Thottal Thodarum

Jun 10, 2011

என்ன பாட்டு பாட?


பாடுவது எனக்கு பிடித்தமான விஷயங்களில் ஒன்று. அது கேட்பவர்களுக்கு எப்படி என்று நான் பாடிக் கேட்டவர்கள் தான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு காலத்தில் கீதம் வரை  கொஞ்சமே கொஞ்சம் கர்நாடக சங்கீதம் கற்று கொண்டதைத் தவிர பெரிய சங்கீத புலமை கிடையாது. ஆனாலும் பாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என்றைக்கு நான் பாடி என் குரலை நானே கேட்பேன் என்று ஒரு ஆசை மனதினுள் அரித்துக் கொண்டிருதானிந்தது.


ஒரு மழை நாளில் மழைக்காக ஒதுங்கிய இடம் தான் சினி சிட்டி என்கிற அந்த ஹோட்டல். அங்கே ஒரு டிஜிட்டல் ப்ரொஜெக்டரில் பாடல்களை ஒளிபரப்பி, அதற்கான வரிகளை டிஸ்ப்ளே செய்து கொண்டிருக்க.. ஒருவர் அந்த பாரின் மூலையில் நின்று பாடிக் கொண்டிருந்தார். அடுத்ததாய் வேறொருவர் பாட, மெல்ல டி.ஜேவிடம் போய் சார் நானும் ஒரு பாட்டு பாடலாமா? என்று மெல்ல கேட்டேன். “ம்.. நிச்சயமா.. என்ன பாட்டு பாடறீங்க?”என்றதும் சுமார் ஐய்யாயிரம் பாடல்கள் என் மண்டைக்குள் பாடின.. அதிலிருந்து ஒரு பாடலை பிரித்தெடுக்க என்னால் முடியாமல் திணறி.. சட்டென மன்றம் வந்த தென்றலுக்கு மெளன ராகம் பாடல் என்றதும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு, “இரண்டு பாட்டுக்கு தள்ளி வரும் பாடுங்க” என்றார்.

அடுத்த பாடலை பாடியவர் டி.ஜேவே.. வறுமையின் நிறம் சிவப்பில் வரும் தந்தனத்தத்தன. என்ற பாடலை எஸ்.பி.பிதான் வந்து பாடுகிறாரோ என்று சந்தேகப் படும் அளவிற்கு நிஜமாய் பாட, உள்ளுக்குள் நடுக்கம் வந்துவிட்டது. இங்க நான் பாடறதா? என்று. இருந்தாலும் “என்னடா.. சங்கரா..எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதைப் பண்ண மாட்டோமா?” என்று தைரியப் படுத்திக் கொண்டு, ரெடியாகையில் என் முறை வர, ஆரம்ப ஆலாபனையோடு வரும் அப்பாடலை பாடி முடித்ததும் கிடைத்த கைத்தட்டுதான் என்னை இதுவரை கொண்டு வந்திருக்கிறது. நன்றி.. தேவ் கரோக்கே.. முரளி, தேவ். அதன் பிறகு நான் பாட வேண்டுமென்றால் அங்கேதான். நிறைய வாசகர்கள் அங்கே என்னை வந்து பார்த்திருக்கிறார்கள். அந்த கரோக்கேவைப் பற்றி எழுதி அதன் மூலமாய் அங்கு வந்தவர்கள் சந்தித்தவர்கள் அதிகம்.  ஏன் இதையெல்லாம் உங்களிடம் சொல்கிறேன் என்றால்.. கரோக்கேவில் பாடிக் கொண்டிருந்த நான் ஒரு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்து ரிக்கார்டிங்கும் ஆகிவிட்டதினால் தான்.

செவ்வாய்க் கிழமையன்று கடைசி பாடலாய் ராஜாவின் “தென்றல் வந்து தீண்டும்போது” என்ற அவதாரம் பாடலை பாடி கொண்டிருந்த போது, தாடி வைத்த ஒரு நபர் வந்து என் கையை பிடித்து “நல்லா பாடறீங்க.. “ என்று வாழ்த்திவிட்டு, ”இருங்க பில் கொடுத்துட்டு வர்றேன்.. கொஞ்சம் பேசணும் உங்க கூட” என்றார் பக்கா திருநெல்வேலி ஸ்லாங்கில்.

பில் செட்டில் செய்துவிட்டு வெளியே வந்தவர் “ என் பெயர் ஜோசப். நான் ஒரு மியூசீஷியன். நீங்க என்ன பண்றீங்க?” என்றார். என்னைப் பற்றிச் சொன்னேன். “ அப்ப நம்ம ஆளுதான்” என்றவர். “நான் மியூசிக் பண்ற படத்தில ஒரு ஒன்னரை நிமிஷ பாட்டு வருது. ஆர்.ஆர்ல அந்த இடத்துல பாட்டு போட்டா நல்லாருக்கும்னு நினைச்சி வச்சிருக்கேன்.  பேஸ் டோன்ல ஒரு வாய்ஸ் வேணும். பாட முடியுமா?” என்றதும் ஆச்சர்யம் தாங்கவில்லை. சும்மா சூப்பரா பாடுறவங்க எல்லாமே கையில டெமொ சீடி வச்சிட்டு அலையுற காலத்தில.. “சார்.. நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்றதும் “அட .. ஆமாங்க.. “ என்று சிரித்தார்.

“ நான் சும்மா ஜாலிக்கு பாடறவங்க.. பெரிசாஏதும் தெரியாது”

“அட பரவாயில்லை.. வாங்க.. உங்களுக்கு என்ன தெரியும் நான் பாத்துட்டேன்” என்று போன் நம்பர் கொடுத்துவிட்டு ”நாளைக்கு மதியம் உங்களுக்கு ஸ்டூடியோ எப்ப ஃப்ரீன்னு காலையில் போன் செய்றேன்” என்று கிளம்பிவிட்டார். ராத்திரியெல்லாம்  தலையில் ஹெட்ஃபோன் மாட்டியபடி, இடது கையை, இடது காதின் மீதும், வலதுகையை ஆகாயத்தை நோக்கி நீட்டியபடி,லேசாய் வாய்திறந்து, அரைக்கண் மூடியபடியான ஸில்ஹவுட் ஸ்டில் தான் என் கனவில். அடுத்த நாள் எனக்கு போன் வரவில்லை. என்ன தான் கனவில் ஸ்டில்கள் வந்தாலும் நிஜத்தின் நிதர்சனம் புரிந்தவனாகையால்.. பெரிய எதிர்பார்ப்பு இல்லை. சரி.. என்று நான் செய்த போது,  அவர் தனக்கு நேற்றிரவு விபத்தில் மாட்டிக் கொண்டு காலில் அடிப்பட்டு விட்டதால் ஆஸ்பிட்டலில் இருப்பதாய் சொன்னார்.   ஆனால் சாயங்காலம் திரும்பவும் போன் செய்து.. நாளைக் மதியம் மூணு மணிக்கு வ்ந்திருங்க” என்றார்கள்.

மதியம் போனதும் இசையமைப்பாளர் ஜோசப், இயக்குனர் நாயகன் மதன், ஆகியோர் ரிக்கார்டிங்கில் இருக்க, ஒரு எட்டு லைன் பாடல். மிக உருக்கமான பின்னணியில் அமைந்த பாடல். அரை மணி நேரத்தில் பதிவாகி, ஆர்.ஆரில் சேர்த்து விட்டார்கள். ”திவ்யா மீது காதல்” என்கிற படத்தில் என் முதல் பாடல் ஒலிப்பதிவாகி, அதை திரையில் பார்த்த போது, எனக்குள் ஓடிய ஒரு உணர்வை விவரிப்பது எப்படி என்று தெரியவில்லை. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் ஜோசப்பிற்கும், இயக்குனர் மதனுக்கும் என் நன்றிகள் பல.. விரைவில் நண்பர் ஜோசப் அவர்களின் உடல் நலம் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.   அவர்கள் அனுமதியோடு அந்தப் பாடலை உங்களுக்கு வெகு சீக்கிரத்தில் அளிக்கிறேன். அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது “திவ்யா மீது காதல்” திரைப்படம்.

Post a Comment

33 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் பாஸ்! :-)

a said...

வாழ்த்துக்கள் தல....

நேசமித்ரன். said...

வாழ்த்துகள்,வாழ்த்துகள் தலைவரே :)

யுவகிருஷ்ணா said...

வாழ்த்துகள் தலைவரே.

திவ்யா மீது காதல் டைட்டிலே கிக்காக இருக்கிறது. படம் வெளியானதும் நம்ம தமிழ் சினிமா உலகத்தில் ஒரு ஒலகப்பட விமர்சனம் போட்டுடுவோம்.

ம்ம்.. எனக்கு இந்த வாட்டி நாலாவது வடைதான்.

கிங்விஸ்வா
தியேட்டர் டைம்ஸ் 01 : 10th June 2011 அன்று வெளியாகும் படங்களின் முன்னோட்டம்

புதுகை.அப்துல்லா said...

நீங்க சுமார் 70 பாட்டு டிராக்கிலும், 2 பாட்டு மெயினிலும் பாடிய பாடிய பாடகர் ஒருவரோட சுத்திகிட்டு இருக்குறதாலதான்,, அவரோட ஆசிர்வாதத்தாலதான் இந்த அளவிற்கு வந்திருக்கீங்கன்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்களே! அப்படியா கேபிள்?!?

ஜோசப் பால்ராஜ் said...

அந்த இசையமைப்பாளர் பெயர்லயே ஒரு நண்பர் உங்களுக்கு இருக்கதால தான் இந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சுருக்குன்னு சொல்லிக்கிறாங்களே? உண்மையா கேபிள் ?

முஹம்மது யூசுப் said...

வாழ்த்துக்கள் தலைவரே :)

Ravichandran Somu said...

வாழ்த்துகள்!!!

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் கேபிள்ஜி

பாடகர் அவதாரமும் எடுத்திட்டீங்க

கோவி.கண்ணன் said...

நல்வாழ்த்துகள் கேபிள்

Ŝ₤Ω..™ said...
This comment has been removed by the author.
Ŝ₤Ω..™ said...

உங்க முதல் பாடலை பாடவைத்த எம்பெருமான் செந்தில் ஆண்டவர், தம் அருளால் நீங்க இன்னும் நிறைய நிறைய பாடல்கள் பாட வாழ்த்துக்கள்...

பி.கு.:
கேட்பவர்கள் சங்கடப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல.

Julian Christo said...

Super Sir,

Kalakuringa, congrats.

Cheers
Christo

யுவா said...

வாழ்த்துக்கள்!!!

Indian said...

வாழ்த்துகள்!

Anonymous said...

dont miss to hear these

hear these songs...they r my favorites...you see them in youtube...if u like them u can download their mp3 format from these sites

http://www.mp3raid.com/ and
http://beemp3.com/


sadho re by agnee

http://www.youtube.com/watch?v=U5Gek6mspGk

kehn de ne naina by devika

http://www.youtube.com/watch?v=iK2eFmBvGpI


sagari rayn by rageshwari
http://www.youtube.com/watch?v=1NOGkFB-VoE

gracia la vida by violeta pera
http://www.youtube.com/watch?v=UW3IgDs-NnA


oul tani kda by nancy ajram

http://www.youtube.com/watch?v=4fIz87YX97w


in the mood for love movie- yumeji's theme
http://www.youtube.com/watch?v=23oBMOvt85o

toss the feathers by the corrs group
http://www.youtube.com/watch?v=KEJa_VgpIAc


lemon tree by fools garden
http://www.youtube.com/watch?v=uG0h1SrNKZ8

The Whisper Song by ying yang twins
http://www.youtube.com/watch?v=nYYjZeErFks

Unknown said...

'ராஜா' வோட பேர வச்சுருக்குற பிரபல பதிவரின் நட்புதான் இந்த வாய்ப்புக்குக் காரணம்னு மண்டபத்துல பேசிக்கிறாங்களே, உண்மையா கேபிள்?

Anyway, congratulations on the new dimension :))

CS. Mohan Kumar said...

வாழ்த்துகள் cable. Very happy to know this.

க ரா said...

வாழ்த்துகள்ணா !

blogpaandi said...

வாழ்த்துக்கள். ஆடியோ ரிலீஸ் ஆனதும் சொல்லுங்கள். நாங்களும் கேட்டு மகிழ்கிறோம்.

iniyavan said...

வாழ்த்துக்கள் தலைவரே!

இந்த மாதிரி சந்தோசமான விசயத்தை எல்லாம் போனிலோ ஒரு குறுஞ்செய்தியிலோ சொல்லி இருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பேன்.

iniyavan said...

உங்களுக்கான நேரம் வந்துவிட்டது தலைவரே. கலக்குங்கள்.

ராஜரத்தினம் said...

அது எப்படி super singer போட்டியில் கலந்துக்காமலே பின்னனி பாடகாரக முடியுமா? இதை நாங்கள் ஒத்துக்க மாட்டோம் - விஜய் டீவி உங்களிடம் பேசியது

Ganesan said...

ரொம்பவே சந்தோசம் கொண்டேன் வாழ்த்துக்கள்..

உங்க குருநாதர் புதுக்கோட்டையாருக்கும் வாழ்த்து சொல்லிடுங்க..

bandhu said...

congrats..

rajasundararajan said...

வாழ்க! வளர்க!

sugi said...

congrats youth! I couldnt hear ur voice(mandram vandha) properly in the link which u ve given..

Unknown said...

Happy to hear. congrats....

Unknown said...

தல... Jack of All Trades கேள்விப்பட்டிருக்கேன்... ஆனா, நீங்க உண்மையிலேயே Master of All Trades..

U Rock!!! :))))

அருண் said...

வாழ்த்துக்கள் தல,எப்போ ஆடியோ ரிலீஸ்? நாங்களும் கேக்கணும்.
-அருண்-

Indian Guru said...

Congrats Shankar ! I hope it is truth & not a short story which you used to write in an interesting manner......

Mahesh said...

Opportunities dont seem to be knocking doors these days.... they just carry you away !!!!!

Congrats Sankarji !!! After Abdulla, I guess you are the blogger-to-singer.

Appaji said...

மேலும் வளர வாழ்த்துக்கள் ...அப்பாஜி