Thottal Thodarum

Nov 9, 2015

கொத்து பரோட்டா -09/11/15

மால் உள்ள இடத்தில் பக்கத்தில் பார்க்கிங் திறப்பதுதான் தற்போது லாபகரமான பிஸினெஸ். ஏனென்றால் மால்கள் அடிக்கும் கொள்ளை அப்படி. பீனிக்ஸ் மாலுக்கு எதிரே ஒரு பைக் பார்க்கிங்.  இன்னொன்று பக்கத்தில் 200 அடி ரோட்டில். விருகம்பாக்கம் ஐநாக்ஸுக்கு அதன் பக்கத்தில் உள்ள சின்ன தெருவில் பைக் பார்க்கிங் இருக்கிறது. பிவிஆருக்கு எதிரே பைக் மற்றும் கார் பார்க்கிங் கூட உள்ளது.  என்ன காருக்கு கொஞ்சம் சீக்கிரம் போய் இடம் பிடிக்கணும் என்கிறார்கள். மற்றபடி வெறும் பத்து ரூபாய்க்கு காலை முதல் மாலை வரை கூட பார்க் செய்து கொள்ளலாம். ஆட்டோக்களின் கொள்ளையால் கால் டாக்ஸி வளர்ந்தது. அது போல மால்களின் கொள்ளையாய் தற்போது புதிய பார்க்கிங் இடங்கள். இதுவும் கடந்து போகாமல் இருக்கட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@

என் ட்வீட்டிலிருந்து
இதே இண்டெர்நெட்டுத்தான் பிஜேபிய கொண்டாடிச்சி.. இன்னைக்கு தோத்ததுக்கு கொண்டாடுது. நாக்கு மட்டுமில்லை இண்டெர்நெட்டுக்கும் நரம்பில்லை போல.

yet another nice Rotarian meet and speech went of well.about Kettal Kidaikkum

ஹைகோர்ட் உத்தரவு என்பது மக்களுக்கு மட்டும் தானோ?‪#‎டாக்ஸ்ஃப்ரீ‬

என்னதான் 55வது வாட்டி விழுந்திருந்தாலும், மொத வாட்டி இப்பத்தான் ஆளூ மேல விழுந்திருக்கு.‪#‎சென்னைவிமானநிலையம்‬
@@@@@@@@@@@@@@@@@@
Raju Garu Gadhi
நம்மூரை ஆட்டிப் படைக்கும் பேய் பட ஜுரம் ஆந்திராவையும் மய்யம் கொண்டு விட்டு விளாசிய படம் தான் இந்த ராஜு காரு கதி. வழக்கமான பேய் கதை தான். ஆனால் காமெடியாய் விட்டு அள்ளி விட்டிருக்கிறார்கள். ஷக்கலக்க சங்கர் அடிக்கும் கூத்து ஒன்று படத்தின் ரேஞ்சையே மாற்றி விட்டது என்கிறார்கள் படக்குழுவினர்கள். தசராவின் போது கிட்டத்தட்ட 100 சில்லரை தியேட்டர்களில் வெளியான இப்படம் தற்போது 200 ஸ்கீரினுகும் மேலாய் ஓடி கல்லா கட்டிக் கொண்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் நண்பர் ஞானம் சுப்ரமணியம். கிடைத்த பட்ஜெட்டில் நன்றாகவே படமாக்கியுள்ளார். தமிழில் டிவி சீரியலில் அறிமுகமாகிய ஸ்ரீனிவாஸ் அங்கே சேட்டன். நம்மூர் பூர்ணா தான் பேய். சிரித்துவிட்டு வரலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு வாரமாய் எடிட்டிங் மற்றும் டப்பிங் வேலைகள். நடுவே நண்பர் ஒருவருடய படத்தின் கதை விவாதம். ப்ரொடக்‌ஷன் வேலைகள் என படு பிஸியாகவே சென்று கொண்டிருக்கிறது. என் உதவியாளனின் படத்தின் நடித்திருந்தேன் டப்பிங்கின் போது உடன் நடித்த நடிகரின் டப்பிங்கிற்கு உதவிக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பின் போது அவரது உச்சரிப்பை டப்பிங்கின் போது சரி செய்து கொள்ளலாம் என்று என் உதவியாளர் அவர் நினைத்ததை செயல் படுத்த பகீரத பிரயத்தனப் பட வேண்டியிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
11:14
ஒர் இளைஞன் லைட்டாய் ஒரு மிரடு சரக்கை அடித்துக் கொண்டே கார் ஓட்டிக் கொண்டு, போனில் பேசிக் கொண்டும் வர, அப்போது அவனது கார் ஒரு உடல் மீது மோதி நிற்கிறது. தான் தான் மோதி கொன்று விட்டோமென்று அந்த உடலை அப்புறப்படுத்தி, எஸ்ஸாக பார்க்கும் போது, போலீஸ் வருகிறது. வந்து அவனை கைது செய்கிறது. அந்த போலீஸ் வேனில் ஒரு பெண்ணும், பையனும் இருக்கிறார்கள். இளைஞன் போலீஸிடமிருந்து தப்பிக்க, அவர்களும் தப்பிக்கிறார்கள். தப்பி ஓடும் இளைஞனை ஒரு வயதான ஒருத்தி மடக்கி, எங்கே என் புருஷன் என்று பிடித்து அடித்து விசாரிக்கிறாள்.  அந்த விபத்து நடந்த நேரம் 11:14 நிமிடங்கள். இப்போது கதை வயதான பெண்ணின் கணவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. அவரது மகளை அழைக்க ஒருவன் காத்திருக்க, அவன் நல்லவன் அல்ல கொஞ்சம் பார்த்து பழகு என்கிறார் அப்பா, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வெளியே செல்கிறாள் மகள். கொஞ்சம் நேரம் கழித்து வந்து பார்க்கும் போது மகள் இல்லை ஆனால் அவளை அழைத்துச் செல்ல வந்தவனின் முகத்தில் சமாதியின் மீது வைக்கப்படும் உருவச்சிலை முகத்தில் போட்டு கொலை செய்யப் பட்டிருக்க, தன் மகளை அவன் ஏதோ செய்ய நினைத்திருக்க, அவள் கொன்று விட்டாள் என, அவனை உடலை அங்கேயிருந்து அப்புறப்படுத்தி, ஹைவேயிலிருந்து கீழே போடுகிறார். அந்த உடல் தான் முதல் காட்சியில் வந்த இளைஞனின் கார் மீது விழுந்த உடல். அந்த நேரம் 11:14. இப்படியாக, கதை மிகச் சுவாரஸ்யமாய் போகிறது அந்த பெண்ணுக்கும், இறந்த இளைஞனுக்கும், முதல் காட்சியில் காரில் வரும் இளைஞனுக்குமான உறவு. அவளுடய கருவை கலைப்பதற்காக உதவ, கடையை கொள்ளையடிக்கும் இளைஞன், அவளுடய, தோழி. நடுவே சரக்கடித்துவிட்டு, போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தத்தாரியாய் வெறி கொண்டு வண்டியோட்டி, அப்பெண்ணை கொன்றுவிடும் இளம் சிறார்கள். அதில் லுல்லா அறுபட்டு, துடிக்கும் பையன் ஒருவன் என கதகளி ஆடுகிறது திரைக்கதை. டோண்ட் மிஸ் இல்லாட்டி தமிழ்ல வரும் போது பாத்துக்கங்க..:)
@@@@@@@@@@@@@@@@@@@
வரி விலக்கு கொடுக்கப்பட்ட படத்தின் டிக்கெட் விலை குறைக்கப்பட வேண்டுமென்ற உச்ச நீதி மன்ற உத்தரவை காற்றில் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் தீபாவளிக்கு திரையிடப்படும் படங்களின் டிக்கெட் விலை 120க்கும் மேலே முன்னூறு நானூறு என்று போய்க் கொண்டிருக்க, அதிக விலை விற்கும் அரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக்கில் அதிக விலைக்கு விற்றால் , ஆம்னி பஸ்களின் டிக்கெட்டுக்களை அதிக விலைக்கு விற்றால் எப்படி நடவடிக்கை எடுப்பார்களோ அப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாய் மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடந்துட்டாலும்.
@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
ஐந்து நிமிடப்படம் தான். பட். குவாண்டினின் ஸ்டைலில் ஒரு இந்திய குறும்படம். 
@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Why do men have a hole in their penis? 
So their brains can get some oxygen now and then.


Post a Comment

1 comment:

கலையன்பன் said...

அனைத்துமே நன்றாக உள்ளன.