Thottal Thodarum

Jul 7, 2012

Eega - நான் ஈ

ஸ்டூடண்ட் நம்பர் 1, சிம்மாத்திரி, சை, சத்ரபதி, விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா, மரியாதை ராமண்ணா, தற்போது ஈகா, இது தவிர, ராஜண்ணா என்கிற படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு மட்டுமான இயக்குனர் அவதாரம் வேறு. தொடர்ந்து இரண்டு படங்கள் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயமாய் இருக்கிற காலத்தில் எட்டுப்படங்கள் ஹிட் கொடுத்து, ஒன்பதாவது படமும் ஹிட்டென்றால் எஸ்.எஸ்.ராஜமெளலியைப் பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. தெலுங்கு பட உலகின் முடி சூடா மன்னன், கலெக்‌ஷன்கிங் என்றெல்லாம் பேசப்படுபவர். இந்த ஈகாவின் பட்ஜெட் சுமார் முப்பது கோடி.


கதை என்று பார்த்தால் மிகச் சாதாரணமான கதைதான். தான் விரும்பும் பெண் வேறு ஒருவனை காதலிக்கிறாள் என்பதால் அவனை கொல்கிறான் வில்லன். காதலன் ஈயாய் மறுபிறவி எடுத்து வில்லனை எப்படி அழிக்கிறான் என்பதுதான் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில்தான் மனுஷன் நின்று ஜெயித்திருக்கிறார். திரைக்கதையில், மேக்கிங்கில், எனறு ஆரம்பித்து ஒவ்வொரு டிபாட்மெண்டிலும் மனுஷனின் உழைப்பு தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
காதலனாய் நானி. இதுவரை இவரின் நடிப்பை பார்த்தவரையில் இவ்வளவு எனர்ஜிடிக்காய் நடித்துப் பார்த்ததில்லை. இவருக்கும் சமந்தாவுக்குமான காதல் காட்சிகள் ஹாப்வேயில் ஆரம்பித்து சட்டென முடிந்துவிடுகிறது என்றாலும், படம் நெடுக நானியின் ப்ரெசென்ஸ் இருப்பதைப் போலவே உணர வைத்ததில் இயக்குனரின் பங்கு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு நானியின் பங்கும் இருக்கிறது. காதல் காட்சிகளில் சமந்தா அலைய விடும் போதெல்லாம் அதை பாசிட்டிவான விஷயமாய் மாற்றி பேசும் இடங்களில் எல்லாம் காதல் இயல்பாக நிகழ்கிறது. சாட்டிலைட் டிஷ்ஷையும், டார்ச் லைட், ரிப்ளெக்டர் பேப்பரை வைத்து கரண்ட் கட்டின் போது லைட் கொடுக்கும் ஐடியாய் சினிமாத்தனமாய் இருந்தாலும், க்யூட். அது போல ரெண்டு வருஷமா அவ பின்னாடி சுத்துறே.. இப்பபாரு அவளுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டு, லைட்டெல்லாம் போட்டு இருக்கே அவ கண்டுக்காம ஜன்னலைச் சாத்திட்டு தூங்கப் போயிட்டா? அவ உன்னை காதலிக்கவேயில்லை என்று நண்பன் சொல்ல, அதற்கு நானி, இல்லைடா அவ என்னை ரொம்பவே காதலிக்கிறா.. இப்ப கதவை சாத்தினது எதுக்குன்னா. ஒரு வேளை சாத்தாம போயி நான் அவளுக்காக இங்கேயே நின்னுட்டு இருந்தா ராத்திரி பனியில நனைஞ்சு உடம்பு சரியில்லாம போயிருமேன்னுட்டுத்தான் கதவ சாத்தி அவ தூங்க போறத சொல்லி என்னையும் தூங்கச் சொல்லுறா என்று சொல்வதும், அதை சமந்தா படுத்தபடியே கேட்டு புன்னைகைப்பதும் அதை விட செம க்யூட்.

சமந்தா படம் நெடுக மலர்ந்த பூவைப் போல ப்ரெஷ்ஷாக இருக்கிறார். அதிலும் நானியின் காஉலதலை டீஸ் செய்யும் காட்சிகளில் அவர் கண்களில் தெரியும் குறும்பும், காதலும் நன்றாக இருக்கிறது.
இவர்களை விடவும் பாராட்டப்படவேண்டிய ஒருவர் யாரென்றால் படத்தின் வில்லனாய் இருந்தாலும், ஹீரோவாக வலம் வந்து தன் சிறந்த நடிப்பால் நம்மை கட்டிப் போடும் சுதீப்தான். கண்களில் தெரியும் வில்லத்தனம், காமம், அடையத் துடிக்கும் வெறி, ஈயினால் பாதிப்பு வந்துவிடுமோ என்று கண்களில் தெரியும் பயம், என்று மனுஷன் பிய்த்து உதறியிருக்கிறார். அதிலும் முழுக்க முழுக்க, சிஜியில் ஈ எங்கேயிருக்கிறது என்று உத்தேசமாய் நடித்து ரியாக்ட் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. க்ரேட் பர்பாமென்ஸ்.
படத்தின் முக்கிய ஹீரோக்கள் மூன்று பேர், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இசையமைப்பாளர் மரகதமணி, சிஜி செய்த மேக்ஸிமா குழுவினர். அற்புதமான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார் செந்தில். அதே போல இரண்டே பாடல்கள்தான் படத்தில் முழுவதுமாய் வருகிறது. மற்ற பாடல்கள் பின்னணியிசையாய் உபயோகித்திருப்பது சுவாரஸ்யம். செகண்ட் ஹாப்பில் நானி ஈயாய் மாறி சுதீப்பை துறத்த ஆரம்பித்ததும், வரும் பின்னணி இசை அட்டகாசம். அதே போல ஆரம்பக்காட்சியில் ஈ யின் சிஜி கொஞ்சம் ப்ளாஸ்டிக்காய் தெரிந்தாலும், போகப்போக, அது ஒரு கேரக்டராய் மாறி ஹீரோயினிடம் வசனமாய் இல்லாமல் ஆக்‌ஷனிலேயே பேசும் போது நாமும் இன்வால்வ் ஆவதிலேயே அவர்களின் வெற்றி தெரிந்து விடுகிறது.  எனக்கு தெரிந்து சமீபத்தில் முழுக்க முழுக்க, சிஜியிலேயே எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் நல்ல உழைப்பு என்று சொல்லக்கூடிய படங்களில் சிறந்ததாய் ஈகா இருக்கும்.

எஸ்.எஸ்.ராஜமெளலி தான் ஒர் மாஸ் எண்டர்டெயினர் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். சின்னச்சின்ன வசனங்களாலேயே படத்தில் வரும் கேரக்டர்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. “நீங்க எத்தனை மணிக்கு வருவீங்க?' “உங்க டைமுக்கு” என்பது போன்றவை உதாரணங்கள். படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் கேரக்டர்களின் ப்ரச்சனைகளைச் சொல்லி, அடுத்தடுத்து நம்மை ஆகர்ஷிக்க, சுவாரஸ்ய பின்னல்களை முடிக்கிவிட்டபடியே இடைவேளையின் போது நம்மை நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறார். மிக சாதாரணக்கதையை எப்படி சுவாரஸ்யமாய் சொல்வது என்பது அவருக்கு கை வந்த கலை. அதை இதில் இன்னும் மெருகோடு செய்திருக்கிறார். ஒரு ஈயை வைத்து எப்படி ஆறடி மனிதனை அழிக்க முடியும் என்பதை பற்றி கொஞ்சம் லாஜிக்கலாய் யோசித்தால் சப்பென்று இருக்கும். ஆனால் அதை வித்யாசமான ஐடியாக்களோடு நம்மை சில இடங்களில் சீட்டு நுனிக்கே கொண்டு வரும் காட்சிகள் சூப்பர். அதே தமிழில் சந்தானம் செய்திருக்கும் கேரக்டரில் வேறு ஒரு நடிகர் தெலுங்கில் செய்திருக்கிறார். அந்த சின்ன காமெடி ட்ராக்கை படம் முடிந்து டைட்டில் கார்டில் முடித்திருப்பது சுவாரஸ்மான காமெடி. அதே போல சமந்தாவை எதற்காக மினியேச்சர் ஆர்டிஸ்ட் கேரக்டராய் வடிவமைத்தார் என்று யோசிக்கும் போது அதை பயன்படுத்திய விதத்தைப் பார்த்ததும் அட என்று கைதட்ட வைக்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால் நானி, சமந்தாவின் காதல் இன்னும் கொஞ்சம் டெப்தாய் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.மீண்டும் ஈயாகவே  பிறப்பெடுப்பது, என்பது போன்ற விஷயங்கள்.அது மட்டுமில்லாமல் இரண்டாவது பாதியில் ஆங்காங்கே  கொஞ்சம் லேக் இருந்தாலும், அதைல்லாம் ஒரு பொருட்டேயில்லை என்பது போல க்ளைமேக்ஸில் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கும் இபப்டம் நிச்சயம் தென்னிந்திய சினிமாவைத்தாண்டி வெற்றியடையப் போவது உறுதி.

ஈகா (எ) நான் ஈ = மாஸ் எண்டர்டெயினர்





Post a Comment

68 comments:

muthu123 said...

suberb film na. but padathuku ads kamminu thonuthu. nalla advertise panna periya hit aagum.

வவ்வால் said...

கேபிள்ஜி,

//. அதிலும் முழுக்க முழுக்க, சிஜியில் ஈ எங்கேயிருக்கிறது என்று உத்தேசமாய் நடித்து ரியாக்ட் செய்வது அவ்வளவு சுலபம் அல்ல. க்ரேட் பர்பாமென்ஸ்.//

அரைகுறையான ,ஆர்வக்குட்டித்தனம் என்பது இது தான் :-)))

சாதாரணமாக டபுள் ஆக்‌ஷன் படத்திலேயே இன்னொரு கேரக்டர் எங்கே இருக்குன்னு தெரியாம தான் நடிக்கணும், கறுப்பு வெள்ளை உத்தம புத்திரன் காலத்திலேயே இதை எல்லாம் நன்றாக செய்தாச்சு.இப்போ போய் புதுசா கண்டுப்பிடிக்கும் உங்க ஞானத்தை என்னானு சொல்ல :-))

ஒரு பேகான் ஸ்பிரே, ஹிட் அடித்தா காலியாகும் ஈக்கு இத்தனை அலப்பரையும், அதை லாஜிக்கே இல்லாமல் பார்க்கவும் கொல்டி கூட்டத்தால் மட்டுமே முடியும், தமிழில் சின்னப்பசங்க பார்த்து ஓடினால் உண்டு.

Suthershan said...

நான் ராஜமௌலி படங்களின் மிகப்பெரிய விசிறி. CG ஐ மிக சரியாக உபயோகிக்க கூடிய டைரக்டர்களில் இவர் முக்கியமானவர். விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பதில் சிறந்தவர். இந்த வாரம் பார்த்திட வேண்டியது தான்..

ம.தி.சுதா said...

அண்ணா,
இந்த படம் இன்னும் பார்க்கவிடினும் ராஜமௌலியின் ஏனைய சல படங்களை பார்த்திருக்கிறேன் அதன் மூலம் அவரது கதை நகர்வில் நலல நம்பிக்கை இருக்கிறது...

Cable சங்கர் said...

vavval.. சினிமாவைப் பற்றி வீடியோவில் மட்டுமே மேக்கிங்கை பார்த்து சினிமா தெரிந்துவிட்டதாய் நினைத்து பின்னூட்டமிடும் உங்களின் முட்டாள்தனமான, ஆர்வக்குட்டித்தனத்தை என்னவென்று சொல்வது.

மதுமிதா said...

///ஒரு ஈயை வைத்து எப்படி ஆறடி மனிதனை அழிக்க முடியும் என்பதை பற்றி கொஞ்சம் லாஜிக்கலாய் யோசித்தால் சப்பென்று இருக்கும்///

சப் படத்தை சுவாரஸ்யமா எடுத்திருக்கிறாங்களா. மூன்று மொழிகளில் வெற்றிப்படமாகும்னு வேற சொல்லியிருக்கிறீங்க. அப்போ படம் பார்த்திடலாம் போலிருக்கே...

Ravikumar Tirupur said...

படம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

shortfilmindia.com said...

@ravikumar tiruppur

நான் குழந்தைத்தான்.. :))

kumar said...

Mega Entertainer really superb and fantastic fantasy film....

Sathish said...

பில்லா ரிலீஸ் ரெண்டு வாரம் தள்ளி போடுங்க பாஸ், ஒரு டப்பிங் படம்கிட்ட அடிவாங்கிட போகுது !!

நான் ஈ - மாஸ் இயக்குனரின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் !

http://sathivenkat.blogspot.in/2012/07/blog-post.html

யுவகிருஷ்ணா said...

//vavval.. சினிமாவைப் பற்றி வீடியோவில் மட்டுமே மேக்கிங்கை பார்த்து சினிமா தெரிந்துவிட்டதாய் நினைத்து பின்னூட்டமிடும் உங்களின் முட்டாள்தனமான, ஆர்வக்குட்டித்தனத்தை என்னவென்று சொல்வது.//

”எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்”னு சின்னத்தம்பி படத்துலே ஒருத்தரு அலைஞ்சிக்கிட்டிருக்கறாமாதிரி இவரும் கொஞ்சம் அலைஞ்சிக்கிட்டிருக்கட்டுமே கேபிள்? பாவம். உட்டுடுங்க :-)

வவ்வால் said...

கேபிள்ஜி,


மோஷன் கண்ட்ரோல் ரிக், புளுமேட்ல எல்லாரும் வழக்கமாக செய்வது தான். நல்லவேளை ஆஸ்கார் கொடுக்க சொல்லவில்லை :-))

எதாவது படத்தில ஓடுற ரயிலை ஒத்தக்கையால நிறுத்துறா போல சீன் வரும் ,ஆஹா என்னமா கஷ்டப்பட்டு ரிஸ்க் எடுத்து நிறுத்தினார்னு அடுத்து பாராட்டுங்க :-))

எதையாவது சொல்லிப்பாரட்டணும் என சொல்லிவிட்டு , மாட்டிக்கிட்டதும் , அடுத்தவங்களை முட்டாள் என சொல்லுங்க :-))

உலக சினிமா டிவிடி பார்த்துட்டு பில்ட் அப் கொடுப்பதை விட மேக்கிங் டிவிடி பார்த்துவிட்டு சொல்வது ஒன்றும் பிழையில்லை. :-))

-----
லக்கி,

சந்துல சிந்து பாட கழக கண்மணிக்கு சொல்லியா தரணும் :-)) ,

ஆனாலும் டைமிங் சரியா வரலை பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-))

வவ்வால் said...

கேபிள்ஜி,

நீங்க சொல்றது போல எல்லாம் பார்த்தா லோகநாயகருக்கு தசாவதாரத்திற்கு "சிறந்த நடிப்புனு" ஒரு சிறப்பு ஆஸ்கர் கொடுத்து இருக்கணும், நான்கைந்து கேரக்டர்களை ஒரே காட்சியில் வைத்து "இமேஜின்" செய்து தான் நடித்து இருப்பார்,சிஜி கேரக்டர்(அ) மல்டி ரோல் கேரக்டர் எல்லாம் ஒரே அணுகுமுறையே.ஆனால் தேசிய விருது கூட கொடுக்கவில்லை . ஏன் எனில் அப்படி நடிப்பதெல்லாம் பெரிய விஷயம் அல்லனு உண்மையான கிரிட்டிக்ஸ்க்கு தெரியும் என்பதால், , நடிப்பில் மற்ற பரிமாணங்களை காட்டினாலே "கண்டுக்கொள்வார்கள்".

அருண் said...

சை,விக்ரமார்க்குடு, யமதொங்கா, மஹதீரா
இதெல்லாம் பார்த்தாச்சு,நான் ஈ பார்த்துற வேண்டியது தான்.
-அருண்-

யுவகிருஷ்ணா said...

வவ்வால்ஜி!

சரியா வராமயா, இப்படி பொங்கிப் பொங்கி பொங்கல் வெச்சுக்க்கிட்டிருக்கீங்க.

நீங்களே நினைச்சுக்கிட்டிருக்கிற உங்க புத்திசாலித்தனத்தை யாராவது புதுப்பசங்க கிட்டே போய் காட்டுங்க. அட்லீஸ்ட் கையாவது தட்டுவாங்க.

R. Jagannathan said...

So far, every review speaks very well of the film. It seems a film not to be missed.

There is always one response to all your blogs either in sarcasm or in jealousy. And you are also responding to it - to make the comments section longer! I am wondering if the reader is your alter-ego! Do you write them yourself to respond strongly?

-R. J.

குரங்குபெடல் said...

"வவ்வால் said...
அரைகுறையான ,ஆர்வக்குட்டித்தனம் என்பது இது தான் :-)))"

"Cable சங்கர் said... vavval.. சினிமாவைப் பற்றி வீடியோவில் மட்டுமே மேக்கிங்கை பார்த்து சினிமா தெரிந்துவிட்டதாய் நினைத்து பின்னூட்டமிடும் உங்களின் முட்டாள்தனமான, ஆர்வக்குட்டித்தனத்தை என்னவென்று சொல்வது."

"யுவகிருஷ்ணா said...

”எனக்கு கல்யாணம் எனக்கு கல்யாணம்”னு சின்னத்தம்பி படத்துலே ஒருத்தரு அலைஞ்சிக்கிட்டிருக்கறாமாதிரி இவரும் கொஞ்சம் அலைஞ்சிக்கிட்டிருக்கட்டுமே கேபிள்? பாவம். உட்டுடுங்க :-)"





என்ன இது ஈ ன்னு வந்தா

ஒரே கொசுக்கடியா இருக்கு . .

அண்ணே வௌவால் அண்ணே விடாதிங்க . .

வவ்வால் said...

லக்கி,

//நீங்களே நினைச்சுக்கிட்டிருக்கிற உங்க புத்திசாலித்தனத்தை யாராவது புதுப்பசங்க கிட்டே போய் காட்டுங்க. அட்லீஸ்ட் கையாவது தட்டுவாங்க.//

இதெல்லாம் நெட்ல சுட்டு பத்திரிக்கையா போட்டு காசு பண்றவங்களுக்கு தான் புரியும் :-))

யுவகிருஷ்ணா said...

ரொம்ப முத்திப் போறதுக்கு முன்னாடி ட்ரீட்மெண்ட் க்ரீட்மெண்ட் எடுத்துக்கக் கூடாதூங்களா வவ்வாலு சார்? :-)

வவ்வால் said...

லக்கி,

ஆளப்பிறந்தவன்னு சொல்லிக்கிட்டு திரியும் அளவுக்கு எனக்கு இன்னும் முத்திப்போகவில்லை :-))

ஓடுங்க அந்த கொடுரமான மிருகம் வருதுன்னு "கிங்காங்க்" படத்துல ஃபீல் செய்து கத்திக்கிட்டு ஓடுறவங்க கிரேட் பெர்ஃபார்மென்ஸுக்கு ஏன் ஆஸ்கர் தரலைனு நீங்களாவது சொல்லுங்க சார் :-))

யுவகிருஷ்ணா said...

வவ்வால் சார்! ஒழுங்கா டைமுக்கு தூங்குங்க. எல்லாம் சரியாப் போயிடும். உளவியல் நோயெல்லாம் இப்போ சகஜம்தான். முறையான மருத்துவமும், ஆலோசனைகளும் உங்களை நிச்சயம் நெறிப்படுத்தும். இதுக்கெல்லாம் கலங்கிடாதீங்க.

எங்க ஊர்லே கூட முன்னாடி ஒருத்தன் உங்களை மாதிரியேதான் இருந்தான். அவனுக்கு உலகத்துலே தெரியாத மேட்டரே இல்லை. என்ன எல்லாத்தையும் சரியா தப்பா உங்க டைப்புலேயே பேசுவாரு. சிகிச்சைக்குப் பிறகு அவர் நல்லாதாங்க இருக்காரு. ஒய் நாட்? நீங்களும் முயற்சிக்கலாமே?

வவ்வால் said...

லக்கி,

ரொம்ப நல்ல மனசு, எங்க ஊருல ஒருத்தர் அவர் தான் ராஜ ராஜ சோழன் வாரிசு நாட்டை ஆளப்பிறந்தவன்னு சொல்லிக்கிட்டு, அடுத்த சி.எம் ஆகப்போறதா சொல்லிக்கிட்டு இருந்தார் ,ஏர்வாடில சங்கிலியில எல்லாம் கட்டிப்போட்டுப்பார்த்தாங்க, அங்கே இருந்து தப்பிச்சு ஓடி சென்னையில மஞ்ச துண்டு மகான் கிட்டே சிஷ்யரா சேர்ந்து ,நாட்டை ஆள திட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறதா கேள்வி, எங்கேயாவது பார்த்தா சொல்லுங்க,டிரீட்மெண்ட்கொடுத்து சரி செய்யலாம், ஏதோ நம்மால ஆன உதவி :-))

யுவகிருஷ்ணா said...

வவ்வால் சார்! சிரிப்பான்தானே போடுறீங்க? அதை ஏன் சார் அழுதுக்கிட்டே போடுறீங்க. நீங்க முட்டாள்னு நான் மட்டுமில்லை இப்போ கேபிளும் கண்டுபிடிச்சிட்டாருன்னா?

விடுங்க சார். வேற எங்கிட்டாவது உங்களுக்கு பிக்கிளாக்கா பசங்க மாட்ட மாட்டாங்களே? அங்கிட்டுப் போயி உங்க புத்திசாலித்தனத்தை காமிச்சி சபாஷ் வாங்கிக்கோங்க.

எதுவுமே தெரியாது. ஆனா எல்லாம் தெரியும்னு இதெல்லாம் ஒரு பொழைப்பு :-)

வவ்வால் said...

லக்கி,

ரொம்ப டென்சன் ஆகிட்டிங்கன்னு தெரியுது, கண்ணுலாம் செவந்து போச்சு போல, இதுக்கு மேல நான் கலாய்ச்சா அழுதுடுவிங்க போல இருக்கு.u reached u'r breaking point , go and relax with chilled beer!

நாம என்ன 2ஜி ல காசு சேர்த்தா வச்சு இருக்கோமா, நல்லா பொழைச்சுக்க :-))

வருண் said...

நான் என்னவோ நான் மட்டும்தான் ஒருத்தர் தான் பெரிய மேதைனு சொல்லிக்கிட்டே பின்னூட்டமிடுறாருனு நெனச்சேன். ஆனா, இங்கே வந்து பார்த்தால்தான் உலகமே என்னைப்போலவே எரிச்சல் அடைகிறதுனு தெரியுது.- பகவான் "நடராஜன்" தவிர்த்து.

ஆமா, "ஜி"னா என்ன அர்த்தம்? யாரையாவது கவிழ்த்தப் போடும் அடைமொழியா? தமிழன் வடமொழியை "abuse" பண்ணுறான் என்பதற்கு உதாரணம் போல.

கேபிள் சங்கர்: உங்களை "ஜீ"னு சொல்லி ஏமாத்தப் பார்த்தாலும், அதுக்கு விழாமல், பூசிமொழுகாமல் உங்க நேரடி பதில்களுக்கு நன்றி!

குரங்குபெடல் said...

பின்னூட்டங்கள் அபாரம் . .

கேபிள்ஜி,

வவ்வால்ஜி!

யுவ ராசாஜி sorry கிருஷ்ணாஜி!

வாழ்க . . . 3G

unmaiyalan said...

"'முரட்டுக்காளை " ல நடிச்சிக்கிட்டு இருந்தப்ப ரேக்ளா ரேஸ் ஓட்டி தவறி விழுந்து கால்ல ப்ராக்சர்.இனி கொஞ்ச நாள் அலட்டிக்காம இருங்கன்னு உக்கார வச்சுட்டாங்க.சும்மா இருந்தப்ப மனசுக்குள்ள ஒரு பொறி தட்டி கதையா உருவெடுத்தது.இங்கே சூட்டிங் ஒரு ரெகுலர் ப்ராசஸ்தான்.ஆனா அதுக்கேத்த ஸ்க்ரிப்ட் அமைஞ்சு,அத பிளான் பண்ணுறதுதான் மிகப்பெரிய வேலை.
மனசுக்குள்ள ஒரு கதை வடிவமெடுத்திச்சுன்னா அதை முடிக்காம தூக்கம் வராது.அதனால நடிக்க வந்த ரெண்டு மூணு வாய்ப்புகளை 'கொஞ்சம் பொறுங்க'ன்னு தள்ளி வச்சிட்டு பர பரன்னு காரியத்தில இறங்க்கிட்டன்.." -சுந்தர்.சி - குங்குமம் 16-04-2012 ல்

Soul Kitchen ஒரு அருமையான, ஜாலியான, இசை நிறைந்த படம். அதனை கிறுக்குத்தனமாகத் திருடியதால், கலகலப்பு ஒரு அரத மொக்கைப் படமாக ஆகிவிட்டதுதான் நிஜம்.
Soul Kitchen படத்தை
இன்ச் பை இன்ச் காப்பி அடித்து படத்தை எடுத்துட்டு ......அடுத்தவரை குறை சொல்லும் கேபிள் ஜி ..இது நியாயமா ?........

வவ்வால் said...

ஹா ..ஹா எல்லாருக்கும் பதிவுக்கு தான் ஃபாலோயர்ஸ் இருப்பாங்க ,நமக்கு பின்னூட்டத்துக்கே ஃபாலோயர்ஸ் இருக்காங்கப்பா :-))

------

ஓய் உண்மையாளன் ..அடுத்த முட்டாள் பட்டம் வாங்க ஏன்யா இவ்ளோ அவசரப்படுற...நிகர்நிலைப்பல்கலைகழக வேந்தர் லக்கி வந்தார்னா இன்னும் சில பல பட்டங்களை கொடுப்பார் ..கொஞ்சம் வெயிட் செய்யப்பா :-))

R. Jagannathan said...

It is preferred to have healthy discussions here. Even if one doesn't agree with the other, it can be expressed with no malice. Sarcasm is ok to some extent but if it leads to washing dirty linen, it should be avoided. It is not a literary debate in these sort of comments and counters. If one has a biased opinion of the other, no amount of explanations can convince one. Try humour and not hitting below the belt. - R. J.

NAGARAJAN said...

You have not mentioned anything about Crazy Mohan dialogues. Is it upto the mark?

Cable சங்கர் said...

மிஸ்டர் உண்மையாளன். நீங்க குறை சொல்லிட்டு போங்க.. என்ன இப்ப?

vijay.s said...

Boss,

Being a reader n follower of your blog for years together, I have enjoyed reading. I should admit this first. Reviews for movies like eeram in 2009, made me search Internet vigorously (I was in Saudi by then) and wanted to see that movie somehow. Off-late, recently I felt that your reviews are suppudu-ism kind of thing, not from a viewer perspective n only from critic point of view. But, after reading and seeing saguni, I felt 100% of your words. Now, I want to see naan e. leave ppl who want to hang upside down. Can't change, just move on. Let them grow up and come back :) but, being a reader and follower I always expect ur reviews to be from a cinema rasigan n not a vimarsagan. Hope I m not offensive. Thanks for your time on writing. Cheers, vijay

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

oru pdatha pathi vimarsanam padikka vantha pala padangkal pathi pala unmaikal veliya varuthe ha hahaha unmaiyalan sonna piraku than nyabakam varuthu nanum soul kitchen parthiruken......(avangakita keta another one inspirationnu solvanga )ubari thakaval en panguku:-இயக்குனர் பாலா :- இதுவரைக்கும் எந்த வேறு மொழி படங்களில் இருந்து காட்சிகளையோ கதையையோ சுட்டார்னு எனக்கு தெரியல ஆனா சமீபத்தில டி.வி.ல பிரபுதேவா நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் படம் பார்த்தேன் அதுல நடிச்சிருந்த செந்தில் கேரக்ட்டர் பேர் கும்பிடறேன் சாமி ஏன் இந்த பேருன்னு மணிவண்ணன் கேப்பாரு அதுக்கு செந்தில் (எல்லாரும் நம்மள மரியாதையா குடுத்து கூப்பிடனுமுனு இப்புடி ஒரு பேர் வச்சுருக்குறதா சொல்வாரு, (அவன் இவன் படத்தில இந்த விசயத்த கூட காப்பி அடிச்சுருக்காங்கப்பா)

Sathish said...

http://sathivenkat.blogspot.in/2012/07/blog-post_08.html

நான் ஈ - சரவெடி பட்டாசு !!

Cable சங்கர் said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி விஜய்

PARTHASARATHY RANGARAJ said...

sankar,
Have seen this movie in telugu,worth watching

please do not respond to those comments,these are cheap technics and you know about it.dont argue with fools,it makes no difference.

புதுகை.அப்துல்லா said...

// சாதாரணமாக டபுள் ஆக்‌ஷன் படத்திலேயே இன்னொரு கேரக்டர் எங்கே இருக்குன்னு தெரியாம தான் நடிக்கணும்

//

இல்லை. நீங்கள் A & B என டபுள் ஆக்க்ஷன் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்தால் உங்கள் ஹைட் & வெயிட்டில் ஒருவர் கூடவே நடிப்பார். உதாரணமாக நீங்க டபுள் ஆக்க்ஷன் செய்தால் உங்கள் ஹைட் & வெயிட் உள்ள நானும் நடிப்பேன். நீங்க "ஏ" என்ற கதாபாத்திரமாக "பி" யுடன் பேசுவதாக இருந்தால் நான் "பி" கதாபாத்திரத்தில் நடிப்பேன், நீங்க என்னைப் பார்த்துதான் வசனம் பேசுவீங்க. இப்போ "பி" கதாபாத்திரம் "ஏ" கதாபாத்திரத்துக்கு பதில் சொல்லும் சீன் எடுக்கணும் இல்லையா? அதுக்கு அந்த ஷாட் முடிந்ததும் எக்ஸ்போஸ் ஆகாத பிலிமில் இப்போ நீங்க "பி" கதாபாத்திரமா அந்த வசனமும் ரீ ஆக்க்ஷனும் பேசணும். அப்போ நான் 'ஏ" கதாபாத்திரத்தில் உங்களுக்கு எதிரே இருப்பேன். என்னை பார்த்துதான் அப்பவும் பேசுவீங்க. ஆனால் திரையில் இரு கதாபாத்திரத்திலும் நீங்களே இருப்பீங்க. எனவே உங்கள் புரிதல் தவறு.

வவ்வால் said...

அப்துல்லா அண்ணே,

நீங்க இன்னும் மாஸ்க்கிங் டெக்னாலஜி காலத்தைப்பற்றியே பேசிக்கிட்டுறிங்க, நீங்க சொன்ன முறையில இப்போ லோ பட்ஜெட் படம் எடுப்பவர்கள் வேண்டுமானால் எடுக்கலாம்.

மோஷன் கண்ட்ரோல் ரிக், புளுமேட் என சொன்னதை எல்லாம் கவனிக்கலையா?

இப்போ பச்சை /நீல உடையில் டம்மி நிற்க வைத்து எடுக்கிறாங்க, ஆனால் அதெல்லாம் ஹாலிவுட்டில் ,நம்ம ஊரில் ரொம்ப மெனக்கெடுவதில்லை. இந்த முறையில் நன்றாக பயன்ப்படுத்தி எடுத்த முதல் தமிழ் படம்"ஆளவந்தான்" ஜீன்ஸில் கூட கற்பனை செய்து நடித்தேன் என நாசர் பேட்டிக்கொடுத்திருந்தார்.

சி.ஜி கேரக்டர்களுக்கும் டம்மி வைப்பார்கள், அதெல்லாம் சொன்னால் எங்கே புரியாமல் பேசுவார்கள்,என சொல்லவில்லை.

அவ்வளவு தூரம் ஏன் போக வேண்டும் ,மாடியில் நிற்கும் பாத்திரம் கீழே நிற்பவரிடம் பேசுவதாக எடுக்கும் போதும் ,இன்ன பிற காட்சிகளிலும் தனியாக எடுப்பது வழக்கமே அப்போது கேமராவைப்பார்த்து ,கேரக்டரோடு பேசுவதாக இமேஜின் செய்யாமலா நடிக்கிறார்கள்.

அண்ணே நானும் ஷீட்டிங்க், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலை நடப்பதை எல்லாம் நேராப்பார்த்தவன் தான், நம்ம பிரெண்ட்ஸ் நிறைய இருக்காங்க, வேண்டுமானால் நெக்ஸ்ட் டைம் படத்தோட பதிவ போடுறேன் :-))

புதுகை.அப்துல்லா said...

// நீங்க சொன்ன முறையில இப்போ லோ பட்ஜெட் படம் எடுப்பவர்கள் வேண்டுமானால் எடுக்கலாம்.

//


நமக்கு தெரிஞ்சதெல்லாம் அவங்களைத்தானேண்ணே!


// வேண்டுமானால் நெக்ஸ்ட் டைம் படத்தோட பதிவ போடுறேன் :-)

//

போடுங்க, நானும் அப்டேட் பண்ணிக்கிறேன்.

Cable சங்கர் said...

இந்த ஷூட்டிங் வேடிக்கை பார்த்தவன், கடலை முட்டாய் வாங்கப் போனவன் போஸ்ட் பாக்ஸுக்கு நெருப்பு வைக்கும் போது பக்கத்திலிருந்தவன் தியாகி ஆனாப்ல.. இவனுங்க இம்சை தாங்க முடியலை..

வருண் said...

நான் கவனிச்சவரைக்கும் "தான் என்கிற அகம்பாவம்", கமல், ஜெயமோஹன் போன்றவர்களைவிட ஒரு படி மேலே உள்ள ஒரே "பிரானி" இதுதான். ஒரு பதிவுக்கு பின்னூட்டம் போட வந்தால், அந்தப் பதிவெழுதியவனைவிட நான் ஒரு படி மேலேனு நிரூபிப்பதுதான் இதோட ஒரே முயற்சி. அது பொங்கலைப் பத்தினாலும் சரி, ஈ பத்தினாலும் சரி இல்லை சாராயம் குடிப்பது பத்தினாலும் சரி, எம்முசியார் நடிப்புத்திறமை பத்தியா இருந்தாலும் சரி இல்லைனா குப்பைல இருந்து எத்தனால் எடுப்பதா இருந்தாலும் சரி. இவரு எல்லாத்துலயும் பி எச் டி டிக்ரீ வாங்கியவர். மேலும் ஒரு 1000 பேப்பரும் பப்ளிஷ் பண்ணியிருப்பார். இது ஒரு மாதிரி வியாதி.

Anonymous said...

இப்பதிவின் பின்னூட்டங்களை பாராட்டி.....

http://www.youtube.com/watch?v=J_3tSeLfhIw&feature=related

Cable சங்கர் said...

siva... haa..haa..haa..

வவ்வால் said...

//இந்த ஷூட்டிங் வேடிக்கை பார்த்தவன், கடலை முட்டாய் வாங்கப் போனவன் போஸ்ட் பாக்ஸுக்கு நெருப்பு வைக்கும் போது பக்கத்திலிருந்தவன் தியாகி ஆனாப்ல.. இவனுங்க இம்சை தாங்க முடியலை..//

சரக்குக்கு சோடா ஊத்திக்கொடுத்தவன், சைட் டிஷ் வாங்கி கொடுத்தவனுங்க, விளக்கு புடிச்சவனுங்க இம்சை கூட தாங்கலை... என்ன செய்ய :-))

வவ்வால் said...

//நமக்கு தெரிஞ்சதெல்லாம் அவங்களைத்தானேண்ணே!
//

அப்துல்லா அண்ணே,

உங்களுக்கு அதான் தெரிஞ்சதுனு சொல்லுறிங்க, அதே போல தான் நமக்கு தெரிஞ்சத சொல்றோம், இதுவே நான் பழைய மாஸ்கிங் டெக்னாலஜி வச்சி சொல்லி இருந்தா ... ஹா..ஹா மாஸ்க் வச்சு செய்றத சொல்றார் ...எம்மாம் பெரிய முட்டாள்னு உங்க நண்பரே சொல்லி இருப்பார். என்ன செய்ய இந்த உலகத்தில ஆளு பார்த்து தான் எல்லாம் கருத்து சொல்லுறாங்க :-))

shortfilmindia.com said...

இனிமே எல்லாம் தெரிந்த் மாதிரி பேசுற முட்டாள்னு வேணா சொல்லலாம்.

Anonymous said...

////ஒரு பேகான் ஸ்பிரே, ஹிட் அடித்தா காலியாகும் ஈக்கு இத்தனை அலப்பரையும், அதை லாஜிக்கே இல்லாமல் பார்க்கவும் கொல்டி கூட்டத்தால் மட்டுமே முடியும், தமிழில் சின்னப்பசங்க பார்த்து ஓடினால் உண்டு./////



சரியா சொன்னீங்க வவ்வால். இது போன்ற காவியங்களை எல்லாம் கண்டு ரசிக்க தனி ரசனை வேண்டும். அது ஆளப்பிறந்த யுவாவிற்கும் அவரைப்போன்ற ரசிகர்களுக்கும் நிச்சயம் உண்டு.

mahi said...

Yuva & Cable (Paandu maama) are not open to criticism , instead of explaining their stance they steep to low levels to pounce on their critics. Irony is they criticise everyone but don’t accept one. Yuva’s character is that of a typical aspiring politician , waiting to join hands to demean the opposition.

கொக்கிகொமாரு said...

வணக்கம் வௌவால் சார்.
உங்கள மாதிரியே நானும் முழிச்சிகினு தொங்கிகினு இருக்கேன் சார்.
என்ன நான் அம்புள வௌவால்.அதான் பெண் வௌவால் தேடிக்கினு இருக்கேன்.

அப்புறம்? என்ன செய்தி?

கொக்கிகொமாரு said...

அட அட அட என்னா தத்துவமா பொழியிறீங்க .எனக்கே உங்க மேல ஆசை வந்துடுச்சி பாருங்களேன்.

கொக்கிகொமாரு said...

அப்புறம்
வீட்டுல டிவி இருக்கா சார்?

சீரியல் எல்லாம் பார்ப்பீங்களா?
உங்க வீட்டுகார பெண்களுமா சார் பார்ப்பாங்க?

பதில் சொன்னா வசதியா இருக்கும் பாருங்க.

கொக்கிகொமாரு said...

அப்புறம் எப்ப சார் நீங்க "ஆச்க்கார்" அவார்ட் வாங்க போறீங்க?
எதுக்கா?
நீங்க டைரக்ட் பண்ணி 1000 வருஷம் எல்லா தேட்டேர்லையும்
இன்னுமும் ஓடிக்கிட்டேடேடேடேடே இருக்கே அந்த %^&%&^%$%^$
படத்துக்குதான் சார்.

கொக்கிகொமாரு said...

சில பேருக்கு மூளை பிறந்த பிறகு வளர்ந்துக்கிட்டே இருக்கும் சார்.
நீங்க சொல்லுற இந்த ஆளுங்களுக்கு வளர்ந்து முடிஞ்சிடுச்சி போல.அதான் அவங்களுக்கு நீங்க சொல்லுறது எதுவுமே புரியலை.நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார்.உங்க மூளையை நாம *(&&%*&#*&#*_)(#*$*#)(**&*& கண்காட்சில வைப்போம்.

கொக்கிகொமாரு said...

வௌவால் சார்.நீங்க சின்ன வயசுல இருந்து இப்படிதான் கேள்வி கேப்பீங்களா சார்?உங்களுக்கு பயங்கர அறிவு சார்.சின்ன வயசுல உங்களுக்கு கதை சொன்ன அம்மா,பாட்டி,பள்ளி வாத்தி இவங்களை கேள்வி கேட்டு எல்லாரையும் சாகடிச்சீடீன்களா சார்.

அவங்க உங்களால புனிதம் அடைஞ்சிட்டாங்க சார்.
ஆமென்.

கொக்கிகொமாரு said...

ஷ்..கொக்கி கொமாரு சும்மா கேள்வி கேக்காத.அப்புறம் சாருக்கு
ஞானோதயம் வந்து வீட்டுல யாருமிந்த மாதிரி டிவி பாக்க கூடாதுன்னு
அதை எல்லாம் உடைசிடுவாறு.
பெண் பாவம் உன்னை சும்மா விடாது.கொமாரு அபீட் ஆகிக்க

கொக்கிகொமாரு said...

சாருக்கு கக்கா வெள்ளையா போகுமா?இல்லை
மஞ்ச கலரா?

ஏன் கேக்குரன்னா மூளை இவருக்கு படு பயங்கரமா வளருதா?
அதான் எந்த பக்கம் வழியுதுன்னு கேக்கலாம்முன்னு.

கொக்கிகொமாரு said...

சார் நம்ம பசங்க ஒரு ஐநூறு பேர் இருக்காங்க.அவங்க படு பயங்கர முட்டாள்கள்.அவங்களுக்கு நீங்க தனியா பாடம் சொல்லி தருவீங்களா சார்?

அவங்களும் உங்களை போல படு பயங்கர அதி புத்திசாலியா வந்தா
இந்தியா நல்லா போகும் சார்.
இந்தியாவுக்கு பெருமை சேருங்க சார்.ப்ளீஸ் சார்.

கொக்கிகொமாரு said...

சார் ஒரு உதவி சார்.நீங்க எங்க எல்லாம் அறிவார்ந்த கமெண்ட் போட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாது சார்.அதனால நீங்க என்ன பண்ணுரீங்கன்னா இந்த மாதிரி இந்தமாதிரி இங்க எல்லாம் கமெண்ட் போட்டு கேள்வி கேட்டிருக்கேன் அப்படீன்னு அந்த லிங்க் எல்லாம் கொடுத்து தினமும் ஒரு பதிவு போட்டா எங்களை மாதிரி மூளை கெட்ட,எல்லாமும் கெட்ட பதிவர்களுக்கு யூஸ் "புல்லா" இருக்கும் சார்.

செய்வீங்களா சார்.?

Unknown said...

வவ்வால் said...
அப்துல்லா அண்ணே,

நீங்க இன்னும் மாஸ்க்கிங் டெக்னாலஜி காலத்தைப்பற்றியே பேசிக்கிட்டுறிங்க, நீங்க சொன்ன முறையில இப்போ லோ பட்ஜெட் படம் எடுப்பவர்கள் வேண்டுமானால் எடுக்கலாம்.

மோஷன் கண்ட்ரோல் ரிக், புளுமேட் என சொன்னதை எல்லாம் கவனிக்கலையா?

இப்போ பச்சை /நீல உடையில் டம்மி நிற்க வைத்து எடுக்கிறாங்க, ஆனால் அதெல்லாம் ஹாலிவுட்டில் ,நம்ம ஊரில் ரொம்ப மெனக்கெடுவதில்லை. இந்த முறையில் நன்றாக பயன்ப்படுத்தி எடுத்த முதல் தமிழ் படம்"ஆளவந்தான்" ஜீன்ஸில் கூட கற்பனை செய்து நடித்தேன் என நாசர் பேட்டிக்கொடுத்திருந்தார்.

சி.ஜி கேரக்டர்களுக்கும் டம்மி வைப்பார்கள், அதெல்லாம் சொன்னால் எங்கே புரியாமல் பேசுவார்கள்,என சொல்லவில்லை.
//////////////////////////////////
சார் நீங்க சொல்வது Green Screen Technology,ஒரு டபுள் ஆக்ட் படம் எடுக்க வேண்டும் என்றால் பேக்ரவுணட்டில் புல் பச்சை துணிகளை கட்டி விடுவார்கள் அந்த இருகேரக்டர்களையும் அந்த இடத்தில் நடிக்க வைத்து பேக்ரவுண்ட் தனியாக எடுத்து மூன்றையும் வீடியோ சாப்ட்வேர் மூலம் பச்சை கலரை மட்டும் நீக்கிவிட்டு இணைப்பார்கள் முழு காட்சியும் தயார் ஆகும்,

இப்ப இந்த முறையில் எடுப்பது இல்லை ஒரு கேரக்டரின் முகத்தை அச்சு எடுத்து மாஸ்க் மாதிரி முகத்தில் வைத்து எடுப்பார்கள் உதா: தசவாதாரம்,

இன்னோறு முறை முகத்தை சிலையாக வடித்து Max Pro, போன்ற அட்வான்ஸ் வீடியோ அனிமேசன் சாப்ட்வேர் மூலம் கிராபிக்ஸ் முறையில் செய்வது...ஹல்க் போன்ற படங்கள்.

எல்லாம் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி இருக்கும் இன்னும் 2dயில் சிறப்பாக அனிமேசன் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்...இந்த படத்தில் எப்படி எடுத்தார்கள் என இயக்குனருக்கே வெளிச்சம், விரைவில் எந்திரனை எப்படி எடுத்தார்கள் என்று சன்டிவியில் போட்ட மாதிரி எதாவது டிவியில் போடுவார்கள் அப்பொழுது தெரிந்து கொள்வார்கள்...

ஓரளவுக்கு எனக்கு அனிமேசன் வீடியோ எடிட்டிங் தெரியும் எனக்கே ஒன்றும் புலப்படாத போது புரிந்த மாதிரி கமெண்ட் போடுவது அழகல்ல அந்த துறையில் இருப்பவர்கள் வாதிடுவது மட்டுமே ஏற்றுக் கொள்ளமுடியும் வவ்வால் சார்...!

மயில் றெக்க said...

என்னங்கடா அநியாமா இருக்கே. ஒரு படத்தை பற்றி விமர்சனம் பண்ணினால் அதை படி இல்ல படிக்காம போ அதை விட்டுட்டு எனக்கு அது தெரியும் இது தெரியும்னு பம்மாத்து வேலை காட்டிட்டு இருக்கீங்களேடா.
கேபிள் அண்ணா விடுங்கண்ணா

கத்தும் நாய்க்கு காரணம் தேவை இல்லை
தன நிழல் பார்த்து தானே குறைக்கும்

வவ்வால் said...

சுரேஷ்,

நான் படத்தோடா மேக்கிங் பத்தியே ஆரம்பிக்கவில்லை, சொன்னது என்னனா, சி.ஜி கேரக்டர் பார்த்து நடிப்பது கஷ்டம் "கிரேட் பெர்பார்மன்ஸ்" என சொன்னதற்கு சொன்னேன், எல்லாருமே அப்படித்தான் நடிக்கிறாங்க அதை வச்சு சிறந்த நடிகர்னு முடிவு செய்தா என்னாவதுனு, அதாவது நல்ல நடிப்புக்கு அளவுகோள் ஆக எதைப்பயன்படுத்துவது என்பது புரியாமல் சொல்கிறாரே என சொன்னேன்.

------

சார்,

நீங்க செய்வது அதை விட காமெடி, அனிமேஷன் , வீடியோ எடிட்டிங் தெரியும்னு வேற சொல்றிங்க, "புரோஸ்தெடிக் மேக் அப்"னு லாம் சொல்லி புரிய வைக்க பின்னூட்டம் தாங்காது.

அப்புறம் அனிமேஷன் வேற ,ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வேற, புளு மேட், மோஷன் கண்ட்ரோல் ரிக் இல்லாம செய்ய முடியாது. அப்புறம் எப்படி "Compositing " செய்வாங்க?

இந்த சுட்டியை முடிந்தால் பார்க்கவும்,

வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: கோச்சடையானில் ரஜினி நடிப்பது நிஜமா?

Unknown said...

வவ்வால் said...
சார் உங்க அளவுக்கு நமக்கு அறிவு கிடையாது...நீங்க ஜீனியஸ் சார்!

ஒரு கற்பனையான ஒரு உருவத்தை அதுவும் ஈ போன்ற பூச்சியை பறந்து வருவதை கற்பனை செய்து நடிப்பது உண்மையில் திறமையான ஒரு கலைஞனால் மட்டுமே முடியும்...கேபிள் நம்புவதைப்போல் நானும் சுஜித் நடிப்பை வியந்தேன் ஆங்கில படங்களுடன் நீங்கள் ஒப்பிட்டால் இது குறைவுதான் ஆனாலும் தமிழில் சிஜியில் வியக்க வைத்த படம் என்பதை யாரும் மறுக்கமுடியாது..

அதெல்லாம் சரி நீங்கள் ஈ திரைப்படம் பார்த்தீர்களா..? பார்த்தால் தெளிவான விமர்சனத்தை எழுதுங்கள் இந்த படத்தின் டெக்னிக்கல் விசயத்தை பற்றி கூறுங்கள் நாங்க தெரிஞசுக்கிறோம்...!

வவ்வால் said...

சுரேஷ் சார்,

நீங்க எல்லாம் தெரிந்தவர் நான் போய் என்ன சொல்லிடப்போறேன்!!!

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் Dwa நிறுவனத்தின் தயாரிப்பில் வந்த "Bee movie" என்ற படத்தின் ஒன் லைனரை எடுத்துக்கொண்டு செய்த படம் தான் நான் ஈ, ஆங்கிலத்தில் தேனி, இங்கே வெறும் ஈ :-))

ஆங்கில படம் முழு அனிமேஷன் ஃபேன்டசி வகைப்படம். தேனி காலேஜ் படிக்கும் ,ஒரு மனிதப்பெண்ணோடு ஃபிரண்டா இருக்கும்,தேன் எடுத்து தேனிக்களை கொடுமை படுத்துறாங்கன்னு கேஸ் எல்லாம் போடும் :-))

அப்படத்திற்கு பயன்ப்படுத்திய மேக்கிங் தான் இங்கும், நம்ம ஊர் பட்ஜெட்டிற்கு எனலாம்.

முடிஞ்சா தமிழ் ஈ படம் பார்த்துட்டு அப்புறமா வித்தியாசம் என்னனு சொல்கிறேன்.

Unknown said...

வவ்வால்
There you are,
I like your counter attack.
Actualy You make this blog very interesting, cable let him, Please no personal attack on anyone.
Icondomed those attack Mr வவ்வால் personaly.But he behaved sensibly
aravi

Unknown said...

Mr Kokimaru
Please read my above comment;
Dont use my brothers blog to vent your anger, I like cable reviews, and வவ்வால் comments, no place for you.
aravi

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஒரு சினிமா பாத்த மாதிரி இருக்கு.பின்னூட்டங்களைத்தான் சொல்லறேன். கேபிள் சார் இதெல்லாம் ஒரு செட் அப் தானே?

gowrish said...

கேபிள் ச‌ங்க‌ருக்கும் யுவ‌ கிருஷ்ணாவுக்கும் விம‌ர்ச‌ன‌த்தை ஏற்கும் ம‌ன‌ம் இல்லை என‌ நன்கு தெரிகிற‌து...

Cable சங்கர் said...

ஆமா இப்பத்தான் கண்டுபிடிச்சீங்களா கவுரிஷ். ஹி..ஹி.. உங்க கமெண்டுகளை எல்லாம் பப்ளிஷ் பண்ணியிருக்கேனே அதுலேர்ந்தே விமர்சனத்த ஏத்துக்கிற பக்குவம் இருக்கா இல்லையான்னு புரிஞ்சிக்கிற அறிவு கூட இல்லாதவஙக்ளை என்ன சொல்றது. ம்ஹும்.