முன்னூறுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் மயில்சாமி. இவரது மகன் அருமைநாயகம் (எ) அன்பு, ராசு மதுரவனின் இயக்கத்தில் ”பார்த்தோம்… பழகினோம்” என்கிற புதிய படத்தில் கதாநாயகனாய் நடிக்கவிருக்கிறார். பூமகள் ஊர்வலம், பாண்டி, மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக போன்ற படங்களை இயக்கியவர் ராசு மதுரவன். நேசிகா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 5 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அருமைநாயகம் என்று கமல் சூட்டிய பெயரை இயக்குனர் சிகரம் சினிமாவுக்காக அன்பு என்று பெயர் சூட்டி வாழ்த்தியுள்ளார்.
எஸ்.கே
Comments
Good initiative. புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.