இது நாள் வரை நல்ல ரெஸ்டாரண்டுகளைப் பற்றியும், மிடில் க்ளாஸ் மக்கள் முதல் அடித்தட்டு மக்கள் விரும்பும் கையேந்திபவன்களைக் கூட அறிமுகப்படுத்தியிருக்கிறேன். முதல் முறையாய் ஒரு ஸ்டார் ஓட்டல் ரெஸ்டாரண்டைப் பற்றி உங்களுக்கு அறிமுகப்படுத்த ஆசைப்படுகிறேன். சென்னையில் ஸ்டார் ஓட்டல் வகையராக்களில் மிக சில ஓட்டல்களின் ரெஸ்டாரண்டுகள் மட்டுமே நல்ல சுவையான, உணவு வகைகளை அளிக்கிறது என்பது என் கருத்து. அதற்காக அவர்களின் உணவு தரம் குறைந்தது என்று சொல்ல வரவில்லை. தனித்துவமான டேஸ்டென்று இல்லாமல் இருப்பதே அதன் மைனஸ். அதையும் மீறி ஒரு சில ஸ்டார் ஓட்டல்களில் சில ஸ்பெஷல் அயிட்டங்கள் அசத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். அது பற்றி பிறகு பார்ப்போம். இப்போது ரெஸிடென்ஸி.
இவர்களின் ரெஸ்ட்ராண்டைப் பற்றி எங்களுக்கு ஞாபகம் வருவதே ராத்திரி பதினோரு மணிக்கு மேல்தான். ஏனென்றால் சென்னையில் அதற்கு மேல் நல்ல சாப்பாடு கிடைக்காது. வெகு சில இடங்களில் மட்டுமே உணவு கிடைக்கும். ஆனால் சுவையிருக்காது. ஆனால் ரெஸிடென்ஸி காப்பி ஷாப்பில் விடிய விடிய நல்ல உணவு கிடைக்கும். அப்படி நாங்கள் தேடிப் போவது பருப்புருண்டை குழம்புக்கும், பூண்டுக் குழம்புக்கும், சிக்கன் குழம்புக்கும்தான். ஒரு குழம்பு வாங்கினால் ஒரு பவுல் சோறு இலவசமாய் தந்துவிடுவார்கள்.
பருப்புருண்டை குழம்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அந்த குழம்பின் ருசியைப் பற்றிச் சொல்வதா? இல்லை அதிலிருக்கும் பருப்புருண்டையைப் பற்றிச் சொல்வதா? குழம்பு அருமையான அரைத்துவிட்ட தேங்காயுடன் சரியான கலவையில், பொரித்தெடுக்கப்பட்ட பருப்புருண்டைகளை ஊறவைத்து தருவார்கள். அதில் ஒர் உருண்டையோடு, குழம்பை சாதத்தில் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள் அஹா.. டிவைன்.
அதே போல் பூண்டுக் குழம்பு. ரொம்ப திக்காகவும் இல்லாமல், தண்ணீராகவும் இல்லாத ஒரு குழம்பு. நன்கு நெய்யில் வறுக்கப்பட்ட பூண்டுகளை அப்படியே குழம்போடு கொதிக்க வைத்து ஊற்றும் போதே நாசியில் மணம் ஏறி பசியைக் கிளப்பிவிடும். அந்த லேசான காரமும், பூண்டின் சுவையும் அஹா. ஆஹா அட்டகாசம்.
கூடவே ஒரு தயிர்சாதத்தை வாங்கினீர்கள் என்றால் அது இதுவரை சாப்பிட்டதற்கு ஒரு ஃபினிஷிங் டச்சாக இருக்கும். புளிக்காத தயிரில் கிளறப்பட்டு, தாளித்து, மேலே கேரட்டெல்லாம் தூவி, ஒரு மோர் மிளகாயுடன் வரும். மோர் மிளகாயோடு ஒரு கவளம் சாதம், பூண்டுக் குழம்போடு ஒரு கவளம், பருப்புருண்டை குழம்போடு ஒரு கவளம். அட அட அட அட…. சாப்பிட்டு விட்டு இதற்கு இவ்வளவா? என்று கேட்பவர்கள் தயவு செய்து அங்கிட்டு போக வேண்டாம். ஏனென்றால் நடு ராத்திரியில், நல்ல பசியோடு போகிறவர்களுக்கு இம்மாதிரியான அமிர்தத்தை கொடுத்தால் விலை என்பதெல்லாம் சாதாரணமாகவே தெரியும். பட் வாழ்நாளில் நிச்சயம் சுவைக்க வேண்டிய ஒரு இடம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் காமிக்ஸ் - இரண்டாம் புத்தகம் - சென்னை சூப்பர் கிட்ஸ்
ஆனால் அங்கே மற்ற மூணு வேளை சாப்பாடு நல்லாவே இருக்கும்.
நாம் வழக்கமா அங்கே தங்குவதால் டைம் டைமுக்குச் சாப்பிடப்போவதோடு சரி. ஹொட்டேலில் தங்குனா ப்ரேக்ஃபாஸ்ட் இன்க்ளுடட்.
@thulasi gopal
சென்னையில் இருக்கும் ஸ்டார் ஓட்டல்களில் சிறந்த உணவு வகைகள் ரெஸிடென்சியில் நிச்சயமுண்டு.
2சுக்கு மாணிக்கம்
அதான் சென்னைக்கு வரும் போது பாக்குறீங்களே.. அப்புற்ம் என்ன? நான் எப்பவும் ஒரே வெயிட் தான். :)
முகவரி, மீல்ஸ் ரேட், ப்வே ரேட் கொடுக்கவும்.
:)
அன்புடன்,
டோண்டு ராகவன்
சதர்ன் அரோமாவில் இன்னமும் அதே மெனு கார்ட் தான். மாற்றப்படவில்லை.
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் காமிக்ஸ் - இரண்டாம் புத்தகம் - சென்னை சூப்பர் கிட்ஸ்
பாஸ் இது ஆபாச குழம்பா இருக்கும் போல:)))
இப்படிக்கு
ரெசிடன்ஸ் மேனேஜர்
இப்படிக்கு
மன்மதன்
seri lanthuu
Keep it up
blogger tutorial in tamil