Thottal Thodarum

Oct 6, 2014

கொத்து பரோட்டா -06/10/14

GOVINDUDU ANDHARIVADE
நான் அடிக்கடி நண்பர்களிடம் சொல்வேன். நடுத்தர வயதை எட்டும் சூப்பர் ஸ்டார்களை சின்னகவுண்டர் கதையில் மீண்டும் வேறு ஒரு கெட்டப்பில் நடிக்க வைத்தால் எப்போது ஓடுமென்று. அக்கதையில் காதல்,பாசம், வீரம், நட்பு, துரோகம், தியாகம் எல்லாமே இருக்கும். அது போல தெலுங்கு பட உலகிற்கு இது குடும்ப சீசன் படம். சீதம்மா வகுட்லோவில் வெங்கடேஷ்,மகேஷ்பாபுவிற்கு அடித்த லக்கி ப்ரைஸ். அப்படியே நாகார்ஜுன் குடும்பத்தின் மனம் படம் மூலமாய் சூறாவளிக் காற்றாய் அடிக்க, இப்போது அதை அறுவடை செய்ய ராம் சரண் களம் இறங்கியிருக்கிறார். நாகேஸ்வரராவ் காலத்திலிருந்து, வெங்கடேஷ், நாகார்ஜுன், மகேஷ்பாபு என சூப்பர் ஸ்டார் முதல் ஸ்டார்டிங் ஸ்டார் வரை அடித்து துவைத்த பார்முலா கதை தான். கிராமத்தில் பெரிய குடும்பம், குடும்பத்தில் ஹெட் ஒரு வயசான தாத்தா. அவருடய பையனோ, அல்லது பெண்ணோ, காதல் திருமணம் செய்து ஊரை விட்டு, போய்விடுவார். அவர் வெளிநாட்டில் பெரிய ஆளாய் இருக்க, அவருக்கு மகளும், மகனும் இருப்பார்கள்.வெளிநாட்டில் ஹீரோ இண்ட்ரோ சாங் முடிந்ததும், ஒர் சுபயோக சுப தினத்தில் அப்பாவுக்கு ஊர் நியாபகம் வந்து உனக்கு ஒரு தாத்தா இருக்காரு, பாட்டி இருக்காங்கன்னு பீல் செய்து தன் ப்ளாஷ்பேக்கை சொல்லுவார். உங்களையும் தாத்தா குடும்பத்தையும் சேர்க்குறதுதான் என் கடமைன்னு இந்தியா வந்து தாத்தா கிட்ட பேரன்னு சொல்லாமல் ஏதாவது ஒரு காரணம் சொல்லி குடும்பத்தோட ஒட்டிக்கிட்டு, வீட்டுல இருக்கிற பெரிசுங்க, முக்கியமா பெரியவங்க, சின்னப் பசங்க எல்லார்கிட்டேயும் க்ளோச் ஆகி, அதே வீட்டுல முறை பொண்ணை லவ் பண்ணி மாட்டிப்பாங்க.. அப்போ, அந்த குடும்பத்துக்கு ஒர் எதிரி குடும்பம் அதே ஊர்ல இருக்கும். அவங்களை எதிர்த்துத்தான் ஹீரோவே தாத்தாவுடய குடும்பத்தில் ஒட்டியிருப்பாரு. அப்பா வர்ற நேரத்தில ப்ரச்சனை பெரிசாகி, வில்லன் ஏதாவது ஆக்‌ஷன் பண்ண, கடைசியில ஹீரோ பைட் பண்ணி குடும்பத்த ஒண்ணு சேர்த்துருவாரு. இதான் அந்தரிவாடுகளோட கதை. 

புதுசா ஹீரோ ராம் சரண். தாத்தா பிரகாஷ்ராஜ். குளுகுளு குல்பி காஜல் குத்து பாட்டு, ஸ்டெப்புலு பாட்டு, பளிச் பளிச் ஒளிப்பதிவு. அழுகாச்சி செண்டிமெண்ட். ராம் சரணின் ஓப்பனிங் பாட்டு டான்சும், ரக்பி புட்பால் பைட்டும் சுவாரஸ்யம். கிருஷ்ண வம்சியின் இயக்கத்தில் பழைய முராரி வாடையை மறைக்க முடியவில்லை. எல்லாத்தையும் போட்டு ஒரு கலகல்க்கு அடிச்சி பழைய கள்ளை பழைய மொந்தையிலேயே கொடுத்திருக்காங்க. படம் அங்க ஹிட்டாம். ம்ஹும். ஒலகம் முழுக்கவும் இப்படித்தான் இருப்பாங்க போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@


யான்
”என்னை வச்சிட்டே வேற பொண்ணை சைட் அடிக்கிறியா?” என்று துளசி கேட்பார். அதற்கு ஜீவா “டயட்ல இருக்கிறதுனால மெனு கார்டை பார்க்க கூடாதுன்னா எப்படிம்மா?” என்று பதில் சொல்வார். படத்தில் ரசித்த ஒன்றே ஒன்று. மிட் நைட் எக்ஸ்பிரஸை இப்படி கந்தர்கோளமாக்கியிருக்க வேண்டாம் ரவி. கே. சந்திரன்
@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Nice and gripping performance ‪#‎Haider‬

மெட்ராஸ் ஜானிக்கு கிடைத்த வரவேற்பு அன்றைய கால என் உயிர் தோழன் பைத்தியக்கார கிழவனுக்கு கிடைக்கவேயில்லை.

எவ்வளவுதான் விளக்கமாய் சொன்னாலும், அவரவர் தேவைக்கேற்ப புரிந்து கொள்கிறவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது.

பால், சர்க்கரை, எதுவும் சேர்க்காமல் வெறும் வர டீக்கும் அதே விலையென்பது என்ன நியாயம்?# ..படம் பார்க்கும் போது யோசிச்சது

Received Half Girlfriend from flipkart @chetan_bhagat

பழைய கள்ளை பழைய மொந்தையிலேயே கொடுத்திருக்காங்க..‪#‎GovinduduAndarivadele‬ Andarivaadele

ஏதேதோ சொல்லணும்னுதான் தோணுது.. ஆனா மிடிலைய்ய்ய்ய்ய்யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

உடல் எடையை கண்ட்ரோல் பண்றதுக்கு எழுதுன கட்டுரைக்கு கீழே ரெண்டு ஸ்வீட், பிரியாணி கடை விளம்பரம்‪#‎சத்தியசோதனை‬
@@@@@@@@@@@@@@@@@@@@
HAIDER
விசாரணை என்கிற பெயரில் கூட்டிக் கொண்டு போகப்படும் ஆண்கள் திரும்ப வருவதேயில்லை காஷ்மீரில். காஷ்மீர் தீவிரவாத தலைவன் ஒருவனுக்கு சிகிச்சை அளித்ததால் விசாரணைக்கு கூட்டிப் போகப்பட்ட டாக்டர். அவருடய மனைவி தபு. தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் அவர்களின் வீட்டையே பஜூக்கா வைத்து துவம்சம் செய்துவிட, அவர்களுடய மகன் ஹைதர் வெளியூரில் படிக்க போய் திரும்பி வருகிறான். அவனுக்கும் அவனுடய சிறு வயது தோழிக்குமான காதல், அதை வெறுக்கும் அவளது குடும்பம். அம்மா தபுவுக்கும், சித்தப்பா கே.கே மேனனுக்குமிடையே ஆன அடல்டரி உறவு. காணாமல் போன அப்பாவுக்கான தேடல், அப்பாவின் சிறை நண்பன் தற்போதைய தீவிரவாதக் குழு ஆல் இர்பான் கான். அண்ணன்  மனைவி மேல் இருக்கும் காமம் சேர்ந்த் காதலால் சித்தப்பா கே.கே.மேனன் செய்யும் துரோகம். ஹைதரின் காதலியின் மரணம். அதன் பின் நடக்கும் க்ளைமாக்ஸ். இது அத்தனையும் விஷால் பரத்வாஜின் ஷேக்ஸ்பியர் ட்ரையாலஜியின் கடைசி பாகமான ஹைதரில். காதலும், நட்பும், துரோகமும், காமமும், கொண்ட உணர்ச்சிமிகுந்த கதையை காஷ்மீரில் வாழும் இஸ்லாமிய குடும்ப பின்னணியையும்,1995 காலகட்டத்தில் மிலிட்டரிக்கும், தீவிரவாதிகளின் இடையே நடந்த விஷயத்தை பின்புலமாய் அமைத்தது அப்படி பொருந்துகிறது. ஹைதராய் ஷாகித். முதல் பாதியில் காதல், சந்தோஷம், அதிர்ச்சி என எல்லாவற்றிக்கும் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனில் இருப்பதாய் பட்டாலும், விஷயம் எல்லாம் தெரிந்து ஒர் ட்ரான்ஸ்பர்மேஷனுக்கு மனுஷன் வரும் காஷ்மீர் மக்களிடையே பேசும் காட்சியிலிருந்து க்ளைமேக்ஸ் வரை பட்டையை கிளப்புகிறார். அதே போல தபு. என்னா ஒரு பர்பாமென்ஸ். அவருக்கும், அவரது மச்சினனுக்குமான உறவு, மகனுக்கிடையே ஆனா பாசம் இரண்டுக்கும் நடுவில் தள்ளாடுமிடமாகட்டும், க்ளைமேக்சில் எடுக்கும் முடிவாகட்டும் வாவ். கே.கே. மேனன், இர்பான் என ஆளாளுக்கு நடித்து கொட்டுகிறார்கள். விஷால் பரத்வாஜின் பின்னனியிசையும், பங்கஜ் குமாரின் ஒளிப்பதிவு பெரும் பலம். இரண்டாம் பாதியில் படம் அங்கிங்கே அலைகிறது. அதையெல்லாம் மீறி ஒர் அழுத்தமான, உணர்ச்சிப்பூர்வமான ஸ்லோ பேஸில் பயணிக்கும் படமாய் இருந்தாலும் நிச்சயம் நம்மை கட்டிப் போடும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் போல மோடி க்ளீன் இந்தியா சேலஞ்ச் அதனால ஆளாளுக்கு கையில துடப்பத்தை எடுத்துட்டு பெருக்குற மாதிரி போஸ் கொடுத்து போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு ஒரு பக்கம் ஆளாளுக்கு மோடி எதிர்ப்பு பிரசாரம் செய்ய, இன்னொரு பக்கம் சீரியசாகவே சிறுவர்கள் முதல், இளைஞர்கள் வரை இச்செய்தி நன்றாக சென்று சேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆனா எல்லாத்துக்கு முன்னாடி ரோட்டுல குப்பைத் தொட்டிய ஒழுங்கா க்ளீன் பண்ண அரசும்,  குப்பையை தொட்டியில் போடலாம் என்று தொட்டியை தேடும் நிலையில் இல்லாமல் எங்கேயும் எப்போதும் அதற்கான தொட்டிகளை வைத்து ஏற்பாடு செய்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமென்று தோன்றுகிறது. சென்னையில் எத்தனை மெயின் ரோடுகளில் சிறு சிறு குப்பை தொட்டிகள் வைத்திருக்கிறார்கள்?
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Paddy was planning to get married and asked his doctor how he could tell if his bride is a virgin.The doctor said, “Well, you need three things from a do it yourself shop. A can of red paint, a can of blue paint… and a shovel.”Paddy asked, “And what do I do with these, doc?”The doctor replied, “Before the wedding night, you paint one of your testicles red and the other one blue. If she says, ‘That’s the strangest pair of balls I ever saw.’, you hit her with the shovel.”
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: