Thottal Thodarum

Jul 12, 2017

கொத்து பரோட்டா 2.0-34

கொத்து பரோட்டா 2.0-34
மே மாதம் முதல் தமிழ் சினிமாவிற்கு இனி வரும் மாதங்கள் கொஞ்சம் ப்ரச்சனையானதாய் தான் தெரிகிறது.  ஜி.எஸ்.டி., பைரசி, தியேட்டர் விலையேற்றம் என பல கோரிக்கைகளை அரசிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வைத்திருக்கிறது. தவறினால் மே 30 முதல் திரையீடு முதல் தயாரிப்பு வரை ஸ்ட்ரைக் என்று அறிவித்திருக்கிறது. இன்னொரு புறம் தமிழ் சினிமா விநியோகஸ்தர்கள் வருகிற மே மாதம் முதல் எந்த படத்திற்கும் எம்.ஜி. கிடையாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் அவுட் ரைட் மற்றும் அட்வான்ஸ் முறையில் மட்டுமே வியாபாரம் செய்யபடுமென்றும், ஐந்து கோடிக்கும் கிழ் உள்ள பட்ஜெட் படங்களை இனி கமிஷனுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படுமென்றும் சொல்லியிருக்கிறார்கள். மற்றுமொரு முக்கிய விஷயம் என்னவென்றால் இனி யாரும் எந்த படத்தையும் மொத்தமாக வாங்கிக் கொள்ள முடியாது. தயாரிப்பாளர் அந்தந்த ஏரியாக்களுக்கு என்று தனியே தான் வியாபாரம் செய்ய வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மே மாதம் அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ரைக்கிற்கும், இதற்கும் என்ன சம்பந்தம் என்று பார்த்தால் இந்த தேர்தல் நடந்து முடிந்த உடனேயே விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு பேசி முடிவெடுத்த முதல் விஷயம் இதுதான். நிச்சயம் பெரிய முதலீட்டு படங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

பெரிய நடிகர்களின் கால்ஷீட் வாங்கி படமெடுக்க விழைவதற்கான காரணமே பின்னால் யாராவது ஒருவர் பெரிய விலைக்கு வாங்கி விடுவார்கள் என்ற நம்பிக்கை தான். இனி அது நடக்காது.தயாரிப்பாளரே வியாபாரம் செய்ய வேண்டும். முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. தயாரிப்பாளர் ஒவ்வொரு ஏரியாவையும் பிரித்து வியாபாரம் செய்வார்கள். அப்படி வியாபாரம் செய்யும் படங்களின் வெற்றி தோல்வி தயாரிப்பாளருக்கும்  தெரிய வரும் பட்சத்தில் அடுத்த படத்தின் வியாபாரத்தில், சில பல அட்ஜெஸ்ட்மெண்டுகள் செய்து கொடுக்கப்படும். இப்படி தாயாய் பிள்ளையாய் இருந்ததால் தான் ஒரு தயாரிப்பாளர் தொடர்ந்து படமெடுக்க, அடுத்தடுத்த படங்களுக்கு தயாரிக்கும் போதே ஏரியாவுக்கு பணம் கொடுத்து பைனான்ஸ் செய்யும் முறை இருந்தது. தயாரிப்பாளர்களும் ஒரு நல்ல படைப்பை தேர்ந்தெடுத்து விட்டார்கள் என்றால் அவர்களுடய விநியோகஸ்தர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக வாங்கி படமெடுத்து விடுவார். ஆனால் இந்த முறை கொஞ்சம் கொஞ்சமாய் அதிக தியேட்டர்களில் வெளியீடு எனும் முறையும், தொலைக்காட்சி நிறுவனங்கள் மறை முகமாய் விநியோகத்தில் வர ஆரம்பித்ததும் மாற ஆரம்பித்தது. பின்னாளில் எம்.ஜி என்ற ஒன்றே நீ ஒழுங்கா கணக்கு கொடுக்க மாட்டேன்குறே? என்று விநியோகஸ்தருக்கும் தயாரிப்பாளருக்குமான பிரச்சனையில் எழ ஆரம்பித்தது. விநியோகஸ்தர் தியேட்டர் காரர் மேல். காரணம் வாங்கிய படம் பெரியதாய் இல்லை. தயாரிப்பாளர் எம்.ஜிக்கு விற்றதால், விநியோகஸ்தர் எக்கேடு கெட்டுப் போனால் என்ன நம்ம காசு ஒரளவுக்கு சேஃப் என்றானது. விநியோகஸ்தர்கள் அதிக தியேட்டர்களில் போடும் பழக்கம் ஆனதால் எந்த திரையரங்கு உரிமையாளர் அதிக எம்.ஜி தருவாரோ அவருக்கு ப்டம் கொடுப்பது என்று ஆக, போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் செண்டரை வளர்க்க, வட்டிக்கு கடன் வாங்கியெல்லாம் படத்துக்கு எம்.ஜி. கொடுத்த தியேட்டர்காரர்கள் அதிகம். படம் ஓடாத போது லாஸ் ஆச்சின்னா திரும்பக் கொடுத்தாங்களா? என்ன? என்ற சொத்தை காரணத்தை சொல்லி ஏமாற்ற ஆரம்பித்தார்கள். எம்.ஜி எனும் மினிமம் கேரண்டி முறையில் படம் வாங்கினால் நஷ்டம் வந்தால் பணம் திரும்பக் கிடையாது என்று தெரிந்தே வாங்கியவர்கள் தான்.

பெரிய படங்கள் என்றாலும் படம் பார்த்துவிட்டு விலைக்கு வாங்கும் பழக்கம் போனதுக்கு விநியோகஸ்தர்கள்தான் காரணம். பல பெரிய பட்ஜெட் படங்கள் ஆரம்பிக்கும் போது அட்வான்ஸை கொடுத்துவிட்டு, படம் ரிலீஸுக்கு முன்னால் படம் பார்த்துவிட்டு படம் பிடிக்கலை என்று ஒப்புக் கொண்ட விலையை கொடுக்காமல் படம் ரிலிஸுக்கு முன் பஞ்சாயத்து செய்து படம் ரிலீஸ் பண்ணும் முறையை பலர் பயன்படுத்த ஆரம்பிக்க, படம் காட்டினால் தானே.. இந்த பஞ்சாயத்து என படம் காட்டாமலேயே படம் விற்க ஆரம்பித்தனர் தயாரிப்பாளர்கள். பல நூறு தியேட்டர்களில் வெளியீடு, ஒரே நேரத்தில் ஓஹோவென கொட்டும் பணம் என்ற ரீதியில் இன்றைய இணையத்தில் அவரவர் வாய்க்கு வந்த தொகையை இவ்வளவு அவ்வளவு என்று ஏற்றி விட, புதிய புதிய பணமிருக்கும் நபர்கள் சினிமா அற்புதமான துறையில் கிடைக்கும் புகழ், பகட்டு எல்லாவற்றிக்கும் ஆசைப்பட்டுவியாபாரம் தெரியாமல் வழக்கமாய் படம் வாங்கும் விநியோகஸ்தர்கள் கொடுக்கும் விலையை விட அதிகம் கொடுத்து வாங்க ஆரம்பித்தன் விலைவு தான் பெரிய ஹீரோக்களின் படங்களின் பட்ஜெட் உயர்வு.

சில வருடங்களுக்கு முன்னால் தெலுங்கு படங்களை அமெரிக்காவில் வெளியிட பெரும் போட்டியே நடைப்பெற்ற காலமெல்லாம் உண்டு. நான்கைந்து சாப்ட்வேர் இன் ஜினியர்கள் எல்லாம் சேர்த்து படம் வாங்கி வெளியிட்டு. அவர்கள் வெளியிட்டார்களே என்று இன்னொரு போட்டி க்ரூப் விலையேற்றி படம் வாங்கி தொடர் நஷ்டப்பட்டு, போன கதையெல்லாம் உண்டு. அப்படித்தன் இப்போது தமிழ் சினிமாவிலும். ரெகுலர் விநியோகஸ்தரக்ள் கமிஷனுக்கு படம் போட்டு தர, யார் யாரோ பணமிருகிறவர்கள் மார்கெட் விலையை விட அதிகமாய் வாங்கி, விற்பனை செய்து கடைசியில் படம் ஓடாமல் லாஸ் ஆயிருச்சு என்று நடிகரிடம் போய் சண்டை போடுவது நடக்கிறது. இதையெல்லாம் தடுக்கத்தான் சங்கத்தின் இந்த முடிவு என்றாலும் எத்தனை நாட்களுக்கு இதை பின்பற்றுவார்கள் என்று யாருக்கும் தெரியாது. அந்தந்த ஏரியாக்களின் விநியோகச்தர்கள்தான் படம் வாங்க வேண்டும். வெறும் அட்வான்ஸ் தான் என்று வரும் போது வியாபாரம் மட்டுப்படுவது மட்டுமல்ல, படங்களின் தயாரிப்பும் குறையும்,.எந்த தயாரிப்பாளருக்கு படம் விநியோகம் செய்யும் அளவிற்கு பணம் இருக்கிற்தோ அவர்களே படமெடுக்க முடியும் என்றாகும். சிறிய படங்களின் வியாபாரம் என்று சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை என்பதால் அதில் இருக்கும் ரிஸ்க் அப்படியேத்தான். என்ன தான் இவர்கள் சட்டமாய் பல விஷயங்கள் இயற்றினாலும் இதை மீறத் துடிக்கும் பணமிருப்பவர்கள் அதிகம்  உழலுமிடம் இது. இவ்வளவு விஷயங்களில் தீர்மானமான முடிவு எடுப்பவர்கள் அப்படியே விற்கும் டிக்கெட்டுக்கான கணக்கு, ரிப்பொர்ட், கம்ப்யூடர் முறையில் டிக்கெட் போன்றவற்றையும்  உடன் செயல்படுத்த ஆவன செய்தால், நிச்சயம் ஒர் மாற்றம் வர ஏதுவாக இருக்கும்.

BLACK MIRROR- FIFTEEN MILLION MERITS

டிஸ்டோபியன் எனும் எதிர்கால உலகத்தில் எழுந்ததிலிருந்து தினமும் சைக்கிள் ஓட்டி அதன் மூலம் உருவாகும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. அந்த சைக்கிளை மிதிப்பவர்களுக்கு அதன் மூலம் மெரிட்ஸ் எனும் ஊதியம் கிடைக்கும். அந்த ஊதியத்தை அவர்கள் வாழ்க்கைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு கழித்துக் கொள்ளும், டிவியில் விளம்பரங்கள் பார்ககமல் போனால் மெரிட்ஸில் அதிகம் பணம் கழித்துக் கொள்ளும். இப்படியான உலகத்தில் பிங்  என்பவன் தன் அண்ணனின் மெரிட்ஸும் சேர்திருக்க, கொஞ்சம் பணக்காரத் திமிரில் சுற்றி வருகிறவன். பதினைந்து மில்லியன் மெரிட்ஸ் உள்ளவர்கள் விர்சுவல் டிவி உலகில் அதாவது தினம் இவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று புகழ் பெற்றவர்களாய் , சில பல சிறப்பம்சஙக்ளுடன் வளைய வர முடியும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நம்மூர் ரியாலிட்டி ஷோ போல தெரிவு நிகழ்வு ந்டக்கும். அதில் அவரவர் தகுதிக்கு ஏற்ப நிகழ்ச்சிகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள். எல்லாம் விர்சுவல் மக்கள். ஓட்டு. கலந்து கொள்ள பதினைந்து மில்லியன் க்ரெடிட் வேண்டும். பிங் ஒர் பெண்ணை சந்திக்கிறான். அவள் அழகில் மயங்குகிறன். அபாரமான பாடும் திறன் கொண்டவள் அவள். எப்படியாவது போட்டியில் கலந்து கொண்டு பிரபலமாக வேண்டுமென்று ஆசையுடன் இருக்கிறவள். பிங் அவள் மீதுள்ள காதலால் தன்னுடய க்ரெடிட்டை விட்டுத் தந்து அவளை போட்டிக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே அவளின் பாடும் திறனுக்கு  மதிப்பளிக்காமல் அவளின் அழகிற்கு முக்யத்துவம் கொடுத்து, அவளை ஒர் போர்ன் ஸ்டாராக ஆக்குகிறாரகள். அங்கே போனவர்கள் மீண்டும் திரும்ப இங்கே வர முடியாது. எனவே இழந்த தன் க்ரெடிட்டை மீண்டும் சைக்கிள் ஓட்டி பெற்று போட்டிக்கு போய் அவர்களின் முகத்திரையை கிழிக்க நினைக்கிறான். பின்பு என்ன ஆனது என்பதை மிக மெல்லிய காதல், சர்காசம், கிண்டலுடன் முடித்திருக்கிறார்கள். நிச்சயம் பார்கக் வேண்டிய கதை.

Post a Comment

No comments: