Thottal Thodarum

Apr 6, 2011

நீங்க ரொம்ப நல்லவரு…

செல்போன் அடித்தது. வண்டியை ஸ்லோவாக்கிக் கொண்டே ஷார்ட்ஸின் பாக்கெட்டில் கைவிட்டு போனை எடுத்தபடி வண்டியை நிறுத்த, படுவேகமாய் குறுக்கே பாய்ந்தார் ஒரு இன்ஸ்பெக்டர். டிராபிக் போலீஸ் இல்லை.  அதிர்ந்து போய் பார்த்தேன்.
“என்னா..சார்..?”

“டிரைவிங்ல போன் பேசிட்டு போறீங்க?”

“சார்.. நான் வண்டியை நிறுத்திட்டுத்தான் போனை எடுத்தேன்.”

“அலோ.. சும்மா ஆர்க்யூ பண்ணாதீங்க.. வண்டிய ஓரங்கட்டுங்க..”

“நான் ஓரமாத்தான் இருக்கேன்.”

“சாவியை கொடுங்க..”

‘அதெல்லாம் கொடுக்க முடியாது சார்.. என்ன விஷயம் சொல்லுங்க”

“வண்டி ஆர்.சி. இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் எல்லாம் காட்டுங்க..”

“லைசென்ஸ் இருக்கு. ஆர்.சி. இன்ஷுரன்ஸ் இன்னும் வரலை புது வண்டி”

“அது இல்லாம வண்டி ஓட்டக்கூடாது இது ஒரு அபென்ஸ்”

“அப்ப நீங்க ஆர்.டி.ஓ மேலத்தான் கேஸ் போடணும். இன்ஷுரன்ஸ் நோட்டும், டெலிவரி சலானும் இருக்கு”

“ரொம்ப பேசுறீங்க.. இப்ப என்னாங்குறீங்க? குடிச்சிருக்கீங்களா?”

“சார் மணி ஏழுதான் ஆவுது.”

“ஊதுங்க..”

“ஒண்ணும் வாடையே வரலை?”

“முந்தாநேத்தி அடிச்சது இப்ப வாடை வந்திச்சின்னா அது சரக்கேயில்லை”

“சரி வந்து டிரைவிங்ல போன் பேசினதுக்கு ஆயிரம்ரூபா. ஃபைன் கட்டிட்டு போங்க..”

“அவ்வளவு காசெல்லாம் என்கிட்ட இல்ல..சார்.”

“அப்ப எவ்வளவுதான் வச்சிருக்கீங்க?”

“அது பத்தி உங்களுக்கென்ன சார். உங்களுக்கு ஃபைன் கட்டுற அளவுக்கு என்கிட்ட காசில்ல.. இப்ப என்ன பண்ணனும்?”

“அப்ப வண்டிய வச்சிட்டு போய் காசெடுத்துட்டு வாங்க..”

“ஓகே.. வண்டி சாவியை எடுத்துக்கங்க.. அப்படியே இருங்க உங்க நம்பரை நான் நோட் பண்ணிக்கிறேன். உங்க பேர் சினீவாசன் தானே. ஓகே.. எந்த ஏரியா ஸ்டேஷன்? நாளைக்கு கோர்ட்டுல வந்து நான் வண்டிக்கு பைன் கட்டிட்டு எடுத்துக்கறேன்.” 

“அலோ.. மிஸ்டர்.. என்ன நீங்க பாட்டுக்கு கிளம்பிட்டீங்க..வண்டிய யார் பாத்துக்கிறது?”

“சார்.. இதபாருங்க.. அது உங்க கவலை. நான் போன் பேசலை.. ஆனா நீங்க பேசினேன்னு சொல்றீங்க. சரி ஃபைன் கட்டலாம்னா காசில்ல.. அதுக்காக நீங்க வண்டிய வேண்டுமின்னா சீச் செய்யலாம்னு ரூல்ஸ் இருக்கலாம். ஆனா அதுக்காக என்னை அரஸ்ட் செய்ய முடியாது.ஸோ.. உங்க ரூல்ஸ் படி வண்டிய வச்சிக்கங்க.. என் அட்ரஸ் மொபைல் நம்பர் டீடெயில் எல்லாம் தர்றேன். இல்ல.. ஸ்டேஷன்ல வந்து கொடுத்துட்டு போறேன். நாளைக்கு காலையில வந்து நான் கோர்டுல வந்து பேசி ஃபைன் கட்டணுமின்னா கட்டுறேன் அவ்வளவுதானே?”

“இவ்வளவு மெனக்கெடறதுக்கு..இருக்கிறத கொடுத்துட்டு போகலாமில்ல..?”

“இல்ல சார்.. நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன். அத்தோட.. இருக்கிற காசுக்கு செலவு இருக்கு? நான் வர்றேன்”

“நீங்க ரொம்பவும் நல்லவரா இருக்கீங்க சார்.. கிளம்புங்க..” என்று சாவியை கொடுத்தார். நான் வண்டியை கிளப்பி அந்த தெரு முனை திரும்பும் வரை அவர் கண்கள் என் முதுகில் சுட்டது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

21 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

வடை எனக்கே!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

சூப்பர்....லஞ்சம வாங்குபவர்களுக்கு சரியான ஆப்பு...

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

வாழ்த்துக்கள் தலைவா!!!!!!!!!!!!!!!!!!! உங்கள் வலைப்பூவிருக்கு நானும் ரசிகன் உங்கள் சேவை தொடரட்டும் நாங்களும் ஒரு குறும்படம் எடுத்துள்ளோம் பார்த்துவிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லவும்...
இந்த இணைப்பை கிளிக் செய்தால் குறும்படம் பார்க்கலாம் http://vimeo.com/21978874
http://www.facebook.com/video/video.php?v=1859496978038&comments&notif_t=like

சக்தி கல்வி மையம் said...

நீங்க ரொம்பவும் நல்லவரா இருக்கீங்க சார் ....

Unknown said...

நாளைக்கு ஸ்டேஷன் போய் ஒரு வார்த்தை விசாரிச்சுட்டு வாங்கண்ணே...ரொம்ப கவலைல இருப்பாரு...என்ன கஷ்டமோ ரோட்ல பிச்ச எடுகறவருக்கு ஒரு ஐந்தோ பத்தோ போட்ருக்கலாம்...

Karthik said...

Congratulations for the new vehicle.

Anonymous said...

உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு..

Thirumurugan MPK said...

Sir, Lets create moment from our bloggers, i am ready to do my best part in this.

Join Anna Hazare in fast unto death to demand anti-corruption law

http://indiaagainstcorruption.org/citycontacts.php
http://www.facebook.com/IndiACor

பிரபல பதிவர் said...

என்ன வண்டி வாங்கினீங்க....

Lali said...

அப்படி போடுங்க..!
எனக்கு கூடுதலா இன்னும் ரெண்டு கைகள் வேணும், கைகுலுக்கி வாழ்த்துக்கள் சொல்லத்தான் :)

http://karadipommai.blogspot.com/

Muthukumara Rajan said...

தலைவா

எது நேத்து ராத்த்ரி வந்த கனவுத்னே
உண்மையை சொல்லுங்க

Cable சங்கர் said...

பல பேருக்கு இது மாதிரி செய்ய்றது கனவா இருக்கிறதுனால்தான் நிஜத்துல செய்யற்வனை கனவு காண்றானுதான் சொல்வாங்க..

Unknown said...

நீங்க ரொம்ப நல்லவருதான் ஒத்துகுறேன்.....

R. Jagannathan said...

தூங்கி விழித்துக் கொண்டதை எழுதவில்லையே என்று பின்னூட்டம் பொடலாம் என்று நினைத்தேன்! முத்துக்குமார் முந்திக்கொண்டார்! - ஜெ.

San said...

Dear Cable
Is it True?Unbelievable!!

vasu balaji said...

புனைவா:))))

Kumky said...

:)))

ஆஹா..

Ivan Yaar said...

Hi Shankar Narayan

Please give a detailed complaint to police commissioner office regarding where you are asked for bribe and by whom. They will surely take action against him. It is shame for police to torchure the innocent public.

Suthershan said...

super

நவநீதன் said...

தலைவா, கலக்கிடீங்க....
எல்லோருக்கும் நல்லவரா இருக்க ஆசை தான்.....

S Murugan said...

எதார்த்தம் சார்...நச்சுன்னு இருக்கு