ஆட்சி மாற்றம் கொடுக்கப் போகும் மாற்றங்கள்-2
திமுகவின் ஆட்சியாய் இருக்கும் பட்சத்தில் அம்மா.. அம்மா என்று ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்கள் இல்லாது போகும். அம்மா உணவகம் பேரறிஞர் அண்ணா உணவகமாய் மாற வாய்ப்பு உண்டு. நிச்சயம். போன ஆட்சியில் அரசு மருத்துவமனையாய் மாறிய கட்டிடம் மீண்டும் தலைமை செயலகமாய் மாறும். அண்ணா நூலகம் சிறப்பாக இயங்கும். ஏற்கனவே அரை குறையாய் போடப்பட்ட ரோடுகள் மீண்டும் போடப்படும். கார்பரெஷன் கக்கூஸுகளின் காண்ட்ரேக்ட் மீண்டும் இம்முறை ஆட்சிக்கு வருகிறவர்களின் கைகளில் மாறும். அதிமுக ஆட்சியில் யாருக்கும் பெரிய அதிகாரமில்லை, நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போல எப்போது வேண்டுமானாலும் பதவி போகலாம் என்ற நிலை இருக்கும். அது மாறும் கட்சியில் இருக்காது என்பதினால் பதவி கிடைத்தவர்களின் அதிகார ஆட்டம் அவரவர் ஏரியாக்களில் அதிகமாய் இருக்கும். போட்ட காசை எடுப்பதற்கு காசு வாங்கினாலும், நிச்சயம் வேலை நடக்கும். மேற் சொன்ன மாற்றங்கள் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அஃதே சீரிய முறையில் நடக்கும்.
கேபிள் சங்கர்
Comments