
தமிழ் சினிமாவில் சிறிய படங்கள் ரிலீஸானவுடன் மக்களிடையே மவுத் பப்ளிசிட்டியில் ரீச்சாவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் ஒரு படத்தின் ரிலீஸுக்கு முன்னாலேயே சினிமா பார்க்கும் மக்களிடையே ஒர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது ஆரண்யகாண்டம் திரைப்படம். சவுத் ஏசியன் இண்டர்நேஷனல் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஜூரி அவார்ட் வேறு வாங்கி உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Imdb யில் 7.1/10 ரேட்டிங்கை பெற்றிருக்கும் படம். அதுவும் ரிலிஸாகாமலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மூன்று வருடங்களாய் தயாரிப்பில் இருந்த இந்த படம் வருகிற பத்தாம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. எஸ்.பி.பி சரணின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணியிசையில், தியாகராஜ குமாரராஜாவின் இயக்கியிருக்கிறார். இந்த படம் வெற்றியடைந்தால் தனக்கு ஒரு பிரேக் கிடைக்குமென நம்பியிருக்கிறார் ரவிகிருஷ்ணா
Comments
--
டிராகன் கொல்லும் டட்டூ பெண்
so no surprise of the rating...
Seems like publicity from Cable Sangar.. by hiding the number of the votes...:-)
http://www.imdb.com/title/tt1496729/