கால்செண்டரில் வேலைப் பார்க்கும் யமுனாவிற்கும், வெற்றிக்கும் காதல். இருவரும் ஒரே வீட்டில் மேலும் கீழுமாய் வசிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் நேரம் அதிகாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை. ஏனென்றால் அப்போதுதான் யமுனா நைட் ஷிப்ட் பிபிஓ வேலை முடித்து வருவாள். தினமும் வெற்றிக்காக காத்திருக்கும் யமுனா.. ஒரு நாள் வெற்றி யமுனாவின் பிறந்தநாளுக்காக விஷ் செய்ய காத்திருக்க, அவனுடன் விளையாடும் நோக்கில் ஒளிந்து கொண்டு போன் செய்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் அவள் கடத்தப்படுகிறாள். அவளை கடத்தியவர்கள் யார்? எதற்கு கடத்தினார்கள்? என்ன செய்ய போகிறார்கள்? யமுனாவை வெற்றி கண்டுபிடித்தானா? என்பதை விரிவாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு பல காட்சிகளில் அவுட் ஆப் போகஸில் இருக்கிறது. முக்கியமாய் துருவா பைக்கில் போகும் காட்சிகளில். சில காட்சிகளில் வரும் ஹேண்டி ஷாட்டுக்கள் அனாவசியமாய் படுகிறது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள். அந்த பெண் என்பேன் நிச்சயம் அருமையான முயற்சி. பின்னணியிசையில் உறுத்தாமல் இசைத்திருக்கிறார் மரியா மனோகர்.
ப்ளஸ் என்றால் கதையை சொன்ன விதம். துருவாவுக்கும், யமுனவுக்குமான காதல். இருவரது காதல் பற்றி துருவா சொல்லும் கதை என்று ஆங்காங்கே சுவாரஸ்ய தீற்றல்கள். சில இடங்களில் வசனம் நச். போலீஸ்ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்ததும் சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டுவிட்டு, திருநீறு பூசிக் கொண்டு நிற்பது. பெண்ணைப் பற்றி ஏதுவும் தெரியாமல் இருக்கும் அம்மாக்களை சாடுவது. என்பது போன்ற விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். க்ளைமாக்சில் யமுனா எப்பவும் நீ லேட்டாத்தான் வருவியா? என்று அழுதபடி அணைப்பது போன்ற காட்சிகள் சுவாரஸ்யம். கடத்தல் நெட்வொர்க்குகள் பற்றிய டீடெயிலிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.
ஆண்மை தவறேல்- சர்ர்ரி…ஒகே
டிஸ்கி
ஒரே சமயத்தில் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு ஒரே திரைப்படத்தின் மேல் இன்ஸ்பிரேஷன் வந்துவிடும். ஆளாளுக்கு ஒரே படத்தை அவரவர் பர்ஷப்சனில் படமெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி இவர்கள் இன்ஸ்பயர் ஆன படம் TRADE .இந்த பிரேசிலியன் படத்தை ஏற்கனவே தமிழில் விலை என்று எடுத்துவிட, இப்படம் அதை அப்படியே அடியொற்றி எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் உடைகள் உட்பட. என்ன ஒன்று எடுத்தவர்களில் இவர்கள் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கிறார்கள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
விலை படம் மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டதல்லவா? ஆனால் சிறப்பாக போகவில்லை என்று நினைவு. ஒரே படத்தை J.K ரித்தீஷ் மற்றும் அஷ்வின் சேகர் இருவரும் தனித்தனியே நடித்து ரிலீஸ் செய்தது நினைவுக்கு வருகிறது.
கிங் விஸ்வா
LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!
-அருண்-