Thottal Thodarum

Nov 24, 2014

கொத்து பரோட்டா -24/11/14

என் ட்வீட்டிலிருந்து
Naa Bangaru thalli. receiving extrodinary reports in chennai iam happy

எங்களாலத்தான். அவங்க ஒண்ணியும் பண்ணலை.
‪#‎ஏனிந்தநாரப்பொழப்பு‬

எவ்வளவோ வாட்டி கேட்டுட்டேன். இன்னும் பிடிபடலை..


பசங்க மனசு பேரரசு படம் மாதிரி பொண்ணுங்க மனசு நோலன் படம் மாதிரி ‪#‎தொட்டால்தொடரும்‬ இம்பாக்ட்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@


கோணங்கள்
இணையத்தில் எழுதுவதற்கும், பத்திரிக்கைகளில் எழுதுவதற்கும், தினசரிகளில் எழுதுவதற்கும், புத்தகமாய் வரும் எழுத்துக்கும் தனித்தனி வீச்சு கிடைக்கிறது என்பதை இணையத்தில், வார இதழ்களில், புத்தகங்களாய் எழுதி வெளிவந்த போது கிடைத்த அனுபவங்கள் மூலம் தெரிந்தது. இணையத்தில் எல்லாமே இன்ஸ்டெண்ட். புத்தகம் என்றால் அதற்கான பீட் பேக் தேவர் சிவாஜி வசனம் போல ஃபீட் பேக் “அவன் மெதுவாத்தான் வருவான்”. வார இதழ்களில் வெளிவந்த அடுத்த நாளோ, அல்லது வாரத்திலோ தெரிந்துவிடும், ஆனால் தினசரிகளில் வாரா வாரம் Column எழுதுவது என்பது எனக்கு புது அனுபவம். கோணங்கள் ஆரம்பித்து எட்டு வாரங்களில் இதுவரை அறிமுகமேயில்லாத ஊர்களிலிருந்தும், புதிய புதிய வாசகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. சினிமா துறையில் உள்ள நண்பர்கள் பலரின் அதிகப் பட்ச கவனிப்பை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் எல்லாத்தையும் இப்படி புட்டு புட்டு வைக்கணுமா என்கிற விமர்சனத்தையும் சேத்துத்தான் வழங்குகிறது. கூடவே நிறைய மின்னஞ்சல்கள் பாராட்டியும், சந்தேகம் கேட்டும், என்னை சந்திக்க அனுமதி கேட்டும், இன்னும் சில மெயில்கள் நான் எனக்கு சில தயாரிப்பாளர்களை தெரியும் என்று சொன்னதை வைத்து எனக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள் என்றும் வருகிறது. பத்திரிக்கையாளர்களிடையேயும் நல்ல விமர்சனம் வர ஆரம்பித்திருக்கிறது.  என் அனுபவத்தில் தினசரிகளில் எழுதும் எழுத்துக்கு பரந்துப்பட்ட கமர்ஷியல் வீச்சு இருக்கிறது என்று தெரிகிறது. மேலும் பொறுப்பு அதிகமாகிறது. சிறப்பாக செய்வேன் என்கிற நம்பிக்கையிலும், உங்கள் ஆதரவிலும் தொடர்கிறது கோணங்கள் தமிழ் இந்துவில்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சோக்கிதானி போயிருந்தோம். பெங்களூர் ஹைவேஸ் படு மோசமாய் குண்டும் குழியுமாய் இருக்கிறது. கொஞ்சம் கலை நயத்தோடுத்தான்  அவர்களின் சாப்பாட்டுக்கடையைப் பற்றி தனியாய் பார்ப்போம். காரிலிருந்து இறங்கிய மாத்திரத்தில் ராஜஸ்தான் மோளம் அடித்து வரவேற்கிறார்கள். அத்துனை வரவேற்புடன் கொஞ்சம் ஏஸ்தெடிக் அமைப்புடன் திண்ணையில் அமர்ந்திருந்த தலைப்பா கட்டிய ஆட்கள் முன்னால் கம்ப்யூட்டர் கொஞ்சம் முரணாய் தெரிந்தாலும், தலைக்கு 600 ரூபாய் வாங்கிக் கொண்டு உடன் ஒர் கையிடை அனுப்பி வைத்தார்கள். அங்கே தான் காமெடி. அவனுக்கு சுத்தமாய் அட்சரம் தமிழ் தெரியாது.  ஒர் செட்டப் குளத்தில் போட்டிங் என்று போட்டிருந்தார்கள். கேட்டால் சர்வீசிலிருக்கிறது என்று சொல்லி ரெண்டு ஒல்லிப் பெண்களின் ராஜஸ்தானிய கிராமிய பாடல்களுடன், வாயில் கெரசின் ஊற்றி நெருப்பு புகை விட்டும், தலையின் மேல் அடுக்கடுக்காய் பானைகளை வைத்தும் ஆட்டம் ஆடினார்கள். அங்கிருந்து அடுத்த லெவலுக்கு போனால் கிராமிய குடிசைகள் அமைப்புடன் ஒர் செட். அதன் வாசலில் இரண்டு தலப்பா கட்டிகள் தபேலா, ஆர்மோனியத்துடன் உட்கார்ந்திருக்க, அவர்கள் முன்னால் கயிற்றுக் கட்டில்கள்.  ராஜஸ்தானிய கானா ஆரம்பித்தது. ஒரு பாடல் முடிந்ததும் உங்களுக்கு பிடித்த பாடல் சொல்லுங்கள் பாடுகிறேன் என்றார். நான் பங்கஜ் உதாஸின் சிட்டி ஆயிஹே பாடச் சொன்னேன். நிஜமாகவே நன்றாக பாடினார். ஒட்டக சவாரி, மாட்டு வண்டி சவாரி, சைக்கிள் ரிக்‌ஷா என்று போட்டிருந்தார்கள் சைக்கிள் ரிக்‌ஷாவை காணோம். பீச் பலூன் துப்பாக்கி, கயிற்றில் நடக்கும் தொம்மக்கூத்தாடி ஆட்டம், பொம்மலாட்டம் என ரக வாரியாய் அத்துனாம் பெரிய இடத்தில் வைத்திருக்கிறார்கள். என் பையன்கள் மிகவும் என்ஜாய்  செய்தார்கள். சோக்கிதானி போனதால் நான் கண்டுபிடித்த நல்ல விஷயம் எனக்கு ஹிந்தி கொஞ்சம் சரளமாய் பேச வருகிறது என்பதுதான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நம்பிக்கை மனுஷிகள்
சில வருடங்களுக்கு முன் வெளிநாட்டில் வசிக்கும் நண்பரொருவர் என்னை சந்தித்து ஒரு பழைய வீடியோ கேசட்டை கொடுத்து இதில இருக்கிற புட்டேஜை எனக்கு எப்படியாவது எடுத்துக் கொடுக்கணும் என்று கேட்டார். கிட்டத்தட்ட புராதானமாகிக் கொண்டிருக்கும் கேமராவிலேயே போட்டு ஷூட் செய்யும்  டேப் கேசட் அது. உள்ளே பூஞ்சக்காளான் பிடித்து இருந்தது. எனக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் போய் தேடி ஒரு வழியாய் ஸ்டான்லி வீடியோஸில் கொடுத்து மாற்றிக் கொடுத்தேன். வீடியோவை சிடியாய் மாற்றிக் கையில் கொடுத்த மாத்திரத்திலிருந்து அவர் எனக்கு நன்றி சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்படி என்ன செய்துவிட்டேனென்று எனக்கு புரியவில்லை. ஆனால் அவரை சந்திக்க வீட்டிற்கு சென்ற போது புரிந்தது. மேலே உள்ள வீடியோவில் உள்ள சகோதரிகள் போல அவருடய பையனுக்கும் மஸ்குலர் டிஸ்ட்ரோபி. அந்த வீடியோவில் அவன் ஓடி ஆடி விளையாடிய வீடியோக்கள் இருக்கிறது. அதை பொக்கிஷமாய் பாதுக்காக்க எண்ணித்தான் என்னை அணுகியிருக்கிறார் என்று.  அதன் பின் அவரின் பையன் எனக்கு மிகவும் நெருக்கமானவனாகிவிட்டான். அவனுடன் நான் என் குடும்பத்துடன் டூர் கூட போய்விட்டு வந்தோம். மிகவும் புத்திசாலி. சினிமா, அரசியல், கிரிக்கெட் என வீட்டிலிருந்தபடியே எல்லாவற்றையும் கரைத்து குடித்ததுபோல பேசுவான். அவனின் உடல், அவனது வாழ்நாளைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாய் சுருங்கிப் போய் கொண்டிருந்ததை பார்த்து மனம் உருகினாலும், வேறு வழியில்லை என்று கடந்து போய், அவனின் கடைசி நாள் வரை நண்பரும், அவரது மனைவியும், ஏதோ கணத்தில் போடா என்ன வாழ்க்கைன்னு தோணும் அப்படி தோன்றும் போது கூட முகம் சுளிக்காமல் அவனை அனுப்பி வைத்தார்கள். இச்சகோதரிகளின் நம்பிக்கையை அவன் இருந்த காலம் வரை அவனிடம் நான் பார்த்தேன். வெரி பாஸிட்டிவ். உலகம் இவர்களைப் போன்றவர்களிடமிருந்துதான் நம்பிக்கையை மீண்டும் மீண்டும் விதைக்கிறது. வாழ்த்துகள் கீதா இளங்கோவன்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Naa Bangaaru Thalli
தேசிய விருதும், உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டும், சர்வதேச விருதுகளையும் பெற்ற தெலுங்கு படம். நம்மூரில்  இந்த வாரம் ரிலீஸாகியிருக்கிறது. பெரும்பாலும் காலைக் காட்சியாக இருக்க, மாயாஜாலில் மட்டும் இரவு எட்டு மணி காட்சியிருப்பதை அறிந்து ஞாயிறன்று சென்றேன். ஒரு ப்ராத்தல் முதலாளியிடமிருந்து கதாநாயகி தப்பி வரும் காட்சியிலேயே நம்மை கதைக்குள் இழுத்து விடுகிறார்கள். கோதாவரி கரையோர கிராமத்தில் அமைதியாய் வாழ்ந்து கொண்டு ஸ்டேட் லெவலில் எட்டாவது வந்து, பெரிய படிப்பை ஹைதராபாத்தில் போய் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பவள். எது படித்தாலும் இங்கே படி ஹைதராபாத் எல்லாம் வேண்டாம் கெட்டு சீரழிந்து போய்விடுவாய் என்று எப்போதும் கண்டிக்கும் அப்பா. அதை மீறி அவள் ஹைதராபாத்துக்கு கல்லூரியில் சேர இண்டர்வியூவுக்காக வருகிறாள். வந்தவளை செக்ஸ் ட்ராபிகிங் செய்யும் கும்பல் தூக்கி கொண்டு செல்கிறது. அதற்கு காரணம் அவளது அப்பா. ஏனென்றால் அவளது அப்பா கிராமத்தில் நல்ல மனசு கொண்ட ஆளாய் வலம் வந்தாலும், ஹைதையில் பிம்ப். அவளது பெண்ணை வேறு ஏதோ ஒரு பெண்ணை வைத்து வியாபாரம் தனியாய் செய்ய முயல்கிறான் என்று நினைத்து கடத்தி வந்து சீரழிக்கிறார்கள். பத்து நாட்கள் கழித்து அவளை கல்யாணம் செய்ய நிச்சயத்திருந்த மணமகன் பார்த்து அவளை இக்கட்டிலிருந்து காப்பாற்றி வீடு வந்து சேர்க்கிறான். துர்காவுக்கு தன் நிலையை விட தன் அப்பா ஒரு பிம்ப் என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்க, வீடு வந்து சேர்ந்த மகளை எதிர்நோக்க முடியாமல் அப்பா என்ன செய்கிறார்? அதற்கு துர்காவின் மனநிலை என்ன என்பதுதான் க்ளைமேக்ஸ்.  

துர்காவாக அஞ்சலி பட்டேலின் நடிப்பு படு யதார்த்தம். கோபம், சந்தோஷம், ஆச்சர்யம் அதிர்ச்சி, சோகம் எல்லாவற்றையும் அவரது பெரிய கண்களும், உதடுகளும் மிக சுலபமாய் வெளிப்படுத்தி விடுகிறது. அப்பாவாக வரும் சித்திக்கின் நடிப்பு க்ளாஸ். ஸ்டேட் லெவலில் பரிசு வாங்கும் விழாவிற்கு வரும் போது கண்கலங்கி, மகிழ்ச்சியும் பெருமிதமும் பொங்க “நா பங்காரு தல்லி” என பெருமைப்படும் இடத்திலாகட்டும், தான் செய்த பாவத்திற்குத்தான் தன் பெண் பலியாகியிருக்கிறாள் என்று தெரிந்து அதிர்ந்து போய் அவளை தேடியலையும் இடத்திலாகட்டும், க்ளைமாக்ஸில் மகளின் முகத்தை எதிர் கொள்ள முடியாமல் அவள் கால் பிடிக்க தொடும் நேரத்தில தெரியும் அவமானம் ஆகட்டும் க்ளாஸ். சாந்தனுவின் பின்னணியிசை, டான் மேக்சின் எடிட்டிங், ராமு துளசியின் ஒளிப்பதிவு எல்லாமே சுகம். கதை திரைக்கதை எழுதி இயக்கியவர் ராஜேஷ் டச்ரிவர். துர்கா கடத்தப்படுவதற்கு முன்னால் அவளின் மீது இரக்கம் வருவதற்காக சொல்லப்படும் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் சவசவதான். ஆனால் இடைவேளையில் நம்மை நிமிர வைத்தவர் கடைசி வரையில் நம்மை சினிமாவி க்ளீஷே ப்ராத்தல் இடங்களைக் காட்டினாலும் அழுத்தமாய் காட்சிகளை அமைத்து, கிளைமேக்சில் அட. இதுதாண்டா அவனுக்கு சரியான தண்டனை என்று கை தட்ட வைத்து விடுகிறார். ஆனால் இதே ரீதியில் நிறைய படங்கள் வந்திருந்தாலும், அப்பாவே ஒரு பிம்ப் எனுமிடத்தில் தான் இப்படம் தனித்து தெரிகிறது. ஆனாலும் மகாநதி கொடுத்த அழுத்தத்தை, வலியை இன்றளவில் இன்னமும் இம்மாதிரியான ஹூயூமன் ட்ராபிகிங் சம்பந்தப்பட்ட கதையில் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.இப்படி தேசிய அளவில், உலக அளவில் விருது பெற்ற நம்மூர் படத்திற்கு மொத்தமே பதினைந்து பேர்தான் அரங்கில். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A bride tells her husband, "Honey, you know I'm a virgin and I don't know anything about sex. Can you explain it to me first?" "Okay, sweetheart. Putting it simply, we will call your private place 'the prison' and call my private thing 'the prisoner'. So what we do is put the prisoner in the prison." And they made love for the first time and the husband was smiling with satisfaction. Nudging him, his bride giggles, "Honey the prisoner seems to have escaped." Turning on his side, he smiles and says, "Then we will have to re-imprison him." After the second time, the bride says, "Honey, the prisoner is out again!" The husband rises to the occasion and they made love again. The bride again says, "Honey, the prisoner escaped again," to which the husband yelled, "Hey, it's not a life sentence!!!"
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

A Simple Man said...

so what next? bollywood!!
sharuk khan!! jamai :-)