கொத்து பரோட்டா 16/07/12
சென்ற வார சந்தோஷம்
தமிழ் வலைப்பூக்களைக் குறித்து டெக்கான் க்ரானிகல் பத்திரிக்கையில் ஒர் கட்டுரையை எழுதியிருந்தார்கள். தமிழ் ப்ளாக்குகள் பற்றியும் அதன் ரீச்சைப் பற்றியும். வலைப்பூக்கள் எழுதியதால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், இதன் மூலம் சம்பாதிக்க முடியுமா? போன்ற விஷயங்களை பற்றி கேட்டு எழுதியிருந்தார்கள் நல்ல ரீச். நன்றி உமா
#########################################
கெளகாத்தியில் பொது இடத்தில் சுமார் அரை மணி நேரம் ஒரு இளம் பெண்ணை டிவி வீடியோவுக்கு போஸ் கொடுத்தபடி மானபங்க படுத்தப்பட்ட செயல் கண்டிக்கதக்கது. அதை செய்தவர்களின் படங்கள் தெள்ளத் தெளிவாய் இருக்க, வெறும் நான்கு பேரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என்றும் அதன் பின்னணியில் ஏதாவது அரசியல் பலம் இருக்கிறதா என்றும் பத்திரிக்கையாளர்களும், பேஸ்புக், டிவிட்டர், ப்ளாக்குகள் போன்றவற்றில் கேள்விகள் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். இம்மாதிரியான பெண்களுக்கு எதிராய் இழைக்கப்படும் அநீதிகளுக்கு சரியான பதிலடியாய், அவர்களுக்கு தகுந்த தண்டனை அளிப்பதுதான் நீதியின் மேல் மக்களுக்கு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நம்பிக்கையை கொடுக்கும்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்ஸ்பிரேசன்
கமலின் ஆளவந்தான்/அபய் படத்தைப் பார்த்த இன்ஸ்பிரேஷனில் தான் தன்னுடய கில்பில் படத்தில் வயலண்டான காட்சிகளை அனிமேஷனில் வைத்ததாக அனுராக் காஷ்யப்பிடம் உலகமே இன்ஸ்பயராகும் குவாண்டின் டொரண்டினோ கூறியிருக்கிறார். ஆவூவென்றால் கமலின் இந்தப்படம் காப்பி அது காப்பி என்று கூவிக் கொண்டிருப்பவர்களுக்கு மிட்டே பத்திரிக்கையில் செய்தியைப் படிக்க
@@@@@@@@@@@@@@@@@@@@@@
குளிச்சா குத்தாலம்

நான் ஈ
ஆந்திர மக்களைப் போல சினிமாவைக் கொண்டாடும் மக்களை பார்க்க முடியாது. ஒரு பக்கம் சீரியஸான சங்கராபரணமும் ஓடும், இன்னொரு பக்கம் யம தொங்கா போன்ற மசாலா படங்களும் ஓடும், காமெடி படங்களும் ஓடும். அவர்களைப் பொறுத்தவரை எண்டர்டெயின்மெண்ட் முக்கியம் அவ்வளவுதான். சினிமா தியேட்டரில் டிக்கெட் ரேட்டும் சாமான்ய மக்கள் பார்க்கக்கூடிய அளவிற்கே இருப்பதால் மக்கள் தியேட்டரில் சினிமா பார்ப்பார்கள். சமீபத்தில் தெலுங்கு நான் ஈக்கு இரண்டு நாள் தியேட்டர் தியேட்டராய் நன்றி சொல்ல, ராஜமெளலி, நானி, சுதிப் என்று மொத்த குழுவினரோடு பயணித்த நிகழ்வை மா டிவியில் சனி இரவு காட்டினார்கள். என்னமாய் கொண்டாடுகிறார்கள் சினிமாவை. ம்ஹும். பில்லா2 வின் ஆர்பாட்டத்திற்காக பல தியேட்டர்களில் எடுக்கப்பட்ட நான் ஈ மீண்டும் தமிழ்நாட்டுத் தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்

சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படம் என்று இப்படத்தை சொல்லலாம். இப்படத்தின் இயக்குனரைத்தான் பிரபு சாலமன் மிகவும் பாராட்டி கதை சொல்லச் சொல்லியிருக்கிறார். ஒரு சிறுவனை பிச்சைக்காரனாய் வேஷம் போட்டு ஆங்கிலத்தில் பிச்சை எடுக்க சொல்லிக் கொடுக்கும் பெற்றோர்களிடமிருந்து படம் ஆரம்பிக்கிறது. இன்னொரு பக்கம், புதியதாய் நேர்மையாய் செலக்ட ஆன ஒரு டிராபிக் கான்ஸ்டபிளின் முதல் நாள். லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட கரப்டட் டிராபிக் இன்ஸ்பெக்டர். பிச்சைக் கேட்கும் போதும் நேர்மையாய் இருக்கும் வயதான முதியவர் என்று அழகாய் பின்னப்பட்ட கதை. சின்னச் சின்ன உணர்வுகளை மிக அழகாய் வெளிப்படுத்திய்ருக்கும் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு பாராட்டுக்கள். முக்கியமாய் போலீஸ் டிராபிக் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் நடித்தவரின் நடிப்பு படு இயல்பு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இயக்குனர் கே.விஸ்வநாத்தின் சிரி சிரி முவ்வா என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்த இந்தி சர்கம். லஷ்மிகாந்த் பியாரிலாலின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம். இப்படம் மூலமாய்த்தான் ஜெயபிரதா இந்தி திரையுலகுக்கு அறிமுகமானார். லதா மங்கேஷ்கரின் அற்புதமான குரலில் இப்பாடல் என்று கேட்டாலும் இனிமையாய் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
கொலைவெறிக்கு பிறகு எல்லாரும் ஒரு பாடலை ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் ஷுட் செய்து யூடியூபில் போடுவது கலாச்சாரமாய் இருந்தாலும், எல்லா பாடல்களும் ஹிட்டாவது இல்லை. சமீபத்தில் இமானின் இசையில் சாட்டை படத்தில் ஷ்ரேயா கோஷலின் பாடல் ஒன்று அப்படி ஹிட்டானது. அது போல சமீபத்தில் பார்த்த பாடல் கார்த்திக்கின் குரலில், சத்யாவின் இசையில், ஒரு பெப்பியான மெலடி. பொன்மாலைப் பொழுது படத்திலிருந்து. உங்களுக்காக
@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு எக்ஸ்ட்ராடினரி ஓப்பனிங் கிங் அஜித் என்பதை நிருபித்துவிட்டார்
எல்லாரையும் உன்னால் திருப்திபடுத்த முடியாது.
2500 தியேட்டர் என்பது தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. உலகமெங்கும் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
உன்னுடய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது ஆனால் அதற்கான செயலை கட்டுப்படுத்த முடியும். அதனால திங்க் பண்ணி வேலை செய்யணும்.
பொறுமையாய் காது கொடுத்துக் கேட்டால் ப்ரச்சனையை துல்லியமாய் பார்க்க முடியும்
நிஜமாகவே சொல்கிறேன் என்னால் என்னை வெறுப்பவர்களை வெறுக்க நேரமில்லை. ஏனென்றால் நான் விரும்புகிறவர்களை விரும்பவே எனக்கு நேரமில்லை
நான் பேசுவதை யாரோ ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் அவன் இல்லையை ரீமேக் செய்ய சரியான படம் என்று சொன்னேன். உடன் ஆனது. #1
இதோ இன்று ஒரு ரெண்டு மாசம் முன்னால் தான் சொன்னேன் இன்று போய் நாளை வா வை ரீமேக் செய்தால் நிச்சய ஹிட் என்று ஆரம்பித்துவிட்டார்கள்.#2
சந்தானத்தின் சொந்தப்படத்தில் பவர் ஸ்டார் நடிக்கிறாராம். இன்று போய் நாளை வா ரீமேக்காம்.# Film News
ஹீரோ பேர் நானி படம் பேரு நான் ஈ ஹிரோவோட நிஜ பேரும் நானி அவதானிப்பூ
மனித உடலிலேயே வலிமையானது இதயம் தான் எனும் போது எப்படி அவளால் மட்டும் சுக்குநூறாய் உடைக்க முடிகிறது.?
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
வித்தணுக்களின் ஒன்று பக்கத்தில் பயணிக்கும் விந்தணுவிடம், கேட்டது “இன்னும் எத்தனை தூரம் இருக்கு கர்பப்பைக்கு?” என்று, அதற்கு பக்கத்து விந்தணு சொன்னது “ ஏன் இப்படி அவசரப்படுற.. நாம இப்பத்தான் தொண்டைய தாண்டியிருக்கோம்” என்றது.
Comments
டெக்கானில் வந்தமைக்கு வாழ்த்துகள்.
ஆனால் பிலாக்கரா ஆனதால் சினிமா வியோகஸ்தரா ஆக வாய்ப்பு கிடைத்தது அல்லது அப்புறம் விநியோகஸ்தர் ஆனேன்னு சொல்லி இருக்கிங்களே ,அப்போ உங்க சினிமா அனுபவத்தில சொன்னதுலாம் உட்டாலக்கடியா ? :-))
டெக்கானில் தப்பா போட்டுட்டாங்களா? என் நினைவகம் சரியா இருக்குமெனில் சூர்யா,ஜோதிகா நடிச்ச உயிரிலே கலந்தது படத்தினை நீங்க வாங்கி ,கையை சுட்டுக்கிட்டதாக எழுதி இருக்கீங்க, இல்லை அது அடுத்தவர் அனுபவம்னு எழுதினிங்களா? எனக்கு சரியா நினைவில்லை டவுட்டா தான் கேட்கிறேன், சோ நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்!
Cable சங்கர்.
சரி.... சாப்பாடெல்லாம் எங்கே ???
For once, the famed critic of yours has used the right language and you have answered straight! (I recollect your tweet here - நிஜமாகவே சொல்கிறேன் என்னால் என்னை வெறுப்பவர்களை வெறுக்க நேரமில்லை. ஏனென்றால் நான் விரும்புகிறவர்களை விரும்பவே எனக்கு நேரமில்லை.)
-R. J.
நான் உங்கள் பதிவிலேயே படித்துவிட்டேன், ஆனால் ரொம்ப நினைவில் இல்லை. இன்னொரு முறைப்படித்து விட்டால் போச்சு :-))
டெக்கானில் தான் பிழையா?நீங்க ஒரு போராளி ஆச்சே எப்படி சும்மா விட்டிங்க?, அரைகுறையான ஆர்வகுட்டி பத்திரிக்கையாளராக இருப்பாங்க போல :-))
---
செந்தழல்,
அப்போ அப்போ திடீர் திக்விஜயம் செய்றிங்க போல?
தலைவரு இலவசமா புக் கொடுத்த சுனாமி வந்திடும் :-))
நீங்க வேண்டுமானால் ஒரு copy வாங்கி பார்சல் செய்யுங்க,உங்கபேரை சொல்லி நான் படிச்சுக்கிறேன் :-))
ராஜேஷ் என்பவர் உங்க டவுசரை உருவிக்கிட்டு இருக்கார், வழக்கம் போல ஆர்வக்குட்டி, அரை குறை, முட்டாள்னு இன்னும் பட்டம் கொடுக்காம இருக்கீங்க -))
-----------
ராஜேஷ்,
நீங்க ரொம்ப லேட் பாஸ் இதெல்லாம் ,முன்னரே சொல்லியாச்சு ,ஆனாலும் அண்ணன் வருங்கால டீ.ஆர் கேபிள்ஜி அதுக்கெல்லாம் அசற மாட்டார் :-))
----
எதாவது அல்லக்கை வந்து கச்சேரி வைக்கும் ,பார்ப்போம், எல்லாம் என் கிட்டே தான் "வாய தொறக்குமா இல்லை இப்பவும் வாய தொறக்குமானு"
//vaval.. அவரை நானே இழுத்து வச்சு கூப்ப்பிட்டு ஆட்டம் ஆடிட்டு இருக்கோம்.//
அது சரி... எல்லாம் ஒரு விளம்பரம்...
எனக்கு ஆல் டைம் ஹிட் கவுண்டர் வசனம் தான் நியாபகம் வருது" ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பீட்டாக, அமெரிக்காவில அர்னால்ட் கூப்பீட்டாக ...:-))
//அது உங்களுக்கு மட்டுமே ஸ்பெஷல். முட்டாள் ஆர்வக்குட்டி, அரை குறை எல்லாம் உங்களுக்குத்தான்//
ரொம்ப நன்றி!!!
மீண்டும் ஒரு பில்லாத்தனமான டயலாக்கு...
என்னை முட்டாள்னு சொல்ல மூளை தேவையில்லை ஆனால் அறிவாளினு சொல்ல மூளை இருக்கணும் :-))