Thottal Thodarum

Jul 23, 2012

கொத்து பரோட்டா -23/07/12

சனியன்று பிரபல இலங்கை வானொலி அறிவிப்பாளர் இளையதம்பி தயானந்தாவின் “வானலையின் வரிகள்” என்கிற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பேச அழைத்திருந்தார்கள். 2003ல் இலங்கையில் வெளியான இப்புத்தகத்தை மீண்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்கள் ஆரபி பதிப்பகத்தார். தயானந்தா இலங்கை வானொலியில் பணியாற்றிய போது தமிழக பிரபலங்களான ஜெயகாந்தன், கனிமொழி, கே.ஜே.ஜேசுதாஸ், பாலகுமாரன், சோ, டி.எம்.எஸ், சிவாஜி, பழனிபாரதி, மதன், சாரு நிவேதிதா  போன்றோரின் நேரலை பேட்டியினை புத்தக வரிகளாக்கி தந்திருக்கிறார்கள். படு சுவாரஸ்யமான புத்தகம். ஒரு வானொலி பேட்டி இவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்குமா? என்ற எண்ணத்தை இப்புத்தகம் ஏற்படுத்தியது. ஏனென்றால் எந்த துறையினர் ஆனாலும், அவர்களிடமிருந்து  வரும் பதில்கள் சுவாரஸ்யமாய் இருக்க, நல்ல கேள்விகள் வேண்டும்.  அதை தயானந்தா சிறப்பாக செய்திருக்கிறார். புத்தகமும், வானொலியும் மட்டுமே நம் கற்பனைக் குதிரையை தட்டி நமக்கான காட்சிகளை தரும் சக்தியுண்டு. இப்புத்தகத்தைப் படித்ததும், இதுவரை கேட்டிராத தயானந்தாவின் குரல் எப்படியிருக்கும். இந்திந்த கேள்விகளுக்கு இவரின் குரல் எப்படிப்பட்ட ஏற்ற இறக்கங்களூடன் இருந்திருக்கும் என்ற கற்பனை எழாமல் இல்லை. விழாவிற்கு மிக குறைந்த அளவு கூட்டமே வந்திருந்தாலும் சிறப்பாக நடந்தது. விழாவின் முடிவில் லண்டனிலிருந்து தயானந்தா தொலைபேசியில் வாழ்த்தி வெளியிட்ட அனைவரிடமும் பேசினார். என் கற்பனையில் ஒலித்த அவரது குரல் நிஜமாய், நான் அவதானித்தபடியே இருந்ததும், கம்பீரமாகவும் இருந்தது.. அதை விட சந்தோஷம் அவர் என்னுடய வாசகர் என்று சொன்னதுதான். தன்யனானேன் தயானந்தரே. இப்புத்தகத்தை படிக்கும் போது இதில் பேட்டி கொடுத்தவர்களின் அன்றைய மனநிலையில் சொன்ன கருத்துக்கும்  இன்றைய மனநிலையில் சொல்லியிருக்கும் கருத்துக்குமான வேறுபாட்டையும், ஒற்றுமையையும் பார்க்கும் போது சுவாரஸ்யம அதிகமாகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@நேற்றைய சத்யமேவ ஜெயதேவில் அமீர்கான் தண்ணீர் ப்ரச்சனையைப் பற்றி அலசினார். அதில் முக்கியமாய் சாந்தா ஷீலா நாயரிடம் பேசிக் கொண்டிருந்த போது. சென்ற ஜெ ஆட்சியில் செனனியில் எல்லார் வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயப்படுத்தி அமல் படுத்தியதையும், அந்த திட்டத்தினால் எவ்வளவு தூரம் நன்மை கிடைத்தது என்பதையும் சிறப்பாக விளக்கினார். இதையே ஏன் மற்ற எல்லா நகரங்களிலும் செய்யக்கூடாது என்று அமீர் கேட்ட போது, அப்படி அமல்படுத்த உறுதியான அரசியல் சக்தி வேண்டும். அது இல்லாவிட்டால் எங்களைப் போன்ற அரசாங்க அதிகாரிகளால் வெற்றிகரமாய் அத்திட்டங்களை செயல் படுத்தியிருக்க  முடியாது என்றார். அது உணமையும் கூட, திட்டத்தை ஒரு வருடத்திற்குள் செயல்படுத்தாவிட்டால், தண்ணீர் இணைப்பு கட் செய்யப்படும் என்று ஏற்படுத்திய ப்ரெஷர் தான் பெரும்பாலான மக்களை செயல்ப்டுத்த வைத்தது. ஆனால் இன்றைக்கும் அத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு சென்ற ஆட்சியும் ஒரு காரணம்.பருவ மழை பொய்த்துப் போயிருக்கும் இந்நேரத்தில் உடனடியாய் மீண்டும் இத்திட்டதை அமல் படுத்தினால் வருகிற மழையினால் சென்னை வரண்டு போகாமல் காக்க முடியும். இதை அரசே சொல்லித்தான் செயல்படுத்த வேண்டுமென்று இல்லாமல், நாமே நம் வீடுகளில் பராமரிக்காமல் இருக்கும் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை மற்றும் அதன் வழிகளை சுத்தப்படுத்தி நம் நிலத்தடி நீர் வளத்தை காக்கலாமே?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
செவிக்கினிமை
இந்த பாடலைக் கேட்ட மாத்திரத்தில் தலையாட்ட ஆரம்பித்துவிடுவீர்கள். அருமையான  பாடல். வழக்கமான ஹிந்திப்பாடல்கள் போல இல்லாமல் மிக எளிமையாய் அமைக்கப்பட்ட ட்யூனும், ப்ரெஷ்ஷான குரல்களும் நம்மைக் கவர்ந்துவிடும். அனுராக் காஷ்யப்பின் “Gangs of Wasseypur" படத்தில் இடம் பெற்ற இந்த பாடலின் இசையமைப்பாளர் ஸ்நேகா கன்வால்கர் என்கிற பெண்.  இப்படத்தைப் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
டென்வரில் பேட்மேன் பட ரீலீஸ் அன்று ஒரு சைக்கோ தியேட்டருக்குள் புகுந்து 14 பேர்களை கண்டமேனிக்கு சுட்டுக் கொன்றுவிட்டு, ஐம்பதுக்கும் மேற்ப்பட்டவர்களை காயமடைய வைத்திருக்கிறான். இம்மாதிரியான சைக்கோக் தனமான நிகழ்வுகள் அதிகமாய் நடைபெறும் நாடு அமெரிககாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு குழந்தையை பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சில் சுட்டிருக்கிறான் . சந்தேகத்தில் ஒருவனை கைது செய்திருக்கிறார்கள். நம்மூரு எவ்வளவோ தேவலை. கைது செய்யப்பட்டவனின் வீட்டில் தொட்டாலே வெடிக்கக்கூடிய வெடிப்பொருட்கள் நிறைய சேர்த்து வைத்திருக்கிறானாம். இவ்வளவு வெடிப் பொருட்களையும் சட்டத்திற்கு உட்ப்ட்டுத்தான் வாங்கியிருக்கிறான் என்று ஒரு தகவலை சொல்லியிருக்கிறது போலீஸ். என்ன கொடுமைடா சட்டத்திற்க்கு உட்பட்டே இவ்வளவு வெடிப் பொருட்களை வாங்கக்கூடிய அளவிலா அமெரிக்க சட்டம் இருக்கிறது. Too.. Dangerous.. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் புதிய டீசர் வெளியாகியிருக்கிறது. யுவனின் குரலில் “சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது” எனும் பாடலை யுவன் ஆரம்பித்த பிறகு வரும் கிடார் அட்டகாசமாய் இருக்கிறது. உடனடியாய் முழுப்பாடலையும் கேட்க மாட்டோமா? என்று ஏங்க வைக்கிறார்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
வெளிநாட்டு படங்களை இன்ஸ்பயர் செய்து நீங்கள் எடுத்த படங்களை நீங்கள் ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று விகடன் பாலு மகேந்திராவிடம் கேள்விisit?

நீ என்னைப் பற்றி கவலைப் படாத போது நான் மட்டும் ஏன் உனக்காக கவலைப்பட வேண்டும்?

கேட்உமனை ஜெயில் கைதியொருவன் அவளை கிட்டே வரச் சொல்லி கையை நீட்ட அப்படியே ஒரு முறுக்கு முறுக்கினாள்.போலீஸ் நல்ல வேளை அவன் கையை நீட்டினான்.

தவறுகள் நடக்கத்தான் செய்யும். சில பேர் அதிலிருந்து பாடம் கற்பர், கல்லாமலும் இருப்பர். என்ன செய்வது மன்னிச்சு விட்டுருவோம்.

உன்னைக் காதலிக்கும் ஆணை உன் காதலினால் இழுத்து வைத்துக் கொள்வதை விட, தோளணைத்து அவனோடு பயணித்துப்பார் காதல் மிளிரும்.

நீ அடைய வேண்டிய ஒன்றை தூரம் தான் நிர்ணையிக்கும் என்றால் உன் குறிக்கோள் சவலையானது என்று அர்த்தம்.

ஒரு ஹாய், குட்மார்னிங் எஸ்.எம்.எஸுகள் காதலர்களில் இருபாலரையும் ஒரு நாள் பூராவும் உயிர்ப்புடன் வைத்திருக்கும்

காலம் எப்போதும் நம் காயத்தை ஆற்றுவதில்லை. காயத்தின் வலியோடு எப்படி வாழ்வது என்று கற்றுக் கொடுக்கிறது.

எனக்கானவன்(ள்) வேறு எங்கோ இருப்பது எனக்கு தெரிகிறது. அவ(னை)ளைத் தேடத்தான் யார் யாருடனோ பழகிக் கொண்டிருக்கிறேன்.

நீ நீயாக இருக்கும் போது வெறுக்கப்படுவது நீயாக இல்லாத போது விரும்பப்படுவதை விட சிறப்பானது

ஒருவனை அடிப்பதால் ப்ரச்சனையில் மாட்டுவோம் என்று நினைத்தால் இன்னும் ஓங்கி நாலு போடு போடு.

இது நாள் வரை, பொய், பித்தலாட்டம், துரோம், இன்மையின்மை, தவறுகள் செய்து அனுபவப்பட்டிருந்தாலும் பெற்றதில் முக்கியமானது வாழ்க்கை பாடம் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார சந்தோஷம்
என் செல்லம்மா என்கிற  சிறுகதை சூரியகதிரில் என் புதிய நாமகரணமான கேபிள் சங்கர் என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
முகமூடி பட ஆல்பம் கேட்டேன். வழக்கமான குத்து பாடல் போலில்லாமல்  மிஷ்கின் டச் பாடலொன்று இருக்கிறது ஆலாப் ராஜுவின் குரலில் கேட்க, கேட்க பிடிக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த ஆல்பத்தின் ஹைலைட் படத்தில் வரும் தீம் இசை தொகுப்புத்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்வுகளை தருகிறது. கேட்டுப்பார்த்துவிட்டு சொல்லுங்கள். இந்த இசை தொகுப்பு விஷுவலாய் படம் பார்க்கும் ஆவலை இன்னும் தூண்டுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற புகழுக்குரியவரான ராஜேஷ்கண்ணா மறைவுக்கு இரங்கல்கள். சமீபத்திய ஃபேன் விளம்பரத்தில் ஒடுங்கி தளர்ந்த அவரைப் பார்த்த போது மனசுக்கு கஷ்டமாய் இருந்தது. இந்தி சினிமா உலகின், இளைஞிகளின் கனவுக் கண்ணனாய் வலம் வந்தவர். இவரின் பெரும்பாலான பாடல்கள் பெரிய ஹிட். அதுவும் கிஷோர்குமாரின் குரலில் ஆர்.டி.பர்மனின் இசையில் உருவான இந்த பாடல் ஒரு அற்புதமான மெலடி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
புத்தகக் கண்காட்சி
நாகரத்னா பதிப்பகத்தின் ஒரு பிரிவான "We Can Book distributor" தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக இணையத்தில் புத்தகக் கண்காட்சி (http://guhankatturai.blogspot.in/2011/02/we-can-books.html) நடத்தினோம். அதில், 12 பதிப்பகங்கள், 68 புத்தகங்கள் இடம் பெற்றன.இப்போது, மூன்றாம் ஆண்டில் 400 புத்தகங்கள், 40 பதிப்பகங்கள், 53 பிரிவுகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. புத்தகக் கண்காட்சிக்கு என்று தனி இணையதளம் (http://www.wecanshopping.com/) 
10 % கழிவு +  தபால் செலவு இலவசம் !!!!!!! ஜுலை, 22 தொடங்கி ஆகஸ்ட் 22 வரை. மேலும் விபரங்களுக்கு.... இங்கே (http://www.wecanshopping.com/pages/Inauguration-Offers.html )
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாம் விரும்பும் திரைப்படங்களை பற்றிய மாற்று விமர்சனம் வரும் போது அதை மட்டும் படித்துவிட்டு, நீ காழ்புணர்ச்சியுடன் எழுதுகிறாய் என்று குற்றம் சொல்பவர்கள் அதிகம். அல்லது அவர்களின் விருப்ப நாயகர்களின் படங்களை பாராட்டும் போது படித்துவிட்டு சாவகாசமாய் மறந்துவிட்டு, திட்டும் போது மட்டும் குறை சொல்வது ஒரு விதம். அப்படித்தான் விஜய் படங்களை பாராட்டியிருதாலும், அஜித் படத்தை பாராட்டும் போது விஜய் ரசிகர்கள் எனக்கும் விஜய்க்கும் ஏதோ பர்சனல் தகராறு என்பதைப் போல காழ்ப்புணர்சியுடன் எழுதுவதாய் சொல்வார்கள். இதில் உட்சபட்சமாய்ப்  போய் கிரிஸ்டபர் நோலன் படத்தையும் ஏதோ பர்சனல் வெண்டேட்டாவுடன் எழுதியதாய் சொல்லி வருகிறார்கள். நோலனின் அத்துனை படங்களையும் விரும்பிப் பார்த்தவன் நான். சரி விடுங்க ஏன் இதை இங்கே சொன்னேன் என்றால் எனக்கும் நோலனுக்கு வாய்க்கா தகராறு ஏதுமில்லை என்பதை சொல்லத்தான். சமீபத்திய பேட்மேன் படத்தைப் பற்றிய வெங்கிராஜா எழுதிய ஒரு சுவாரஸ்ய அலசலை இங்கே உங்களுக்காக தருகிறேன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மக்கள் தொலைக்காட்சியில் வருகிற செவ்வாய் முதல் காலை 8.45க்கு நான் படித்த புத்தகங்கள் என்கிற நிகழ்ச்சியில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நான் படித்த புத்தகங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Wife came out of the bathroom,gave a wink and said ''Heey,I shaved my pussy.You know what that means? :)''
Husband said,''THE BATHROOM DRAIN CLOGGED AGAIN??''
கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

COVAIGURU said...

vada enaku

வவ்வால் said...

கேபிள்ஜி,

நான் எது சொன்னாலும் பிரச்சினை ஆகிடுது பேசாம ஒரு ஹி..ஹி போட்டுக்கிறேன் :-))

ரமேஷ் வைத்யா said...

கேபிள் சங்கர் புதிய நாமகரணமா?

Cable சங்கர் said...

ரமேஷ் வைத்யா
பத்திரிக்கையில் கேபிள் சங்கர்கிற பெயரில் இது தான் முதல் முறை வந்திருக்கிறது.

நவநீதன் said...

தலைவா... நீங்கள் தேங்காய் சீனிவாசன் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா?

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1207/21/1120721037_1.htm

பிரபல பதிவர் said...

தல‌
ஒரு ஃப்ரீ அட்வைஸ்....

ஒரு ரெண்டு மாசம் ப்ரேக் எடுத்துகிட்டு மறுபடியும் புதுப்பொலிவோடு வாங்க... இனி சினிமா விமர்சனம் வேண்டாம்னு தோனுது....

ஒரு சின்ன ப்ரேக் நிறைய மாற்றத்த கொடுக்கும்...

Cable சங்கர் said...

நன்றி பிரபல பதிவர்.

Sivaraman said...

நீ அடைய வேண்டிய ஒன்றை தூரம் தான் நிர்ணையிக்கும் என்றால் உன் குறிக்கோள் சவலையானது என்று அர்த்தம். --> Cable Ji, Romba yosikka vaikuthu !!! ... Good One ...

சேகர் said...

அருமையான பதிவு அண்ணா..

kailash said...

@ Cable : In America each state has its own gun law especially the ones dominated by Republicans have more freedom on guns and ones dominated by Democrats have stricter policy .

CrazyBugger said...

Cable neenga yaen polling yaedukka koodathu for writing movie review.

Anonymous said...

nice...

மாதேவி said...

பல விடயங்களுடன் கொத்துபரோட்டா.