வானம்.
கேபிள் டிவியில் வேலை செய்யும் ராஜா, பெரும் பணக்காரியான ப்ரியாவை காதலிக்க, அவர்களுடய காதலை சொல்ல, நியூ இயர் பார்ட்டிக்கு ஸ்பெஷல் பாஸ் வாங்க நாற்பதாயிரம் தேவைப் படுகிறது. என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்து தோல்வியடைந்திருக்கும் நேரத்தில் ஒரு திருட்டை செய்கிறான். அது அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டலில்.
ராக் ஸ்டார் ஆவதுதான் தன் வாழ்வின் லட்சியமாய் கொண்டு அதற்கான வெறியோடு அலைபவன் பரத். முதல் முறையாக சென்னையில் ஒரு லைவ் ஷோவில் பங்கேற்க வாய்ப்பு வந்து பெங்களூரில் ப்ளைட்டை மிஸ் செய்து ரோடு வழியாய் சென்னை வரும் போது சந்திக்கும் ப்ரச்சனைகள். அந்த ப்ரச்சனைகளின் க்ளைமாக்ஸான ஆஸ்பிட்டல்.
வேறு ஒரு ஊரில் ராணியம்மா என்கிற ஒரு ப்ராத்தல் ஓனரிடமிருந்து தப்பித்து, சென்னையில் தனியாய் தொழில் செய்ய முனைந்து அங்கிருந்து தப்பி வரும் சரோஜா. தப்பி வந்த இடத்தில் அவளுக்கும் அவளின் திருநங்கை தோழியும் சந்திக்கும் ப்ரச்சனைகளும் அதன் க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டல்.
கந்து வட்டிக்கு பணம் வாங்கியதால் தன் பேரனை அடகாக வைத்து கொண்டதற்காக தன் மருமகளின் கிட்னியை விற்று கடனை அடைப்பதற்காக சென்னை வரும் மாமனாரும் , மருமகளும். அவர்களின் க்ளைமேக்ஸ் ஆஸ்பிட்டல்.
கோயம்புத்தூரில் நடந்த பிள்ளையார் சதுர்த்தி விழாவில் சாதாரண ப்ரச்சனை மத ப்ரச்சனையாக மாறி, தன் மனைவியின் கர்ப்பம் கலைந்து நொந்து போயிருக்கும் பிரகாஷ்ராஜும், சோனியா அகர்வாலும், அன்று காணாமல் போன தன் தம்பியை தேடி சென்னைக்கு வருகிறார்கள். வந்த இடத்தில் மீண்டும் முஸ்லிம் தீவிரவாதி என்று சந்தேக வளைக்குள் மாட்டிக் கொண்டு, தீவிரவாதியாய் முத்திரைக் குத்தப்பட்டு தப்பியோட நினைக்கும் போது காலில் சுடப்படுகிறார். க்ளைமாக்ஸ் ஆஸ்பிட்டல்.
சிம்பு, சந்தானம் காம்பினேஷன் வழக்கம் போல ஆரம்பம் முதல் களை கட்டிவிடுகிறது. அதுவும் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அடிக்கும் ரகளை. பல டயலாக்குகள் மைண்ட் வாய்ஸிலேயோ, அல்லது முணுமுணுப்பகத்தான் இருக்கிறது. ஆனால் தியேட்டர் அல்லோல கல்லோல படுகிறது. “டேய் உன் பைக்கை கொடுறா..” “அதெல்லாம் தரமுடியாது. பைக்கை நான் என் பொண்டாட்டிப் போல பாத்துக்கறேன்” என்றதும் “ அப்பன்னா ஏண்டா தினம் காலையில நடு ரோடுல வச்சி கழுவுற”. சிம்பு தெலுங்கில் அல்லு அரவிந்தைவிட கொஞ்சம் ஹீரோத்தனம் செய்யத்தான் செய்தாலும், இரண்டாவது பாதியில் ஸ்கோர் செய்துவிடுகிறார். அதே போல சரண்யாவும் அந்த வயதான மாமனாரும், பணம் தொலைந்துவிட்டு பதறும் பதற்றம் இருக்கிறது அடடா.. உருக்குகிறது. அனுஷ்காவின் முதல் அறிமுகப்பாடல் தெலுங்கு டப்பிங்காக இருப்பது ஏனோ உறுத்துகிறது. தெலுங்கு பட காட்சிகளையே உபயோகித்திருப்பது நேட்டிவிட்டியை கெடுக்கிறது. ப்ரகாஷ்ராஜின் நடிப்பு மற்ற நடிகர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காக படுவதை தவிர்க்க முடியவில்லை. பாடகனாக வரும் பரத், வேகா ஜோடி தங்கள் பாத்திரம் உணர்ந்து செய்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொரு சின்னக் கேரக்டரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு நச். முக்கியமாய் ஆரம்ப சேங்க் காட்சியில் எடிட்டிங்கும் ஒளிப்பதிவும் போட்டிப் போடுகின்றன. எவண்டீ உன்னை பெத்தான். பாடல் எதிர்பார்த்த அளவுக்கு படமாக்கப் படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். யுவனின் இசையில் எவண்டீ பாடலும், இன்னொரு பாடலும், ஒரு குத்துப் பாட்டும் அதிர வைக்கிறது. பின்னணியிசை ஓகே.
வானம்- நிச்சயம் பார்க்க வேண்டியப் படம்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
பிரபாகர்...
அல்லு அர்ஜுன் ராக்ஸ். சிம்பு ?????????????
பாவம் க்ரிஷ், அவரது அட்டகாசமான ஒரிஜினல் படங்கள் எல்லாம் (கம்யம், வேதம்) தமிழில் மொக்கைதனமான ஹீரோயிச முயற்சிகளால் அவர் அடையவேண்டிய உயரத்தை அடைய முடியவே இல்லை.
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி : பாய் ஆப் தி மேட்ச்
அனுஷ்கா கேரக்டர் தெலுங்கு டப்பிங், பரத் கேரக்டர் ரெண்டும் சொதப்பல்
விமர்சனம் தரும் தலைவா உன்
படத்துக்கு நாங்கள் விமர்சனம் செய்யும் நாள் விரைவில் வருமா?
அப்படி வர வாழ்த்துக்கள்.
வானம் விமர்சனம்
என்ன வாழ்க்கைடா இது?
TOtally Mokka movie in Telugu... If we watch it we need to feel.. As normal person we can only feel, so it better to avoid these films...
:)
-அருண்-