Thottal Thodarum

Jul 19, 2012

Cocktail


இந்தியில் இம்மாதிரியான ரோம் - காம் வகை படங்கள் நிறைய வந்திருந்தாலும் இப்படத்தின் ட்ரைலர் எனக்கு கொஞ்சம் இம்பரசிவாக இருந்ததால் பார்க்க தூண்டியது. முக்கியமாய் தீபிகாவின் கேரக்டர். ஸோ.. லெட்ஸ் கோ டூ காக்டெயில்


பார்க்கிற பெண்களையெல்லாம் ப்ளிரிட் செய்து கவிழ்த்து ஜாலி செய்யும் சாப்ட்வேர் இளைஞ(ன்)ர் கவுதம். பெற்றோர்களின் புறக்கணிப்பால் குடி, கும்மாளம், ஆட்டம்பாட்டம், பார்ட்டி என்றலையும் வெரோனிக்கா, காதல் கணவனை தேடி லண்டன் வந்து அவனால் புறக்கணிக்கப்பட்டு, இருக்க இடம் இல்லாமல் வெரோனிக்காவின் பாதுகாப்பில் வந்து செட்டிலாகும் டிபிக்கல் இந்திய பெண் மீரா. இவர்கள் மூவருக்குமிடையே நடக்கும் காதல் ஆட்டம் தான் இந்த காக்டெயில்.
சாதாரணமாக என்னதான் பார்ட்டிக்கு போகும் பெண் என்றால் இந்தியர்களிடையே ஒரு மாற்று மரியாதை கம்மி என்பது போன்ற பொது புத்திக் காரணங்களால் அவள் ஏன் குடிக்கிறாள் என்பதற்கு பெற்றோரின் புறக்கணிப்பு என்ற ஒர் உபதகவலைச் சொல்லி நியாயப்படுத்தியிருக்கிறார்கள். தீபீகா இஸ் ராவிஷிங் ஆஸ் வெரோனிக்கா, செம பர்பாமென்ஸ். பாடி லேங்குவேஜில் ஆகட்டும், கண்கள் மிளிர போதையில் பேசும் போது ஆகட்டும் அருமையாய் உணர்ந்து செய்திருக்கிறார். என்ன பாதி படம் ஆரம்பிக்கும் போதே ப்ளிரிட் பார்ட்டியான கவுதம் நிச்சயம் ட்ரெடிஷனல் மீராவை காதலிப்பார் என்றும், அவரை வெரோனிக்கா காதலிப்பாள் என்றும் முடிவில் இவர்களை வெரோனிக்கா தான் சேர்த்து வைக்கப் போகிறாள் என்பது முதல் காட்சியிலேயே தெரிந்து விடுவதால் சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. 

மீராவாக டயனா பிண்டி. டிபிக்கல் சதி சாவித்திரியாய் காட்டப்பட்டு,  பின்பு லண்டன் வாழ்க்கைக்கு தன்னை மாற்றிக் கொண்டு , தோழியின் காதலினால் தன் காதலை தியாகம் செய்யும் அளவிற்கு  உருகும் டிபிக்கல் கேரக்டர். சில இடங்களில் ஆங்காங்கே க்யூட்டான நிகழ்வுகளின் போது இம்ப்ரசிவாக இருக்கிறார். 
சாயிப் அலிகானுக்கு இம்மாதிரியான கேரக்டர்களை இதற்கு முன் ஏற்கனவே செய்திருக்கிறார் என்பதால் இதில் ஏதும் ஸ்பெஷலாய் தெரியவில்லை. சொல்லப் போனால் இதை விட பெட்டராகவே அப்படங்களில் செய்திருப்பார். 
இவரது கேரக்டரை பல பெண்களுடன் சல்லாபிப்பவர் என்பதை அவர்களுடனான உறவுக் காட்சிகளே ஏதுமில்லாமல் காட்டி, அவரை நல்லபையன் என்று இரண்டு பெண்கள் பாராட்டி பேசும் காட்சிகளும், பார்ட்டிகளில் வேண்டுமென்றே இளைஞர்களின் கைகளை தன்னுடய பஸ்டிலும், பின்பக்கத்திலும் எடுத்து வைத்துக் கொள்ளும் அளவிற்கான சுதந்திர உள்ளம் கொண்டவளின் கேரக்டரை, பின்பு ஒரே வீட்டில் இருவரும் இரவு தங்கி இருந்தார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களுடய உடல் சார்ந்த உறவுகளைப் பற்றி பெரிதாய் பிரஸ்தாபிக்காமல் அப்படியே மேலோட்டமாய் போனதால் கதைக்கு  கிடைக்க வேண்டிய அழுத்தம் கிடைக்காமல் போய் பல சமயம் அட சீக்கிரம் முடிங்கப்பா.. என்று புலம்ப வைத்திருக்கிறார் இயக்குனர் ஹோமி அடஞ்சானி. பீயிங் சைரஸ் படத்தின் மூலமாய் கவனிக்கப்பட்டவர். 
இம்மாதிரியான் கதைகளில் ட்ரெடிஷனல் மாமா, மிக ட்ரெடிஷனலான இந்திய அம்மா, அவர்களுக்கு பயந்து  தான் திருமணம் செய்யப் போகும் பெண் இவள்தான் என்று மீராவை நடிக்க சொல்வது போன்ற நாடகத்தனங்கள் படம் நெடுக வந்து இருக்கிற ப்ளோவையும் கெடுக்கிறது. அதுவும் டிம்பிள் கபாடியாவை இந்த வயதில் ஸ்கீரினில் பார்க்கும் போது மனசெல்லாம் வலிக்கிறது. சகிக்கலை. இந்தியாவையே பாபியில் தன் காலடியில் மயங்க வைத்தவரா? என்ற கேள்வி ஓடிக் கொண்டேயிருந்தது. காக்டெயில் விஷுவலி

Post a Comment

15 comments:

rajamelaiyur said...

தெளிவான விமர்சனம் ...

rajamelaiyur said...

இன்று
கேரட் : தெரியுமா உங்களுக்கு ?

குரங்குபெடல் said...

ரோம் - காம் இம்பரசிவாக ஸோ.. லெட்ஸ் கோ ட

ப்ளிரிட் செட்டிலாகும் டிபிக்கல் இஸ் ராவிஷிங் ஆஸ்

செம பர்பாமென்ஸ். பாடி லேங்குவேஜில் ப்ளிரிட் பார்ட்டியான

ட்ரெடிஷனல் டிபிக்கல் சதி டிபிக்கல் கேரக்டர் க்யூட்டான

இம்ப்ரசிவாக .. .........



............


............



ஒரு இந்திப்பட விமர்சனம் . .

ஆங்கில வார்த்தைகள் கொண்டு

தமிழில் எழுதபட்டது இதுவே முதல் முறையாம் . . .

வாழ்த்துகள் அண்ணே

காக்டெயில் என்றாலே அப்படிதானே ..

Katz said...

குரங்கு பெடல் சொன்னது போல படிக்கும் போதே டருச்சு ஆகிறது. தயவு செய்து இப்படி ஆங்கிலத்தை தமிழ் மாற்றி எழுதாதிர்கள்.

அதே போல பெரிய சைஸ் இமேஜ் வேண்டாம். ஆபிஸ் உட்கார்ந்து சினிமா வெப் சைட் படிக்கும் உணர்வு வருகிறது. இமேஜ் நடுவில் எழுத்துகளை தேடி கண்டு பிடிப்பது சிரமமாக உள்ளது. சிபின்னு ஒருத்தர் இப்படி தான் போஸ்டர் ஓட்டுவார்.

போஸ்டர் வேண்டும் என்றால் தேடி செல்ல ஆயிரம் வழிகள் இருக்கிறது.

வவ்வால் said...

கேபிள்ஜி,

படம் பத்தியோ,கு.பெ சொன்னது பத்தியோ,விமர்சனம் பத்தியோ நான் எதுவும் சொல்ல போறதில்லை...

ஹி..ஹி அந்த தீபு bikini scene படத்துல இருக்கா என்பதே? ஒன்னுமே சொல்லக்காணோம், ஒரு படம் போட்டிருக்கலாம்,படம் கிடைக்கலையா?

salam nainar said...
This comment has been removed by the author.
salam nainar said...

குறிப்பாக "flirt" என்ற வார்த்தையைதான் பிளிர்ட் என்று எழுதி இருக்கிறார்.

கண்டிப்பாக "flirt" தமிழ் எழுத்துக்களில் எழுதவே முடியாது......அதன் தமிழ் அர்த்தத்தை எழுதலாமே
குறை சொன்னால் தமிழ் வெறியர்கள் என்று திட்டுவார்

புதுகை.அப்துல்லா said...

// ஒரு இந்திப்பட விமர்சனம் . .

ஆங்கில வார்த்தைகள் கொண்டு

தமிழில் எழுதபட்டது இதுவே முதல் முறையாம் . . .

வாழ்த்துகள் அண்ணே

//


வச்சாய்யா ஆப்பு. திருந்துய்யா கேபிள் :))))))))))

Sivakumar said...

-குரங்கு ‘பெடல்’ தமிழ் வார்த்தையா?

-கட்ஸ்..
சைஸ், இமேஜ், ஆபீஸ், சினிமா, வெப் சைட், போஸ்டர்...மூன்று வரி பின்னூட்டத்தில் இவ்வளவு ஆங்கில வார்த்தைகள்...

கேபிள் சார் ...You Continue…

Katz said...

!சிவகுமார்,
பை மிஸ்டேக் இங்கே ஒரு கமெண்ட்டு போட்டதற்காக என்னை பர்கிவ் பண்ணுங்க.

கேபிள் சார், யு கண்டினியு சார்! வாட் எ சப்போர்ட் ப்ரம் யுவர் ரீடர்!

இது போல ஒரு வைஸ் கமென்ட் வரும் என்று கெஸ் பண்ணிதான், இந்த போஸ்டிற்கு கமென்ட் சப்ஸ்கிரிப்சன் பண்ணியிருந்தேன். ஆனால் உங்களிடம் இருந்து எக்ஸ்பெக்ட் பண்ணவில்லை.

சிவகுமார், மை பிரீவியஸ் கமெண்டுக்கும் திஸ் கமெண்டுக்கும் எனி டிபரன்ஸ் பைண்ட் பண்ண முடியுதா?

ஸ்டில் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கொள்ள முடியலைனா, பிளீஸ் ரீட் மை பிலோ போஸ்ட்.

இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி இல்லை.

http://www.iamstranger.com/2012/05/blog-post.html

இது கேபிளை இன்டைரெக்ட்டா பாய்ன்ட் பண்ணி எழுதியது இல்லை என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

உண்மைய சொன்னேன்பா! இதுக்கு ஒட்டு மொத்தமா அடிக்க வந்திராதிங்க. இந்த இரண்டாவது கமென்ட்டிற்காக மறுபடியும் ஒருமுறை என்னை பர்கிவ் பண்ணிடுங்க!

Cable சங்கர் said...

இந்த தமிழ் உணர்வாளர்கள் எல்லாரும் தமிழ்ல எழுதும் போது எங்க போயிருந்தீங்க?

இந்தப்பதிவு வேண்டுமென்றே எழுதப்பட்டது. இப்படி எழுதுவதும் ஒரு ஸ்டைல் தான். :))

Unknown said...

HE HE HE .......

வவ்வால் said...

கட்ஜ்orகாட்ஜ் orகட்ஸ் orகாட்ஸ் or katz,

ஒரு நாலெழுத்து பேரு என்னா பாடுப்படுத்துது சாமி(என்னை போல அழகா பேரு வச்சுக்கணும்)

உங்கப்பதிவை தலைவரு படிப்பாரா தெரியலை, நான் படிச்சேன்,சும்மா சொல்லக்கூடாது உண்மைய டமால் அல்லது டுமீல் எனப்போட்டோ,போடாமலோ உடைச்சுட்டிங்க.

ஆனாலும் மக்களுக்கு பாராட்டினால் மட்டுமே பிடிக்குது,அதுவும் கூடவே த.ம.9 னு அவங்க ஓட்டுப்போட்டதையும் மறக்காம சொல்லி "மைலேஜ்" தேத்துவாங்க. அப்படிய்யாப்பட்ட கமெண்டுகளையே மக்கள் விரும்புறாங்க.

நீங்க சொன்னாற்போல் விமர்சித்தா என்ன கிடைக்கும்னு உங்களுக்கே தெரியும்.

//இந்த தமிழ் உணர்வாளர்கள் எல்லாரும் தமிழ்ல எழுதும் போது எங்க போயிருந்தீங்க?
//

கேட்கிறாருள்ள பதில் சொல்லுங்க, முதல் ரெண்டு வருஷம் ஹிட்ஸ் வாங்க எம்புட்டு போராடி இருக்கார் தெரியும்ல, பிரபலப்பதிவர்கள் பேரெல்லாம் வரிசையா எழுதி தலைப்பு வச்சு ,யாராவது படிப்பாங்களானு எதிர்பார்த்துகிட்டு ,அவர் பதிவ அவரே பலமுறை ஒத்தையில படிச்சுக்கிட்டு இருந்தப்போ என்னய்யா செய்த?

இப்போ ஒரு "ஸ்டைல்"புடிச்சு டாப்புல போயிட்டு இருக்கும் போது பொறாமையில கேள்விக்கேட்டால் எப்பூடி?

இனிமேல் அப்படிலாம் கேட்கப்படாது சரியா :-))

Katz said...

//கட்ஜ்orகாட்ஜ் orகட்ஸ் orகாட்ஸ் or katz, ஒரு நாலெழுத்து பேரு என்னா பாடுப்படுத்துது சாமி(என்னை போல அழகா பேரு வச்சுக்கணும்)//
இத்தனை தடவை ட்ரை பண்ணியும், என் பெயரை தப்பாவே சொல்லியிருக்கீங்க... மிஸ்டர் வவ்வால் :-).... மிஸ்டர்? or மிஸ்ஸஸ்?... Jj... உங்க பேரு மட்டுமில்லை, உங்க ப்ரோபைல் போட்டோ கூட ரொம்ப அழகா இருக்கு. lol . எனக்கு ஒரு டவுட்டு!.. இந்த lol -ஐ கூட, தமிழில் அப்படியே மாற்றி "லொள்" என்று எழுதலாமா?

//இந்த தமிழ் உணர்வாளர்கள் எல்லாரும் தமிழ்ல எழுதும் போது எங்க போயிருந்தீங்க? //
கேபிள் சார் என்னோட பதிவை படித்திருக்கவில்லையெனில் பிரச்சினை இல்லை. என்னுடைய முந்தைய கமெண்டையாவது படித்தாரா? என்று தான் தெரியவில்லை. படித்திருந்தால் இந்த மாதிரி ஒரு கமென்ட் வந்திருக்காது.

தமிழ் உணர்வை பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையேப்பா! சொல்ல போனால் எனக்கு தமிழ் உணர்வு சுத்தமாய் இல்லை. இங்கிலீசில் எழுதினால் கிராமர் மிஸ்டேக் வரும் என்பதால் தமிழில் எழுதி கொண்டிருக்கிறேன். அவ்வபோது நான் தமிழிலேயே கிராமர் மிஸ்டேக் பண்ணிவிடுவேன்.

//குரங்கு பெடல் சொன்னது போல படிக்கும் போதே டருச்சு ஆகிறது. தயவு செய்து இப்படி ஆங்கிலத்தை தமிழ் மாற்றி எழுதாதிர்கள். அதே போல பெரிய சைஸ் இமேஜ் வேண்டாம். ஆபிஸ் உட்கார்ந்து சினிமா வெப் சைட் படிக்கும் உணர்வு வருகிறது.//
ஆனால் என்னுடைய மேலே உள்ள இந்த கமெண்டில் "தமிழ்", "உணர்வு" என்ற இரண்டு வார்த்தைகளும் வெவ்வேறு இடத்தில் இருக்கிறது. ஒரு வேளை அதை அவர் சேர்த்து படித்து கண்டுபிடித்திருப்பாரோ?

//இந்தப்பதிவு வேண்டுமென்றே எழுதப்பட்டது. இப்படி எழுதுவதும் ஒரு ஸ்டைல் தான். :)) //
கலகலப்பு படத்தை விட இதில் காமெடி அதிகம்.

//இப்போ ஒரு "ஸ்டைல்"புடிச்சு டாப்புல போயிட்டு இருக்கும் போது பொறாமையில கேள்விக்கேட்டால் எப்பூடி?//
பொறாமை இருக்கான்னு கேள்வி கேட்டால்?
லைட்ட்ட்டா!...............ஏன்னா? இவர் ப்ளாக்கில் எதிர் கமென்ட் போட்டாவே, ஏகப்பட்ட ஹிட்ஸ் வருதுப்பா!... லொள்

வவ்வால் said...

கட்ஸீ,

அப்படினு சொல்லிடுறேன்,

//இத்தனை தடவை ட்ரை பண்ணியும், என் பெயரை தப்பாவே சொல்லியிருக்கீங்க...//

அந்த சரியான பேரை சொல்லாமல் ,சொன்னால் எப்படி,அதுவரைக்கும் கையில வந்த பேரை தட்டுறேன் :-))

வவ்வால்னு ஒரு பயங்கரமான பேரு பார்த்தபிறகும் மிஸ்டரானு டவுட்டு வரலாமா?

தமிழ், உணர்வு எங்கே இருந்தாலும் சேர்த்துப்படிக்கணும்னு நினைச்சு இருக்கலாம் :-))

உங்க பின்னூட்டத்தினை
"decipher" செய்து பார்த்தால் தமிழுணர்வுன்னு வருதோ என்னமோ?

லொள் னு எழுதக்கூடாது, லொல் என எழுத வேண்டும், ஏன் எனில் இரண்டு எல் உம் சிறிய எல் தானே,எப்பூடி :-))

ஹிட்ஸ் வருதா... எனக்கு ஒன்றும் வர்ர மாதிரி தெரியலையே...ஒரு வேளை வவ்வால் என்ற பெயர் ராசிக்குலாம் வராது போல நானும் எங்லிபீசுல பேட்மன் என போட்டுகணுமோ :-))