
இந்த தீபாவளிக்கு இந்தியில் வெளியான ஒரே பெரிய படம். கடந்த நாலு வருடங்களாய் தயாரிப்பில் இருந்த படம். ஷாருக்கின் மனதிற்கு மிக நெருக்கமான படம். இன்றைய அளவில் இந்தியாவின் காஸ்ட்லியான படம் என்றெல்லாம் பப்ளிசிட்டி செய்யப்பட்ட படம். தமிழ் நாட்டில் இப்படத்தின் மைலேஜை இன்னும் அதிகப்படுத்த ரஜினியை ஒரே ஒரு காட்சியில் தோன்ற வைக்கப்பட்ட படம் என்ற ஒரு விஷயம் வேறு சேர.. ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். நம் எல்லோருடைய எக்ஸ்பட்டேஷனையும் திருப்திப் படுத்தியதா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

லண்டனில் வசிக்கிற சேகர் சுப்ரமணியம் என்கிற தென்னிந்திய தமிழரான ஷாருக் வீடியோ கேம்களை உருவாக்குவதில் கில்லாடி மிகவும் அசமஞ்சமான ஒரு ஆளாய், இருக்கும் சேகர். தன் பையனுக்கு தான் ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாதது வருத்தமளிக்கவே.. ஹீரோவை விட ஸ்ட்ராங்கான ஒரு வில்லனைக் கொண்ட ரா.ஒன் என்கிற ஒரு கேரக்டரையும், ஹீரோவாக ஜி.ஒன் என்கிற கேரக்டரையும் உருவாக்கி, ஒரு விர்சூவல் ரியாலிட்டி கேமை உருவாக்குகிறார். யாராலும் அழிக்க முடியாத அந்த ரா.ஒன் கேமிலிருந்து நிஜ வாழ்க்கைக்கு வந்துவிடுகிறது. அதை உணர்ந்த சேகரையும் கொன்று விடுகிறது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சேகரது மகன் நிஜ கேமில் இருக்கும் ஜி.ஒன்னை உயிர்ப்பிக்கிறான். ரா.ஒன் தன்னுடன் பெட் நேமில் விளையாடிய சேகரின் மகனை கொல்வதற்கு அலைய, அந்த மகன் உருவாக்கிய ஜி.ஒன் எப்படி காப்பாற்றுகிறது என்பது தான் கதை.

படம் ஆரம்பித்த முதல் கேரக்டர்கள் அறிமுகம், ஜி.ஒன், ரா.ஒன்னுக்கான அடித்தளம், என்று சுவாரஸ்யமாகத்தான் போனது இடைவேளை வரை. முக்கியமாய் குட்டிக் குட்டியான சேகர் சுப்ரமணியம் மிஸ்டர் பீன் தனமான காட்சிகள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மெகமூத் கால “அய்யோ.. “ என்று பேசும் மதராஸி ஹிந்தியை சொல்லி கிண்டல் செய்வார்கள் என்றே தெரியவில்லை. எவ்வளவோ தமிழ் ஆட்கள் ஹிந்தி படத்திற்கு வசனம் எழுதும் அளவிற்கு வளர்ந்திருக்கும் இந்த காலத்தில். கதையிலேயே ஒரு படு சூப்பர் கேம் கிரியேட்டராய் உருவகப்படுத்தப்பட்டிருக்கும் கேரக்டர் இப்படியான மொக்கை தனம் கொண்டவராக சித்தரித்திருப்பது மொக்கைத்தனத்தின் உச்சம். சேகர் சுபரமணியத்தின் கேரக்டரை குழந்தைகள் ரசிக்க வேண்டும் என்பதற்காக மிஸ்டர் பீனை அப்பட்டமாக உரித்தெடுத்திருப்பது ஓகே. ஆனால் அதே ஷாருக் கேம் கேரக்டரான ஜி.ஒன்னாக வந்ததும் சும்மா தூள் கிளப்பித்தான் இருக்கிறார். அதுவும் லார்ஜர் தென் லைப் கேரக்டரில் நன்றாக இருக்கிறார். கவனிக்கவும் நடிக்கிறார் என்று சொல்லவில்லை.

கரீனா ஸ்லிம்மாக, ஸ்லீக்காக இருக்கிறார். டெம்ப்ளேட் போன்ற ஒரே விதமான ரியாக்ஷன்கள். சம்மக் சலோ பாடலில் க்ளிவேஜ் தெரிய நடனமாடுகிறார். மற்றபடி பெரிதாய் சொல்லிக் கொள்ளூம் படியாகவோ, பார்க்கும் படியாகவோ இல்லை. ஏன் இந்தியில் எல்லா கெட்ட வார்த்தையும் அம்மாவையும், சகோதரிகளையும் மட்டுமே குறிவைத்து சொல்லப்படுகிறது என்கிற கேள்வியும், மார்பில் ஜி.ஒன் கை வைத்ததும் முகத்தில் காட்டும் ரியாக்ஷன்களும் லேசான சுவாரஸ்யம். ஷாருக் கரீனாவின் வாரிசாக வரும் அர்மான் ஆங்காங்கே பளிச்சிடுகிறார். அர்ஜுன் ராம்பால் இரண்டாம் பாதியில் வில்லனாக அவதரிக்கிறார். முடிந்த வரை டஃப் காம்படீஷன் கொடுக்க முயற்சிக்கிறார். பட்.. நோ யூஸ். க்ளைமாஸில் புஸ்சென ஆகிவிடுகிறது.
சில நிமிட ரஜினி காட்சி படத்தில் வரும் அமெச்சூர் தனத்தின் உச்சம். ரஜினி எந்த கட்டாயத்தால் இதில் நடித்தாரோ.. ஈராஸுக்கே வெளிச்சம். சிஜியும் படு மோசம், நிஜத்தில் மிகவும் ஒடுங்கியிருக்கும் ரஜினியின் இமேஜை இது குறைக்கவே செய்கிறது. சாரி ரஜினி..நீங்கள் தோன்றியிருக்க கூடாது.

டெக்னிக்கலாக சொல்லப் போனால் இந்திய திரையுலகில் குறிபிடத்தக்க ஒரு படமாய் இதை சொல்லலாம். சிஜியில் பல வருட உழைப்பு தெரிகிறது. ஒடும் ரயிலிலை ஆபத்திலிருந்து காப்பாற்றும் காட்சி அருமை. எந்திரனை விட. அதே போல விர்சூவல் ரியாலிட்டி சண்டைக் காட்சிகள் அருமையோ.. அருமை.. படத்தில் என்னதான் கதை என்று அனுபவ் சின்ஹா தன் பெயரைப் போட்டாலும், டெர்மினேட்டர் 2 ஞாபகம் வருவதை தவிர்கக் முடியவில்லை. அவ்வளவு ஒற்றுமை. அருமையான சிஜி ஒர்க், இண்ட்ரஸ்டான முதல் பாதி. குழந்தைகளுக்கான படம் என்பதை போன்ற ஒரு பில்டப் எல்லாம் இருந்தும் குழந்தைகளுக்கான படமாய் அமையாததற்கு காரணம் ஆபாச வசனங்கள், அரை குறை ஆடைகளுடன் ஆடும் காட்சிகள், காண்டம் பற்றிய வசனம், ஒரு வெள்ளைக்கார பெண்ணின் மார்புக்குள் கார் சாவி விழுந்துவிட, பெரிசா இருக்கிறதை வெளியே எடுக்க முடியுமா? என்று கேட்பது போன்ற காட்சிகள் நிச்சயம் குழந்தைகளுக்கான படம் இல்லை என்பதை சொல்லிவிடுகி்றது. சரி பெரியவர்களுக்கான படமாய் இருக்கிறதா? என்றால் அதிலும் சேர்த்தியில்லை. விறுவிறுவென போன முதல் பாதியிலிருந்து சர்ரென அதள பாதாளத்திற்கு வீழ்ந்து விடுகிறது திரைக்கதை. அதுவும் அடுத்தடுத்த காட்சி என்ன என்பதை.. யார் வேண்டுமானாலும் சொல்லக்கூடிய விஷயமாய் இருப்பதால் சுவாரஸ்யம் குறைவதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை. எந்திரன் ஏன் இந்தியாவெங்கும் கொண்டாடப்பட்டது என்பதற்கான காரணம் இப்படத்தை பார்த்தால் தெரியும்.
Ra.One – 35/80
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.
இதை ஒரு தமிழ் படமா நினச்சு பார்த்தா கண்டிப்பா திருப்தி இருக்காது.என்ன கேட்டா எந்திரன் படத்துக்கு இது தேவல...
climax வில்லன் பத்து உருவமா மாறவும் என்னடா எந்திரன் மாற்றி போட்டு இழுப்பாங்க போல நு நினச்சேன் ஆனா சட்டுனு முடிச்சதுல ரொம்ப சந்தோசம்.
கிராபிக்ஸ் தேவையான அளவு பண்ணி இருகாங்க.. திகட்ட திகட்ட இல்ல..இது ஓவர் எதிபார்ப்பு இருந்தது ஓகே.. ஆம் அறிவு வ விட இது பரவா இல்லை..
அண்ணாச்சி நான் படம் பார்க்கவில்லை ஆனால் சுப்ர்ஸ் ஸ்டார் தோன்றும் காட்கியை யூரியப்பில் பார்த்தேன்... இதே கேள்வி எனக்கும் எழுந்தது... ஆனால் சரியான பதில் தான் விளங்கல..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வேலாயுதம், 7ம் அறிவு, ரா ஒண் முதல்வார வசூல் ஒப்பீடு (நாள் வாரியான)
Avar ennikku nadichu irukkirar bayangarama Hamming pannuvar Highly overrated actor ! athuvum yash chopra banner apparum karan johar ivanga mathiri directors nadichi periya actor appadinnu eppadio per vangittaru. ivara vida Govinda, Sanjay dutt super actors enna karan johar, yash chopra padathila nadikkalai david dhawan pondra masala directors kitta nadichathanala acting pathathunnu jananga ninachittanga
35/80 ஓவர்.... மீண்டும் மீண்டும் நீங்க ஒரு தலை விமர்சகர் என்று நிருபித்து வருகிறீர்கள்....
விமர்சனம் விமர்சனமாக தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இல்லாமல் எழுதினால்தான் ஒரு நல்ல விமர்சகராக முடியும். இல்லாட்டி ஏதாவது ஒரு பர்டிகுலர் சாயத்த (ரசிகனாவோ இல்ல கட்சி காரனாகவோ) பூசிகிட்டு பதிவெழுதுங்கள்... யாரும் நடு நிலை எதிர்பார்க்க போவதில்லை
உண்மை. இப்படி சொதப்பலாய் பாத்திரப்படைப்பிலேயே கோட்டை விட்டவர்கள், திரைக்கதையில் என்ன கவனம் செலுத்தியிருக்க முடியும் என்றுதான் எனக்கும் தோன்றியது. CG-யை வைத்தே படத்தை ஒப்பேற்ற எண்ணிவிட்டார்கள் போலிருக்கிறது. மிகவும் ஏமாற்றமளித்த படம்!
சரியான விமர்சனம்!
உங்களுக்கு உயர்வு நவிழ்சி எல்லாம் தெரியாதா? :))
நடந்துகிறாரே என்ன விஷயம்?
Typical north indian behaviour?
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்! - Video
இந்திய முழுவதும் கொண்டாடப்பட்டதா... சொல்லவே இல்லை..சும்மா தானே சொல்றீங்க?
நினைவுக்கு வந்தது.எனக்கு கட்டிடத்துக்கு கட்டிடம்
தாவும் போதும்,ட்ரைனை நிறுத்தும்போதும் ஸ்பைடர் மேன் 2
நியாபகம் வந்தது.ஆனாலும் சம்பாதித்து விட்டார்கள்
என்றே தோன்றுகிறது.சிம்பிள்! உலகம் முழுவதும்
பரவிக்கிடக்கும் வடக்கிந்திய பெருங்குடி மக்கள்.
கனடா நிகழ்வை பார்த்தோம்தானே?
படம் 3D யில் பார்த்தீர்களா அல்லது 2D ஆ?
மெஹ்மூத் தன் 'அய்யய்யோ ' காமெடி மூலம் தமிழர்களுக்குத் தீராத nuisance ஐ உண்டாக்கி விட்டுப் போய் விட்டார்!
>>>>ஏன் இந்தியில் எல்லா கெட்ட வார்த்தையும் அம்மாவையும், சகோதரிகளையும் மட்டுமே குறிவைத்து சொல்லப்படுகிறது என்கிற கேள்வியும்<<<<
கரீனா கபூர் 'ஹிந்துஸ்தான் மேன் ஸாரே காலியான்' என்றுதான் சொல்கிறார்; அதாவது 'இந்தியாவில் எல்லா கெட்ட வார்த்தையும்', ஹிந்தியில் (மட்டும்) அல்ல !
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com
சினிமா தளத்தில் இயங்கும் நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்க வேண்டும்..
என்ன சொல்வது சார்.. ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை!
இது ஏறக்குறைய அப்படியே நேற்று முன்தினம் மலேசியாவில் New Straight Times நாளிதழில் வெளிவந்த Ra one படத்தின் விமர்சனம் போல் உள்ளது.
எந்த அளவிற்கு ஒரு படத்தை அணுகுகின்றிர்கள் என்பதற்கு இந்த விமர்சனம் ஒரு எடுத்துக்காட்டு.
வெளியூர் பயணம் முடிஞ்சிருச்சா பாஸ்?
-அருண்-
Did you remove the Article?