Thottal Thodarum

Oct 27, 2014

கொத்து பரோட்டா - 27/10/14

பற்பசை விளம்பரம் ஒன்றில் சாம்பல் கலந்திருப்பதாகவும், இன்னொரு பற்பசை விளம்பரத்தில் கிராம்பு இருப்பதாகவும், அது பற்களுக்கு நல்லது என்று கூறினார்கள். காலா காலமா சாம்பலை வச்சி தேச்சிட்டு இருந்தவனை அது தப்பு, அசிங்கம், ஆரோக்கியமில்லைன்னு சொல்லி மூளைய மழுங்கடிச்சிட்டு, இப்போ என்னடான்னா பேஸ்டுல உப்பு இருக்கா? சாம்பல் இருக்கான்னு புதுசா ஏதோ கண்டுபிடிச்சாப் போல விளம்பரப்படுத்துறாங்க.. ம்.. அன்னைக்கே என் தாத்தா சொன்னாரு.. பெல்பாட்டம் போடுறவனெல்லாம் பின்னாடி ஒரு நாள் ஜெய்சங்கர் டைட்ஸ் போட்டுத்தான் ஆகணும்னு.
@@@@@@@@@@@@@@@@@@@@@


கத்தி
வழக்கமான ஆள் மாறாட்டக்கதை. ஜாலியான திருடன் விஜய். சீரியஸ் சமூக ஆர்வலர் விஜய். செம்ம தூள் ஆட்டம் -ஆள் மாறாட்டம் - ஜாலி விஜய்- சமந்தா டைம் பாஸ் சவசவ காதல்- கொட்டாவி-  ப்ளாஷ்பேக்- லைட் க்ரிபிங்- விவசாயிகள் தற்கொலை- நிமிர்ந்து உட்காருதல்- இடைவேளை- சவ சவ- வில்லன் - நிலத்தடி நீர் - கார்பரேட் முதலாளிகள் - நல்ல விஜய் ஜெயில் தப்பித்தல்- சுறு சுறு ப்ரீ க்ளைமேக்ஸ் - சுவாரஸ்ய ப்ரெஸ்மீட் - சுபம். ஐ ”லைக்”கா இட்
@@@@@@@@@@@@@@@@@@@@
HAPPY NEW YEAR
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நமக்கு கலர் கலராய் ரீலும், பூவும் சுற்றுகிறார்கள். வழக்கம் போல பராகானின் மைண்ட்லெஸ் கமர்ஷியல். பழைய படங்களிலிருந்து காட்சிகளை சுவாரஸ்யமாய் கிண்டலும் கேலியுமாய் பயன்படுத்தும் அதே உத்தி. உதாரணமாய் ஷாலிமார் படம், தேசாப் மோகினியின் பெயர் தீபிகாவுக்கு, சக்தே இந்தியாவின் இந்தியா உணர்வெழுச்சி, பழைய ஹிந்தி பட அப்பா செண்டிமெண்ட் பழிவாங்கல். எந்த ஒரு காட்சியை பார்த்தாலும் அடுத்து வரும் பத்து காட்சிகளை அடுக்கி சொல்லிவிடக்கூடிய திரைக்கதை. ஷாருக்கானைவிட சுவாரஸ்ய கேரக்டராய் வரும் போமன் இரானி, அவரது மேஜிக்கல் ஜோல்னா பை. இதை வைத்து இன்னும் சுவாரஸ்யமாய் காட்சியமைத்திருக்கலாம். அவ்வப் போது நந்துவாக வரும் அபிஷேக் பச்சன்.அடிக்கும் கிச்சு கிச்சு நகைச்சுவையும், ஸ்லீக் பியூட்டி தீபிகாவின் கண்களுக்கு புலப்படாத க்ளிவேஜும், ரிச்சான புர்ஜ் துபாய் கட்டிடங்களும், லாஜிக் என்கிற மானஸ்தனை எங்கே தேடினாலும் கிடைக்காத் திரைக்கதையும், அதையும் மீறி ஷாருக்கும், தீபிகாவும் தொட்டுக் கொள்ளும் போதெல்லாம் சுற்றியிருக்கும் விஷயங்கள் பற்றிக் கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமே. மனுஷ்நந்தனின் ஒளிப்பதிவு ஏசியன் பெயிண்ட் தரம். ரொம்பவே கலர்புல். நேத்து படம் பார்த்த போது சிரிச்சோமே எதுக்கு என்று உட்கார்ந்து யோசிச்சாலும் திரும்ப ஞாபகத்துக்கே வராத படம். Happy New Year
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நியூஸ் 7 சேனலில் கத்தி பட விவகாரம் குறித்து குட்டி பேட்டியளிக்க அழைத்திருந்தார்கள். சேனல் விரைவில் அபீஷியலாய் ஆரம்பிக்கப்பட்விருக்கிறது. திரைப்பட எதிர்ப்பை இலவச விளம்பரமாய் பயன்படுத்திக் கொள்கிறார்களா? என்று கேட்டார். எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்/ இயக்குனரும் இம்மாதிரியான விளம்பரத்தை வரவேற்க மாட்டார்கள் என்றேன். நிறைய லேட்டஸ்ட் டெக்னாலஜிக்களை பயன்படுத்துகிறார்கள். சாதாரண பேட்டி நிகழ்ச்சிகளுக்கே நான்கைந்து கோணங்களில் கேமராக்கள் வைத்து ஷூட் செய்கிறார்கள். இருக்கிற இடத்தில் ஜிம்மி முதற்கொண்டு சிறப்பாய் பயன் படுத்துகிறார்கள். லைட் நீலமும், வெள்ளையும் கலந்த பேக்ரவுண்ட் விஷுவல்களும்,  இளம் பெண்களும் என ப்ளெஸண்டாய் இருக்கிறது நியூஸ்7. வாழ்த்துகள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
happy new year another boring routine masala
இட்லி கம்யூனிசத்துக்கு உதாரணமாகும்னு இட்லியே சொல்லியிருந்தாலும் நம்பியிருக்காது. யுர் இட்லி யுர் ரைட்ஸ் 

புதுசாய் புடவ கட்டின பொண்ணுங்களோட நடையும் பாடிலேங்குவேஜயும் பார்க்க செம்ம காமெடியா இருக்கு

தன்னால் முடிவு எடுக்க முடியாது என்று தெரிந்தவர்களிடம் ஏன் செய்யலைன்னு கேள்வி கேட்டால் கோபம்தான் வரும்.‪#‎அவதானிப்பூஊஊஊ‬

சோனியாவின் முதல் காதலைப் பற்றி நியூஸ் போடுகிறவர்கள். எல்லா தலைவர்களுக்கும் முதல் காதல் அனுபவம் இருக்கும்ங்கிறத யோசிக்கணும்.

பேஸ்புக்குல “லைக்கா” போட்டா வருமா?:)

ஒபாமாவே ஆனாலும் வீட்டுல இருக்கிறவங்களுக்கு அவருக்கு சாமர்தியம் பத்தாதுன்னுதான் நினைப்பு.::)

என்னா ஒரு பயம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சன்ப்ளவர் ஆயில் தான் நல்லதுன்னு சொல்லிட்டிருந்தாங்க. அப்புறம் ஆலிவ் ஆயில்தான் நல்லதுங்கிறாங்க.. செக்குல ஆட்டுன நல்லெண்ணெய் ஊத்தி சாப்பிட்டிருந்தவரைக்கும் இவ்வளவு ஹார்ட் அட்டாக் வந்திச்சான்னு தெரியல. சுத்தீகரிக்கபட்ட, ரீபைண்ட் செய்யப்பட்டன்னு சொல்லிச் சொல்லி சக்கையத்தான் நமக்கு விக்குறாங்கன்னு சந்தேகமா இருக்கு. சமீபத்தில ekadai.in நண்பர் ஜெயராஜ் பாண்டியன் நடத்தும் ஆன்லைன் மளிகை கடையிலேர்ந்து அடிமான்னு ஒரு செக்குல ஆட்டின நல்லெண்ணெய் வாங்கினேன். அஹா.. ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் தீபாவளிக்கு தலையில வச்சி ஊறும் போதும், இட்லிக்கு, மிளகாய்பொடிக்கு ஊத்திட்டு சாப்பிடும் போதும் கிடைக்கும் மணமும் சுவையும் என் பால்ய காலத்திற்கு கடத்தி சென்றது. ரொம்ப சின்ன வயசில எங்கள் ஏரியாவில் இருந்த எண்ணெய் கடையில் செக்கில் ஆட்டி அப்பவே தரும் நல்லெண்ணெய் வாங்க தூக்கு தூக்கிக் கொண்டு, பாட்டு பாடிக் கொண்டே போனது ஞாபகம் வருது. சுத்தம், சுகாதாரம், சுவை, மணம் எல்லாமே இந்த அடிமா செக்கில ஆட்டின நல்லெண்ணெயில் எனக்கு திரும்ப கிடைச்சிருக்கு. பாஸிட்டிவா நிறைய விஷயங்கள் ரீபைண்ட் நல்லெண்ணெயில் இருக்கிறதுன்னு சொல்ற விஷயங்களை விட செக்கில ஆட்டின நல்லெண்ணெயில் இருப்பதாக சொல்கிறார்கள். எனிவே.. ஐ லைக் செக்கில ஆட்டின நல்லெண்ணெய். 
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A man is in a hotel lobby. He wants to ask the clerk a question. As he turns to go to the front desk, he accidentally bumps into a woman beside him and as he does, his elbow goes into her breast. They are both startled and he says, "Ma'am, if your heart is as soft as your breast, I know you'll forgive me." She replies, "if your penis is as hard as your elbow, I'm in room 1221."
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Mahesh said...

/நேத்து படம் பார்த்த போது சிரிச்சோமே எதுக்கு என்று உட்கார்ந்து யோசிச்சாலும் திரும்ப ஞாபகத்துக்கே வராத படம்// agmark CableSankar :)

Unknown said...

kathi padathiruku - nallu variyil vimarshanam ... happy new year padathiruku oru paragraph ... enna sir.. hindi ku poga poringala!!!!!!!!!!!!!!

ம.தி.சுதா said...

அண்ணே பதிவில் அதிக இடத்தில் ஒளிச்சு நிற்கும் லைக்காவுக்கு ஒரு லைக்கு....

ஈழத்தில் வாழ்பவரில் அதை எதிர்ப்பவர்கள் ஒரு வீதம் கூட இருக்காது என்று நினைக்கிறேன்

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM