எகிப்தில் இருக்கும் சோனு சூட்டும், பூஜா பேடியும் இந்தியாவில் உள்ள அத்துனை சக்தி பீடங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். அப்போது முக்கிய சக்தி பீடத்தில் உள்ள வாளை எடுக்கும் போது சோனு சூட்டின் தலை கொய்யப்பட்டு திரும்ப அனுப்பப் படுகிறது. அதனால் பூஜா பேடி தன் கணவனின் கண்களை பிடுங்கி, தன் மூத்த மகனின் கண்களை எடுத்துவிட்டு, தன் கணவனின் கண்களை பொருத்துகிறாள். தன் கணவனின் ஆசையை தன் மகன் மூலமாய் நிறைவேற்றி, அதை தன் கணவனின் கண் மூலம் பார்க்க விரும்புகிறாள். 27 வருடங்கள் காத்திருந்து சமயம் வரும் போது சக்தி பீடத்தின் சூலத்தை எடுக்க தன் ஆட்களை ஏவுகிறாள். ஹோம்மினிஸ்டரின் பெண்ணான இலியானாவிற்கு அம்மன் அருள் இருக்கிறது. அவளிடம் தான் முக்கிய ஸ்படிகக்கல்லும் இருக்க , அவளை கடத்த எகிப்து கும்பல் துரத்துகிறது. இன்னொரு பக்கம் ஜுனியர் என்.டி.ஆர் வேறு அவர் பங்குக்கு ச்க்தி பெற்றவராக இருக்க, இலியானாவும், என்.டி.ஆரும் சேர்ந்து எவ்வாறு தீய சக்திகளை அழிக்கிறார்கள் என்பதை முடிஞ்சா பாத்துக்கங்க.
ங்கொய்யால.. அம்புலிமாமா கதையைக் கூட சுவாரஸ்யமா சொன்னாத்தான் ஹிட்டாகும் இல்லாட்டி புட்டுகும்னு இந்த படம் ஒரு உதாரணம். அரத ப்ழசான திரைக்கதை, கொஞ்சம் கூட மெனக்கெடாமல், என்.டி.ஆரையும், இலியானா இடுப்பையும், சிஜியை மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதிலும் ஆளவந்தான், மம்மி வில்லன் கெட்டப்பில் இருக்கும் வில்லன் என்ன எழவை செய்கிறான் என்று தெரியவில்லை. கொஞ்சம் கூட லாஜிக் என்பதை பற்றிக் கவலைப்படாமல் படமெடுத்து உட்கார முடியாமல் துரத்துகிறார்கள். அதிலும் இண்டர்வெல் ப்ளாக்கில் திடீரென என்.டி.ஆர் என்.எஸ்.ஜி என்று சொல்லி அடிக்கும் கூத்துக்கள் எல்லாம் அடங்கொன்னியா முடியல சாமி.
படத்தின் ஒரே சேவிங் கிரெஸ் என்.டி.ஆரின் ஸ்கீர்ன் ப்ரெசென்ஸ்தான். ப்ளாஷ் பேக்கில் வரும் ருத்ரா கேரக்டர் படு காமெடியாய் இருக்கிறது. அவரது ஜோடியாய் வரும் நடிகையின் பேர் தெரியவில்லை. பிரசவ நேரத்தில் கூட முழு லிப்ஸ்டிக்கோடு பிரசவ வலியில் துடிக்கிறார். நம்ம ஊரு பிரபுதான் இலியானா அப்பா. ஜாக்கி ஷ்ராப் கூட படத்தில இருக்காரு. சேவ் செய்யாத தாடியொட உலகத்திலேயே பெரிய தாதாவா வர்றாரு. ப்ரம்மானந்தம், வேணு, என்று காமெடி ஆட்கள் இருந்தாலும் படமே மொத்தமாய் காமெடியாய் இருப்பதால் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும். மணிசர்மாவின் இசை படு சொதப்பல். கிரண்ரெட்டியின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் படு அமெச்சூர்தனமான கிராபிக்ஸ் சிரிப்பை வரவழைக்கிறாது.
சக்தி- எஸ்கேப்.
Comments
இப்படி சொல்லி சொல்லியே இந்த மாதிரி படங்களை திரும்ப திரும்ப பாக்குறீங்களே..உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.
http://ponkarthiktamil.blogspot.com/2011/04/1.html
**********
”விஸ்வரூபம்”னு ஒரு படம் எடுக்க போறாய்ங்களாம்... அதுல இந்த ஓப்பனிங் சீன் வைக்கலாமான்னு ப்ளான் ஓடிட்டு இருக்கு...
நீங்க விஜய்ன்னு தனியா போட வேண்டிய அவசியம் இல்ல அடுத்து சொன்ன லிஸ்ட்ல முதல் பேரே அவர் தான் :)
//படத்தின் ஒரே சேவிங் கிரெஸ் என்.டி.ஆரின் ஸ்கீர்ன் ப்ரெசென்ஸ்தான்.//
கரெக்ட் ஆனால் அதை மட்டுமே நம்பி மற்ற எல்லாவற்றையும் கோட்டை விட்டு இருக்கிறார்கள். அதனால் அது தான் படத்தின் மைனஸ். வழக்கமான என் டி ஆரின் நடன ஸ்டாண்டர்ட்ஸ்க்கு இந்த படத்தில் கொஞ்சம் கம்மி தான் ....
பாடல்கள் நல்லா தான இருக்கு தல ....
குறிப்பா பிரேம தேசம் யுவராணி பாட்டு .... ஒபெநிங் சாங் விடுங்க அது பல பாடல்களின் கலவை ...இருந்தாலும் பாடல்கள் வரும் போது தான் கொஞ்சம் உக்கார முடியுது படத்துல ..