Thottal Thodarum

Jun 15, 2015

கொத்து பரோட்டா -15/06/15

பாகுபலி ட்ரைலரை பார்த்துவிட்டு, ரசிகர்கள் எல்லாம் ஆவல் பொங்க, எப்படா வருமென்று காத்திருந்தார்கள் என்றால்.  எனக்கு படம் ஆரம்பித்த காலத்திலிருந்தே என்று கூட சொல்லலாம். அது ஒரு முறை தொட்டால் தொடரும் படத்தின் பாடல் ஒன்றுக்காக மதன் கார்க்கியை சந்தித்தப்போது, பாகுபலிக்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பற்றியும், அவர் தமிழ் வசனங்கள் பற்றி சொன்ன விஷயங்களைக் கேட்டு “லப்டப்” அதிமானது என்றே சொல்ல வேண்டும். தற்போது ட்ரைலர் பார்த்தபின் இன்னும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ராஜமெளலியும் ஒருவர். அவருடய எல்லா தெலுங்கு படங்களையும் பார்த்திருக்கிறேன். இப்படத்தை ஆரம்பித்ததிலிருந்தே படத்தில் நடிக்கும் நடிகர்களின் பிறந்தநாளன்று அவர்களுக்காக ஸ்பெஷல் டீசரை ஒன்றை வெளியிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரஷர் ஏற்றி வைத்திருக்கிறார்.  தமிழ் நாட்டுக்காரனான நமக்கே ஆரவம் ஏற்றிருக்கிற பட்சத்தில் இன்று வரை ரிலீஸ் டேட் அறிவிக்காததால் ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் டென்ஷனாகி,  பொமரில்லு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை வைத்து ஸ்பூப் செய்திருக்கும் ரிலீஸ் டேட் எப்போ என்ற கேள்வியெழுப்பியிருக்கிறார்கள் ஆந்திர ரசிகர்கள். 

@@@@@@@@@@@@@@@@@@@
இணையம் மூலமாய் மட்டுமே அறிந்த அருண்குமார் எனும் நண்பரின் மரணம் வருத்தத்தில் ஆழ்த்தியது. யோகா பயிற்றுவிப்பவர். நல்ல மனிதர், மனிதநேயமுள்ளவர் என பெயர் பெற்றிருந்தவர். ரயிலில் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரும் போது தூங்கிவிட்டதினால், கிளம்பியவுடன் எழுந்து பதட்டத்தோடு, ஓடுகிற வண்டியிலிருந்து இறங்கும் போது, கால்கள் ப்ளாட்பாரத்துக்கும், பெட்டிக்குமிடையே மாட்டி, துண்டாய் போய் இறந்திருக்கிறார். கொடுமை என்னவென்றால் அவரை அழைக்க, வந்திருந்த அவரின் தந்தையும் அங்கேயே இருந்திருக்கிறார். அதே போல கிருஷ்ணவிலாசம் ராஜியின் கணவரின் விபத்து.  நாலு கொலை பண்ணி, ஊரை ஏமாத்தி, கொள்ளையடிக்கிறவனெல்லாம் நல்லாயிருக்கிறப்ப, நல்லவங்க இவங்களோட மரணம் மட்டும் ஏன் இப்படி கொடுரமாய், அகாலமாய் இருக்கணும்?. என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்கவில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@
சினிமா மீது தமிழ் நாட்டில் உள்ள 95 சதவிகிதம் பேருக்கு ஆர்வமிருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் எத்தனை பேர் செயல்பட முயற்சிக்கிறாரக்ள் என்பதுதான் கேள்வியாய் இருக்கும் தருணத்தில், சிங்கப்பூரிலிருக்கும் நண்பர் அரவிந்தன் தன் ஆர்வத்தை, செயல்படுத்த ஆரம்பித்தார். இவரது முதல் குறும்படமான 12AM நிறைய விருதுகளை பெற்ற படமாய் அமைந்து, ரீமேக் ரைட்ஸ் எல்லாம் பெற்று, தெலுங்கில் குறும்படமாக்கப்பட்ட படம் என்ற பெருமையை அடைந்தவர். தற்போது புதிய குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். கிட்டத்தட்ட ஜீரோ பட்ஜெட் படம்.  2 கொஞ்சம் சைக்கலாஜிக்கலான கதை.  அஜாக்கிரதையாய் வண்டியோட்டி, தன் குழந்தையையும், இன்னொரு குழந்தையையும், கொன்ற குற்ற உணர்ச்சியினால் மனநிலை பாதிக்கப்பட்டவரின் கதை. பட்ஜெட். முழுக்க முழுக்க, ப்ரொபஷனல் டெக்னீஷியன்ங்கள் இல்லாமல், சுயமாய் எடுக்கப்பட்ட படம். அந்த வகையில் நல்ல முயற்சி. வழக்கமாய் குறும்படங்கள் சினிமாவின் நீட்சியாய் இருப்பது போலில்லாமல் கொஞ்சம் சீரியஸான, காம்ப்ளெக்ஸான கதை எடுத்துக் கொண்டது பாராட்டுக்குறிய விஷயம். அதே நேரத்தில் படத்தின் நீளம், பாடல் ஒரே ஆளை ரெட்டை வேடங்களில் நடிக்க வைத்தது, மனதினுள் உருவகப்படுத்திய கேரக்டர் என்பதை விவரிக்காத ஷாட்கள், எடிட்டிங்  என நிறைய விஷயங்கள் கவனமெடுத்திருந்தால்  இன்னும் சுவாரஸ்யப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. எனிவே வழக்கத்திலிருந்து விலகி எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள் அரவிந்த்.

@@@@@@@@@@@@@@@@@@@
இனிமே இப்படித்தான்
கதையெல்லாம் புதுசாய் ஏதுமில்லை. வழக்கமான ரெண்டு பெண்களிடையே மாட்டிக் கொண்டு அலையும் கதைதான். அதை வழக்கமான சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுடன், காமெடி நடிகாராய் இல்லாமல், நான்கைந்து பாட்டு, ஒரு குட்டி பைட்டோடு, ஹீரோவாகி செய்திருக்கிறார் சந்தானம். போன முறை மாதிரி இம்முறை அவர் தோற்கவில்லை. ஓரளவுக்கு ஓகே வாகியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முக்கியமாய் விடிவி கணேஷ், தம்பி ராமையா, நரேன், என கலந்து கட்டி காமெடியில் ஜெயித்திருக்கிறார்கள். அதிலும் தம்பி ராமையின் வாயில் அலகு குத்தும் காட்சி அட்டகாசம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஜுராசிக் வேர்ல்ட்
வழக்கமாய் இம்மாதிரியான கிரியேட்சர்கள் படங்களை பார்ப்பதில்லை. அதில் விதி விலக்கு டைனோசர். அதிலும் ஸ்பீல்பெர்க் பெயர் இருந்தால் பார்த்தே தீருவேன். முன்பை விட பெட்டர் சிஜி, நம்மூர்  இர்பான் கான், அருவியின் முகப்பில் குதிக்கும் சிறுவர்களை கவ்வ திறந்த வாயுடன் நம்மை 3டியில் டைனோசர் கவ்வ வரும் காட்சி இவைகளைத் தவிர ஸ்பெசலாய் வேறேதும் இல்லை. இதில் டைனோசர்களை நாய்களாக்கி பழக்கும் விதம் அவைகளை ஏவி, பெரிய டைனோசர்களை கவிழ்க்க பயன்படுத்து விதம் என கொஞ்சூண்டு யோசித்திருக்கிறார்கள். நம்மூர்காரர்கள் பேயை விட்டுவிடும்படி கேட்டுக் கொண்டதைப் போல ஸ்பீல்பெர்க் கூட்டத்திற்கு டைனோசரை விட்டுவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். மிடியலை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ரோமியோ ஜூலியட்
ஏட்டிக்குப் போட்டி காதல் படம். கொஞ்சம் வித்யாசமான களன். க்ளீஷேவான முடிவு. ஜெயம் ரவி வழக்கம் போல ஸ்மார்ட்டாய், மெச்சூர்டாய் இருக்கிறார். ஹன்சிகாதான் படம் முழுக்க. உடன் வரும் தோழிகள் அழகு. டண்டணக்கா செம்ம குத்து. ஓப்பனிங் டைட்டில் சீனில் வரும் சினிமா காதல் காட்சிகள் அட்டகாசம். பழிவாங்கும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் அதகளமாய் ரசிக்கிறார்கள். க்ளைமேக்ஸ் மட்டும் உட்டாலக்கடியாய் முடித்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
Feel good film @actor_jayamravi all the best
போதும் அந்த டைனோசரை விட்டுருங்க.. ‪#‎Thejuraasicworld‬
Though lethargic and slow paced.. Dil Dhadakne do has got some good moments. ‪#‎DilDhadakaneDo‬
pandaga sesko ‪#‎avgentertainer‬
@@@@@@@@@@@@@@@@@
Pandaga Chesko
க்கா குடும்பத்தை ஒன்று சேர்க்கும் தெலுங்கு பார்முலா டெம்ப்ளேட் கதை. வளரும் நடிகர்கள் அத்துனை பேரும் இம்மாதிரியான ஃபீல் குட் படங்களில் நடிப்பது என்பது தெலுங்கு பட உலகின் வழக்கம். அதே வழக்கத்தை ராம் தொடந்திருக்கிறார். வழக்கமாய் கே.விஸ்வநாத், பிரகாஷ் ராஜுக்கு பதிலாய்  இதில் இதில் நம்ம சம்பத்ராஜ். அழகாய் ரெண்டு குல்கந்து ஹீரோயின்கள். டெம்ப்ளேட்டாய் நாலு தகரம் கிழிந்து போன  சிந்தசைஸ் வாய்ஸில் தமனின் பாடல்கள். ரெண்டொரு பைட். பாசம், செண்டிமெண்ட், கூடவே அசட்டு பிசட்டு காமெடி காட்சிகள். உடன் பிரம்மானந்தம். வேறென்ன வேண்டும். பண்டக ஸேஸ்கோண்டி
@@@@@@@@@@@@@@@@@@@@@
Dil Dhadakane Do

குடும்ப உறவுகளைப் பற்றிய உணர்ச்சிகரமான படம். பெரும் கோடீஸ்வரரான அனில் கபூரின் 30வது திருமண நாளை ஸ்டார் க்ரூயிஸில் கொண்டாட நெருக்கமான நண்பர்கள், உறவினர்களை அழைக்கிறார்.  கணவன் மனைவியிடையே நெருக்கமில்லாத உறவு. அவரது பெண்ணான பிரியங்காவின், விக்ரமுக்குமிடையே ஆன அந்யோன்யமில்லாத, விவாகரத்து கேட்கலாமா எனும் அளவிற்கான உறவு. அனில்கபூரின் பையன் ரன்வீர் சிங்குக்கு அப்பாவின் தொழில் மேல் இல்லாத அக்கரை. அதனால் அந்த காலத்துல நான் எப்படி தெரியுமா? எனும் வழக்கமான பணக்கார அப்பாவின் புலம்பல்கள். அனிலிடம் மேனேஜராய் இருப்பவரின் பையனான ஃபர்ஹான். அவருக்கும் ப்ரியங்காவுக்குமிடையே ஆன காதல். ரன்வீருக்கும், க்ரூயிஸில் நடனமாடும் அனுஷ்கா ஷர்மா. அவருக்கும் ரன்வீருக்குமான காதல். பணத்திற்காகவும், தொழில் விருத்திக்காகவும் தன் மகனுக்கும் வேறொரு தொழிலதிபரின் பெண்ணுக்குமிடையே உறவை வளர்க்க இந்த பயணத்தை பயன்படுத்தும், அனில் என உறவுகளிடையே ஆன முரண்களைப் பற்றிய படம். பெரும் பணக்கார குடும்பத்தைப் பற்றிய படமாய் தோன்றினாலும், ஆழமான, அழுத்தமான மனித உறவுகளின் பிரச்சனையைப் பற்றி கொஞ்சம் டீடெயிலாய் பேசியிருக்கிறார் ஜோயா அக்தர். வாய்ஸோவரில் நாய் ப்ளூட்டோவின் பாயிண்ட்டாப் வியுவில் கதை சொல்ல ஆரம்பித்தது, அதற்கு அமீரின் வாய்ஸை பயன்படுத்தியது. அருமையான ஒளிப்பதிவு. ஆங்காங்கே துறுத்தாத ஷங்கர் இஷான், லாயின் பாடல்கள். நேர்த்தியான நடிப்பு என்று எல்லாமிருந்தும், மிகவும் மெதுவாய் கப்பல் போலவே படம் பயணிப்பதும், க்ளைமேக்கில் இவ்வளவு அழகிய நுண்ணுணர்வுகளைப் பற்றி பேசிய படம் ஒரு அமெரிக்க ஃபீல் குட் காமெடி படங்களுக்கு இணையான க்ளைமேக்ஸ் காமெடி காட்சிகளால் அழுத்தமில்லாமல் போய்விட்டது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
How can you tell which is the head nurse? 
She's the one with the dirty knees. 

கேபிள் சங்கர்


Post a Comment

2 comments:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

நாலு கொலை பண்ணி, ஊரை ஏமாத்தி, கொள்ளையடிக்கிறவனெல்லாம் நல்லாயிருக்கிறப்ப, நல்லவங்க இவங்களோட மரணம் மட்டும் ஏன் இப்படி கொடுரமாய், அகாலமாய் இருக்கணும்?. என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருக்கிறது. பதில் கிடைக்கவில்லை.
en kaarththiyai naan izhantha pothu naan ketta kelviyum ithuthaan.
kaarthik amma
kalakarthik
vijayanagarblogspot.com

buva7687 said...

Just watched the TT. The movie is really good except the climax... I loved the romance and comedy scene. The hero/heroine pair is very apt for the movie... All the best :)