Thottal Thodarum

Jun 22, 2011

தமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா?- சினிமா வியாபாரம்.

தமிழ் சினிமா செத்துக் கொண்டிருக்கிறது என்று சினிமாவில் உள்ள பல பெரிய தலைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான புலம்பல்கள் ஒவ்வொரு ஆட்சியின் ஆரம்பத்திலும் எழுவதுதான் என்றாலும் இம்முறை கொஞ்சம் கூக்குரல் அதிகமாகவே இருக்கிறார் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில், இயக்குனர், தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கே.ஆர், கே.ஆர்.ஜி, தனஞ்செயன், ஆர்.கே.செல்வமணி,  ராஜேந்தர் ஆகியோர் பேசினார்கள். கே.ஆர். தமிழ் சினிமாவிற்கான வரி விலக்கு எடுக்கப்படக்கூடாது என்றும், இரண்டு க்ரவுண்டில் இருநூறு இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அமைப்பதற்கு சட்ட திட்டங்களை இலகுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். யுடிவி தனஞ்செயனோ.. சிறு முதலீட்டுப் படங்களை தயாரிப்பது ஒன்றும் பெரியதல்ல, ஆனால் அதை சந்தைப்படுத்துவதில் தான் சிக்கலே. குறைந்த பட்சம் ஒன்னரை கோடி விளம்பரம் மற்றும் மார்கெட்டிங்குக்கு இல்லாமல் படம் தயாரிக்கவே வரக்கூடாது என்றும் கூறினார். அவர் கூறியதும் முக்கியமான விஷயம்தான். டிஜிட்டல் தொழில் நுட்ப வளர்ச்சியால் படம் தயாரிப்பது கூட சுலபம். ஆனால் அதை சந்தைப்படுத்துதல் அவ்வள்வு எளிதல்ல. (விரிவாக தெரிய சினிமா வியாபாரம் படிக்கவும் :)) விளம்பரம்)


பெரிய படங்களைத் தவிர மற்ற படங்களுக்கு ஓப்பனிங்கே இல்லாமல் இருக்கிறது. சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை, அதற்கு காரணம் நிதி குடும்பத்தினர் என்ற குற்றச்சாட்டு இருந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி  சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்பது அதே நிலையில்தான் தொடர்கிறது. சரி அதை விடுங்கள் அப்படியே தியேட்டர் கிடைத்து படத்தை போட்டாலும் விளம்பரமில்லாத படங்களுக்கு கூட்டம் வராமல் பத்து பேர் பதினைந்து பேர் பார்க்கும் நிலையாகி இரண்டே நாளில் படத்தை காலி செய்கிறார்க்ள் தியேட்டரிலிருந்து.  பெரிய படங்களின் தொடர் விளமப்ரங்களால் அட்லீஸ்ட் ஒரு காட்சி, ரெண்டு காட்சியாவது ஓடுகிறது. சில தியேட்டர்களில் அடுத்த பெரிய படத்துக்காக, இவர்களின் படத்தை ஓட்டுகிறார்கள். ஏன் சின்ன படங்களுக்கு மக்கள் வருவதேயில்லை?. முதல் காரணம் தியேட்டர்களின் அனுமதிக் கட்டணம். ஆம் முக்கியமாய் அதுதான் மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க தடையாய் இருக்கும் முதல் தடங்கல்.

சென்ற அரசின்  ஆணைப்படி தமிழில் பெயர் வைத்த படங்களுக்கு வரியே கிடையாது என்கிற போது அதனால் பயனடைய வேண்டியவர்கள் யார்? மக்கள் தானே.. ஒரு காலத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன், காந்தி போன்ற படங்களுக்கு வரி விலக்களித்து வழக்கமாய் வாங்கும் டிக்கெட் விலையை விட அப்படங்களுக்கு வரி தவிர்த்து குறைவான விலையில் டிக்கெட் விற்பார்கள். அது எதற்கென்றால் வரியில்லாம குறைந்த விலையில் இன்னும் நிறைய மக்கள் தியேட்டரில் வ்ந்து படம் பார்க்க ஏதுவாக இருக்கும் என்பதற்காக. ஆனால் இங்கு நடந்ததென்ன? ஐம்பது ரூபாய் இருந்த டிக்கெட் விலை என்பது, நூறு என்றானது.  ஆமாம் தமிழக அரசின் சட்டப்படி சென்னையில் சிங்கிள் ஸ்கீரீன் தியேட்டர்களில் அதிகபட்ச விலை 50 ரூபாயும், அதற்கடுத்த படியாய் 30, 10 என மூன்று வகைகளான டிக்கெட்டுகள் அளிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தியேடர்களில் இந்த விலை கிடையாது குறைந்த பட்ச டிக்கெட் விலையே எழுபது, என்பது என்றானது. இரண்டு ஸ்கீரின் அல்லது மூன்று ஸ்கீரின்கள் உடைய மல்டிப்ளெக்சுக்கு முறையே 65, 50 10 என்றிருந்தது. மல்ட்டிப்ளெக்ஸ் அரங்கங்களுக்கு உணவுக்கூடத்துடன் இருக்கும் அரங்கங்களுக்கு 120 ரூபாயும், கட்டாயம் பத்து ரூபாய் டிக்கெட் ஒரு வரிசையாவது கொடுத்தாக வேண்டும்.  இதுதான் அரசின் விதி.

மல்ட்டிப்ளெக்ஸ் மட்டும்தான் இந்த வகையில் ஓரளவு நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவும் சென்னையில் உள்ள சத்யம், பிவி.ஆர். ஐநாக்ஸ் போன்றவர்க்ள் மட்டும்தான். மாயாஜால் போன்றவர்கள் டிக்கெட்டுடன் பாப்கார்ன் கோக் என்று கட்டாயப்படுத்தி புதிய படங்களுக்கான டிக்கெட் புக்கிங்கோடு என்பது ரூபாய் வரை வசூலித்து விடுகிறார்கள். இது அநியாயம். ஆனால் அதை கேட்க ஆளில்லை.  ஏனென்று கேட்டால் அப்போது சொன்ன காரணம் நிதிகளில் படங்கள் எல்லாம் அங்கேதான் வெளியாகிறது அதனால் கேட்க மாட்டார்கள் என்றார்கள். ஆனால் அதுவும் ஒரு மித்தான விஷயம்தான். ஆட்சி மாறியவுடன் தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் அறிவிப்பில்லாத விலையுர்வு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் சென்னையின் காசி தியேட்டரில் அதிகபட்சமாய் எழுபது ரூபாய் என்றிருந்த நிலை இப்போது 90 ரூபாய். உதயம் தியேட்டரில் ஆட்சி மாறியவுடன் அதிகபட்ச விலை 65 ரூபாயிலிருந்து 85 ரூபாய்.  தேவி திரையரங்கில் 10,85,95 என்றிருந்த நிலையிலிருந்து வெறும் 10,95 ஆகிவிட்டது. இந்த விலையுர்வை பற்றி எந்தவிதமான அரசாணைகள் பிறப்பிக்கபடவேயில்லை. இன்னும் ஏறாமல் இருப்பது மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்ட்ர்களின் விலைகளே.. அதுவும் விரைவில் ஏறும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

இன்றைக்கு திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் வயது சராசரியாக 15-35 வயதுக்குள் இருப்பவர்கள் தான். அதிலும் பெரும்பான்மையானவர்கள் கல்லூரி மாணவர்கள். இவர்களை கவரும் படங்கள் தான் இன்று திரையரங்கில் ஓடுகிறது. திரையரங்குகளின் ஆதீத கட்டண உயர்வைப் பற்றி கவலைப்படாமல் படம் பார்க்க வருபவர்கள் இவர்கள்தான். குடும்பஸ்தர்களுக்கு இன்றைய நிலையில் குடும்பத்தோடு படம் பார்க்க குறைந்த பட்சம் சுமாரான தியேட்டரில் அறு நூறு ரூபாய் இல்லாமல் முடியாது. எனவே இவர்களது ஆப்ஷன் திருட்டு டிவிடியாகவோ, அல்லது உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாகவோத்தான் இருக்கிறது.

இன்றைய கால கட்டத்தில் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாள் மூன்று வாரங்கள் தான் என்றாகிவிட்ட நிலையில், புதிய, சின்ன படங்களுக்கான கதி என்ன என்று யோசித்து பாருங்கள். படத்தைப் பற்றிய நல்ல ஒப்பீனியன் வரும் வரை தியேட்டர் பக்கம் காத்து தான் வாங்கும். திரையரங்கு உரிமையாளர்களே புதிய படங்களை போட்டு தியேட்டர் நடத்த முடியாமல் கஷ்டப்படுவதைவிட, பெரிய படங்களை நான்கு நாட்கள் இழுத்து ஓட்டி, அடுத்த பெரிய படத்துக்காக காத்திருப்பார்கள். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் ஆட்கள் வர மாட்டேன் என்கிறார்கள்  என்று புலம்புகிறார்களே தவிர, ஏன் வர மாட்டேன் என்கிறார்கள் என்பதை யோசிக்கவில்லை. பெரிய படங்களுக்கு வேண்டுமானால முதல் நாள் பார்த்தே ஆகவேண்டும் என்று டிக்கெட் விலையை பற்றி கவலைப்படாமல் மக்கள் அடித்துப் பிடித்து டிக்கெட் வாங்குவார்கள். ஆனால் அதே ஆர்வத்துடன் புதுமுகங்கள் நடித்த படத்துக்கு வாங்க மாட்டார்கள்.

நிதிகள் ப்ரச்சனை என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதற்கு மாற்றாய் சொல்வது. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை விட வேற்று மொழிப் படங்கள் தான் அதிகம் ஓடுகிறது என்கிற ப்ரச்சனையை முன் வைக்கிறார்கள். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்பிரச்சனை இல்லையா? என்று கேட்பவர்களுக்கு இப்போதாவது புரியும்.  இப்பிரச்சனை இப்போதல்ல, எப்போதுமே இருக்கும் பிரச்சனைதான். முன்பு சென்னை திரையரங்குகளில் கண்டிப்பாக வருடத்தில் இத்தனை மாதங்கள் தமிழ் திரைபடங்களை வெளியிட்டே ஆக வேண்டும் என்று அரசாஙக் சட்டமே நடைமுறையில் இருந்தது. அவ்வ்ளவு ஆங்கில, இந்தி படங்கள் சென்னையில் ஓடிக் கொண்டிருந்த காலகட்டங்கள் அவை. இப்போது உலகமயமாக்கல் காரணமாய் ஆங்கில திரைப்படங்கள் அங்கு வெளியாகும் காலத்திலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்படுகிறது. ஒரு பெரிய பட்ஜெட் ஆங்கிலப்படம் வெளியானால் தமிழ் நாட்டில் குறைந்த பட்சம் அறுபது முதல் என்பது திரையரங்குகள் தமிழ் டப் வர்ஷன் வெளியாகிறது.  விநியோக்ஸதர்கள் தமிழ் படங்களை  கூட  விலைக்கு வாங்குவதில்லை, ஆங்கில பெரிய பட்ஜெட் டப்பிங் படங்களை விலை குடுத்து வாங்கி வெளியிடும் நிலை இருக்கிறது. அதற்கு காரணம் மக்களிடையே அதற்கு கிடைக்கும் ஆதரவு.  சமீபத்தில் வெளியான எக்ஸ் மேன் திரைப்படம் சென்னையில் மட்டுமே சுமார் இருபது தியேட்டர்களில் ஓடுகிறது.

மக்கள் ஆதரவில்லாமல் எதுவும் நடக்காது. புதிய, சிறு முதலீட்டு படங்களை பார்பதை விட இம்மாதிரியான ஆங்கில டப்பிங் படங்களின் மேல் மக்களின் ஆர்வம் இருப்பதால் அதற்கான வியாபாரம் உருவாகிவிட்டது. அது போலத்தான் தெலுங்கு படங்கள். சென்னையில் சத்யம் தவிர தெலுங்கு படங்கள் அதுவும்  பெரும்பாலும் காலைக் காட்சியோ, அல்லது இரவுக்காட்சியாகவோ திரையிடப்பட்ட்டுக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்று ஆந்திராவில் வெளியாகும் நாளன்றே, சின்ன பட்ஜெட் படமென்றால் ஒரு தியேட்டரிலும், பெரிய பட்ஜெட் படமென்றால் குறைந்தது ஆறு தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள். காரணம் இப்படங்களுக்கான வசூல். தற்போதை நிலையில் தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களை தொடர்ந்து போடுவதற்கென்றே தியேட்டர்கள் இருக்கிறது. தெலுங்கு படங்கள் இங்கு வரி உண்டு. அது தவிர பெரும்பாலும் பழைய தியேட்டர், அல்லது செகண்ட் கிரேட் தியேட்டர்களில் தான் படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கான அனுமதிக் கட்டணம்  வெறும் ஐம்பது ரூபாய்தான். ஆம் ஏஸி, டிடிஎஸ்ஸுடன் சுமர்ரான இருக்கை வசதிகளுடனான அந்த திரையங்குகள் தமிழக அரசின் சிங்கிள் ஸ்கீரின் திரையரங்குக்கான உட்சபட்ச விலையைத்தான் வாங்குகிறார்கள்.  நீங்கள் நம்ப மாட்டீர்கள். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தெலுங்கு படங்களைப் பற்றி தெரியாதவர். இப்போது தெலுங்கு படங்களை காசினோவில் பார்பதை வழக்கமாக்கிவிட்டார். அதற்கு அவர் சொல்லும் காரணம் படத்தின் தரம் பற்றி மட்டுமில்லாமல், “சார்.. ஐம்பது ரூபாய்க்கு ஏசி போட்டு படம் காட்டுறான். பத்து ரூபாய்க்கு தண்ணி பாட்டி தர்றான். சீப்பா இருக்கு. படங்களும் நல்லாருக்கு” என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். பாருங்கள் முதலில் அவர் சொல்லும் காரணம் ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் என்பதுதான்.  இந்த தியேட்டர்காரர்களும் தில்லாலங்கடி செய்யத்தான் செய்கிறார்கள். அதாவது உட்சபட்ச டிக்கெட் விலைதான் ஐம்பது இருக்க வேண்டும் ஆனால் இவர்கள் எல்லா டிக்கெட்டு ஐம்பது ரூபாய்க்கு விற்பார்கள்.  ஆனாலும் ஐம்பது ரூபாய் தான் தமிழ்நாட்டில் ஒரு தெலுங்கு படங்க்ளுக்கான புதிய மார்க்கெட்டை உருவாக்கியுள்ளது என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். இன்றைக்கும் ஆந்திராவில் பிரசாத் போன்ற மல்ட்டிப்ளெக்ஸ்லில் எழுபது ரூபாய்க்கெல்லாம் தெலுங்கு படம் பார்க்க முடியும். ஒரு சிங்கிள் ஸ்கீரீன் தியேட்ட்ரில் நாற்பது ரூபாய்க்கு பால்கனியில் படம் பார்க்க முடியும். சினிமா அங்கு வாழ்பதற்கு காரணம் அதுவும் ஒன்று. இன்றளவில் அதிகமான திரையரங்குகள் கொண்ட மாநிலங்களில் முக்கியமான மாநிலம் ஆந்திரமும் ஒன்று.

டிக்கெட் விலை, அப்டேட் செய்யப்படாத தொழில் நுட்பம், ஒளி, ஒலி இருக்கை வசதிகள், வெளி மாநில, வெளிநாட்டு படங்கள் என்று ஏகப்பட்ட காரணங்கள் சொன்னாலும், டிக்கெட் விலை எனப்தை மட்டும் மனதில் வைத்து யோசித்தார்களேயானால் தமிழ் சினிமாவை சாவிலிருந்து மீட்கலாம்.

Post a Comment

21 comments:

jayaramprakash said...

nalla pokuthu.thodarnthu yezhuthunkal ji.

jayaramprakash said...

Heros sampalatha kuraithal yella prachanaikalum theernthu vidum.

Shankar said...

Very Good analysis...
it shld be noted by respective ppl...

Anonymous said...

சால பாக செப்பினாரு கேபிள் சார்!!

சிநேகிதன் அக்பர் said...

பெரும்பாலான மக்களின் ஆதங்கத்தை சரியாக பதிவு செய்துள்ளீர்கள்.

நன்றி பாஸ்.

ramalingam said...

ஏவிஎம் தியேட்டர் இன்னும் நேர்மையாக இருக்கிறார்கள். காசி மிகவும் மட்டம்.

பிரபல பதிவர் said...

//
தமிழ் சினிமா இனி மெல்லச் சாகுமா??///

இன்னைக்கி விஜய் பொறந்த நாள்... ஏதாவது உள்குத்து இருக்கா??

Anonymous said...

நான் 5 வருடங்களுக்கு முன் பெங்களூரில் இருந்த போது கன்னட படங்களுக்கு 30 ரூபாயும்(taxfree) , மற்ற மொழி படங்களுக்கு 40 ரூபாயும்(with tax ) வசூலித்தார்கள். இப்போது நிலைமை மாறி இருக்கலாம்.ஆனாலும் கன்னட படங்களுக்கு மற்ற மொழி படங்களை விட டிக்கெட் விலை குறைவே. இங்கு tax exemption மக்களை சென்றடையாமல் தியேட்டர் காரர்களே அனைத்தையும் அனுபவிக்கிறார்கள்.

நன்கு ஆராய்ந்து எழுதயுள்ளீர்கள்.

பிரபல பதிவர் said...

எந்த தொழிலிலும் பேராசைபட்டு குறுகிய சுய நல லாபத்திற்காக அந்த தொழிலின் நீண்ட கால வளர்ச்சியை நசுக்கும் நிதிகள், அம்பானிகளால் எந்த தொழிலும் தேக்கம் அடையத்தான் செய்யும்.... உண்ம‌யை சொல்லுங்க‌ள் நிதிக‌ள் சினிமாவில் நுழைய‌த்தானே வ‌ரிவில‌க்கு என்ற‌ மாஜிக்...

அம்மா ஆட்சியில் பட்ஜெட்டுக்கு தகுந்தார்போல் டிக்கெட் விலை என்பது உங்கள் ஆதர்ச அறிவு ஜீவியாலும் வரவேற்க்கப்பட்டாலும் அதன் பிறகு என்ன ஆனது...

மேலும் நான் 10 ரூபாய் டிக்கட்டில் சத்யத்தில் படம் பார்ப்பதை ஒருகாலத்தில் வழக்கமாக வைத்திருந்தேன்... அதன் அருகே வசித்த போது...

சீனு said...

முன்பெல்லாம் திருட்டு விசிடி பார்ப்பது தப்பு என்று பிதற்றிக் கொண்டிருந்தவன் நான். இப்போ தமிழ் படங்களை தியேட்டரில் பார்ப்பதே இல்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.

யோசித்து பாருங்கள். எந்திரன் போன்ற படங்கள் எங்கள் ஊரில் 50 நாட்கள் கூட ஓடவில்லை. காரணம், டிக்கெட் விலை 60. அதே படத்தை 20 ரூபாய்க்கு ஓட்டினால், குறைந்தது 100 நாட்கள் ஓடும். ஆனால், அதிக லாபம் குறைந்த நாட்களில் ஈட்ட வேண்டும் என்ற 'லாப வெறி' கொண்டு அடைந்தால், கடைசியில் சீன் படங்கள் தான் ஓட்டவேண்டியிருக்கும்.

sasibanuu said...

Well Said

பிரபல பதிவர் said...

இங்க பிவிஆர் காம்ளக்ஸ்ல பார்க்கிங் காசு கிடையாது....

சன்டே சிடி கார்டுக்கு... பெப்ஸி, பாப்கார்ன் ஃப்ரீ.. டிக்கெட் 100 ரூபாய்க்குள்ளதான்...

ஆனாலும் தமிழ் படத்துக்கு 10 பேர்தான் வர்றானுங்க.... இதுக்கு என்ன சொல்றீங்க...

இதே ஊர்லதான் எந்திரன் ஹவுஸ்ஃபுல்லா ஒடுனுச்சி.. அப்ப அத்தன பேர் இருக்கானுங்க... ஆனா மத்த படத்து வெளில வர மாட்டேங்கிறானுங்க... இவுனுகள என்ன பண்றது....

சீனு said...

@sivakasi maappillai,

இப்ப நீங்க சொல்லி தான் இந்த விஷயமே எனக்கு தெரியுது. எல்லோரும் திருடனுங்களா இருக்கும் போது இப்படியும் இருப்பது தெரியாது, இல்லையா?

சீனு said...

@sivakasi maappillai,

இப்ப நீங்க சொல்லி தான் இந்த விஷயமே எனக்கு தெரியுது. எல்லோரும் திருடனுங்களா இருக்கும் போது இப்படியும் இருப்பது தெரியாது, இல்லையா?

Ponchandar said...

நானிருக்கும் தென்காசியிலேயே அவன்- இவன் படத்துக்கு டிக்கெட் விலை 50, 70 மற்றும் 100 ரூ. குடும்பத்தோடு போனால் ஐநூறை தாண்டி விடுகிறது. வரிவிலக்கு மக்களை சென்றடைந்தால் தியேட்டருக்கு குடும்பஸ்தர்கள் வருவார்கள். கடைசியாக நான் குடும்பத்துடன் பார்த்த படம் - எந்திரன். மற்ற புது படங்கள் எல்லம் டொரண்ட் மூலம் பார்த்து விடுகிறோம்

விஜய் said...

இதில இன்னொரு விஷயம். திருச்சி நகரத்தில இருக்கிற தியேடர்களிலே ரம்பா காவேரி தவிர மற்றவைகளில் சீட் கழிவறை எதுவும் சரியிருக்காது. கொஞ்ச நேரத்திலே ஏசி அமத்திடுவாங்க..இந்த சுழலிலே எப்படி படம் பார்க்கிறது அதுவும் குடும்பத்தோட..இப்ப நம்ம நெட் கணக்ஷனை நேரா டிவில இணைச்சிட்டா நேரா நல்லா வீட்டு வசதியிலேயே புது படம் பார்க்கலாம் எனும் போது இந்த தியேட்டர் நிலையும் மிக முக்கியம்..

Rafeek said...

சென்னையின் தலையெழுத்து 120 என்றாலும் ஏசி, ஒலி, ஒளியில் திருப்தியே.. ஆனால் கும்பகோணம்,தஞ்சாவூர், பட்டுகோட்டை மாதிரி ஊர்களில்? டிக்கெட் 90 ஆனால் நோ ஏசி, நல்ல சேர் கிடையாது..பாத்ரூம் குப்பை.. சிகரெட் புகை..குடுப்பத்தோடு வந்தால்.. செத்தான்!!

a said...

Thala : Ullukkilla ivlo mettar irukka??

sarav said...

Dear cable sankar ,
The rates in the theaters are exorbitant. Earlier I used to watch 2 - 3 movies a day (hi hi ) if it is Sunday it is almost 3 or some times 4 shows . Because the ticket rates were cheap 2.40,2.90, 3.40 then later 2.90 , 3.40 , 4 then it become 2.90, 4, 5 even when it was 10, 12 and 5 I was watching movies with the same frequency . But now Rs 120 even in satyam is too high ( the above rates were prevailing in satyam also) with the advent of lates technologies theatre owners should think about the long run

SIV said...

தியேட்டர் கட்டனங்கள் மற்றும் தரம் சினிமாவை பாழ்படுத்திகொண்டு இருக்கின்றன என்று நீங்கள் கூறுவது உண்மை.

அதேபோல் திரைப்படங்களின் டிமாண்டை விட தயாரிப்பு அதிகம். மாதத்திற்கு 5 படங்கள் மட்டுமே வெளிவருகிறது என்று கொள்ளுங்கள். அனைத்துப் படங்களும் கவனிக்கப்படும். நல்ல படங்கள் ஓடும். (சில டுபாக்கூர் படங்களும் ஓடி விடும் தான்.)

சினிமா கவர்ச்சி காரணமாக தேவைக்கு அதிகமானோர் சினிமாவை தங்களின் தொழிலாக தேர்ந்தெடுப்பதும் குறைய வேண்டும்

Wanderer said...

இதை படித்தவுடன் உங்க நினைவு தான் வந்தது!

http://business.in.com/article/my-learnings/how-onir-got-money-through-facebook/26192/1

உங்க படம் எந்த அளவுல இருக்கு?