Thottal Thodarum

Jul 31, 2012

சாப்பாட்டுக்கடை - பாண்டியன் ஓட்டல்

பாண்டியன் லாட்ஜ் ஓட்டல் என்றதும் சென்னையில் உள்ள உணவகம் என்று பல பேர் நினைக்கக்கூடும். ஆனால் இது அதுவல்ல. குற்றாலத்தில் மிகப் பிரபலமான உணவகம் இது. அதுவும் காலங்கார்த்தாலேயே  ரத்தப் பொரியலும், கொத்துக்கறியும், மட்டன் சாப்ஸும், சிக்கன் சாப்ஸும், நெய்தோசையும், பரோட்டாவும் புழங்குகிற இடம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


குற்றாலம் என்றால் எப்படி ரஹமத்துல்லா கடையோ அது போல இந்தக்கடையும் பேமஸ். மெயின் அருவிக் கரையிலிருந்து மெயின் ரோடுக்கு வந்தால் கொஞ்சம் உட்பக்கமாய் வலது புறத்தில் திரும்பும் சிறிய தெருவில் இருக்கிறது இந்தக் கடை.  வாசலிலேயே உள்ளேயிருக்கும் அயிட்டங்களின் லிஸ்டோடு வரவேற்றது.

எல்லோரும் இட்லியும் மட்டன் சாப்ஸும் ஆர்டர் செய்ய, கூடவே ஒரு நல்ல கிரேவியும் கொடுத்தார்கள். அருமையென்றால் அருமை அவ்வளவு அருமை கொத்துக்கறியும், இட்லியும். அடுத்ததாய் சில பேர் நெய் தோசையும் சிக்கன் கிரேவியும் கேட்க, நிஜமாக்வே கையில் ஒட்டும் அளவிற்கு நெய்யை ஊற்றி பொன் நிறத்தில் தோசையை தருகிறார்கள். உடன் அடுத்ததாய் இடியாப்பமும், சிக்கன் மசாலாவும் ஆர்டர் செய்திருந்தார்கள். காலை பத்து மணி வரை ஆகியிருந்தததால் எல்லோருக்கும் பசியேறியிருக்க, கொஞ்சம் டிபன் லிமிட்டுக்கு மேலேத்தான் சாப்பிட்டோம். எப்போதும் அளவாய் சாப்பிடும் அப்துல்லாவே அன்றைக்கு இரண்டு தோசை எக்ஸ்ட்ராவாக சாப்பிடத்தற்கு காரணம் சுவை. மற்றும் காலைப் பசியின் கொலைப் பசி.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் இந்த லாட்ஜ் கம் ஓட்டலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்க்ள் உண்டாம். கொத்துக்கறியில் மிக நுணுக்கமாய் கொத்தப்பட்ட மட்டன் துண்டுகளை நல்ல கிரேவியோடும், திக்காக, அதிக காரமில்லாமல், இட்லிக்கும், தோசைக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் டிவைன் தான். பார்சலுக்கு பரோட்டாவும், மட்டன் சாப்ஸும், சிக்கன் சாஸும் வாங்கிக் கொண்டு போனோம்.ஏனென்றால்  அருவியில் குளித்தபின்னர் எடுக்கப்போகும் பசிக்கும் பரோட்டாவும் கொஞ்சம் காரமான அயிட்டங்கள் தான் சரி என்று தோன்றியது. அது போல் குளித்து முடித்துவிட்டு, பரோட்டாவில் கொஞ்சம் மட்டன் சாப்ஸைப் போட்டு கொஞ்சமாய் ஊறவைத்து, ஒரு விள்ளல் எடுத்து மசாலாவில் பிரட்டி, வாயில் போடுங்க...ம்ஹும்..அஹா.. அருமை.. அருமை.. அருமை.. குற்றாலம் போனால் இந்த உணவகத்தையும் மிஸ் செய்யாதீர்கள். 


Post a Comment

14 comments:

வவ்வால் said...

கேபிள்ஜி ,

இந்த ஹோட்டல் எல்லாம் சுற்றுலா வரவங்க கிட்டே காசு பிடுங்கும் ஹோட்டல் என நினைக்கிறேன்,அவங்க விலைப்பட்டியலைப்பாருங்க சென்னை ரேஞ்சில போட்டு இருக்கான்.

ஒரு பரோட்டா 15 ரூனு இருக்கு.மீன் குழம்பு 80 ரூ என இருக்கு.

குற்றாலத்தில சீசன் அப்போ இன்ஸ்டண்ட் உணவங்கள் நிறைய வரும் ,அதில ஃபிரஷ் ஆத்து மீன், சிக்கன் ,காடை ,கவுதாறின்னு எல்லாம் போட்டு அசத்துவாங்க, மேலும் விலையும் மலிவு.

எல்லாம் சுட சுட கிடைக்கும், மீந்து போனதை சூடு செய்து அல்லது முன்னர் பிரை செய்து மீண்டும் பிரை என்ற வழக்கமே இல்லாமல் பிரஷ்ஷாக அங்கே கிடைச்சது.அதனால வெயிட் செய்து சாப்பிடும் நிலை ஆச்சு.

இது போன்ற உணவங்கள் எல்லாம் குற்றாலம் சீசனில் மட்டுமே இயங்கும் ,மற்ற நேரத்தில் இருக்காதாம்.

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே!
குற்றாலத்துக்கு இது வரை 30 தடவைக்கு மேல் போய் இருக்கிறேன்.இப்படி ஒரு ஹோட்டல் இருப்பது தெரியாமல் போச்சே!எனது ஊருக்கும் குற்றாலத்துக்கும் இடையில் 75 கிலோ மீட்டர்.கல்லூரி படிக்கும் போது நண்பர்களுடன் சைக்கிளிலேயே போய் இருக்கிறேன்.எனது சைக்கிள் பெல்லைத்தவிற மீதி எல்லாமே சத்தம் போடும்.அந்தப்பயணம் மறக்க முடியாதது.
ஹூம்...[நாஸ்டால்ஜியா]
இப்படிக்கு,
திரு.வவ்வால் அவர்களால் கிழட்டுக்கூ* என பட்டம் பெற்ற பாக்கியவான்.

கோவை நேரம் said...

நானும் போய் இருக்கிறேன் குற்றாலத்திற்கு ..இந்த ஹோட்டல் கேள்வி படல..பட்டிருந்தால் ஒரு கை பார்த்திருப்பேன்..

Cable சங்கர் said...

ரஹமத்துல்லா பார்டர் கடையிலேயே இந்த விலைதான். அப்ப அதுவும் காசுபறிக்கும் கடையா..? அறுபது வருடங்களுக்கு மேலாக இருக்கும் கடை என்று சொல்லியிருக்கிறேன்.

புதுகை.அப்துல்லா said...

வவ்வால் அண்ணே, அந்தக் கடையின் உட்புறச் சுத்தம் சென்னையில்கூட பல பெரிய உணவங்களில் பார்க்க முடியாது! ஒருமுறை உபயோகித்த எண்ணையை மறுமுறை உபயோகிப்பதில்லை என்ற கொள்கை துவங்கி இன்னும் பல ஸ்டிரிக்ட் குவாலிட்டி மெயின்டனன்ஸ் கடை பிடிக்கிறார்கள். இது சீசன் திருவிழாக் கடை அல்ல. பர்மனென்ட் கடை. நேரில் பார்த்தால் ஒருவேளை நான் சொல்வது புரியலாம்!

Ponchandar said...

ஜூகை 2, 2010- ல நான் போட்ட COMMENT "குற்றாலம் மெயின் அருவியிலிருந்து நடந்து போயிரலாம் என் வீட்டுக்கு(2 கிமீ நடக்க துணிவிருந்தால்) அடுத்த முறை இங்கு வந்து மேலகரம் ஸ்ரீவிநாயகா டிபன் செண்டர்-ல டிபன் சாப்டுட்டு பாண்டியன் லாட்ஜ் பிரியாணி சாப்டுட்டு ஒரு பதிவு போடுங்க"

2012-ல பாண்டியன் லாட்ஜ்-ல சாப்பிட்டு விட்டு பதிவு செய்திருக்கிறீர்கள்.பிரியாணி டேஸ்ட் செய்யலையோ ??? பார்டர் ரஹ்மத் கடை பிரியாணியைவிட சூப்பராக இருக்கும்

அடுத்த முறை குற்றாலம் வரும்போது சந்திப்போம்

Anonymous said...

புதிய தகவல்: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் இட்லிக்கு நிறைய சாம்பார் ஊற்றுவார்கள் - தி ரியல் FOODIE.

arul said...

thanks for sharing

வவ்வால் said...

கேபிள்ஜி,

//ரஹமத்துல்லா பார்டர் கடையிலேயே இந்த விலைதான். அப்ப அதுவும் காசுபறிக்கும் கடையா..? அறுபது வருடங்களுக்கு மேலாக இருக்கும் கடை என்று சொல்லியிருக்கிறேன்.//

பார்டர் கடையிலும் அந்த விலை தானா , அப்போ எல்லாமே சுற்றுலாத்தலம் என்பதால் விலை அதிகம் வச்சு காசு பறிக்கும் வேலைய தான் செய்யுறாங்க.ஒன்றும் வேண்டாம் மகாபலிப்புரத்துக்கு போனாலே சுற்றுலா தலத்தில் என்ன விலைன்னு தெரிஞ்சிக்கலாம் :-))

குற்றாலத்தில் அதனால தான் சீசனில் திடீர் கடைகள் சக்கைப்போடு போடுது.

யோசிச்சு பாருங்க குற்றாலம் போல டவுன் பஞ்சாயத்து அளவிலான ஒரு சிற்றூரில் இருக்கும் உணவகத்தில் இந்த விலை வைப்பாங்களானு.ஆனால் சுற்றுலா தலம்னா இப்படி வைப்பாங்க. தண்ணீர் பாட்டிலை கூட எம்.ஆர்.பில விக்க மாட்டங்க, சுற்றுலா வரவங்க வந்த எடத்தில் கிடைச்சதை சாப்பிட்டாகணும்.

இந்த உணவகத்தில் விலை கூட இருந்தாலும் தரமும் இருக்கு என்பது ஆறுதலான விஷயம்.

நாம எல்லாம் மிடில் கிளாஸ் அண்ணே எனக்குலாம் விலையும் கம்மியா இருக்கணும், விலைக்கு ஏற்ற தரமும் இருக்கணும்னு எதிர்ப்பார்ப்பேன்.

மொபைல் வாங்கப்போனால் அதில gprs, 3g,cemara, android ,fm,large memory etc இருக்கிறாப்போல போன் இருக்கான்னு கேட்பேன் ,கடைக்காரன் நக்கலா சாருக்கு எல்லா வசதியோட விலையும் கம்மியா போன் வேணுமாம்னு பக்கத்தில இருக்கவன் கிட்டே சொல்றான் ,என்ன செய்ய ஆப்பிள் ஐ போனா வாங்க முடியும் நமக்கு :-))

நம்ம விலைக்கு ஏற்ற எல்லா வசதியோட ஒரு போன் இல்லாமலா போகப்போகுதுன்னு தேடித்தான் வாங்கினேன்.

விலையைப்பத்திக்கவலைப்பட கூடாது போல இருக்கு நம்ம நாட்டிலே, அந்த கடை 100 வருஷம் இருந்தால் கூட ,அதுக்கும் விலைக்கும் என்ன சம்பந்தம்.

அப்புறம் உணவகத்தில் விலை நிர்ணயம் செய்யன்னு சட்டம், தரம்பிரிப்புலாம் இருக்கு, A+,A,,B grades என அது அதற்கான விலையை தான் வைக்கணும், தரப்பிரிப்புல வராத உணவகம் என்றால் விலை இன்னும் கம்மியா வைக்கணும், இது உங்களுக்கு தெரிஞ்சு இருக்கும்னு நினைச்சேன்.

பெரும்பாலான உணவகங்கள் அவங்க இஷ்டத்துக்கு தான் விலையை வைக்குறாங்க, நம்ம மக்களுக்கு ஆட்டோ மட்டும் மீட்டருக்கு ஓடணும் என எதிர்ப்பார்ப்பாங்க, மற்ற இடத்தில் எல்லாம் அரசின் கைட் லைன் வேல்யு பத்தி கவலையே பட மாட்டாங்க :-))
---------
அப்துல்லா அண்ணே,

கேபிள்ஜிக்கு சொன்ன பதிலையும் பார்க்கவும்.நாம எல்லாம் விலை கம்மியா ,தரமா இருக்கணும் என எதிர்ப்பார்க்கும் மிடில் கிளாஸ் அதான் அப்படியே எதிர்ப்பார்த்தேன்.

பாண்டியன் உணவகத்தினை சீசனுக்கு முளைக்கும் கடைனு சொல்லவில்லை,அப்படி ஒரு திடீர் கடையில சீப்& பெஸ்டா இருந்துச்சுன்னு சொன்னேன். காடையை அப்பவே உறிச்சு பிரை செய்து கொடுத்தாங்க :-))
(சென்னையில சில பார்களில் அப்படி கிடைக்கும்)

நீங்க சொன்னது போல தரத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார்கள் என்பது மகிழ்ச்சியே.சுற்றுலா தலம் என்பதால் விலை அதிகம் வச்சாலும் வியாபாரம் ஆகுது,உங்களுக்காகவே அங்கே போனால் சாப்பிட்டு பார்த்து வருகிறேன்(விலைப்பட்டியலை பார்க்காமல் கண்ணை மூடிக்கொள்வேன்)
---------

ஆகஸ்ட்டில் போனால் நல்லா இருக்குமா ,வழக்கமா மழை இருக்கும், இம்முறை வறண்ட வானிலையே இன்னும் இருப்பதால் போகலாமா?

---------

மாதேவி said...

குற்றாலம் பார்க்க கிடைக்கவில்லையே.:)

குரங்குபெடல் said...

பார்சலுக்கு பரோட்டாவும், மட்டன் சாப்ஸும், சிக்கன சாஸும் வாங்கிக் கொண்டு போனோம்.ஏனென்றால் . . . .சரி சரி . .

புரியுது . .

chennaiboys said...

vavalji super

chennaiboys said...

vavalji neenga sonna chennai route

miga miga sari.

chennaiboys said...

vavalji neenga sonna chennai route

miga miga sari.