தன் நண்பனின் திருட்டு காதல் திருமணத்துக்கு உதவுகிறேன் பேர்விழி என்று, அவர்களின் ப்ளான் எல்லாவற்றையும் பெண்ணின் அம்மாவுக்கு தெரியபடுத்தி, கடைசி நேர சேஸிங், குழப்படி எல்லாவற்றையும் மீறி திருமணத்தை நடத்தி வைக்கிறான். ஏன் இப்படி செய்தான் என்று கேட்டால் “சும்மா ஓடி வந்து கல்யாணம் செய்து கொண்டால். அதிலென்ன கிக் இருக்கும் அதனால் தான் என்கிறான். இப்படி தான் செய்யும் பிரதி விஷயங்களிலும் கிக்குக்காக செய்யும் புத்திசாலி, கல்யாண்.
தன் தங்கை அவனை காதலிப்பதாய் சொல்ல, அவன் கிக்குக்காக எதையும் செய்பவன் என்று சொல்லச் சொல்லி அவனிடம் கேட்க, அவனும் அப்படியே சொல்லி ஆனால் அவன் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அது வேறு யாருமில்லை உன் அக்காதான் என்கிறான். ஒரு கட்டத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நிரந்தரமாய் வேலை செய்தால் அவனை காதலிப்பதாய் சொல்ல, அதற்காக ஒரு வேலையில் சேர்ந்து, பின் வேலை விட்டுவிடுகிறான் அதனால் அவனை பிரிகிறாள் காதலி.
காதலியின் பிரிவிற்கு பிறகு அவன் மிகப் பெரிய கொள்ளைக்காரனாய் ஆக, அவனை தேடி போலீஸ் ஆபிஸர் கல்யாண் அலைய, திருடன் கல்யாணுக்கும், போலீஸ் கல்யாணுக்கு நடக்கும் கேட் & மவுஸ் கேமில் யார் வெற்றி பெற்றார்கள், ஏன் கல்யாண் திருடனானான்?. ஹீரோயினுக்கும் அவனுககும் திருமணம் நடந்தத.? என்பது தான் கதை.
ரவிதேஜா வழக்கம் போல அலட்டி கொள்ளாமல் நடித்திருகிறார். படம் முழுக்க அவரின் ட்ரேட்மார்க் காமெடி காட்சிகள். க்ளைமாக்ஸ் காட்சிகளில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
இலியானா கொஞ்சம் சதை போட்டிருக்கிறார். அழகாய் இருக்கிறார். ரவிதேஜாவுக்கும், அவருக்கும் நடக்கும் காதல் போட்டி காட்சிகளில் நடிக்கவும் செய்கிறார்
ரவிதேஜாவை துரத்தும் போலீஸ் ஆபீஸராய் நம்ம ஷாம். அந்த வேடத்துக்கு அருமையாய் பொருந்தியிருக்கிறார். படு ஹார்டான வாய்ஸை அவருக்கு டப் செய்திருக்கிறார்கள். அது தான் அவ்வளவாக பொருந்தவில்லை.
வழக்கம் போல் ப்ரம்மானந்தம் தூள் பரத்துகிறார். அதிலும் ரவிதேஜாவிடம் மாட்டி கொண்டு அவர் படும் பாடும், அவரது ரியாக்ஷனும்.. இலியானா ரவிதேஜாவை வெறுப்பேற்ற இவரை காதலிப்பதாய் சொல்ல, ரவிதேஷாவிடமே ஐடியா கேட்டு அது ஒவ்வொரு முறையும் சொதப்ப, காதல் வயப்படும் போதெல்லாம் பின்ணனியில் வயலின் வாசிக்கும் ஆட்கள் என்று சரி காமெடி.
ரசூலின் ஒளிப்பதிவில் குறையொன்றுமில்லை. எம்.எம் தமனின் இசையில் மூன்று பாடல்கள் ஓகே.
வழக்கமாய் பழிவாங்கும் ஆக்ஷண் படங்களையே இயக்கும் சுரேந்திரா ரெட்டி, இம்முறை காதலுக்கு முக்ய்த்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் ரவிதேஜா, இலியானா காதல் சம்பந்தபட்ட காட்சிகளில் திரைகதையின் வேகம் அருமை. இரண்டாவது பாதியில் நடுவுல் தொங்கினாலும், போலீஸ் ஆபீஸர், ரவிதேஜாவுக்கும் இடையே நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் இண்ட்ரஸ்டிங்க். அவர் ஏன் கொள்ளைகாரனாய் மாறினார் என்பதற்கான காரணம் அரத பழசு. அதே போல் க்ளைமாக்ஸ் கொள்ளை காட்சிகள் காதில் பூ.
Kick - ஒரு ‘கிக்’குக்காக பார்க்கலாம்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
ஆனா, போலீஸ் வேடத்தில் ஷாம் நினைத்தால்தான் பயமா இருக்கு..!
நல்ல விமர்சனம்..
ஆனா, போலீஸ் வேடத்தில் ஷாம் நினைத்தால்தான் பயமா இருக்கு..!\\
ரீப்பிட்டு.
தெரிஞ்சுக்கிட்டேன்.
தெலுங்கு படத்திற்கு விமர்சனம் எழுதி ஹிட்டடிப்பதில் நீங்கதான் தல சூ ப் ப் ர்.
நன்றி
இவர் போலீஸ் டிரஸுக்கே அலற்றீங்களே.. ரவிதேஜா போட்டுட்டு வர்றாரு கடைசியில.. வாட்ச்மேன் கணக்கா.. அதை என்ன சொல்வீங்க..?
HOT SPOT ல எப்போ இலியானா வருவாங்க?
இலியானா ஸ்டில்ஸ் சரியா பெரிசா போடாத உங்கள வன்மையாக கண்டிக்கிறேன்.
இலியானா போடலாமே?
பின்னூடங்கள்ள ஹாட் ஸ்பாட்டைப் பத்தித்தான் அதிகப் பேச்சா இருக்கு.
இந்தப் படம் டப் ஆகுமாமே! watch worhtya?
இலியானா ஸ்டில்ஸ் சரியா பெரிசா போடாத உங்கள வன்மையாக கண்டிக்கிறேன்.//
ரிப்பீட்
எப்படி நீங்க இலியான படம் பெரிசா போடாம விடலாம்
தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009
ஒய்?...ஒய்?....ஒய்?
ஓஓஓஒய்ய்ய்ய்....மீஈஈஈஈஈஈ?
அய்யய்யோ... வேணாம் ..
அருமை. வருகைக்கு நன்றி . படியுங்கள்
ஜனனம் = ஜென்மம்
என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
அப்படியே நம்ம வூட்டுக்கும் வந்துட்டு போங்க!
http://www.kalakalkalai.blogspot.com
என்ன சாம் , காக்க காக்க சூர்யா மாதிரி nadikka try பண்ணி irukkar .
"மரியாதை" யை மிஸ் பண்ணியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
HOT SPOT ல எப்போ இலியானா வருவாங்க?//
விரைவில் போட்டுட்டா போச்சு.. பீர்.
இலியானா ஸ்டில்ஸ் சரியா பெரிசா போடாத உங்கள வன்மையாக கண்டிக்கிறேன்//
எப்பவும் தெலுங்கு படங்களை டப்பிங்கில் பார்க்காதீர்கள்.. பப்பு..
நன்றி ராசுக்கண்ணு..
கார்கி.. படத்தோட ஆந்திரா ரிசல்டை சொல்லுங்க
மக்கள் வேண்டுகோளுக்காக முரளி
//
ஆமாம் ஷண்முகப்பிரியன் சார்.
//
கோச்சிக்காதீங்க சுரேஷ். அடுத்த படம் அனுஷ்காதான்..
அய்யய்யோ... வேணாம் ..
6:43 AM
//
ஏன் வேணாமா.. இந்த போட்டோ.. பீர்..
"மரியாதை" யை மிஸ் பண்ணியதை வன்மையாக கண்டிக்கிறேன்.
12:33 PM
//
எனக்கென்னவோ.. விஜயகாந்த் விக்கை பார்த்தாலே பேதிக்கு வருது வண்ணத்து பூச்சியாரே..