Thottal Thodarum

Apr 2, 2011

Sakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..

shakthi-shakti-new-hd-wallpapers-ntr-ileana-010 சக்தி..பிருந்தாவனம் படத்திற்கு பிறகு என்.டி.ஆரின் மிகப் பெரிய பட்ஜெட் படம். அதாவது தெலுங்கு மஹதீராதான் இது நாள் வரை தெலுங்கு படங்களிலேயே அதிக பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சக்தியின் பட்ஜெட் மஹதீராவை விட அதிகமில்லை என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த கோடை கால சீசனுக்கு வந்திருக்கிற முதல்  பெரிய பட்ஜெட் படம். படம் ஏற்படுத்திய ஹைப்பை தக்கவைத்துக் கொண்டதா என்று பார்த்தால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். 



sakthi
எகிப்தில் இருக்கும் சோனு சூட்டும், பூஜா பேடியும் இந்தியாவில் உள்ள அத்துனை சக்தி பீடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அப்போது முக்கிய சக்தி பீடத்தில் உள்ள வாளை எடுக்கும் போது சோனு சூட்டின் தலை கொய்யப்பட்டு திரும்ப அனுப்பப் படுகிறது. அதனால் பூஜா பேடி தன் கணவனின் கண்களை பிடுங்கி, தன் மூத்த மகனின் கண்களை எடுத்துவிட்டு, தன் கணவனின் கண்களை பொருத்துகிறாள். தன் கணவனின் ஆசையை தன் மகன் மூலமாய் நிறைவேற்றி, அதை தன் கணவனின் கண் மூலம் பார்க்க விரும்புகிறாள்.  27 வருடங்கள் காத்திருந்து சமயம் வரும் போது சக்தி பீடத்தின் சூலத்தை எடுக்க தன் ஆட்களை ஏவுகிறாள். ஹோம்மினிஸ்டரின் பெண்ணான இலியானாவிற்கு அம்மன் அருள் இருக்கிறது. அவளிடம் தான் முக்கிய ஸ்படிகக்கல்லும் இருக்க , அவளை கடத்த எகிப்து கும்பல் துரத்துகிறது. இன்னொரு பக்கம் ஜுனியர் என்.டி.ஆர் வேறு அவர் பங்குக்கு ச்க்தி பெற்றவராக இருக்க, இலியானாவும், என்.டி.ஆரும் சேர்ந்து எவ்வாறு தீய சக்திகளை அழிக்கிறார்கள் என்பதை முடிஞ்சா பாத்துக்கங்க.

ங்கொய்யால.. அம்புலிமாமா கதையைக் கூட சுவாரஸ்யமா சொன்னாத்தான் ஹிட்டாகும் இல்லாட்டி புட்டுகும்னு இந்த படம் ஒரு உதாரணம்.  அரத ப்ழசான திரைக்கதை, கொஞ்சம் கூட மெனக்கெடாமல், என்.டி.ஆரையும், இலியானா இடுப்பையும், சிஜியை மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதிலும் ஆளவந்தான், மம்மி வில்லன் கெட்டப்பில் இருக்கும் வில்லன்  என்ன எழவை செய்கிறான் என்று தெரியவில்லை.  கொஞ்சம் கூட லாஜிக் என்பதை பற்றிக் கவலைப்படாமல் படமெடுத்து உட்கார முடியாமல் துரத்துகிறார்கள். அதிலும் இண்டர்வெல் ப்ளாக்கில் திடீரென என்.டி.ஆர் என்.எஸ்.ஜி என்று சொல்லி அடிக்கும் கூத்துக்கள் எல்லாம் அடங்கொன்னியா முடியல சாமி.

படத்தின் ஒரே சேவிங் கிரெஸ் என்.டி.ஆரின் ஸ்கீர்ன் ப்ரெசென்ஸ்தான்.  ப்ளாஷ் பேக்கில் வரும் ருத்ரா கேரக்டர் படு காமெடியாய் இருக்கிறது. அவரது ஜோடியாய் வரும் நடிகையின் பேர் தெரியவில்லை. பிரசவ நேரத்தில் கூட முழு லிப்ஸ்டிக்கோடு பிரசவ வலியில் துடிக்கிறார். நம்ம ஊரு பிரபுதான் இலியானா அப்பா. ஜாக்கி ஷ்ராப் கூட படத்தில இருக்காரு. சேவ் செய்யாத தாடியொட உலகத்திலேயே பெரிய தாதாவா வர்றாரு. ப்ரம்மானந்தம், வேணு, என்று காமெடி ஆட்கள் இருந்தாலும் படமே மொத்தமாய் காமெடியாய் இருப்பதால் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். மணிசர்மாவின் இசை படு சொதப்பல். கிரண்ரெட்டியின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் படு அமெச்சூர்தனமான கிராபிக்ஸ் சிரிப்பை வரவழைக்கிறாது.
shakthi-shakti-new-hd-wallpapers-ntr-ileana-007 எழுதி இயக்கியவர் மெஹர் ரமேஷ். மஹதீராவின் பாதிப்பு படம் நெடுகிலும் தெரிகிறது. ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யமான கதை சொல்லல் இதில் இல்லை. அதைவிட அப்படத்தில் சொல்லப்பட்ட கதை குழப்பங்கள் இல்லாத ஈஸியான காதல் கதை. ஆனால் இதில் கேள்வி கேட்க ஆரம்பித்தால் படத்தின் ஸ்கிரிப்டை விட அதிகமாய் கேள்வி கேட்க வேண்டி வரும். விரைவில் இந்த படத்து ஓப்பனிங் காட்சி ரஜினி, விஜய், படத்திலோ, அல்லது சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசையில் உள்ள அரைகுறை ஹீரோக்கள் படங்களில்   விரைவில் வருவது நிச்சயம்.

சக்தி- எஸ்கேப்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

பிரபல பதிவர் said...

அய்யய்யோ... போலாம்னு நினச்சேன் தல... படம் புட்டுகிச்சா...

shortfilmindia.com said...

போயிராதீங்க>...

Anonymous said...

//கொஞ்சம் கூட லாஜிக் என்பதை பற்றிக் கவலைப்படாமல் படமெடுத்து உட்கார முடியாமல் துரத்துகிறார்கள்.//

இப்படி சொல்லி சொல்லியே இந்த மாதிரி படங்களை திரும்ப திரும்ப பாக்குறீங்களே..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

shortfilmindia.com said...

சிவகுமார்.. சுவரஸ்யமாக சொல்லப்பட்ட கதைகளில் லாஜிக் ஓட்டைகள் மனதில் படவே படாது. அதி ல்தான் வெற்றியிருக்கிறது. நீங்களே யோசித்து ப்பாருங்க.. சூப்பர் ஹிட் படங்களில் பல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் சுவாரஸ்யமாய் சொல்லப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு.. சகலகலா வல்லவன் : பாட்ஷா..

பொன்கார்த்திக் said...

சகா அருமை உங்க நேர்மை ரெம்ப பிடிச்சுருக்கு..

http://ponkarthiktamil.blogspot.com/2011/04/1.html

Suthershan said...

தெலுகுல எப்போதாவதுதான் நல்ல படங்கள் வரும்.... அதுவரை காத்திருக்க வேண்டியதுதான்.. அது சரி இலியானாவோட போஸ்டர் முழுதாய் போட்டிருக்கலாமே..

செங்கோவி said...

//இப்படி சொல்லி சொல்லியே இந்த மாதிரி படங்களை திரும்ப திரும்ப பாக்குறீங்களே..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.// சிவா, அண்ணன் அவருக்காகவா பார்க்காரு..நம்மைக் காப்பாத்தத் தானே அண்ணன் இருக்காரு..

Shanmugam Rajamanickam said...

ஐயம் வெரி சாரி எங்க ஊர்ல தியேட்டர்ல யாரும் தெலுங்கு படம் போட மாட்டங்குறாங்க.

R.Gopi said...

//இந்த படத்து ஓப்பனிங் காட்சி ரஜினி, விஜய், படத்திலோ//

**********

”விஸ்வரூபம்”னு ஒரு படம் எடுக்க போறாய்ங்களாம்... அதுல இந்த ஓப்பனிங் சீன் வைக்கலாமான்னு ப்ளான் ஓடிட்டு இருக்கு...

Cable சங்கர் said...

அதற்கான சான்ஸ் மைக்ரோ அளவு கூட கிடையாது. இதெல்லாம் இவர்களுக்குத்தான் எடுபடும்.:)

Nat Sriram said...

அந்த யானை போஸ்டர் அட்டகாசமா இருக்கு..பில்ட்-அப்புல தெலுங்கு சினிமாவை அடிச்சிக்க முடியாது.

Nat Sriram said...

ஆமா, பிருந்தாவனம் நல்ல கதை இல்ல? அத ஏன் தனுஷ், ஜெயம் ரவி கோஷ்டி இன்னும் வாங்கலை?

ROBOT said...

//ரஜினி, விஜய், படத்திலோ, அல்லது சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசையில் உள்ள அரைகுறை ஹீரோக்கள் படங்களில் விரைவில் வருவது நிச்சயம்.//

நீங்க விஜய்ன்னு தனியா போட வேண்டிய அவசியம் இல்ல அடுத்து சொன்ன லிஸ்ட்ல முதல் பேரே அவர் தான் :)

//படத்தின் ஒரே சேவிங் கிரெஸ் என்.டி.ஆரின் ஸ்கீர்ன் ப்ரெசென்ஸ்தான்.//

கரெக்ட் ஆனால் அதை மட்டுமே நம்பி மற்ற எல்லாவற்றையும் கோட்டை விட்டு இருக்கிறார்கள். அதனால் அது தான் படத்தின் மைனஸ். வழக்கமான என் டி ஆரின் நடன ஸ்டாண்டர்ட்ஸ்க்கு இந்த படத்தில் கொஞ்சம் கம்மி தான் ....

பாடல்கள் நல்லா தான இருக்கு தல ....
குறிப்பா பிரேம தேசம் யுவராணி பாட்டு .... ஒபெநிங் சாங் விடுங்க அது பல பாடல்களின் கலவை ...இருந்தாலும் பாடல்கள் வரும் போது தான் கொஞ்சம் உக்கார முடியுது படத்துல ..