Thottal Thodarum

Jun 20, 2011

கொத்து பரோட்டா-20/06/11

நம் வாசகர்கள் மிக மென்மையானவர்கள். உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். என் கருத்து என்று ஒரு விஷயத்தை சொன்னால் உடனே உன்னால் செய்ய முடியுமா? என்று கேட்பார்கள். அவர்களைப் பார்த்தால் எனக்கு பாவமாகத்தான் உள்ளது. எல்லாவற்றையும் ஒருவர் விமர்சிக்க வேண்டுமென்றால் அதை அவர்கள் செய்து காட்டினால் தான் ஒத்துக் கொள்வேன் என்பது எவ்வளவு பெரிய  காமெடியான விஷயம் என்று கூட அவர்களுக்கு புரியவதில்லை. ஆனால் எனக்கு ஒரு சந்தோஷம் இவ்வளவு பேரும் நான் என்ன சொல்லியிருக்கிறேன் என்று பார்க்க தினம் வந்து கொண்டுதானிருக்கிறார்கள். இதிலிருந்து ஒன்று தெரிகிறது. என் வேலையை நான் சரியாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன் என்று இதை உணர்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். இன்னொருவர் அங்கேயே வெட்டுவோம் என்று பின்னூட்டம் போடுகிறார். தன் சொந்த பெயரையே போட தைரியமில்லாதவர். நடுவில் ஒருவர் யோவான் சொல்கிறார் என்கிற ரீதியில் கிறிஸ்துவ போதனைகளை வேறு விட்டுச் செல்கிறார். சில பேர் நீ என்ன அப்பா டக்கரா ? என்று கேட்பார்கள். அப்பா டக்கர் யார் என்று தெரியாமலேயே..
############################


சமீபத்தில் என் உறவினர் ஒருவர் இரவு ஒன்பது மணிக்கு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் போது செயின் பறிப்பு கொடுமைக்கு உள்ளானார். உடனே காவல் நிலையத்துக்கு போய் புகார் செய்தார்.  ஆனால் அவர்களோ புகாரை எடுத்துக் கொள்ளவில்லையாம். கடைசியில் அவரது அண்ணனுக்கு தெரிந்த கவுன்சிலரை விட்டு ப்ரெஷர் செய்து புகார் எடுக்க சொல்லியிருக்கிறார்கள்.  அவர்களோ.. நாங்கள் ரவுண்ட்ஸ் போகும் நேரத்தில் உங்கள் செயின் அறுக்கப்பட்டது என்று சொல்கிறீர்கள். இந்நேரம் அவன் எஸ்கேப்பாகியிருப்பான். இந்த கேஸை பதிவு செய்தால் எங்களுக்குத்தான் ப்ரச்சனை. எனவே.. நகை வீட்டில் தொலைந்து விட்டதாக சொல்லி புகார் அளியுங்கள். நாஙக்ள் கண்டு பிடித்து தருகிறோம் என்றார்களாம். சரி என்று தன்  எட்டு சவரன் செயின் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டது என்று கேஸ் கொடுக்க, அவர்கள் அவ்வளவு எல்லாம் எழுதாதீர்கள், மூன்று பவுனுக்குள் எழுதுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அவர்கள் எழுதி கொடுக்க, ஒரு வாரத்தில் செயின் திரும்பக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அது அவரின் செயின் கிடையாது. இது தன்னுடயது இல்லை என்று சொன்ன போது. அது எங்களுக்கும் தெரியுங்க.. ரொம்ப ப்ரெஷர்னால கிடைச்சதை கொடுத்திருக்கிறோம் என்றிருக்கிறார்களாம். அவர்களும் ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்று வைத்துக் கொண்டார்களாம். இது நிஜமாய் நடந்த நிகழ்ச்சி. நம்பினால் நம்புங்கள்
#############################
இந்த வார பாராட்டு
இனிமேல் ப்ளெக்ஸ் பேனர்கள், ஹோர்டிங்கள் தனக்காகவோ,அல்லது கட்சியின் விழாக்களுக்கோ, கட்சி தலைவர்களுக்கோ வைக்க கூடாது என்று மம்மி சொல்லியிருக்காங்களாம். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
#############################
சமீபத்தில் பார்த்து பிரம்மித்த நடிப்பு ஆரண்ய காண்டம் படத்தில் வரும் சோமசுந்தரத்தின் நடிப்பு. கூத்துப் பட்டறையில் பயின்றவர் என்கிறார்கள். கூத்துப்பட்டறையில் பயின்றவர் எல்லாம் நல்ல நடிகர்களாய் பரிமளிப்பதில்லை. உதாரணம் கூத்துப்பட்டறையின் தலைவர் நடித்த வாழ்த்துகள் திரைப்படம். ஆனால் சோம சுந்தரத்தின் நடிப்பு அற்புதம். வாழ்ந்து கெட்ட ஜமீனை, உள்ளுக்குள் இன்னமும் அந்த பழைய மரியாதையை எதிர்பார்க்கும் ஏக்கத்தையும், வெள்ளந்தியான அந்த மனதையும், சந்தோஷமோ துக்கமோ கூத்தாடி, அழுது என உணர்ந்து செய்து பின்னி பெடலெடுக்கிறார். அடுத்து வரும் படங்களில் இவரை டெம்ப்ளேட்டாய் உபயோகப்படுத்தாமல் நல்ல கேரக்டர்களை அமையக் கொடுக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.
#################################
இன்னொரு நடிகரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் ஒரு இயக்குனரும் கூட. அவர்தான் ஜி.எம்.குமார். அறுவடை நாள், பிக்பாக்கெட் போன்ற படங்களின் இயக்குனர். வெயில் படத்தின் பரத்தின் அப்பாவாக நடிக்க ஆரம்பித்தார். அவன் இவனில் வரும் வாழ்ந்து கெட்ட ஜமீன் கேரக்டர். (ஆரணய காண்டத்திலும் இதே போல ஒரு கேரக்டர்) இக்கேரக்டரின் கேரிக்கேச்சரை மிக அழகாய் ஆரம்பித்திருப்பார் இயக்குனர். ஆடம்பரப் பிரியர், ஆட்டம் பாட்டம் போன்ற கலைகளில் ஈடுபாடுடையவர், சின்னக் குழந்தையாய் மனதுடையவர். தன்னைத்தானே ஹைனெஸ் என்று அழைத்துக் கொண்டு பெருமைப்படுபவர். உணர்ச்சி மயமானவர் என்று பல உணர்வுகளைக் கொண்ட ஒரு கேரக்டர். அப்படிப்பட்ட கேரக்டரை முழு நிர்வாணமாய் அவமானப்படுத்தி அடித்தே கொல்லும் போது படம் பார்க்கும் நாம் ஓடிப் போய் தடுக்க வேண்டும். அது இல்லாது போனதால் இவரின் நடிப்பு போற்றுதலுக்கில்லாமல் போய்விட்டது கொஞ்சம் வருத்தமே. ஆரண்ய காண்டம் வாழ்ந்து கெட்ட ஜமீன் கேரக்டருக்கும், இந்த ஜமீன் கேரக்டருக்கும் உள்ள ஒற்றுமை கேரக்டர்களின் தன்மை. ஆனால் அக் கேரக்டர்கள் கொடுத்த இம்பாக்டில்தான் வித்யாசம். வெறும் கேரக்டராய் இல்லாமல் கதையின் ஓட்டத்தில் நம்மை உள்ளிழுத்தது ஆரண்ய காண்டம் சோமசுந்தரம். கதையின் ஓட்டத்தில் ஈர்ப்பில்லாததால் ஒன்ற முடியாமல் போன கேரக்டர் ஜி.எம்.குமாருடையது. You too Deserve a Applause g.m.kumar sir…
####################################
சமச்சீர் கல்விக் கொள்கையில் அவர் செய்தார் என்று இவர் தடுக்க நினைக்க, கோர்ட் வேறொன்றை நினைக்க, இப்போது குழப்படியில் நடக்கிறது வேலை. புத்தகங்களின் தரம் பற்றி மாற்றுக் கருத்து நிலவினாலும். அதை சீர் படுத்தி தொடர்ந்திருக்கலாம். அல்லது இந்த வருடம் தொடர்ந்துவிட்டு, அடுத்த வருடத்திற்குள் சமச்சீர் வேண்டுமா? வேண்டாமா? என்று உக்காந்து பேசி முடிவெடுத்திருக்கலாம். ரொம்ப குழம்புறேனோ? அவ்வ்வ்.  ஸ்கூல் திறப்பதிலிருந்து புத்தகம் வரை வேலை செய்பவர்களுக்கும் மன் உளைச்சல், குழப்பம். பெற்றோர்களுக்கும் அஃதே. கொஞ்சம் யோசித்து முடிவெத்திருக்கலாமே. அவர்-இவர்
##################################
லண்டனில் ஒரு துணிக் கடையின் வியாபாரத்தை பெருக்க, ஒரு விளம்பரம் செய்திருக்கிறார்கள். தங்கள் கடைக்கு யார் அரை நிர்வாணமாக வருபவர்களுக்கு, உடைகள் இலவசம்னு. நடு ராத்திரியிலிருந்தே பொண்ணுங்கள்லாம் டூ பீஸுல் க்யூ கட்டி விட்டார்களாம். இதிலேர்ந்து தெரிஞ்சிக்கிற விஷயம் என்னன்னா? ஓசி கொடுத்தா பினாயில குடுக்கிறது நாம மட்டுமில்ல.. வெள்ளைக்காரங்களூம் என்பதுதான். ம்ஹும் அட்லீஸ்ட் கியூவில நிக்கிறத பாக்கவாவது லண்டன்ல இருந்திருக்கலாம்.?
###################################
தத்துவம்
தவறான ஒருவரை தேர்தெடுத்துவிட்டோமே என்று வருத்தப்படாதே… சரியானவரை தேர்தெடுக்க உதவும் வழி அது தான்.
###############################
ப்ளாஷ்பேக்
இரவில் சில பாடல்களை கேட்டால் மனதை ஏதோ செய்யும். சில பாடல்கள் அருமையான உணர்வை கொடுக்கும் அந்த வகையில் இப்பாடல்  கயாமின் அற்புதமான கம்போஷிஷனில், முகேஷின் ஸூத்திங் மெலடி. கபி கபி மேரே தில் மே… 
   
################################
மை கார்னர்
######################################
அடல்ட் கார்னர் 
ஒரு வாலிபனுக்கு ஆண்டிக்கும் நெருக்கம் ஏற்பட, மேட்டருக்கு ரெடியான நேரத்தில் பையனை காண்டம் யூஸ் பண்ணச் சொன்னாள் ஆண்டி. சரி என்று போய் எடுத்து வந்தவன் அதை உற்று பார்த்துவிட்டு, திரும்ப வைத்துவிட்டான். ஏன் காண்டம் யூஸ் செய்ய விருப்பமில்லையா? என்று கேட்டவளை பார்த்து வாலிபன் சொன்னான் “அதுல போட்டிருந்த ஒரு வரியை பார்த்தேன் அதனால தான் யூஸ் பண்ணலை” என்றான் அப்படி என்ன போட்டிருந்திச்சு?” “Do Not Use this Condom if the seal is open என்றான் வாலிபன்.

Post a Comment

28 comments:

saravanakumar said...

செயின் காணாமல் போன விசயம், நீங்கள் சொன்னது மிகச்சரி. எனது நண்பருக்கும் அதே அனுபவம் உண்டு. காணாமல் போன நகையின் அளவை விட குறைத்து எழுதி வாங்கிக் கொண்டு 6 மாதத்திற்கு பிறகு வேறு ஏதோ நகையை கொடுத்து கேசை முடித்திருக்கிறார்கள்.

அந்த கபி கபி மேரே தில் மே பாடல் என்னையும் மிகவும் கவர்ந்த பாடல்.

Paleo God said...

சில பேர் நீ என்ன அப்பா டக்கரா ? என்று கேட்பார்கள். அப்பா டக்கர் யார் என்று தெரியாமலேயே.. //

நீங்க ஒரு யூத்து டக்கர் தல! :))

இது நிஜமாய் நடந்த நிகழ்ச்சி. நம்பினால் நம்புங்கள் //

சும்மா வாய் புளிச்சிதோ மாங்கா புளிச்சிதோன்னு எழுதக்கூடாது. மொதல்ல ரோட்ல ஒரு செயினப் பறிச்சிட்டு அப்புறமா எழுதுங்க. அப்பத்தான் நம்புவோம்.

Mothiyoci said...

பாஸ் அரங்கற்றவேளை பாசில் படம்...
ஜி.எம். குமார் இல்லை.....

சமுத்ரா said...

good one

Romeoboy said...

யப்பா.... இன்ன தலைவரே அவ்வளவு பின்னுடம் போட்டு இருக்காங்க ??? பேசாம பாலாவை அழைச்சிட்டு வந்து தான் இவங்களுக்கு பதில் சொல்லணும் போல ..

\\அப்பா டக்கர் யார் என்று தெரியாமலேயே//


இந்த லிங்க்ல போயி பாருங்க,, ஒரு கவிஞர் அப்பாடக்கர் என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்துள்ளார்..

https://profiles.google.com/romeoboy.81/posts/XkAKJ9aNVUM

CS. Mohan Kumar said...

அரங்கேற்ற வேளை பாசில் இயக்கியது. ஜி. எம். Kumar அல்ல கேபிளுக்கு அடி சறுக்கலாமா?

செயின் திருட்டு போனால் போலிஸ் காரர்கள் எப்போதும் வேறு யாருடைய செயினோ தான் தருவார்கள். இது வழக்கம் தான். நாங்கள் ரோந்து போன நேரம்; எனவே வீட்டில் தொலைந்ததாய் எழுதி தாருங்கள் என்றது புதிதாய் உள்ளது

Cable சங்கர் said...

ஒரு ப்ளோல மாத்தி எழுதிட்டேன். தப்புத்தேன்.. மாத்திட்டேன். அறுவடை நாள்.

ஜோசப் பால்ராஜ் said...

தமிழ்நாட்டுல இருந்து எல்லாரும் ஆந்திரா ஓடிட்டதால , ஆந்திரால இருந்து யாரும் இங்க பொழைக்க வந்துருப்பாங்களோ?

அன்பேசிவம் said...

தல கபி,கபி யா?

Xavier said...

Cable sir if possible publish this in your website. http://www.tamilpaper.net/?p=3624

Xavier.

வந்தியத்தேவன் said...

உந்த லண்டன் கடை மேட்டர் இங்கேயுள்ள பல பத்திரிகைகளில் விளம்பரமாகவும் வந்தது. ஒருக்கால் போய்ப்பார்க்கலாம் என்றால் ஆணி பிடுங்கல்கள் அதிகம் அதனால் பின்னர் பத்திரிகைகளில் வந்த படங்களைப் பார்த்து மனதைத் தேற்றினதுதான்.

D. Chandramouli said...

இரவில் சில பாடல்களை கேட்டால் மனதை ஏதோ செய்யும். சில பாடல்கள் அருமையான உணர்வை கொடுக்கும் அந்த வகையில் இப்பாடல் கயாமின் அற்புதமான கம்போஷிஷனில், முகேஷின் ஸூத்திங் மெலடி. கபி கபி மேரே தில் மே//
Absolutely, it is a fine melody. Another one is 'Chandmeka Chand'. Have you heard Madhumathi songs? I don't know Hindi, but I can say that such tunes are real gems. Old Hindi or Tamil songs prior to 1970s are a treat to hear.

ராஜரத்தினம் said...

நீங்க சொல்றது சரி. 2006 ல் அர மனதொடு கருணாநிதியை தவறாக தேர்ந்தெடுத்த காரணம் இப்பொது சரியான ஆளை தேர்ந்தெடுக்க உதவியது.

கருந்தேள் கண்ணாயிரம் said...

கேபிள். உங்க அவன் இவன் விமர்சனம் இப்பதான் பார்த்தேன். ஆனா அங்க கமென்ட் போட முடில. உங்க விமர்சனம் எனக்குப் பிடிச்சது. இந்தப் பதிவுல முதல் பேரால சொல்லிருக்கீங்களே, அதுபோல அனானிகளோட கமென்ட் பத்தி கவலையே படாதீங்க. ப்ரீயா உட்டுக்கினு போய்க்கினே இருக்க வேண்டியதுதான். அது வேறொன்யுமில்ல. உண்மைய சொன்னா பொருக்காம ஒளர்ற கும்பல் இதுங்க. முடிஞ்சா பேரோட வந்து, இப்புடியெல்லாம் கேமன்ட் போட சொல்லுங்க பார்ப்போம். கல்லெறிபட்ட காக்கைக்கூட்டம் போல ஓடிருவானுங்க. என் சைட்ல கமென்ட் போட்ட மொக்கையனுங்களைப் பத்தி சைபர் போலீஸ்ல சொல்லியாச்சி. இனிமே எவனாவது அப்புடி போட்டா, களிதான் :-) . . இந்த மாத்ரி நடுநிலை விமர்சனங்களைத் தொடருங்கள். ஐ வில் சப்போர்ட் யூ :-)

பிரபல பதிவர் said...

அவன் இவனுக்கு இத்தனை பின்னூட்டமா???

இவ்ளோ விளக்கமா????

Sivakumar said...

அப்பா டக்கருக்கு அர்த்தம் தெரியாது. ஆனா பேனர் வைக்க வேண்டாம்னு சொன்ன அம்மா... டக்கர்!!

Vivek Raghunathan said...

// அறுவடை நாள், பிக்பாக்கெட் போன்ற படங்களின் இயக்குனர்.//

அது மட்டும் இல்லை. "மைக்" மோகன் நடித்த உருவம் படத்தின் இயக்குனரும் இவர்தான். It received major critical acclaim as "the best horror film ever made in South India" It was considered very unusual at the time because it did not include the traditional Indian film musical interludes.

கோவி.கண்ணன் said...

// ஆனால் அது அவரின் செயின் கிடையாது. இது தன்னுடயது இல்லை என்று சொன்ன போது. அது எங்களுக்கும் தெரியுங்க.. ரொம்ப ப்ரெஷர்னால கிடைச்சதை கொடுத்திருக்கிறோம் என்றிருக்கிறார்களாம். அவர்களும் ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்று வைத்துக் கொண்டார்களாம். இது நிஜமாய் நடந்த நிகழ்ச்சி. நம்பினால் நம்புங்கள் //

ஆள் வச்சு செயின் அடிச்சு 8 சவரனில் 3 திருப்பிக் கொடுத்துட்டாங்களா ?

பெருந்தன்மை தான் !
:)

Jana said...

கபி கபி மேரே தில் மே…
மனதுக்குள் ஒலிக்கின்றது

gowtham் said...

enakku avan ivan padam suthama pudikkala ... paavam vishal,g.m.kumar... sethu 2n half la vikram apdi irukkura maari kaatunadhula oru artham irukku adhae maari dhaan pidhamagan , naan kadavul la yum.. aana idhula yaen vishalku ondra kannu ??? seri charactera irukkattum .. aana aarya mandai yaen apdi irukku... enga irundhu enga clgku poraanga andha ponnungana yaedho kaatukkulla vandhu love pannittu poraanga... padathula vishal thiruduvaara maattaara ... thideernu oru sombayaaadhu thiruda mudiyumaangra maari varudhu aana pootta therakka kootittu poraanga,naan andha judge character pinnadi use aaga pogudhunu nenachaen aana.... avana pathi ivana pathi paatukkagavum ponaen adha kaanavae kaanom kadhaikku thaeva illana pinna yaen adha audio cd la vitaanga??? edhirpaarpu illama ponumna cd la irukkura paatta koodava padathula edhirpaakka koodadhu.... naanum oru sethuva edhirpaakkuraen... adhum sethu 1st half ethni thadava paathaennu enakkae theriyaadhu....ena porutha varaikkum sethu first half bala range vera ,2nd half,nandha,pithamagan ,naan kadavul bala vera ... avan ivanla balavayae kaanumngra maaridhaan sir irukku....

nellai ram said...

last one super!

Rocket Ranga said...

Even though I regularly follow your blog, I rarely leave a comment. Regarding the Avan Ivan review, I completely agree with you that the movie was not an entertainer, it did not have an intact screenplay and the climax and the interval block seemed manufactured rather than building up from the beginning. But, I do not think that your or anybody for that matter have the qualification or the authority to advice Bala what sort of films that he should direct and thats where I think most of your reader disagreed with you.

P.S. I have watched some of your short films that you have posted on this link and going by them, I do not think you have a bright future as a screenplay writer/director. I have seen better short films directed by college students with good themes and a believable twist in the end, which is essential for all short films, particularly if I would refer you to the short film where a guy chases a car in 110 kmps just to inform him the trunk is open and another one, a conv between two non-virgins.

Anyway, everything I have said is my personal opinion and hope I am not generalizing anything here...Thanx...

Rajan said...

கபி கபி பாட்டு மாமன் மகள்ல மணி வண்ணனும் கவுண்டரும் செயச்சித்ராவ பாத்து பாடற பாட்டாச்சே!

Rishi said...

மிக அருமையான , அரிய, நிஜ நிகழ்ச்சி இது. தயவு செய்து அனைவரும் படிக்கவும்...
http://www.livingextra.com/2011/06/blog-post_21.html

Sundar said...

உங்களுக்கும் ஆரண்ய காண்டம் குழுவிற்க்கும் என்ன நட்பு? அந்த படத்தை அவ்வளவு புகழ்ந்து தள்ளுகிறீர்கள்? கதைக்களன் விடுங்கள், நல்லாத்தான் இருக்கிறது. ஆனால் அதை எடுத்தவிதம்? யதார்த்தத் தண்மை கொஞ்சம்கூட இல்லை. உடனே “உங்களுக்கு சென்னையின் இருண்ட பகுதிகளிள் நடப்பது என்னவென்று தெரியுமா” என்று கேட்காதீர்கள்!

நீங்கள் சொல்லியிருக்கும் ஜமீன் பாத்திரம், யாதார்த்தம் கொஞ்சம்கூட இல்லாத செயற்கை நடிப்பு. ஏன் இப்படி புகழ்ந்து தள்ளுகிறீர்கள்?

உங்களுக்கும், நிறைய சார்புநிலை எடுக்கும் ஜனரஞ்சக (குமுதவிகடகுங்கு) பத்திரிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் “திணிப்பது” போல்தானே நீங்களும் திணிக்கிறீர்கள்?

இவருக்கு நிறையவாசகர்கள் இருக்கிறார்கள், இவரிடம் நட்புவைத்துக்கொண்டால், நம் முயற்சிகளூக்கு, சிறந்த்ததோ இல்லையோ, நல்ல விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணம் நிறையபேருக்கு வரும்?

தயவுசெய்து, இதுபோல் சார்புநிலை எடுத்து, உங்களிடம் இருந்தும் எங்களை ஓடிவிடச்செய்யாதீர்கள்!!!

Dr. A. said...

Glad to know that you have become a singer as well...!!

http://tamildigitalcinema.com/?p=12340

All the best Cable...!

shortfilmindia.com said...

sundar.. எனக்கும் ஆரண்ய காண்டம் பட குழுவினருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.ஸோ.. இட்ஸ் அப்டுயூ..

Sundar said...

சாமர்த்தியமான நழுவல்...

புது/இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கவேண்டியது முக்கியம்தான். இருந்தாலும், சார்புநிலை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பாராட்டப்படவேண்டிய விஷயங்களை மட்டும் பாராட்டுங்கள். முழு திரைப்படத்தையும் பாராட்டவேண்டும் என்று, un-natural, over-acting எல்லாவற்றையும் தூக்கிவைத்துக் கொண்டாடாதீர்கள்...

வெறும் பாராட்டுக்கள் எவரையும் அழித்துவிடும் (முன்னாள் முதல்வரைப் போல). குறைகளையும் சொல்லுங்கள், அவர்களின் முன்னேற்றத்திற்க்கும், மற்றவர்களின் படிப்பினைக்கும் உபயோகமாக இருக்கும்...