
சைத்தான் என்பது நம் மனது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உலவும் சைத்தான்கள் எப்போது வெளிப்படுகிறானோ.. அப்போது நடக்கும் நிகழ்வுகளை யாராலும் கட்டுப் படுத்த முடியாது. தான்தோன்றி தனமாய் சுற்றும் பணக்கார இளைஞர், இளைஞிகள் ஐந்து பேரின் கதைதான் சைத்தான். ஏமி என்கிறவள் தன் தாயின் கோரமான மரணமும், அவளுடன் தன்னையும் சேர்த்து கொல்ல துணிந்த போது அடைந்த பாதிப்பினால் மனநிலையில் கொஞ்சம் பிரச்சனையோடு அலைபவள். அதை புரிந்து கொள்ளாத, பணக்கார தந்தை, இவளை சமாளிக்க முடியாத சித்தி. லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மும்பைக்கு மொத்த குடும்பத்தையும் மாற்றிக் கொண்டு வருகிறார் அவளது அப்பா.
பார்சி என்கிறவன் ஒரு ஹேப்பி கோ பையன். ஹோலிக்கு தன் உச்சாவை பிடித்து பலூனில் விட்டு கீழே ஆடும் மக்கள் மேல் அடிப்பவன். க்ரூப் தலைவன் தாஷ் ஒரு வெறி பிடித்த கொஞ்சம் கிரிமினலானவன். வளர்ந்து வரும் மாடல் தான்யா. எப்போதும் ஒரு விதமான குழப்பத்துடன் இருப்பவள். மற்றும் இரண்டு பேர். இந்த க்ரூப் பணக்கார அப்பாக்களின் வருமானத்தை எப்படி அழிப்பது என்பதை ப்ளான் போடு ஒழித்துக் கட்டிக் கொண்டிருப்பவர்கள். குடி, ஆட்டம், பாட்டம், போதை என்று எதிலேயும் இலக்கில்லாத பணக்கார இளைஞர்கள். போதையில் இவர்கள் போடும் ஆட்டத்தில் இறுதியாய் காட்டுத்தனமான வேகத்தில் ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர் மேல் வண்டியை மோதிக் கொல்கிறார்கள். விசாரணையில் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்ட இன்ஸ்பெக்டர் கேஸிலிருந்து காப்பாற்ற 25 லட்சம் கேட்கிறான். இவ்வளவு பணத்துக்கு எங்கே போவது? என்று குழம்பிக் கொண்டிருக்கும் போது இவர்களுக்கு ஒரு ஐடியா உதயமாகிறது. ஏமியை கடத்திவிட்டதாக பொய் சொல்லி பணத்தை மிரட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று ப்ளான் போட்டு கிளம்புகிறது இந்த குரூப். சாத்தானின் வேதம் ஓத ஆரம்பிக்க.. அதன் பிறகு நடக்கும் விஷயங்கள் எல்லாம் அதகளம் தான்.
படத்தில் வரும் ஓவ்வொரு கேரக்டரும் சரியான கேஸ்டிங். ஏமியாக வரும் கல்கியின் நடிப்பு வெகு ஆப்டாக இருப்பது மட்டுமில்லாமல் மனநிலைக் குழப்பத்தோடு இருக்கும் ஸ்பாயில்ட் ப்ராட் பெண்ணை கண் முன்னே காட்டியிருக்கிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டராய் வரும் ராஜீவ் கண்டேவாலின் நடிப்பு நச். வீட்டின் மனைவியோடு விவாகரத்து ப்ரச்சனையுடன் இந்த கேஸை அணுகும் விதம், பாயுமிடத்தில் பாய்ந்தும், சட்டிலான இடங்களில் அடங்கி வாசிப்பதும் மீண்டும் தான் ஒரு நல்ல நடிகன் என்பதை நிருபித்திருக்கிறார். இவரின் நடிப்பை ஆமீர் படத்தில் பாருங்கள். மனுஷன் பின்னியிருப்பார். இப்படி படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டருக்கும் துல்லியமான ஒரு கேரக்டரைசேஷனை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.


படத்தின் மிகப் பெரிய அசெட் நம் மதியின் ஒளிப்பதிவு. முக்கியமாய் “கோயா..கோயா சாந்த்” ரீமிக்ஸ் பாடலின் போது வரும் விஷுவல்களும், அதன் தொடர் காட்சிகளையும், எடிட்டிங்கையும், ஆக்ஷன் கொரியோகிராபியையும் பாருங்கள். சினிமாவை எவ்வளவு உற்சாகமாய், அனுபவித்து வேலை செய்திருக்கிறார்கள் என்று புரியும். மொட்டை மாடியிலிருந்து கீழேயுள்ள ஸ்விம்மிங் ஃபூலில் கல்கியை தள்ளிவிடும் காட்சி விஷுவல் ப்யூட்டி. இசை படத்தில் ஒரு கேரக்டராகவே வலம் வருகிறது.
டெக்னிக்கலாகவும் சரி, கதை, திரைக்கதையும் சரி.. நல்ல டீடெயிலிங். எழுதி இயக்கிய பிஜோய் நம்பியாரை பாராட்டத்தான் வேண்டும். முதல் படத்துக்கான அறிகுறியேயில்லாமல் தான் ஒரு தேர்ந்த இயக்குனர் என்று நிருபித்திருக்கிறார். கல்கி அவளுடய அப்பாவுடன் பேசும் காட்சிகள், நண்பர்களுடனான காட்சிகளின் வசனங்கள். அந்த கோயா கோயா சாந்த் பாடலின் பின் வரும் காட்சிகள் என்று அசத்தியிருக்கிறார். முழுக்க முழுக்க ஆரண்ய காண்டம் போல் இது ஒரு இயக்குனரின் படம். குறையாய் சொன்னால் க்ளைமாக்ஸுக்கு முன் வரும் தொடர் கொலைகளும், அதன் பின் வரும் காட்சிகளூம், இன்ஸ்பெக்டர், அவருடய மனைவிக்கான காட்சிகளில் பெரிய இம்பாக்ட் இல்லாததும் தான்.
Shaitan - A Must See Film

Shaitan - A Must See Film
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
13 comments:
வடை எனக்கே!!! மீ த ஃபர்ஷ்டேய்!!!
எடுத்துக்கோ.. கடிச்சிக்கோ.. வடை நல்லா துன்னுக்கோ.. :)
அப்போ ரெண்டாவது ஓட்டவடை எனக்கு.
ookee apapa kaila vachu suthunga..:)
அருமையான விமர்சனம் கேபிள் சார். மொதல்ல ஆரண்ய காண்டம் பாக்கணும். அப்புறம் கிடைச்சா சைத்தான்.
//ஒரு பக்கம் தமிழில் ஆரண்ய காண்டம் என்றால் இந்தியில் இந்த ஷைத்தான். மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களும் கொஞ்சம் டார்க் வகைகளாக இருந்தாலும் இரண்டுமே அதனதன் தகுதிகளில் மைண்ட் ப்ளோயிங் என்று தான் சொலல் வேண்டும்.//
எல்லாம் ஆட்சி மாறினதால்தான். #மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் சங்கம்
இன்று என் வலையில்:
உச்சக்கட்ட இன்பம்
பாத்தா புரியுமா?????
//எல்லாம் ஆட்சி மாறினதால்தான். //
நிச்சயமா... அம்மா ஆட்சிக்கு வந்தா எல்லார் கைலயும் பணம் புழங்கும்.... குடும்ப ஆட்சில அதுக்கு வழியில்லை....
அம்மா ஆட்சில சில படங்கள்...எத்தன் - ஆவரேஜ் வெற்றி.
நிதியின் அழகர்சாமியின் குதிரை ஃபிளாப்
கடுப்பேத்துறிங்க பாஸ்... :-(
நிச்சயம் இந்த படம் பார்கணும் பாஸ். மேக்கிங் நல்லா இருக்குண்ணு டிரைலர் பார்க்கும்போதே தெரியுது..
ஆரண்யகாண்டம் இன்னிக்கு அல்லது நாளைக்கு நிச்சயம்.. !!
ethan average illai.. athai vida kizhe
அப்புறம் நிதிகளை தோளில் தாங்கும் வார்த்தைகள் காணோமே? அடுத்த கொத்து பரோட்டாவில்தானா?
ராஜ ரத்னம் இது இந்தி படம்.. போய் நீங்க அடுத்த வாரம் வாங்க.. மூடு இருந்தா எழுதறேன்.:)
கட்டாயம் இந்த படத்த பார்க்கணும்...
-அருண்-
Post a Comment