியை உபயோப்படுத்தாமல் இருந்தால் மற்ற ஊர்களுக்கு மின்சாரம் வழங்கமுடியும்னு சொல்றாங்களே, லோ வோல்டேஜுல ஒர்க் பண்ணாதானே?

வால்மார்ட் வந்தால் ரோட்டில் கீரை விக்கும் ஆயா மினி வால்ட் மார்ட் ஓனர் ஆவார். என்ன் ஓகே வா அதிஷா.

மனிதர்கள் மாறுவார்கள் நினைவுகள் மாறாது. # உட்டாலக்கடி

மேயர் மன்னிப்பு கேட்க ஆயிரம் விஷயமிருக்கு அத விட்டுட்டு அண்ணா வளைவை இடிக்க சொன்னதுகாக மன்னிப்பு கேக்குறாராம். அய்யோ..அய்யோ..

சினிமாவில் குத்துப் பாட்டிற்கு ஆடும் கவர்ச்சி நடிகைகளின் ஆட்டத்தை பார்க்கும் பெண்களின் மனநிலை என்ன? உண்மையச் சொல்லணும்.

குத்தினவன் நண்பனாயிருந்தா காட்டிக் கொடுக்கக்கூடாது - திரும்பக் குத்திரணும்.

இப்போது எல்லாம் துரோக ”ஆட்டங்களுக்கு” உடனடியாய் தண்டனை கிடைத்துவிடுகிறது.

பணம் போனா எப்ப வேணா சம்பாதிச்சிக்கலாம் என்பது தவறு. ஏன் என்றால் போன பணம் போனதுதான். திரும்ப வருவது புதுசு. அதை லிஸ்டுல சேர்க்ககூடாது

English vinglish நல்லாருக்குன்னு ரஜினி சொல்லிட்டாரம். இனி ஓடுன மாதிரிதான். 

இரண்டு பேர் படம் நல்லாருக்குன்னு சொன்னா ஓடாது.ஒருத்தரைப் பத்தி சொல்லிட்டேன் இன்னொருத்தர் நம்ம மொட்டை.அவருகண் கலங்கி ஆர்.ஆர் செய்தா ஓடாது

மொத ரெண்டு பேர் கூட பரவாயில்லை இன்னொரு கேங்க் கைதட்டி படத்தை பாராட்டினா படம் அம்பூட்டுத்தான். இதுவரை வெளங்கினதேயில்லை.

காலை 6-7 எல்லா எப்.எம் சேனல்களிலும் உம்மாச்சி பாட்டுத்தான் பாடுது. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் டிபால்டாய் அடுத்தடுத்து
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடை
வழக்கமாய் இந்தப் பதிவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். நல்ல உணவிற்காக தேடித் தேடிப் போய் சாப்பிடுகிறவர்களுக்காகவே சென்ற திங்கட்கிழமை அன்று ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கப்பட்டது இக்குழுமம். என்ன ஆச்சர்யம் என்றால் ஆரம்பித்த ஒரே வாரத்தில் 1273 மெம்பர்கள் சேர்ந்து குதூகலப்படுத்திவிட்டார்கள். உங்கள் ஆதரவுக்கு நன்றி. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
கேட்டால் கிடைக்கும்
கமர்ஷியல் மின் இணைப்பை வீட்டு உபயோக இணைப்பாக மாற்ற சரவணக்குமார் என்கிற நண்பரின் உறவினர்கள் மூன்று மாதமாய் நாயாய் அலைந்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட சரவணக்குமார்  ஒரே ஒரு வெள்ளைத்தாளை எடுத்து ஒரு மனு ஒன்றைக் கொடுத்து அதற்கு பதில் கேட்டிருக்கிறார். அடுத்த நாலு மணி நேரத்தில் கமர்ஷியல் இணைப்பு வீட்டு இணைப்பாக மாற்றப்பட்டுவிட்டது. எப்படி என்று யோசிக்கிறீர்களா? ஒரு வெள்ளை பேப்பரில் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி 21ன் கீழ் காலதாமதத்திற்கு காரணமும் விதி 21ன் உட்பிரிவுகளின்படி நுகர்வோருக்கான காலதாமத இழப்பீட்டு தொகை வழங்கும்படியும், காரணமான அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கும்படியும் மனு எழுதி மதியம் 1 மணியளவில் நேரில் கொடுத்திருக்கிறார்.  EB அலுவலகத்திலிருந்து உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து விட்டு வீட்டு இணைப்பாக மாற்றி விட்டோம் என்று  தொலைபேசியில் கூறினார்களாம். கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மூவாயிரம் ரூபாய்க்கு தன் குழந்தையை விற்றுவிட்டு அதில் செல்போன் வாங்கியிருக்கிறார் ஒரு தாய். இது தான் பத்திரிக்கை செய்தியின் தலைப்பு. ஆனால் ப்ரச்சனை என்னவென்றால் காதல் திருமணம் செய்து கர்பமாகி, கணவனுடன் சண்டை. பிரிந்து வாழ்ந்து பிரசவித்த பெண் குழந்தையை வளர்க்க கஷ்டம். எனவே குழந்தையை விற்றிருக்கிறாள் அந்தத் தாய். வாங்கிய காசில் செல் வாங்கியது உறுத்தினாலும், பின்னணியில் உள்ள இந்தச் சமுதாய நிலையை கொஞ்சம் யோசித்தால் தன் குழந்தையாவது எங்காவது நன்றாக வாழட்டும் என்ற எண்ணமாககூட இருக்கலாம் இல்லையா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
The Dummy  1984ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தக் குறும்படம் ஒரு ஹாரர் வகையைச் சேர்ந்தது. Hbo, Tmc போன்ற சேனல்களில் பத்து வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பப்பட்ட குறும்படம். இன்றைய சிஜி, டிஜிட்டல் காலத்தில் டெக்னாலஜியில் பின் தங்கியிருந்தாலும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மிஷ்கினின் கால் ஷாட்ஸின் இன்ஸ்பிரேஷன் இப்படத்திலிருந்து கூட வந்திருக்கலாம். அல்லது அவரது குருநாதர் கிட்டானோவுக்கு. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
கிஷோர்குமார், ராஜேஷ்கண்ணா என்றால் ஹிட் சாங் தான் என்பதை மறுக்க முடியாது. அதிலும் ஆர்.டி.பர்மன் இசை என்றால் கேட்கவே வேண்டாம். இதே ட்யூனை நதீம் ஷர்வன் சாஜன் படத்திற்கு எடுத்தாண்டிருப்பார்.  எவர் லாஸ்டிங் சாங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்

Boobs are proof that men can focus on two things at once.
கேபிள் சங்கர்

Post a Comment

16 comments:

Anonymous said...

nice post...

rajamelaiyur said...

//English vinglish நல்லாருக்குன்னு ரஜினி சொல்லிட்டாரம். இனி ஓடுன மாதிரிதான்.
//

வலிய வந்து கூப்பிட்டு போய் படத்த போட்டு காட்டுபவர்களிடம் இப்படி பொய் சொல்ல வேண்டியதுதான் ...

rajamelaiyur said...

இன்று

அகரத்தில் ராமாயணம் - தெரியுமா உங்களுக்கு ?

Unknown said...

பாஸு மாசம் பொறந்து பத்து மணி நேரம் ஆச்சு , தேதிய மாத்துங்க, கொத்து அருமை

சுரேகா said...

சாப்பாட்டுக்கடையோட வீச்சு பலமா இருக்கே..!!

வாழ்த்துக்கள் ஜி.! பின்னுங்க!!

saturn730 said...

வவ்வால்
அவர்கள் போலி அடையாள அட்டைகளை காண்பித்து பின் எங்களை வாங்கியதாக IBN சொல்கிறது..

http://ibnlive.in.com/news/2-held-for-rs-80-lakh-bank-fraud/296189-60-120.html

ஹிந்துவில், பழைய விலாசத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதால் தான் மாட்டிக்கொண்டனர் என்று உள்ளது.. விலாசம் மாற்றிய பிறகு, என் பழைய விலாசத்திற்கு கடிதம் அனுப்பினார்கள் என்று தெரியா வில்லை.. எதாவது மென்பொருள் கோளாறாக இருக்கலாம் :)

http://www.thehindu.com/news/cities/chennai/accomplices-of-bpo-employee-held-for-stealing-rs-795-lakh/article3946513.ece

Long live sw bugs :D... கறையால நன்மை இருக்கு :D

எல் கே said...

@வவ்வால்

http://archieve.bhageerathi.in/?p=1005

இது நடந்த ஒன்று. செய்தித் தாள்களில் விரிவாக எழுதி இருந்தனர்

வவ்வால் said...

எல்.கே,

நான் நடக்காத சம்பவம்னு சொல்லவில்லை, கார்டும்,பின் நம்பரும் ஒன்றாக தருவதில்லை,வாடிக்கையாளர் வங்கிக்கு போய் இன்னார் தான் என அடையாளம் செய்ய வேண்டும்.பின்னர் கை எழுத்துப்போட்டு கார்டு/பின் நம்பர் வாங்கிக்கொள்ள வேண்டும்.

அப்படி இருக்கும் போது எல்லாம் ரிமோட்டா கணினி, தபால் மூலம் வேலை முடிந்துவிட்டது என்பது நம்ப முடியலை.

வங்கி ஊழியரின் கை இதில் இருக்க வேண்டும்.

எஸ்பிஐ, ஐ.ஓ.பி யில் மாற்று கார்டு வேண்டும் எனக்கேட்டுப்பாருங்களேன் ,நடைமுறை தெரிய வரும்.

அல்லது தனியார் வங்கிகள் இப்படித்தான் செய்வது நடைமுறை என்றால் தவறான ஒன்று.

shortfilmindia.com said...

முட்டாள்னு திட்டினா மட்டும் கோவம் வருது. ஆனா எதையும் முழுசா படிக்காம தனக்குத்தான் தெரியும்னு எழுதக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியறது இல்லை. இதுல நீ வச்சிருக்கியா இல்லையான்னு கேள்வி வேற.. இந்த அரைகுறைங்க.....

குட்டிபிசாசு said...

கேபிள்,

//வாங்கிய காசில் செல் வாங்கியது உறுத்தினாலும், பின்னணியில் உள்ள இந்தச் சமுதாய நிலையை கொஞ்சம் யோசித்தால் தன் குழந்தையாவது எங்காவது நன்றாக வாழட்டும் என்ற எண்ணமாககூட இருக்கலாம் இல்லையா?//

நம்ம இந்தியாவில் கக்கூஸவிட செல்போன் கனெக்‌ஷன் அதிகமாம். சோத்துக்கு இல்லாட்டியும் செல்போன் வச்சி உயிர் வாழ்வாங்க.

//மிஷ்கினின் கால் ஷாட்ஸின் இன்ஸ்பிரேஷன் இப்படத்திலிருந்து கூட வந்திருக்கலாம். அல்லது அவரது குருநாதர் கிட்டானோவுக்கு.//

பழைய பி.யூ.சின்னப்பா நடித்த மனோன்மணி படத்தில் முதல் 10 நிமிட காட்சி கால் ஷாட்ஸ் தான். சினிமாவைப் பொருத்தவரை உக்திகள் பழையவை. தொழிற்நுட்பம் மட்டுமே புதியவை.

குட்டிபிசாசு said...

வவ்வால்,

கல்கத்தாவில் நான் எஸ்.பி.ஐ டெபிட் கார்ட் விண்ணப்பித்தபோது, பதிவுத்தபாலில் வந்த கார்ட் நான் இல்லாததால் என் நண்பனிடம் கொடுக்கப்பட்டது. PIN எண் கேட்டு வங்கி அலுவலரிடம் சென்றேன். ஒரு பெட்டியைக் கொடுத்த உன்னுடைய பெயர் போட்டு இருக்கும் சீட்டை எடுத்துக்கொள் என்றார்.

வங்கி சேவைகள் இடத்தைப் பொருத்து மாறுவதுண்டு. நினைத்தால் ஏமாற்றலாம்.

r.v.saravanan said...

மனு ஒன்றைக் கொடுத்து நாலு மணி நேரத்தில் கமர்ஷியல் இணைப்பு வீட்டு இணைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.

super

aravi said...

Hellow Shortflim, what’s wrong with you.Stop behaving like child?
You read the fucking news and reprint in your blog, what use?
Think wisely like vaval. You dont even want to listen others openion ah???

R. Jagannathan said...

It is true, Cable has mentioned a story which was on the media. He doesn't have to think deeply to comment on what he felt happened. 'Vowvaall' and his ilk may be good to read between the lines and think every news has a 'story' behind it. Nothing wrong in it. It may be the case and may come out in further enquiry by the police. Only thing is why should this issue be questioned in this blog by a reader? just to prove one is smarter than Cable Sankar? No need for such a comment. It can be straight and simple and friendly - not provoking.

A word to CS - Don't get provoked by comments to your blog. You help them to feel satisfied and they will be smiling at your anger.

-R. J.

shankar said...

Mr கேபிள் சங்கர் ,
வௌவால் அவர்களது கருத்து உங்களக்கு பிடிக்கவில்லை என்றால் அதை
கருத்து பதிலில் எடுத்து விடுங்கள் . அதை விட்டு , முன் பின் அறியா ஒருவரை
முட்டாள் , அரைகுறை என்று திட்டுவது நல்ல பண்பு அன்று.

kailash said...

@ Saturn730 : Usuall Banks will sending letter to old and new address when ever address chaneg happens to confirm that it is done by actual customer . If it is not made by customer he can immediately call after seeing the letter at his old address and alert the bank for fraud .