Thottal Thodarum

Nov 17, 2014

கொத்து பரோட்டா -17/11/14

சென்ற வாரம் ரிலீஸான தமிழ் படங்கள் ஏழுக்கு மேல். சென்னை தேவி கருமாரியில் நான்கு புது திரைப்படங்கள் வெளியாகியிருந்தன. பகல் காட்சிக்கு வந்திருந்த ஆட்கள் மொத்தமே 6 பேர் இருந்தார்கள். எந்த படம் ஓடும்னே தெரியலை. பார்த்த நண்பர் சொல்லி புலம்பினார். பக்கத்து ஐநாக்ஸில் சற்றே தெரிந்த நடிகர் நடிகை நடித்த புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்தேன் மொத்தமே அறுபது பேருக்கு மேல் தியேட்டரில் ஆள் இல்லை.  400 பேருக்கு மேல் அமரும் அரங்கமது. ஆனால் படம் பார்க்க உட்கார்ந்த அரை மணி நேரத்தில் பேஸ்புக்கில் எல்லா ஊர்களிலும் ஹவுஸ்புல் என்கிற ரேஞ்சுக்கு ஸ்டேடஸ் போட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வரும் போது ஏதோ ஒரு வெப்சைட்காரர்கள் மக்கள் ரிப்போர்ட்டுக்காக காத்திருந்தார்கள். என்னுடன் வந்த ஆட்கள் உட்பட முதல் இருபது பேர் எதுவுமே சொல்லாம போனார்கள்.  வந்த ஏழு படங்களில் மூன்று படங்களுக்கு நிறைய ஊர்களில் வாண்ட் ஆப் ஆடியன்ஸ். முதல் காட்சி கூட போடப்படாமல் தூக்கப்பட்டது. இப்படி ஒரு பக்கம் போகிறது என்றால் இன்னொரு பக்கம் புரிகிறதோ புரியலையோ நோலனின் இண்டர்ஸ்டெல்லர் வார நாட்களில் கூட ஹவுஸ்புல்லாக போய்க் கொண்டிருக்கிறது. கொஞ்சம் என்ன ரொம்பவே பயமாத்தான் இருக்கு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


என் ட்வீட்டிலிருந்து
மஞ்சப்பை தெலுங்குலேயும் ஹிட்.. 


இணையம் என்பது மிகைப் படுத்தப்பட்ட பொய்களின் சங்கமமாய் ஆகிவிட்டது.


நல்லாருக்குங்கிற நம்பிக்கை பெரும்பாலும் பொய்த்துத்தான் போகிறது.‪#‎அவ்வ்வ்‬ மெளமெண்ட்

சினிமாவுல எப்படி ரஜினியோ அது போல கிரிக்கெட்டுல சச்சின். யாரு அவர் ரெக்கார்டை முறியடிச்சாலும் பெருசா சிலாகிக்க மாட்டாங்க.‪#‎அவதானிப்பூஊஊ‬

இண்டெர்ஸ்டெல்லராம்.. நோலனாம். என் தலைவன் வீராச்சாமி சாவுற சீன் ஒண்ணுக்கு ஈடாகுமா? ‪#‎வீராச்சாமிஎபெக்ட்‬

எனக்கு தெரிஞ்ச வார்ம் ஹோல்னு என் நண்பர் சொன்னதை பப்ளிக்கா சொல்ல முடியலை மெளமெண்ட்


படிக்கிற காலத்தில ஒழுங்கா சயின்ஸு படிச்சிருந்தா எம்பூட்டு நல்லாருந்திருக்கும். ‪#‎இண்டெர்செல்லர்‬

இதுக்குத்தானா இம்பூட்டு நீள பேட்டியெல்லாம்


கற்றாரை கற்றாரே காமுருவர்னு சொன்னதோட அர்த்தம் எனக்கு இன்னைக்குத்தான் புரிஞ்சுது. நன்றி ஐயம் ஹேப்பி.:_)

தேவுடு காப்பது எனும் வார்த்தை திருப்பதியிலிருந்து உருவாகியிருக்க வேண்டும் ‪#‎அவதானிப்பூஊஊஊ‬
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
திருட்டு விடியோவுக்கு எதிராய் திரையுலகம் இணைந்து போராட்டம் நடத்தப் போகிறது. என்னதான் போராடி, மனு கொடுத்தாலும், அதை செயல்படுத்த அரசின் ஒத்துழைப்பு வேண்டும். மல்ட்டிப்ளெக்ஸ் இருக்கும் ஒர் மாலில் போன வாரம் தயாரிப்பாளர் சங்கம் ரைடு விட்டு போலீஸாரிடம் பிடித்துக் கொடுத்தார்கள். ரெண்டு நாளைக்கு முன் திரும்பவும் கடை ஜோராக நடந்து கொண்டுதானிருக்கிறது. திருட்டு டிவிடி மூலம் வாங்கி படம் பார்ப்பவர்களை விட, ஆன்லைனில் டவுன்லோட் செய்து பார்ப்பவர்கள் தான் அதிகம். வெளிநாட்டு உரிமையே கொடுக்கப்படாத படங்கள் கூட படம் வந்த நாளிலேயே டவுன்லோட் லிங்க் வருகிறது என்றால் மொத்த சினிமா உலகமும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அப்புச்சி கிராமம்
ஊருக்குள் பங்காளி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஊர் பெருசுகள், பெருசின் பெண் காதலிக்கும் ட்ரைவர், அமெரிக்க பிள்ளைக்காக காத்திருக்கும் அம்மா, கஞ்ச பிசினாரி கஞ்சா கருப்பு,  நாலும் தெரிஞ்ச பெரிய மனுஷன் சிங்கம்புலி. என குழப்பமான ஊரின் மேல் விண்கல் வந்து விழுகிறது. இப்ப விழுந்தது சேம்பிள் தான் நிஜமான கல்லு ஒரு வாரம் கழிச்சுத்தான் விழப்போகுதுன்னு கவர்மெண்ட் சொன்னதும்தான் தெரியுது நாம் ஏன் இப்படியான கேவலமான வாழ்க்கை வாழறோம்னு. எனவே கல்லு விழுறதுக்குள்ள ஊர் எப்படி திருந்துகிறது. காதல் ஜோடிகள் என்னாச்சு?, ஊர் பெருசுகளால் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருக்கும் சுப்ரமணிய சாமி சிலை மேட்டர், டிவி சேனல்களின் ஆர்ப்பாட்டம், க்ளைமேக்ஸ் சிஜி என கொஞ்சம் மெனக்கெட்டிருந்தாலும், மொத்ததில் திரைக்கதையாய் நம்மை எங்கேஜ் செய்யவில்லை. எனினும் புதிய முயற்சி செய்த டீமுக்கு வாழ்த்துகள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
Interstellar
ரஜினி படம் பார்க்கப் போனா அவரு படத்துல கதை எதுக்கு? அதான் ரஜினி இருக்காரு இல்லை? என்பதைப் போல நோலனின் படத்தைப் பார்த்தால் எப்படியும் புரியாது எதுக்கும் நாலைஞ்சு வாட்டி பார்த்தாத்தான் புரியும் என்கிற மனநிலையோடே படம் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு “ஆ”வென ஆச்சர்யத்தோடு பார்க்கலாம். கதை புரிய ஆரம்பித்தால் 3,4,5 டைமென்ஷன், வார்ம் ஹோல் போன்ற விஷயங்கள் பற்றி ஏற்கனவே புரிந்தவர்களுக்கு “சரி அப்புறம் என்னண்ணே” என்ற ரியாக்‌ஷன் தான் இருக்கும். நான் இதில் ரெண்டும் கெட்டான்,  ரொம்பவே மாய்ந்து மாய்ந்து பேசியதால் இடைவேளை வரை சுத்தி சுத்தி அடித்தது. பின் பாதியில் Hans Zimmerஇன் இசை என்னை விழிப்புடன் இருக்க வைத்தது. வழக்கமாய் மாயாஜாலக்கதைகளில் வரும் ஏழு மலை, ஏழு கடல் தாண்டிப் போய் ஒர்  இடத்தை அடையும் கதையாகத்தான் மட்டுமே என்னை இண்டர்செல்லர் வசீகரித்தது. பல இடங்களில் வசனங்கள் நன்றாகவே இருந்தது. சத்யமில் இருந்த 900த்து சொச்ச ரசிகர்களில் கை தட்டல்களை எண்ண முடிகிற வகையில். வெளியே வரும் பலரின் முகத்தில் உடன் வந்தவர்களிடம் நல்லாருக்குன்னு சொன்னா? என்ன நல்லாருக்குன்னு கேட்டா என்ன பண்றது? நல்லாயில்லைன்னா.. நீயெல்லாம் இங்கிலீஷ் மசாலா படம் பார்க்கத்தான் லாயக்குன்னு சொல்லி திட்டுவாங்களோன்னு குழப்பத்தோடவே நடந்து வர்றாங்க. எனக்கு முதல் ஒரு மணி நேரப் படம் கிட்டத்தட்ட தமிழ் படம் மாதிரி இருந்திச்சு. அம்பூட்டு டயலாக். ஆனாலும் இண்டர்செல்லர் உலக திரையுலக வரலாற்றில் ஒர் சிறந்த, ஆற்புதமான படம் (இன்னொரு அரைத் தூக்கத்தில பார்க்காம பார்த்துடுவோம்) வாழ்க நோலன். சமீபத்தில் ராதா மணாளன் என்பவர் போட்ட இண்டர்செல்லர் ஸ்டேடஸ்தான் இப்போதைக்கு நமக்கு ஒத்தாசை.
 ‪#‎interstellar‬ and wives are same..We never get what they say ,but we always pretend like we have understood.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
A boy says to a girl, "So, sex at my place?" "Yeah!" "Okay, but I sleep in a bunk bed with my younger brother, and he thinks we're making sandwiches, so we have to have a code. Cheese means faster and tomato means harder, okay?" Later on the girl is yelling, "Cheese cheese, tomato tomato!" The younger brother says, "Stop making sandwiches! You're getting mayo all over my bed!"
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

குரங்குபெடல் said...

"ஐநாக்ஸில் சற்றே தெரிந்த நடிகர் நடிகை நடித்த புதுப்படத்திற்கு டிக்கெட் எடுத்தேன் "

" கொஞ்சம் என்ன ரொம்பவே பயமாத்தான் இருக்கு. "படத்தின் . . . பெயர் போடாதப்பவே தெரிகிறது . . .

நீங்க பயத்துல இருக்குறது . . .