Thottal Thodarum

Jun 3, 2011

உலகின் சிறந்த இயக்குனர்கள்-2 மணிரத்னம்.

mani மணி சார்.. இப்படித்தான் தமிழ் திரையுலகில் மட்டுமல்ல இந்தியத் திரையுலகத்தினர் அனைவரும் அன்புடன் அழைக்கிறார்கள் மணிரத்தினம் அவர்களை. தமிழ் சினிமாவை இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்களின் முக்கியமானவர் மணிசார். இவரின் படத்தில் நடிப்பதென்றால் இந்தியாவின் பெரிய நடிகர்கள் கூட சம்பளம், டேட் எல்லாவற்றையும் அட்ஜெஸ்ட் செய்ய தயார் என்று சொல்லுமளவுக்கு இவரின் மேல் மரியாதை. இவருடன் இணையும் தொழில்நுட்ப கலைஞர்கள், உடனடியாய் கவனிக்க பெறுவது இவரின் சிறப்பு.


எனக்கு இவரின் படங்கள் என்றாலே ஒரு விதமான ஜுரம் வந்துவிடும். நான் நிறைய முறை பார்த்த இயக்குனரின் படங்களில் இவரின் படங்கள் கொஞ்சம் அதிகம். இவரின் முதல் படத்திலிருந்தே நான் இவரது ரசிகன். ஆனால் இவரது முதல் படத்தை இவரது நான்காவது படத்திற்கு பிறகுதான் பார்த்தேன். அதில் வரும் அனில் கபூர் தமிழ் மெளனராகம் கார்த்திக்கின் ஒரிஜினல் என்று தெரிந்த போது இன்னும் அவரைப் பிடிக்க ஆரம்பித்தது. தமிழில் இவரது முதல் படம் பகல் நிலவு. அது வரை தடாலடியாய் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜை வித்யாசமான கேரக்டரில் அமைதியாக நடிக்க வைத்து அவருக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்த படம். இப்படத்தில் சத்யராஜ் நடித்த போது அவர் மிகவும் நொந்து போய்விட்டாராம். ஏனென்றால் அதுவரை அவர் நடித்த படங்கள் எல்லாம் தகடு..தகடு என்று தடாலடி செய்து கொண்டிருந்த காலத்தில், கையைக் காலை அசைக்காமல் வெறும் பாடிலேங்குவேஜில் நடிப்பது மக்களிடம் தனக்குள்ள இமேஜை மாற்றிவிடுமோ என்று பயந்திருக்கிறார். இது பற்றி தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு அவர் தைரியமா நடிங்க.. நல்ல விஷயம் தெரிஞ்சவரு.. நல்லா வரும் என்று சொல்ல வேறு வழியில்லாமல் நானும் நிழல்கள் ரவியும் ஒரு முடிவு செய்தோம். ரவி கையை பின் பக்கம் கையை கட்டிக் கொண்டால், நான் முன்பக்கம் கை கட்டிக் கொள்வது, நான் பின்னால் என்றால் அவர் முன் பக்கம் என்று. ஆனால் படம் வெளியானதும் எங்கள் நடிப்புக்கு கிடைத்த வரவேற்ப்பை பார்த்ததும்தான் தெரிந்தது மணிரத்னத்தின் அபார திறமை என்றார். 

என்னா மனுஷன்யா.. எவ்வளவோ படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் இவரிடம் நடிக்கும் போது புதுசா இருக்கு.. இதைச் சொன்னவர் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். பகல் நிலவு சுமாராய் போக, அடுத்ததாய் இவர் இயக்கியது இதயக்கோவில். இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்கள் இந்தப்படத்தின் வெற்றிக்கு பலம் என்றாலும் வெற்றி என்று பெரிதாய் சொல்லிக் கொள்ள முடியவில்லை.   அடுத்ததாய் வந்த மெளனராகம் தமிழ் சினிமா உலகையும், ரசிகர்களையே திரும்பிப் பார்க்க வைதது. இப்படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான பேட்டி மணி கொடுத்திருந்தார். படததை முடித்தவுடன் இயக்குனர் மகேந்திரனிடம் உங்களது நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் கதையைத்தான் நான் எடுத்திருக்கிறேன் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்று படத்தை போட்டுக் காட்டியிருக்கிறார். படம் பார்த்துவிட்டு வந்த மகேந்திரன் இது என் கதையில்லை வேறு கதை என்று சொல்லி பாராட்டிவிட்டு சென்றாராம். இந்தியாவின் சிறந்த படமாய் தேசிய விருதுக்கு தேர்தெடுக்கப்பட்ட படமாய் அமைந்தது. இன்றளவில் இளையராஜாவின் பாடல்கள் இப்படத்தை கல்ட் கிளாஸிக்காக் நிறுத்தி வைத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

மெளன ராகத்திற்கு பிறகு வந்த நாயகன் திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு  பெரிய வெற்றியையும், திரைப்பட நுணுக்கங்களில் ஒரு புதிய மாற்றத்தையும் கொண்டு வந்தது. பின்னர் வந்த அக்னிநட்சத்திரம், தெலுங்கு கீதாஞ்சலி, அஞ்சலி, சூப்பர் ஸ்டார், மம்முட்டியின் தளபதி எல்லாம் அவரின் புகழ் மகுடத்திற்கு மேலும் ஒரு சிறகு என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாய்  தெலுங்கு கீதாஞ்சலி தான் மணிரத்னம் ஒரே கதையை மல்டிப்பிள் லேங்குவேஜில் எடுத்து வெற்றி பெற வழிவகுத்தப் படம்.  முக்கியமாய் தமிழ் திரையுலகின் முதல் கார்பரேட் கம்பெனியான ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் உதயமாக தளபதி படம் தான் காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். ரோஜா திரைப்படம் வெளிவந்த பிறகு மணிசாரின் பெயர் தமிழ் நாட்டிலிருந்து அகில இந்தியாவுக்கும் தெரிய ஆரம்பித்தது. அது நாள் வரை இளையராஜாவுடன் பணியாற்றி வந்தவர், புதிதாய் ரஹ்மான் என்ற இளைஞரின் இசையை அறிமுகப்படுத்த, அகில இந்தியாவும் தலையில் தூக்கி கொண்டாடிய இசையாய் அமைந்த்து இன்னொரு விஷயம். ரோஜா மணிசாரை வேறு ஒரு பரிமாணத்துக்கு கொண்டு சென்றது. பின்னர் வந்த திருடா திருடா தோல்விப்படமாய் அமைந்தாலும், இன்றளவில் ரஹ்மானின் சிறந்த இசைக்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாக அமைந்தது.

மும்பை குண்டு வெடிப்பை மையமாய் வைத்து அவர் தயாரித்து இயக்கிய பம்பாய் படம் பெரும் சர்ச்சையை உண்டு செய்தாலும் பெரிய வெற்றியை தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட். அடுத்து வந்த இருவர், தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான கலைஞர், எம்.ஜி.ஆரின் வாழ்ககையை ஒட்டி எடுக்கப்பட, இன்றளவில் விமர்சகர்களால் பாராட்டுப் பெற்ற படமாய் இருந்தாலும் தோல்வியை தழுவியது. அடுத்து மணிரத்னம் நேரடியாய் இயக்கிய தில்சே.. வும் ஒரு தோல்விப் படமாய் அமைந்தது. அந்தத் தோல்வியிலிருந்து வெளிவந்து வெறும் அரசியல் ப்ரச்சனைகளை சுற்றி வந்த கதைகளத்திலிருந்து ஆர்.செல்வராஜின் அருமையான கதையில் அலைபாயுதேவை தர, சூப்பர்ஹிட். அலைபாயுதேவில் ஒரு சுவாரஸ்யமான தகவல் உண்டு. அக்கதை ஏற்கனவே ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், அம்பிகா, எஸ்.வி.சேகர் நடித்த ”தூங்காத கண்ணின்று ஒன்று” என்ற படத்தின் கதைதான். அப்படம் வெற்றியடையவில்லை. அப்படத்தின் கதையை காதல், திருட்டுக் கல்யாணம், பிரிந்து வாழ்ந்தல் என்பதை மட்டுமே எடுத்துக் கொண்டு புதிய திரைக்கதையில் அடித்து தூள் கிளப்பியிருப்பார் மணிசார். அதனால் தான் அப்படத்தின் கதை ஆர்.செல்வராஜ் என்றிருக்கும்.
 Mani_Ratnam அதன் பிறகு இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் பல சர்ச்சைகளையும், மாற்றுக் கருத்துக்களையும் ஏற்படுத்தினாலும், உலகின் பல விருதுகளை பெற்ற படமாய் விளங்கினாலும், கமர்ஷியலாய் ஒரு தோல்விப் படம் என்றளவில் தான் அப்படத்தின் முடிவு இருந்தது.  தமிழ், இந்தி என்று இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்ட ஆயுத எழுத்து இரண்டு மொழிகளிலும் தோல்வியை தழுவியது. திருபாய் அம்பானியின் கதையாய் சொல்லப்பட்ட குருவில் அவர் மீண்டெழுந்து வந்தார். கடைசியாய் அவர் அளித்த ராவணன். தமிழ் இந்தி இரண்டு மொழிகளிலும் தோல்விப்படமாய் அமைந்தது.  பின்னர் தமிழ் இந்தி, தெலுங்கு என்று மல்டி ஸ்டார்காஸ்டில் கல்கியின் பொன்னியின் செல்வனை ஆரம்பிக்க தலைப்பட்டு, அது பட்ஜெட்டினால் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மீண்டும் ஒரு காதல் கதையை கொடுக்க தயாராகிக் கொண்டிருப்பதாய் செய்திகள் வந்த வண்ணமிருக்க, அவருடய முந்தைய படம் வெற்றியோ தோல்வியோ, சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் அவரின் அடுத்த படத்தைக் காண ஆவலாய் காத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாது இந்திய சினிமாவிற்கே ஒரு புதிய பாதையை கொடுத்தவர் மணிரத்னம்.  மணி சாரின் வெற்றி, அவரின் படங்களின் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டதாய் ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது. என்னதான் காட்பாதரின் மறுபதிப்பு என்று சொல்லப்பட்டாலும் டைம்ஸ் இதழின் உலகின் 100 சிறந்த திரைப்படங்களில் நாயகன் என்கிற தமிழ் திரைப்படம் இடம் பெற வைத்த இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும். மணி சாரின் பிறந்தநாளான இன்று அவரின் அடுத்த படைப்பு வெற்றிபெற வாழ்த்துவோம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

32 comments:

raja said...

தயை கூர்ந்து இந்த மனிதர் இயக்கிய ஏதாவது ஒரு படத்திலிருந்து தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒப்பிடக்கூடிய ஒரு சம்பவமோ அல்லது கதாபாத்திரமோ இருந்தால் கூறுங்கள்...?

shortfilmindia.com said...

ஏன் இல்லை. தயைகூர்ந்து கடிவாளங்களை எடுத்துவிட்டு பாருங்கள் தெரியும்.

shortfilmindia.com said...

தயைகூர்ந்து தமிழ் மக்களின் வாழ்க்கையில் என்ன நீங்கள் கண்டீர்கள் என்றும் சொன்னால் உதவியாக இருக்கும்.

shortfilmindia.com said...
This comment has been removed by the author.
Unknown said...

நல்லா இருக்கு...
ரொம்ப நல்லா இருக்கு....
இந்தப் பதிவு ரொம்ப நல்லா இருக்கு...

Selva said...

மணிரத்னம் மிகச் சிறந்த இயக்குனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இப்பொழுதெல்லாம் எல்லா மொழிகளுக்கும் பொதுவாக எடுக்கிறேன் என்று தமிழின் மண்வாசனை மற்றும் நேட்டிவிட்டி மிஸ்ஸிங் என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.

siva said...

உலகின் சிறந்த இயக்குனர் - மனிரத்னம்,
உலகின் சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா,
உலகின் சிறந்த நடிகர் - கமல்
நல்ல ரசனை :)

குரங்குபெடல் said...

அவருக்கே திகைப்பை உண்டுபண்ணும் தர்ம பதிவு

நன்றி

King Viswa said...

இன்றைக்கும் கே டிவியில் மவுன ராகம் படம் காட்டப்படும்போது நல்ல வரவேற்பு + ரேட்டிங். இவரது படங்களில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய சொன்னால் அந்தப்படம் தான் என்னுடைய செலக்ஷன்.

கிங் விஸ்வா
LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

raja said...

1.கடிவாளங்களை எடுத்துவிட்டு பாருங்கள் தெரியும்....................

2. தமிழ் மக்களின் வாழ்க்கையில் என்ன நீங்கள் கண்டீர்கள் என்றும் சொன்னால் உதவியாக இருக்கும்.

நான் கேட்ட நேரடியான கேள்விக்கு நீங்கள் பதில் கூறவேயில்லை.

தமிழ் மக்களின் வாழ்வில் என்ன கண்டீர்கள்.. என்பது உங்களது கேள்வி...

நான் நேரிடையாக பதில் கூறவா...

எங்கள் மக்களின் மொழியில்...திருக்குறள்,சிலப்பதிகாரம்,நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய நவீன இலக்கியம். போன்றவைகள் எங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் இருந்தே உருவாக்கபட்டது.

எத்தனை கலைகள்.. எத்தனை வட்டார வழக்குகள், வாழ்க்கை முறைகள், எத்தனை மொழி வழக்குகள்.. எழுத தொடங்கினால் பல வலைதளங்கள் வேண்டும்... நீங்கள் தமிழ் மக்களை 'தமிழ் மக்களிடம் என்ன கண்டீர்கள் ' ? இப்படியொரு கேள்விக்கு என்னால் மிக கடுமையாக பதில் கூறியிருக்கமுடியும். ஆனால்....?

உங்கள் இயக்குநர் அம்பானி அப்பனை நாகர்கோவில் மொழியில் பேசவைக்கிறார். அவரது சிஷ்யர் ஆயிற்றே நீங்கள்...?

Sri (Thanjai Indians) said...

Cable sir,

Nice write up on his birthday.

//ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன், அம்பிகா, எஸ்.வி.சேகர் நடித்த ஒரு படத்தின் கதைதான்.//

I guess the movie name is Thoongaatha Kannindru Ondru.

Cable சங்கர் said...

@கலாநேசன்
நன்றி.. ரொம்ப நன்றி

@செல்வ கணேசன்
அதுதான் அவரின் தோல்விகளுக்கும் காரணம்

@

Cable சங்கர் said...

siva
நான் முதல் பாகம் எழுதியது அகிரா குரசேவாவை பற்றி. இன்னும் நிறைய பேர் வருவார்கள்.

நீங்கள் சொன்ன மூன்று பேரும் உலகின் சிறந்தவர்களுள் நிச்சயம் உண்டு.. என் ரசனை உள்பட..

Cable சங்கர் said...

@karuppu

நீ ஒரு முட்டாக்.. காமெடிபீஸுன்னு திரும்ப திரும்ப நிருபிக்கிறியே.. எவ்வளவோ வாட்டி சொல்லியும் உனக்கு புரிய மாட்டேன்குது. மணி ரத்னம் எனக்கு ஏன்யா பணம் கொடுக்கணும். நான் என்ன பத்திரிக்கை ரிப்போர்ட்டரா? கவர் வாங்கிட்டு எழுத. சற்குணத்தை மணி ரத்னத்தோட கம்பேர் பண்ணி.. அவர் மானத்தை வாங்காதே.. எப்படி மணி ரத்னம் படத்தை பிடிக்கலைன்னு சொல்றேன்னோ அது போல எனக்கு களவாணி பிடிக்கலை.. இப்போ உனக்கு இந்த பதிவு பிடிக்கலை இல்ல அது போலத்தான்.

அப்புறம் மூணு பதிவுக்கு ஒரு வாட்டி சற்குணத்துக்கு பி.ஆர். வேலை பாக்குறியே நீ எவ்வள்வு வாங்குறே.. நாளைக்கு நான் சற்குணத்துக்கிட்ட சொல்றேன். இந்த மாதிரி முட்டாக் .. எல்லாம் கூட வச்சிட்டா உங்க மரியாதைதான் போயிரும்னு..

அப்புற்ம் கேபிள் டிவியப் பத்தி நான் தான் கவலைப்படணும் நானே புலம்பல.. நீ ஏன் புலம்பிட்டிருக்கே.. நாங்கள்ளாம்.. சரி.. விடு நீ ஒரு காமெடி பீஸு உனக்கு புரியாது. இனிமே பேர் இல்லாமல் முகம் இல்லாம வராதே.. காமெடி..

நாளைக்கே சற்குணம் எனக்கு பிடிச்சா மாதிரி படம் எடுத்தா நலலருக்குன்னு சொல்வேன். பாரேன். உனக்கு என்னை பிடிக்கலை.. நான் உன்னை எவ்வளவுகேவலமா திட்டினாலும்.. திரும்ப திரும்ப வந்து படிச்சிட்டு போறே இல்ல .. அய்யோ..அய்யோ.. வர வர.. சரி விடு.. போய் பெரியவங்களை கூட்டிட்டு வா..

Cable சங்கர் said...

@உத்வி இயக்கம்
நன்றி..

@கிங் விஸ்வா
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு படம் இருக்கும் விஸ்வா.. அதுதான்மணியின் வெற்றி..

Cable சங்கர் said...

//எங்கள் மக்களின் மொழியில்...திருக்குறள்,சிலப்பதிகாரம்,நவீன சிந்தனைகளை உள்ளடக்கிய நவீன இலக்கியம். போன்றவைகள் எங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் இருந்தே உருவாக்கபட்டது.
//
இருக்கட்டும் தமிழ்ல சினிமா எடுக்கணும்னா இதைப்பத்தி எடுத்தாத்தான் இயக்குனரா என்ன?

//எத்தனை கலைகள்.. எத்தனை வட்டார வழக்குகள், வாழ்க்கை முறைகள், எத்தனை மொழி வழக்குகள்.. எழுத தொடங்கினால் பல வலைதளங்கள் வேண்டும்... நீங்கள் தமிழ் மக்களை 'தமிழ் மக்களிடம் என்ன கண்டீர்கள் ' ? இப்படியொரு கேள்விக்கு என்னால் மிக கடுமையாக பதில் கூறியிருக்கமுடியும். ஆனால்....?
//
சரி இருந்துட்டு போகட்டும். யார் இலலின்னா.. அதுக்கும் மணிரத்னத்துக்கும் என்னய்யா சம்பந்தம்?

//உங்கள் இயக்குநர் அம்பானி அப்பனை நாகர்கோவில் மொழியில் பேசவைக்கிறார். அவரது சிஷ்யர் ஆயிற்றே நீங்கள்...?
//
நீங்க ஏங்க தமிழ் டப்பிங் பாக்குறீங்க? இந்தியில பாக்க வேண்டியதுதானே.. அதான் ரெண்டு லேங்குவேஜிலும் ரிலீஸ் ஆயிச்சு இல்ல?

ஆனா ஒரு விஷயம் அவர் சிஷ்யன்னு சொன்னீங்க அதுக்கு நன்றி..

Cable சங்கர் said...

@ஸ்ரீ
நன்றி.. ஸ்ரீ.. அதான்.

raja said...

ரொம்ப கஷ்டம்.. நன்றி சங்கர் நான் நாகரீகமாக விலகிக்கொள்கிறேன்.

bandhu said...

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதோடு நிறுத்திக்கொள்ளலாம்.. உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதெல்லாம்.. கொஞ்சம் இல்லை. நிறையவே ஜாஸ்தி!

Cable சங்கர் said...

நன்றி ராஜா..

Cable சங்கர் said...

இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று சொல்லும் போது இந்தியாவும் உலகத்திலேட்தானே இருக்கு பந்து.:)

Syed said...

இன்றைய புதிய, மத்திய தர வர்க்கம் விளம்பரங்கள் கண்முன் உற்பத்தி செய்து காட்டும் நுகர்பொருள் கலாசாரத்தின் இலட்சிய வடிவங்களோடு உறவுகொண்டு நிற்கிறது. இதனால்தான் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களோடு இயங்கும் மகேந்திரன், பாரதிராஜா, ஆர்.வி. உதயகுமார், சேரன், தங்கர்பச்சான், பாலா போன்றவர்களைக் காட்டிலும் பண்பாட்டு அடையாளம் கெட்ட சினிமாவை படைக்கும் மணிரத்னம், ஷங்கர், எஸ்.ஜெ.சூர்யா போன்றவர்களை நோக்கி அலைபாய்கிறது. மேலை நாடுகளில் வேலை கிடைக்காதா என்று ஏங்கியபடி இருக்கும் இந்தப் புதிய மத்தியதர வர்க்கம் ‘பாயஸ்’, ‘நியூ’ போன்ற சினிமாக்களை ஊக்கப்படுத்தி நிற்கிறது.
‘எது நல்ல சினிமா?’ என்பது குறித்த கோட்பாடும், செயல் திட்டமும் இன்று மாறிப்போயுள்ளன. இந்த காலகட்டத்தில்தான் உலகமயமாதலுக்கு எதிராகத் தமிழன் தன் அடையாளத்தைத் தனது சினிமாவின் மூலமாக நிறுவிக் கொள்ளவேண்டிய கட்டாயம் நேர்கிறது. தமிழ் சினிமா இந்த சவாலை ஏற்குமா?
source: http://cinema.natpu.in/thiraippadam/cinebits/enthirann.php

shortfilmindia.com said...

அடக்கருப்பே.. சரியான முட்டாக்.. என்று மீண்டும் நிருபிக்கிறாய்.. நான் டென்ஷன் ஆகவில்லை.. உன்னை இப்படி திட்டினாலாவது ஒழுங்காக யோசிக்கிறாயா என்று பார்க்கிறேன். நான் பணம் வாங்கிக் கொண்டு எழுதுபவன் அல்ல.. எனக்கு இன்றும் களவாணிபடம் பிடிக்கவில்லை. அது என் கருத்து. நான் நிச்சயமாய் அவரை போல வர ஆசைப்படவேயில்லை. முடிஞ்சா சற்குணத்தையே கேட்டுக் கொள். வெண்ட்ரு.. இது கூட இப்படி ஒரு இந்தியாவே வராத.. இந்தியாவிலேயே வசிக்காத.. இந்தியனே இல்லாத, தமிழில் எழுதக்கூடிய முட்டாக்கூ சற்குணத்தின் ஒரு படத்தைப் பார்த்து மணிரத்னத்துடன் கம்பேர் செய்யும் அறிவிலிக்கு இனிமே பதிலோ.. அல்லது.. பின்னூட்டங்களோ அனுமதிக்கப்படாது.. சரி காமெடி பீஸுயா.. நான் யாருன்னாவது தெரியுமா?வெண்ணெய்...

shortfilmindia.com said...

இந்தியனில்லாத,இந்தியா வராத, தமிழ் எழுத படிக்க தெரிந்த பெயரில்லாதவரே.. எனக்கு சற்குணத்தையே யாருன்னு தெரியாது. இது நான்காசு வாங்கி.. எழுதி.. அய்ய்யோ.. அய்யோ.. காமெடி பீஸு..

Rafeek said...

"இந்தியாவின் சிறந்த இயக்குனர் என்று சொல்லும் போது இந்தியாவும் உலகத்திலேட்தானே இருக்கு பந்து.:)"
well said boss!!

raja said...

திரு கேபிள் சங்கர் மிக ஆச்சர்யமாக இருக்கிறது உங்கள் கோபம்.. கருப்பு என்பவர் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வதை விட நீங்கள் அவரை ஆபாசமாக திட்டியதன் வேகம் சகிக்ககூடியதாக இல்லை. ஒரு அடிப்படை நாகரிகம் கூட காட்டமால் எப்படி நீங்கள் வலைமனையை பயன்படுத்துகிறீர்கள். (அவர் மிக மோசமாகவே உங்கள் மீது சேற்றை வாரி பூசியதாகவே வைத்துகொண்டாலும்) உங்கள் மடியில் கனமில்லையெனில் நீங்கள் நாகரிமாக பதில் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து மிக மிக கீழ்தரமான வார்த்தைகளில் ஒரு வாசகனை ஏசுவது எந்த வகையில் நியாயம். இதில் பெரிய முரண்பாடு வலைமனையில் நீங்கள் நட்சத்திர எழுத்தாளர் வேறு....? ***நான் யாருன்னாவது தெரியுமா?வெண்ணெய்...**** இப்படியெல்லாம் எழுத எங்கே பழகிகொண்டிர்கள். எதற்கு இவ்வளவு பதட்டம்...நீங்கள் பணம் வாங்கியதாக சொல்லப்படும் பொய் செய்தி (நீங்கள அப்படி கூறுவதால்) அவரவாது வெளிநாட்டுக்காரர்.. இங்கு சென்னையிலே நிறைய பேர் சொன்னார்கள் நான் பெயர் சொல்லவிரும்பவில்லை. அதே சமயம் நானும் நம்பவில்லை. உங்களது சினிமா விமர்சனம் அப்படிபட்டதில்லை எனும் என் நம்பிக்கையே காரணம். நீங்கள் ஆபாசமான வசவை சற்றுகுறைத்துகொள்வது என் போன்ற வாசகர்களுக்கு நலமாக இருக்கும் உங்களது பின்னுட்டத்தையும் நாங்கள் படிக்கிறோம்.

பலூன்காரன் said...

அளவில்லா பணம், ஊடங்களின் கண்மூடித்தனமான சப்போர்ட், தரமான தொழிநுட்ப்ப குழு, திறமையான நடிகற்கள், சாவகாசமான நீண்ட நாள் தயாரிப்பு - இவற்றை வேறு சில இயக்குனர்களிடம் கொடுத்தால் பின்னி பெடலெடுத்து விடுவார்கள்.

ஆரம்பகால நல்ல படங்களின் மூலம் மேற்கண்டவற்றை சம்பாரித்த மணி அவற்றை கொண்டு சகிக்க முடியா படங்களை கொடுத்துக்கொண்டிருக்கிறார். மணி படங்கள் எடுக்காமல் ஓய்வு பெற்றால் அவர் பெற்ற புகழுடன் காலத்தை கழிக்கலாம்.

அவர் படத்தில் வரும் ஏழைகள், கிராமம் - இவற்றில் இருக்கும் எதார்த்தம் மிகவும் குறைவு. ஆனால் நடுத்தர வர்கத்தினரின் உண்ர்வுகளை நன்றாக புரிந்து கொண்டவராக தெரிகிறார்.

மொத்ததில் அவர் ஒரு தகுதிக்கு மீறி புகழ் சம்பாதித்த, ஒரளவு நல்ல படங்களை கொடுத்த இயக்குனர்.

பலூன்காரன் said...

உங்களின் சில பின்னூட்டங்கள் அதிர்சியாகவும் உங்கள் மேலிருக்கும் மதிப்பை குறைப்பதாக உள்ளன.

Vediyappan M said...

நல்ல பதிவு. முன்பே தெரிந்த தகவல்கள்தான் என்றாலும், உங்கள் பாணியில் ஒரு முறை புதிய சுவாரஷ்யம். அலைபாயுதே தகவல் புதிசு..

Cable சங்கர் said...

ராஜா.. எனக்கு பதட்டமெல்லாம் கிடையாது. ஒருவருக்கு ஒரு முறை தான் சொல்ல முடியும். திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அப்படி மீறி சொன்னால் நான் இப்படித்தான் பேசுவேன். எனக்கு யார் என்ன சொல்கிறார்கள் என்று கவலையில்லை. எனவே. .முடிந்தால் நீஙக்ள் பதிவை மட்டும் படித்துவிட்டு போவது நலம்.பெயரில்லாமல் வரும் முகமூடி இம்சைகளை நான் இதை விட கேவலமாய் அழைப்பேன். எனவே சாரி.

Cable சங்கர் said...

பலூன்காரன் பின்னூட்டங்களை வைத்து என் மீது மதிப்பு வைப்பதாக இருந்தால் வைக்க வேண்டாம். மரியாதை தெரியாதவர்களை இதைவிட சாரி விடுங்கள்..

Vijayanand said...

He represented middle class